Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


vijay76@TCS:

eagle.jpg

//"மேமன்"- இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,விஜய்..!//


ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு விவாதத்துக்கு வலுசேர்த்த சகோ.சில்சாம் அவர்களுக்கு நன்றி!


மேலும் சில பயனுள்ள தகவல்களுடன் பதிலைத் தரலாம் என்று இணையத்தில் தேடியபோது கற்றுக்கொண்டவைகளையும் சேர்த்து வெளியிடுகிறேன். மேமன் என்ற அரமேய வார்த்தைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன முதல் அர்த்தம் “உலகப்பொருள் அல்லது ஐசுவரியம்” இரண்டாம் அர்த்தம் “பேராசை”.


மேமன் என்பதன் வேரை ஆராய்ந்து பார்த்தால் இது பழங்காலக் கல்தேயக் கடவுள். இங்கே குடியிருந்த ஆபிரகாமைத்தான் கர்த்தர் ”இதை விட்டு வெளியே வா” என்றழைத்தார். நாமும் கூட உலகப்பொருளை மையமாகக் கொண்டு இயங்கும் “World System” இலிருந்து வெளியே வந்து கிறிஸ்துவை சேவிக்கும்படி அவர் அழைத்துச் செல்லும் பரமகானானுக்கு பயணப்பட அழைக்கப்பட்டிருக்கிறோம்.


Mammon.jpg


பிசாசுகளையும் நரகத்தில் அவற்றின் ஆளுகை நிலைகளையும் ஆராய்ந்து 1818 இல் வெளியிடப்பட்ட Infernal Dictionary என்ற Demonalogy நூலில் வரையப்பட்ட மேமனது உருவத்தைத்தான் மேலே உள்ள படத்தில் காண்கிறோம். மில்டனின் ”பாரடைஸ் லாஸ்ட்” என்ற புகழ்பெற்ற நூலில் மேமன் லூசிபருடன் சேர்ந்து விழுந்து போன தூதர்களில் ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.


பிற்காலத்தில் மேமன் என்ற பதம் உலகப்பொருளைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டது.
லூக்கா 16:13 மற்றும் மத்தேயு 6:24 ஆகியவற்றில் ஆண்டவரகிய இயேசுகிறிஸ்து உலகப் பொருள் என்ற வார்த்தையை “மேமன்” என்றே குறிப்பிடுகிறார். “ அதாவது தேவனுக்கும் மேமனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது” என்று மூலபாஷையில் எழுதப்பட்டுள்ளது.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


//மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..! //

// அருமை போதகருக்காக ஆணடவை ஸ்தோத்தரிக்கிறேன்; அவருடைய மகனும் மூத்த போதகருமாய் இருக்கிற போதகர் சாம் அவர்களை வழிவிலகி போகாமல் கர்த்தருடைய அடிச்சுவட்டை பின்பற்ற கிருபை செய்வாராக. //

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=5&topic=1992&Itemid=287

மைகோ, இப்பவாவது வந்தீங்களே...உங்களால தான் இவ்வளவும் வந்தது...நீங்க எழுதின மேற்கண்ட ஒரு வரியை நூல் பிடித்தேறியே இவ்வளவு தூரம் வந்தேன்... எப்படியோ பாத்து செய்ங்கண்ணே..!

மைகோ: // செழிப்பை அடைய போதகர் சாம் அவர்கள் வழி காண்பிக்கவில்லை.ஒன்றே ஒன்றை சொல்லுகிறார் நேர் மறையான எண்ணங்கள் மட்டுமே அவர் வலியுருத்துவது.ஆனால் உண்மையாக வாழவேண்டும்,பரிசுத்தமாக வாழவேண்டும்,சாட்சியாக வாழவேண்டும் இவைகளை அவருடைய பிரசங்கத்தில் கேட்பது அரிதாகவே உள்ளது. //

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=1998&Itemid=287


விஜய்: // ஒன்றே குலம், மேமனே தேவன்: //

"மேமன்"- இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,விஜய்..!

Admin:
// விவாதங்கள் திசை திரும்பும் போதும், தனி நபர் தாக்குதல்களாக மாறும் போதும் மட்டுமே நிர்வாகக்குழு தலையிடுகிறது //

ராஜ்குமார் அவர்கள் தனி நபர் தாக்குதல் நடத்துவதாக நான் கருதவில்லை; மேலும் என்னைப் போன்றவர்கள் தாக்கப்பட்டால் யாரும் பரிதாபப்படுவதில்லை, என்பது தெரிந்த விஷயம் தானே..? ஆனாலும் அவர் என்னைத் தூண்டிவிடுவதாக எடுத்துக்கொள்ளுகிறேன்.

என்னுடைய கருத்தை எதிர்த்து வாதிடும் அவர் எதற்கு என்னை இயக்கப் பணிகளைத் துவங்கச் சொல்லி துரிதப்படுத்துகிறார்,என்பது புரியவில்லை; உண்மையிலேயே இவரைப் போன்ற ஆதரவாளர்களுக்கு பயந்தே நான் அமர்ந்திருக்கிறேன்; பலரும் எனக்கென்ன என்று அமர்ந்திருக்க, நான் மட்டும் ஏன் எல்லோருக்கும் விரோதியாக வேண்டும்? நடுநிலையாளரும் பார்வையாளருமானவரே எனக்கு நியாயம் சொல்லட்டும்;

ஆனாலும் கர்த்தருக்கு சித்தமானால் கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம் விரைவில் அமைக்கப்படும்; அதன் முன்முயற்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நானே வந்து நண்பர்கள் வட்டத்தை சந்திப்பேன் என்று கர்த்தருக்குள் நின்று உறுதியளிக்கிறேன்;அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

// ...அரசில் பதிவு செய்யும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க நினைக்கும் ஒரு இயக்கத்தில் சேர ஏன் தள நண்பர்கள் யாருக்கும் ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பவில்லை? சரி வேண்டாம் அதைக் குறித்து உங்கள் ய்வன ஜனத்தில் பதிவிடும் நண்பர்களோடாவது ஏதாவது விதித்திருப்பீர்கள் என்று அந்த தளத்தில் தேடிப்பார்த்தேன். அங்கும் இல்லை, சரி மார்ஸ்மேடையில் இது தொடபாக ஆலோசிக்க ஒரு திரிதொடங்க அனுமதி கேட்டாவது ஒரு பதிவு? அதுவும் இல்லை... ஆரம்பிக்க நினைத்த தாங்களே அதைக் கிடப்பில் போட்டுவிட்ட பிறகு நான் இனைந்து மட்டும் அங்கே என்ன நடந்துவிடப்போகிறது? இதெல்லாம் கூட வேண்டாம் தாங்கள் கவுரவ ஆலோசகராக நியமித்த புஷ்பராஜ் அவர்களிடமாவது இது குறித்து ஏதாவது ஆலோசித்தீர்களா? அதுவும் தகவல் இல்லை... பின்பு எங்கே நான் சேருவது? //

நண்பர் இராஜ்குமார் இத்தனை ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருந்தாலும் அவர் ஒரு காரியத்தை கவனிக்கவேண்டும், இந்த இயக்கமானது ஒரு ப்ளாக்கரைப் போல சில மணிநேரங்களில் அமைக்கக்கூடியதல்ல; முதலில் கருத்தொற்றுமையை உருவாக்கவேண்டும்; அதனை நான் இங்கே தளத்தில் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறேன்; ( "ஒரு கைதியின் டைரி" - எனும் திரைப்படத்தை அந்த காலத்தில் பார்த்திருக்கிறேன்;அந்த ஹீரோவின் நிலைமையில் என்னைப் போன்றோரை வைத்துப் பாருங்களேன்..!) நண்பர்கள் வட்டம் அமையவும் செயல்பாட்டுக்கான எல்லைகள் மற்றும் உரிமைகள் வரையறை செய்யப்படவும் வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கம்போல கொஞ்சம் பணமும் தேவைப்படும்; ஆனால் இங்கே இலவசமாக ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறேன்; என்னுடைய எண்ணமோ இணையத்தில் அல்ல (அதையும் ஒழுங்குபடுத்தவேண்டும்...) மக்கள் அரங்கத்தில்..!

அது எவ்வளவு பெரிய புரட்சியாக இருக்குமல்லவா? அது சீர்திருத்த இயக்கங்களான (அந்த கால ) கம்யூனிஸ்டுகள் போன்ற கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டும்; அது நேரடியாக மக்களரங்கத்துக்கே செல்வதால் மக்கள் நம்மை புறக்கணிக்காதிருக்கவும் நம்முடைய விரோதிகள் உட்புகுந்து குழப்பம் விளைவிக்காதிருக்கவும் வேண்டும்;

இத்தனை ஆலோசனைகளுடன் எச்சரிக்கையாக செயல்பட்டாலும் உங்களைப் போன்ற மென்மையானவர்களோ இதையெல்லாம் பார்த்து, " நியாயந்தீர்க்க நாம் யார், ஆண்டவர் வரும் வரை இப்படியே போகட்டும், அவரே களைகளை இப்போது வெட்டவேண்டாம் என்றாரே " என்பார்கள்; இவ்வளவையும் மனதில் வைத்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

எந்த இடையூறும் இல்லாமல் நேர்த்தியாக‌ விஜய் பேசியிருக்கும் கிருபை செய்தியில் உங்களுக்கு ஹ்ட்ச் பற்றிய உதாரணமே கவர்ந்தது, ஆச்சரியம்..!

நாம் இங்கே விவாதிக்கும் அத்தனை விஷயங்களையும் ஏற்கனவே அவர் சுருக்கமாகப் பேசி அதனை பிரமாணப்படுத்தியிருக்கிறார்; இன்னும் என்ன விவாதம்..? நான் அவரை எதிரொலிக்கிறேனோ என்றெண்ணும் வண்ணமாக எமது சிந்தனையானது ஒன்றையொன்று சார்ந்திருப்பது ஆச்சரியமானது.

ஏனெனில் எனது நீண்ட பின்னூட்டத்தை நான் பதிப்பதற்குள் நண்பர்களுடைய பின்னூட்டமானது பல கட்டங்களைக் கடந்திருந்தது; எனவே விஜய் அவர்களின் ஆடியோ க்ளிப் -ஐ இப்போது தான் கேட்கிறேன்; விஜய் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..!

// அதெல்லாம் சரி ஆதித் திருச்சபை காலத்தைப் பற்றியும் அதன் சபைககளைப் போல இப்போது இல்லை என்று குறைபட்டுக்கொள்ளும் விஜய் சில்சாம் அவர்களுக்கு நேரடிக் கேள்வி ஆதித் திருச்சபை விசுவாசிகள் போல நீங்கள் இருக்கிறீர்களா? அதாவது உங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று உங்கள் சபையில் ஏழை விசுவாசிகளுக்குக் சரி பாகமாகக் கொடுத்து விட்டீர்களா? ஒருவேளை தாங்கள் அப்படி இருந்தால் என்னுடைய வாழ் நாளில் நான் சந்திக்கும் முதல் வேதாகம கிறிஸ்தவர் என்று சொல்லி உங்களைப் போன்ற ஒருவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காக தேவனைத் துதிப்பேன். அல்லது ஊழியர்கள் அப்படி இருப்பதில்லை போதிப்பதில்லை என்பது மட்டும் தான் உங்கள் ஆதங்கமா? உங்கள் சுயவிளக்கத்தை அறியவிரும்புகிறேன். //

நான் அப்போஸ்தலருடைய வாழ்க்கை முறையை மேற்கொள்ளுகிறேனா என்பது போல கேட்டிருந்தீர்கள்; அதனை வரிசைப்படுத்தி சுயபரிசோதனை செய்து பார்த்ததில் சுயநீதியும் சுயபெருமையும் தலையெடுப்பது போலிருக்கவும் ஒரே வரியில் அது ஆண்டவருக்கே தெரியட்டும் என எழுத இருந்தேன்; அதையும் விஜய் செய்துவிட்டார்,நன்றிகள்..!

//நான் செய்யாததை எழுதியிருப்பேனானால் கர்த்தர் என்னை நியாயந்தீர்ப்பாராக! //

ஒரு உப தகவல்: நாம் இங்கே குற்றஞ்சாட்டும் அப்போஸ்தல தலைவர்களும் கூட எல்லாம் துறந்தவர்களே; அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது, "இத்தனை வருடம் ஆண்டவருக்காக ஓடினாலும் எங்களுக்கென்று ஒரு சொந்தமான ஒரு காரோ வீடோ கிடையாது "; குறிப்பாக சுவி.ஜான் சாலமோன் அவர்கள் இதே வார்த்தையை சொல்லக்கேட்டிருக்கிறேன்; ஆனால் அவருக்கென கி.க (ECR) சாலையில் சொந்தமான பண்ணை வீடு உள்ளது; அவருடைய பிள்ளைகளும் நல்ல கல்வியறிவைப் பெற்று வாலிபத்தின் பல சோதனைகளைக் கடந்தும்- எப்போது மனந்திரும்பினார்களோ அறியோம், தற்போது அவர்களும் ஊழிய வாரிசுகளாக ஜொலிக்கிறார்கள்;

அப்படியானால் அண்ணன் ஜான் சாலமன் அவர்கள் தனக்கென்று சொந்தமான காரோ, வீடோ கிடையாது என்று சொன்னது பொய்யா? தேவ சந்நிதானத்திலும் மக்கள் மன்றத்திலும் பொய் சொல்லிவிட்டாரா? அரசாங்கத்தை ஏமாற்றினாரா? கிடையாவே கிடையாது.

எப்போது, "பெயரும் வேண்டாம், புகழும் வேண்டாம்" என்று தங்கள் பெயரில் சிடி போட்டு- போட்டோ போட்டு -சினிமா ஸ்டைலில் ஆடித் தீர்த்து -கல்லா கட்டினார்களோ அப்போதே ஆண்டவரை சாந்தப்படுத்தி விட்டார்களே? தனக்கென்று எதுவுமில்லை என்று சொன்னவுடனே ஆண்டவர் அமைதியாகிவிட்டார்; அடுத்து மக்களும் அரசாங்கமும்; அரசாங்க சட்டப்படி இவர்களுக்கு எந்த சொத்தும் கிடையாது என்பது உண்மையே.

ஏனெனில் இவர்களுடைய ஊழியமானது டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து சொத்துக்களும் அறக்கட்டளைக்கே சொந்தமானது; என்ன இவரும் இவருடைய குடும்பத்தாருமே அறக்கட்டளையின் நிர்வாகிகள் என்பதால் இஷ்டம் போல செலவு செய்யலாம்; 80G எனும் வருமான வரி விலக்கும் பெற்றுக்கொள்ளலாம்; எனவே இறைச் சட்டப்படியும் அரசின் சட்டப்படியும் இவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் தான்.

எனவே இவர்கள் செலவு கணக்கு காட்ட அடிக்கடி ஆடம்பர காரை வாங்குவார்கள்; பிரசங்கி சொல்வது போல, அனுபவிப்பது மட்டுமே இவர்களுடைய பங்கு; மற்றபடி அவை யாருக்கோ? ஆடம்பரமாக உடுத்துவதற்கும் அந்த உடையை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவதற்கும் காரணமும் இதுவே; பந்தாவுக்கு பந்தாவும் ஆச்சு, செலவு கணக்கும் காட்டியாச்சு; இது எப்படி இருக்கு..?

chillsam Wrote on 13-12-2010 21:42:45:
// வலியில்லாமல் பிள்ளைபெற நினைக்கும் கர்ப்பிணிகளால் சபை நிரம்பியிருக்கிறது; //

இராஜ்குமார்:
// நீங்கள் சொன்னபடி அவர் வலியில்லாமல் பிரசவிக்கலாம் என்று சொன்னதாக வைத்துக்கொண்டாலும், அதை நம்பி அவர் சபைக்குச் சென்று காணிக்கையை அள்ளி வீசிய பெண்களில் ஒருவருக்குக் கூடவா இன்னும் பிர‌சவம் ஆகவில்லை? அந்த சபைக்குச் செல்லும் உங்கள் நண்பர்களிடம் இது குறித்து இன்னும் விசாரிக்கவில்லையா? //

நண்பரே,எனது கருத்தை நீங்கள் தவறாக அவதானித்துவிட்டீர்கள் என்றெண்ணுகிறேன்; நான் வசனத்துடன் தெளிவாகவே ஒரு உதாரணமாக கர்ப்பிணி என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன்; அது வார்த்தையின்படி கர்ப்பிணிகளைக் குறித்த வார்த்தையோ, மலடியைக் குறித்த வார்த்தையோ, வேசிகளைக் குறித்த வார்த்தையோ அல்ல என்று அறிய வேண்டுகிறேன்;

உங்கள் தெளிவுக்காக மற்றொரு வசனத்தைக் குறிப்பிடுகிறேன்; இது எனக்கு மிகவும் பிடித்தமான வேதபகுதியாகும்...

"கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை. (ஏசாயா.26:17)




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

rajkumar_s:@TCS

இது என்ன நண்பரே, என்னை மாபெரும் உலகத் தலைவர் Rev.சாம்.P அவர்களுக்கு சமமாக பாவித்து என்னை நோக்கி வழக்காடுகிறீர்களே...நான் களத்திலிருக்கும் ஒருவரைப் பற்றிய கருத்தாக்கத்தின் மூலம் விழிப்புணர்வைத் தூண்டும் முயற்சியில் இருக்கிறேன்;நீங்களோ தளத்திலிருக்கும் என்னை நோக்கி தங்கள் கோபக் கணைகளைத் திருப்புகிறீர்களே...எனக்கு ஏற்கனவே எதிரிகள் அதிகம்,அதில் உங்களையும் பகைத்துக் கொள்ள எனக்கு தைரியமில்லை.

// பின்குறிப்பு: தங்கள் பதில்களை மார்ஸ்மேடையில் பதிக்கவும் நன்றி  //

நான் இந்த விவாதத்தை இங்கே தொடருவதற்கு நிர்வாகத்தாரின் அனுமதியைக் கோருகிறேன்; அவர்கள் அனுமதித்தால் நான் தொடருவேன்; மற்றபடி நீங்கள் சிரமம் பாராது எனது தளத்துக்கே வந்துவிடுங்கள், ப்ளீஸ்..!

// இந்தக் கேள்வியோடு மற்றுமொரு கேள்வியையும் சேர்த்துக் கொள்கிறேன்...ஆசீர்வாதம் டீவீயின் புரட்சிகரமான கருத்து என்ற விவாதத் தலைப்பின் தங்கள் முடிவுரையில் இனி ஊழியர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கவும், சுட்டிக்காட்டி திருத்தவும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கென தனி தளம் உண்டாக்கப்படும் என்று தீர்மானித்திருந்தீர்களே அதன் தற்போதைய நிலை என்ன? அந்த இயக்கம் சாம் அவர்களிடம் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதா? ஆதாரங்களுடன் இங்கே வெளியிடுங்கள்... ஒருவேளை இதுவரை இல்லை என்று சொல்வீர்களாயின், அப்படியானால் அன்று சொன்னது பொய்யா?//

நான் கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது உண்மைதான்; அதனை மறுக்கவோ மறக்கவோ அந்த நிலையை விட்டு தாழ்ந்துவிடவோ இல்லை;ஆனாலும் இன்றைக்கு என்னை கேள்வி கேட்கும் நீங்கள் அதில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டீர்களா என்று கேட்க விரும்புகிறேன்; நீங்கள் என்றல்ல, அந்த கட்டுரையை வாசித்து சென்ற நண்பர்களில் ஒருவரைத் தவிர யாரும் என்னிடம் அதைக் குறித்து இன்னும் விசாரிக்கவில்லை; ஆனாலும் அந்த இயக்கத்தை நான் ஏற்கனவே இங்கே தனியனாக நடத்திக்கொண்டு தானிருக்கிறேன்; சில நண்பர்கள் எனது எழுத்துக்களை பிரதியெடுத்து தங்கள் பகுதிகளில் விநியோகிப்பதாகத் தகவல் வந்துள்ளது;

மேலும் நான் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சென்று சண்டைக்கும் மல்லுக்கும் நிற்பேன் என்று சொல்லவில்லையே;அந்த இயக்கமானது மனித உரிமைகள் இயக்கம், நுகர்வோர் மன்றம் போல சுயாதீனமாக இயங்கும்; யார் வேண்டுமானாலும் - எங்கு வேண்டுமானாலும் அதனைத் துவங்கலாம்; குழுவாக செயல்படவேண்டும், தலைவர் என்று யாரும் அவசியமில்லை என்பதெல்லாம் எனது எண்ணமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்;

இப்போதும் கூட எனது எழுத்துக்களை மின்னஞ்சலாகவோ அல்லது நமது தளத்தின் தொடுப்பையோ நீங்களே கூட அவர்களுக்கு அனுப்பி பதிலைப் பெறலாம்; நிச்சயமாக ஒரு பதில் வரும், "நீங்கள் எங்கள் ஆராதனைக்கு தொடர்ந்து வந்து கவனித்துவிட்டு பிறகு பாருங்கள் " என்று. பிறகு என்ன, ஒன்று நாமும் விழுந்து போவோம் அல்லது விழ வைப்பார்கள்.

நான் கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்ன காரணத்திலிருந்து வெகுதூரத்தில் Rev.சாம்.P அவர்கள் நிற்கிறார்; ஜட்சன் ஆபிரகாம், ஜியாஃபிரி போன்ற மோடி மஸ்தான்கள் செய்யும் வித்தைகளுக்கும்
Rev.சாம்.P அவர்களின் சூழ்ச்சியான போதகத்துக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு; பொதுவாக Rev.சாம்.P அவர்களோ அல்லது வேறு எந்த மோசடி ஊழியரோ இருதயத்தை நோக்கி பேசாமல் மூளையை நோக்கி- மூளைக்காகவே - மூளையறிவினால் பேசுகிறார்கள் என்றும் சொல்லுவேன்; இதனாலே அவர்களுடைய உபதேசம் விகர்ப்பமாகத் தோன்றுகிறது.

// சாம் அவர்களுக்கு நான் வக்களத்து வாங்குவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம், இந்த உலகத்தில் பாடுகள் இல்லை என்று அவர் போதிப்பதாக எனக்குத் தெரியவில்லை.//

அது இப்போது தெரியாது சகோதரா...இப்ப மயக்கத்தில் அல்லவா இருக்கிறீர்கள்...அவர் பெரிய மோசடி ஏதாவதில் சிக்கணும் அல்லது சொந்தமாக ஒரு தீவை வாங்கி - பளிங்கு மாளிகை கட்டி - சொந்த விமானத்தில் பறக்கணும், அப்ப உங்களுக்கெல்லாம் தெரிய வரும்... 'அடடா, கோட்டை விட்டோமே ' என்று பறிகொடுத்ததை நினைத்து பதறுவீர்கள்; எதை பறிகொடுப்பீர்களோ அது உங்களுக்கே தெரியும்;

இவர்களெல்லாம் கர்த்தருடைய வருகைக்குப் பிறகும் ஊழியம் செய்யவே சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லுகிறேன்; (ஸாரி,கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டன்..!) ஆம், அந்தி கிறித்துவின் ஆட்சி காலத்திலும் இவர்கள் தான் இந்த உலகுக்கு போதகர்களாக இருக்கப்போகிறார்கள், ஐயா..,விளங்கலையா..?

// செழிப்பின் உபதேச குற்றச்சாட்டு தற்போது சீஷத்துவ உபதேசமாகத் திரிந்து போய்விட்டது...இதுதான் முக்கியமாக நான் முன்வைத்த கேள்வி இதை சில்சாம் அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது ஏனோ? முதலில் செழிப்பின் உபதேச குற்றச்சாட்டுக்கு சரியான பதில் சொல்லுங்கள் //

சகோதரரே,அது இது என்று எதுவுமில்லை;ஒரே உபதேசம் தான், அது சீஷத்துவ உபதேசமே; இதைச் செய்யாததாலேயே அந்த குற்றச்சாட்டே வந்தது; இவர்கள் பைபிள் காலேஜ் நடத்தினாலும் சரி, ஹாஸ்டல் நடத்தினாலும் சரி அதன் மைய நோக்கம் கிறித்துவுக்காக சீடர்களை உருவாக்குவதல்ல; இவர்களைப் போன்ற போலிகளை உருவாக்குவதும் இவர்களுடைய மேலிட முதலாளிகளுக்கு கள்ளக் கணக்கு எழுதுவது மாத்திரமே; இங்கே இருக்கிற நீங்களும் நானும் தருவதெல்லாம் அவர்களுக்கு பல் குச்சி (Tooth pick) வாங்கக்கூட போதாது. அடுத்த பெரிய அடி (BIG STEP) எடுத்து வைக்க அவர்களுக்கு 25 கோடி வேண்டுமாம், இருந்தா பார்ஸல் பண்ணி அனுப்புங்க‌...சார்..! இது என்னைப் பொறுத்தவரை நிறைவேறிவிட்ட திட்டம்;அரசாங்கத்தை ஏமாற்றி தங்களிடமிருக்கும் கறுப்பை வெள்ளையாக்கவே நன்கொடை கேட்டு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

நூறு கோடி மக்களை சந்திக்க 25 கோடி ரூபாய் எதற்கு அண்ணாச்சி..? சத்திய வேதம் போதாதா? அதற்கு விசுவாச அறிக்கை எதுவும் தயார் செய்யவில்லையா?

// நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் இல்லை உதாரணம்: Positive thinking ‍ கள்ள உபதேசமா? //

பாஸிட்டிவாக சிந்திக்க (
Positive thinking ) உபதேசிப்பது தவறல்ல, நீங்கள் எதைக் குறித்து பாஸிட்டிவாக ( Positive thinking ) சிந்திக்கப் போதிக்கிறீர்கள் என்பதிலேயே அது கள்ளமா, உள்ளமா என்று விளங்கும்; பிரசங்க மேடையிலிருந்து பிஎம்டபிள்யூ கார் (BMW Car) வாங்க சிந்தையைத் தூண்டி உபதேசிப்பவன் துஷ்டப் பிசாசு..!

// பெலவீணங்களின் மத்தியில் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு என்று அறிக்கையிட்டு பெலவீணங்களை சந்திப்பது தவறானதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் சாம்pசெல்லதுரை ஒரு முறை சொல்லிக் கொடுத்த படி என் வாழ்வில் தோல்விகள் அவமானங்கள் பெலவீணங்களைச் சந்திக்கும் போது மேற்கண்ட வசன‌ங்களைத் திரும்ப திரும்ப அறிக்கையிடுகிறேன். ஒருவேளை இது கள்ள உபதேசம் என்று நண்பர்கள் சொல்லுவார்களாயின், அதை விட்டுவிடுகிறேன். தயவு செய்து விளக்குங்கள். //

உங்களுடைய எந்த பிரச்சினைக்கு
ம் வசனத்தை வெறுமனே சொல்வதால் எந்த பயனுமில்லை; இதற்கான‌ நிரந்தர தீர்வையும் மேன்மையான ஆலோசனையையும் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; முதலில் அந்த குறிப்பிட்ட பிரச்சினையுடன் சர்வ வல்லவரை சம்பந்தப்படுத்தி யோசிப்பதை நிறுத்தவேண்டும்;மனிதன் தனக்கு நேரிடும் எந்தவொரு காரியத்துக்கும் இறைவனே காரணம் என எண்ணும் மனப்பான்மையும் ஆபத்தானது;அதன் காரணமாகவே இறைவனிடம் சென்று கோபாவேசமாக சிலர் முறையிடுகின்றனர்;இன்றைக்கு ஒரு பிரச்சினையின் போது மனிதன் அதனை எதிர்கொள்ளும் முறையிலேயே அதிக தீவிரப்படுகிறது அல்லது அமருகிறது; இரண்டு தவறுகள் நடக்கிறது, ஒன்று தன்னுடைய அவசரத்தையோ தவறையோ ஒப்புக்கொள்கிறதில்லை; இரண்டாவது அந்த பிரச்சினைக்கு வேறு வெளி காரணங்களைத் தேடுகிறோம்; இதனால் தீர்வும் வெளியிலிருந்தே வரவேண்டியாதாகிறது; நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை இறைவன் மூலமாகத் தீர்க்க முயற்சிக்கிறீர்கள், நல்லது தான்;அதற்கு முதலாவது நாம் செய்யவேண்டியது, நம்முடைய தவறை உணர்ந்து அர்ப்பணத்துடன் கூடிய ஒரு மன்றாட்டை ஏறெடுக்கவேண்டும்;ஏதோ ஒரு வசனத்தை மந்திரம் போலக் கூறிவிட்டு அமர்ந்து ஜெபிக்காமல் இறைவனுக்கு கட்டளையிட உங்களுக்கு உரிமையில்லை; ஆம்,சமயத்தில் சில விசுவாச அறிக்கைகள் இறைவனையே அதிகாரம் செய்வது போலும் அமையும்.

பேருந்துக்காக காத்திருக்கிறீர்கள், தாமதமாகிறது,என்ன செய்வீர்கள், உடனே ஏதாவதொரு பாட்டை முணுமுணுக்கிறீர்கள்; பஸ் வரும் போது தன்னால வரும் நீங்கள் பாட்டு பாடி பஸ்ஸை வரவைக்க முடியாது ;ஆனால் நீங்கள் பாட்டு பாடுவது நீங்கள் சோர்ந்துப் போகாதிருக்க உதவும்;அப்படியே உங்கள் பெலவீனத்தின் போது பெலவீனத்திலிருக்கும் இன்னொருவருக்கு உதவி செய்யவேண்டும்;அது பிரமாணத்தின் நிறைவேறுதலாகவும் இருக்கிறது.

செழிப்பின் உபதேசத்தில் கொடுப்பதைப் பற்றிய உபதேச
ம் பணம் பறிக்கும் தந்திரமாகவே இருக்கிறது;எந்த செழிப்பு பிரசங்கியாராவது மற்றவருக்கு குறிப்பாக புறவினத்தாருக்கும் தரித்திரருக்கும் மிஷினரிகளுக்கும் உதவுவது பற்றி போதிக்கிறார்களா?

எல்லோருமே, "நாங்க மட்டுமே நல்லவங்க,உங்க பணத்த எங்க கிட்ட மட்டுமே குடுங்க,அப்ப தான் நாங்க ஆசீர்வாதத்துக்கு கியாரண்டி கொடுக்கமுடியும்" என்கிறார்களே, ஏன்..?

//  80000 ற்கு என்ன? 800000 ற்கே கண்ணாடி வாங்கட்டுமே, தேவன் அவரை போஷிக்கிறார் இவர் வாங்குகிறார். இதில் என்ன தவறு? விலையுயர்ந்த பரிமளத்தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஸ்திரீ ஊற்றிய போது யூதாஸ் கவலைப்பட்டது போல‌ அல்லவா இருக்கிறது கொஞ்சம் விளக்குங்களேன்....//

அண்ணே போட்டீங்களே ஒரு போடு...அப்படி போடணும்..!

"அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார். "(யோவான்.12:7,8)

வசனம் தெளிவாகச் சொல்லுகிறது,அது ஆண்டவருடைய மரணத்துக்கு அடையாளமான கிரியை என்று...அதைப் போய்...என்னமோ போங்க‌...மொத்தத்துல நீங்க மயக்கத்துல இருக்கிறீங்க,என்கிறது தெரியறது.

//பிச்சைக்கார வேசம் போட்டு பணம் பறிக்கும் ஊழியர்கள் தான் உண்மையான உபதேசிகளா?//

நீங்கள் குறிப்பிடும் ஊழியர்கள் பிச்சைக்காரர்களாக அலையக் காரணமே உங்க
Rev.சாம்.P ஐயா தான் என்கிறேனே..? செல்வம் ஒரு இடத்தில் குவிந்தால் ஏற்படும் சமநிலை தடுமாற்றத்தைக் குறித்து அறியாதவர்களா நீங்கள்..? ஊழியர்களின் ஏழ்மையை பரியாசம் செய்வது மிகவும் மோசமான பாவமாக எண்ணப்படும்.

அந்த காலத்தில்
Rev.சாம்.P அவர்களின் தகப்பனாரும் சரி இவரும் சரி சபையினருக்கு தியாகமாக எதையும் செய்ததில்லை; உதாரணமாக இன்றைக்கு வருடம் முழுவதும் பல வகையிலும் வருமானம் பார்க்கும் இவர்கள் தங்கள் சபையினருக்காக புதுவருடத்துக்கு காலண்டர் கூட இலவசமாகத் தருவதில்லை;

ஆனால் நீங்கள் குறிப்பிடும் ஏழை கிராம ஊழியர்கள் இன்றைக்கு கடனை உடன வாங்கியாவது சபை மக்களுக்கு பிரியாணி போட்டு, கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடத்தி, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களும், தாய்மாருக்கு சேலையும் கொடுப்பதுடன், புதுவருடத்துக்கு கேக் கொடுத்து, காலண்டர் கொடுத்து அனுப்புகிறார்கள்;காலண்டர் வசதியானவர்களுக்கு பெரிய விஷயமில்லை;ஆனால் ஏழைகளுக்கு அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறதல்லவா?  இவ்வளவும் செய்வதற்கு அவர்களுக்கு எங்கிருந்து தான் பணம் வரும்? கிராம சபைகளின் காணிக்கை பணத்தை டிவியில் வேஷம் போட்டு பறிப்பது உங்க‌ ஊழியர்கள் தான் ஐயா..! உள்ளூர் கோலி சோடாவை விட மேநாட்டு கோக் குடிச்சாத் தான் சிலருக்கு விக்கல் நிக்குமாம்..!

// மற்றவர்களைக் குறித்து குற்றம் சொல்லுவதற்கு நாம் யார்? குற்றச்சாட்டுறவர், குற்றச்சாட்டின் ஆவியுடையவர் பரிசுத்த ஆவியானவரா? நாமே குற்றம் சாட்ட ஆரம்பிப்போமானால் மகா நீதிபரருடைய நியாயத்தீர்ப்பின் நாள் எதற்கு?..முதலில் நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தைக் களைந்து போட்டு அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க வழிபார்ப்போம்...//

நீங்க சொல்றத சொல்லுங்க நான் செய்யறத செய்யிறேன்...இத நான் சொல்லல, நம்ம ஊழியர்கள் இப்படியே இருக்கிறார்கள்; இது எச்சரிப்பு தானே தவிர குற்றஞ்சாட்டுதல் அல்ல‌... அப்படியானால் பவுல் சிலரிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதும் பேதுருவை முகமுகமாகக் கண்டித்ததும் தவறாகி விடுமே?

எனவே சத்தியத்துக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் எழுதுபவை ஒருபோதும் குற்றஞ்சாட்டுதலாக இருக்காது;ஏனெனில் அந்த ஊழியர்களை நான் நேசிக்கிறேன்,அவர்களிடம் இருக்கும் சில நல்ல‌ காரியங்களை இரசிக்கிறேன்;பலரும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களாக்கும்;

உதாரணமாக ஜெர்ஸன் எடின்பரோ வின் "நீரே" முதல் ஆல்பத்தை கண்ணீருடன் கேட்டு இரசித்தேன்;ஆனால் அவரும் மாயவலையில் விழுந்துவிட்டது வெளிப்படை; எப்போது ஒரு கம்பெனியுடன் காண்ட்ராக்ட் (Contract) போட்டு கான்செர்ட் (Concert) என்று வியாபாரரீதியில் பண்ணுகிறார்களோ அப்போதே எல்லாம் வந்து விடும்;

தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் 11 வது பாகத்தைக் கேட்டு நான் இரட்சிக்கப்பட்டேன்;ஆனால் அவருடைய தற்போதய பாடல்கள்..? உங்களுக்கே வித்தியாசம் தெரியும்;ஆரம்பத்தில் தேவனுக்காக தேவனுடனிருந்து பாடினார்கள்;ஜெயித்த பிறகோ தங்களுக்காக தங்கள் பேர் பிரஸ்தாபத்துக்காக போட்ட காசை எடுக்க‌ தேவனை வியாபாரப் பொருளாக்குகிறார்கள்.

இங்கே யாரை குற்றஞ்சாட்டுகிறேன், இன்னும் மேன்மையாக ஆதி அன்பில் ஊழியம் செய்யுங்கள் என்றல்லவா சொல்லுகிறேன்;ஊழியத்தை ஏன் வியாபாரமாக்குகிறீர்கள்? வியாபார நுணுக்கத்தின் காரணமாகவே சத்தியம் மாசுபடுகிறது;சத்தியத்தைச் சத்தியமாகச் சொன்னால் விலைபோகாது என்பதாலேயே கவர்ச்சி லேபிள் ஒட்டி அதிக விலைக்கு விற்கிறீர்கள்; ஆனால் அது இலவசமானது என்பதை மறந்துவிட்டீர்களே..?

உதாரணத்துக்கு, ஒரே ஒரு முறை சபைக்காகக் கொடுத்த்துவிட்ட‌ செய்தியை பதிவு செய்து விற்கும்போது தயாரிப்பு செலவு என்பது ஒரு பொருட்டல்ல; ஒரு சிடியின் விலை வெறும் 3 ரூபாய் தான்;தரமான சிடி 7 ரூபாய், ஆக மொத்தத்தில் அதன் தயாரிப்பு செலவு என்பது அதிகபட்சம் ரூ.15/-க்குள் அடங்கும்; ஆனால் அது விற்கப்படுவதோ 150 ரூபாய்க்கு; இது என்ன ? அதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் தந்திரம்..! அதற்கு விற்பனை வரியோ வருமான வரியோ பில்லோ ஒன்றும் கிடையாது;எல்லாம் நன்கொடை தான்.

இது என்ன வகை பணம் பறிக்கும் தந்திரம்..?


அதே தாயப்பன் எனும் சாட்சி வீடியோவே எடுத்து வெறும் பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறார்; அது எப்படி சாத்தியமாகிறது?

ஓஹோ முதலீடு செய்ததையெல்லாம் கணக்கில் கொள்ளவேண்டுமா? அப்படியானால் வியாபாரம் தானே செய்கிறார்கள்?

நீங்களோ ஏழை ஊழியர்களை பிச்சைக்காரர்கள் என்று தூஷிக்கிறீர்கள்,அது குற்றஞ்சாட்டுவதாக ஆகாது,ஆனால் கோட்சூட் போட்ட மோசடியாளர்களைக் குறித்து எச்சரித்தால் குற்றஞ்சாட்டுவதாகிவிடுமா,அது என்ன நியாயம்?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


//இன்றைக்கு வலியில்லாமல் பிள்ளைபெற நினைக்கும் கர்ப்பிணிகளால் சபை நிரம்பியிருக்கிறது; //

சகோ.சில்சாம் இதுவும் செழிப்பின் உபதேசங்களில் ஒன்றுதான். டெரிமைஸ் என்பவர் எழுதிய “முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என்ற நூலில். கிறிஸ்து நமது சாபங்களையெல்லாம் சுமந்து தீர்த்தது மெய்யானால். அதில் ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட பிரசவவேதனை சாபமும் அடங்கும். எனவே இரட்சிக்கப்பட்ட ஒரு பெண் விசுவாசிக்கக்கூடுமானால் வலியில்லாமல் பிள்ளை பெறக்கூடும் என்கிறார். ஏனென்றால் அந்த வலியை இயேசு சிலுவையில் ஏற்கனவே சுமந்து தீர்த்துவிட்டதாகச் சொல்கிறார்(!). அவரது மனைவியின் சாட்சியையும் அதில் எழுதியிருக்கிறார்.

இயேசு நியாயப்பிரமாணத்தின் சாபங்களுக்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் இது நியாயப்பிரமாண சாபமல்ல என்றால் இல்லை இதுவும் அடங்கும் என்கிறார்கள். மேலும் நாம் ஆதாம் போல கடினமாக உழைக்க வேண்டியதில்லையாம், அந்த சாபமும் தீர்க்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். கர்த்தருக்கே வெளிச்சம்!!!


-- Edited by vijay76 on Monday 13th of December 2010 09:40:57 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


rajkumar_s:@TCS

// உங்களுக்கு வேண்டிய எல்லாம் சிலுவைல நம்ம அப்பா நமக்காக ஏற்கெனவே ரெடிபன்னி வச்சிருக்காரு... நீங்க அத சுதந்தரிக்கரது மட்டுந்தான் உங்க, என் வேலை. //

இதைத் தானே நாங்க எதிர்க்கிறோம்..? சுத்தி சுத்தி வந்து உலகப்பிரகாரமான சுய உந்துதல் (Self motivation &
Personality development ) போதனையையே அவர் தருகிறார்; ஒருமுறை சிலுவைக்கு முன் தாழ்த்தியவனுக்கு சுயம் என்பதே இல்லையல்லவா? பிறகு ஏது டார்கெட், ஏது தனி விருப்பம்..?

சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகன் நன்றாக அடிவாங்கிக் கொண்டிருந்தாலும் சிரிப்பான்,ஏண்டா சிரிக்கிறே என்றால் அழுதா மட்டுமா விட்டுடவா போறீங்க என்பான்; அதுபோன்றதே சாம் அவர்களின் போதனையும்;அவர் சொல்கிறார்," நீ அடிவாங்கினாலும் வலிப்பது போல காட்டிக்கொள்ளவே கூடாது; அப்ப தான் நீ தேவ குமாரன் "


//சில விசுவாசிகள் சுகமே இல்லை பிரதர், சமாதாணமே இல்ல பிரதர்ன்னு புலம்பறாங்க, உங்க வீட்டு நாய் தொலஞ்சு போச்சுன்னா கானாம போயிடுச்சுன்னு இப்படி புலம்புவீங்களா? போய் அதைத் தேடுவீங்க தானே, அப்படி ஏன் நீங்க இல்ல இல்லன்னு சொல்றத தேட மாட்டீங்றீங்க?//

இது பக்கா சினிமா டயலாக்...உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பாக Revsam ஐயாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்தது யாருக்காகவது தெரியுமா? அப்போது விசுவாச அறிக்கையல்ல, அப்போல்லோ ஹாஸ்பிடலே காப்பாற்றியது; அப்படியானால் வசதியானவர்கள் செலவு செய்து உயிர்பிழைத்துக் கொள்வார்கள்; ஏழைகளோ வேறு வழியில்லாமல் விசுவாசித்து சுகம் பெறவேண்டும் என்பது தான் விசுவாச போதனையா?

நாயைத் தேடுவதும் சுகம் தேடுவதும் ஒன்றா..? ஆண்டவர் சொன்ன காரியத்திலாவது சுகத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார்; இவரோ ஒரு படி மேலே சென்று சுகத்தையே நாயுடன் ஒப்பிடுகிறாரே..?

கிளர்ச்சியை உண்டாக்குபவரெல்லாம் நமக்குத் தலைவராகி விடமுடியாது; இவர்களைவிட வைகோவும் திருமாவும் அங்கே கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." (யோவான்.16:33)

இந்த வசனத்துடன் உங்களுடைய - அதாவது சாம் அவர்களின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்; வசனத்துடன் ஒரு மனுஷனுடைய கூற்று இணையவில்லை என்றால் வேறொரு வசனத்தின் மூலம் அதனை ரூபிக்க முயற்சிக்காமல் மனிதத் தத்துவத்தையே புறக்கணிக்கவேண்டும்.

சாம் நல்ல பிரசங்கியார் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை; அவர் சாமர்த்தியமாக ஜெயித்ததை ஒப்புக்கொண்டோமே..? ஆனால் அவர் எதை பிரதானப்படுத்துகிறார் என்பதே கேள்வி; மீண்டும் மீண்டும் வலியுறுத்தி போதிக்கவேண்டியது சீஷத்துவமே; சீஷத்துவத்தில் தேவர்கள், தேவகுமாரர்களெல்லாம் கிடையாது; பாடுகள் உண்டு, சகிக்கவேண்டும்; கர்த்தரை நினைத்துக் கொள்ளவேண்டும்; மீண்டும் எழும்பி ஓடவேண்டும், அவர் வரும்வரையிலும்.

உதாரணமாக டவுன் பஸ் போன்றது கிறித்தவ வாழ்க்கை; அநேகர் ஏறுவர், இறங்கிச் செல்வர்; டிரைவரும் கண்டக்டரும் எங்கும் செல்ல முடியாது; தன் பணி நிறைவான பிறகே விடுதலை; அது சுமை இழுக்கும் வண்டி மாட்டைப் போன்றது; அவ்வப்போது ஒய்வு கிடைக்கும்; ஆனாலும் தொடர்ந்து சுமக்கவேண்டும்.

இன்றைக்கு வலியில்லாமல் பிள்ளைபெற நினைக்கும் கர்ப்பிணிகளால் சபை நிரம்பியிருக்கிறது; அன்றைய சின்ன ‌ சந்தோஷத்தின் விளைவாக இன்றைய பெரிய துன்பம் வந்தது உண்மையானால், இந்த பெரிய துன்பத்துக்கும் மேலாக பேரின்ப ஆனந்த பாக்கியம் நிச்சயம் என்பதே விசுவாசம்; இதைச் சொல்லி பிள்ளையை வளர்க்காமல் கருச் சிதைவு செய்து கொள்ளவும் பாடு இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளை பெறவும் இன்றைய தாய்மார் அறிவுறுத்துகின்றனர்; இதனால் பிள்ளை பெறவேண்டிய கன்னியர் மலடிகளாகவும் விபச்சாரிகளாகவும் மாறிப்போயினர்.

இது என் எஜமானரின் சத்தம்:


"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.(யோவான்.16:20,21,22)


கடுமையான சொற்பிரயோகங்களுக்கு சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு,

//செழுமை உபதேசம் சில குறைபாடுகளை கொண்டது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை விமரிசிக்கிறவர்களும் சரியான உபதேசத்தை சொன்னதாக எனக்கு தெரியவில்லை.//

யாரும் அதை தங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை ஏனெனில் அதைத் தாங்களே நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள்.

சரியான உபதேசம் எது என்றால் மனிதன் தன் பாரங்களை இயேசுவிடம் கொடுத்து விட்டு அவரது சமாதானத்தாலும், சந்தோசத்தாலும் நிரம்பவே மனிதனை அவர் இரட்சித்திருக்கிறார். ரத்த சாட்சியாக மரித்தவர்கள் துன்பத்தோடு மரிக்கவில்லை. தேவன் அருளிய சமாதானமும், சந்தோசத்தையும் அனுபவித்தே மரித்திருக்கின்றனர். மேலும் அந்த சமாதானமே அவர்களது துன்பத்தை இல்லாமல் செய்திருக்கிறது. வெளி மனிதர் பார்வைக்கு அவர்கள் துன்பபட்டவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் உள்ளே அனுபவித்ததோ பரலோக இராஜ்ஜியம்.

அருமை!! உங்களுக்கு என் பாராட்டுக்கள். உலகிலேயே இயேசுவைப் போல் துன்பப்பட்டவர்கள் யாருமில்லை அதே வேளையில் அவரைப் போன்ற மகிழ்ச்சியானவர்களும் யாரும் இருந்திருக்க முடியாது. காரணம் அவர் தீமையை வெறுத்து நீதியை நேசித்ததால் பிதாவானவர் இவரை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் பண்ணிவைத்திருந்தார் (சங் 45:7). உலகத்தின் அதிபதி என்னிடத்தில் வருகிறான் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்பதே இயேசுவின் சாட்சி, மகிழ்ச்சியின் ஊற்றும் அதுவே! ரோமானிய கொடுங்கோலர்களின் கையில் சிக்கியிருந்தபோதிலும் உபத்திரவத்தில் உழன்ற போதிலும் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 4:4 இல் சபைக்கு சொன்ன அறிவுரை ”கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.” என்பதே! தெய்வீக மகிழ்ச்சியற்ற துன்பத்தை நாங்களும் நம்பவில்லை, விரும்பவில்லை, போதிக்கவுமில்லை.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


சகோதரர் சில்சாம் மற்றும் விஜய் அவர்களே,

நான் என்னுடைய கருத்தை எழுதியிருப்பது அவரது செய்தியை வைத்து மட்டுமே. அவர் வாழ்வில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்க போகிறது அல்லது அவர் எப்படி வாழ்ந்தார்/வாழ்கிறார் என்பதை வைத்து அல்ல‌.

ஏனெனில் அவை எதுவும் எனக்கு தெரியாது. அவர் செய்தியில் தவறு இருந்தால் அதை சுட்டி காட்ட வேண்டியது அவரது செய்தியை குற்றம் சொல்லுபவர்கள் செய்ய வேண்டிய கடமை.

செய்தியை சொல்லி விட்டு அவர் என்னிடம் தசம பாகம் எதுவும் வாங்கவுமில்லை. நானும் கொடுக்கவுமில்லை. அவர் செய்தி சரியா? தவறா? என்பதற்கே நான் பதில் சொல்லியிருக்கிறேன். அவர் சரியானவரா அல்லது தவறானவரா என்பதற்க்கு அல்ல‌.

செழுமை உபதேசம் சில குறைபாடுகளை கொண்டது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை விமரிசிக்கிறவர்களும் சரியான உபதேசத்தை சொன்னதாக எனக்கு தெரியவில்லை. உதாரணமாக கிருஸ்துவன் துன்பப்பட வேண்டும், சிலுவை சுமக்க வேண்டும் என்ற உபதேசங்கள்.

சரியான உபதேசம் எது என்றால் மனிதன் தன் பாரங்களை இயேசுவிடம் கொடுத்து விட்டு அவரது சமாதானத்தாலும், சந்தோசத்தாலும் நிரம்பவே மனிதனை அவர் இரட்சித்திருக்கிறார்.

ரத்த சாட்சியாக மரித்தவர்கள் துன்பத்தோடு மரிக்கவில்லை. தேவன் அருளிய சமாதானமும், சந்தோசத்தையும் அனுபவித்தே மரித்திருக்கின்றனர். மேலும் அந்த சமாதானமே அவர்களது துன்பத்தை இல்லாமல் செய்திருக்கிறது.

செழுமைக்கு எதிரான- துன்பத்தை பற்றிய, சிலுவையை பற்றிய‌ விமர்சனம் செழுமை பிரசங்கத்தை விட மோசமான விளைவுகளை கொண்டு வரும் என்பது என் கருத்து.

வெளி மனிதர் பார்வைக்கு அவர்கள் துன்பபட்டவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் உள்ளே அனுபவித்ததோ பரலோக இராஜ்ஜியம்.

என்னுடைய வாழ்வில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தால், எந்த போதகருடைய செய்தியுமே நான் கிருஸ்துவில் நிலை நிற்க உதவி செய்யவில்லை. அவர் செழுமையை பற்றி பிரசங்கித்தாலும் சரி அல்லது துன்பத்தை பற்றி பிரசங்கித்தாலும் சரி. அதற்கு பிறகு பல போதகருடைய புத்தகங்களை படித்தும், சுயமாக வேதத்தை ஆராய்ந்தும் ஓரளவுக்கு இயேசுவுக்குள் நிலை நிற்க கற்று கொண்டேன்.

இன்று கிருஸ்துவர்கள் இயேசுவுடனான ஐக்கியம் என்ற வேதத்தின் நிறைவை நோக்கி செல்லாமல் ஏதோ அவருடன் ஓரளவுக்கு தொடர்பு கொண்டிருந்தால் போதும் என நினைப்பதற்க்கு அனேகர் தாங்கள் சரியென நினைக்கும் சிலுவை சுமப்பதை பற்றிய செய்திதான் என்பது தெரியுமா?



-- Edited by SANDOSH on Sunday 12th of December 2010 07:17:39 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


நேர்த்தியான - நிதானமான -சத்திய முத்துக்களைப் பதித்த அருமை நண்பர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;எனக்கு எதிரிகள் அதிகம் என்பதால் நான் என்ன சொன்னாலும் அதனை தூஷணமாக சிலர் நினைக்கின்றனர்;ஆனால் உங்களைப் போன்ற மெத்த படித்தவர்களும் விசாலமான உலகப் பார்வை (World Vission..?!) உள்ளோரும் சொன்னாலாவது ஏறவேண்டிய இடத்தில் ஏறுகிறதா, என்று பார்ப்போம்.

இல்லாதவனான நான் சொன்னால் பொறாமையினால் சொல்வதாகச் சொல்வர்;ஆனால் நல்ல சூழ்நிலையில் இருந்தும் அனைத்தையும் குப்பையும் நஷ்டமாகவும் எண்ணும் மனோபாவம் உங்களைப் போன்ற ஒருசிலருக்கே வந்து வாய்க்கும்;கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை இதனால் அறிகிறேன்;வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


கிறிஸ்துவுக்குள் என் அன்பு சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு என்னுடைய பதில்கள்:

//இவரின் செய்திகளை நான் விரும்பி பார்ப்பேன். அவைகளில் ஒன்றாகிலும் எனக்குள் தடுக்கலை ஏற்படுத்தியது கிடையாது.//

தாங்கள் இயேசுவையும், இவ்வுலகத்தின் ஆசீர்வாதங்களையும் நேசிப்பவராக இருந்தால் இவரது செய்திகள் தங்களுக்கு தடுக்கலை ஏற்படுத்தாது. இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யக்கூடாது, இயேசுவை மாத்திரம் சேவிக்க வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவராயிருந்தால் நிச்சயம் இவரது செய்திகள் தங்களுக்கு தடுக்கலை அல்ல கோபத்தை ஏற்படுத்தும்

//இவர் செழுமையை பற்றி பேசினாலும் அதை இவர் தன் வாழ்வில் உணர்ந்து அதனாலேயே பேசுகிறார். செழுமையை போதிக்கும் ஊழியர்கள் அனேகர் உள்ளுக்குள் பிச்சைக்காரர்களாக இருப்பது உண்டு. ஆனால் இவர் அப்படி அல்ல//

இவர் வாழுகிறதைப் போதிக்கிறாரா அல்லது போதிக்கிறபடி வாழுகிறாரா என்பது பிரச்சனை அல்ல. வேதத்தில் உள்ளதைப் போதித்து கிறிஸ்துவுக்கு கறைதிரையற்ற மணவாட்டியை ஆயத்தம் பண்ணுகிறாரா என்பதே கேள்வி.

//மேலும் தேவனுடைய செய்தி செழுமையை பற்றி இருக்க கூடாது என்பது என்ன கட்டாயம்? இன்று சிலருக்கு செழுமையை பற்றிய செய்தியும் அவசியமாகவே இருக்கிறது.//

சிலருக்கு செழுமையைப் பற்றிய செய்தி அவசியமாயிருக்கலாம் ஆனால் தேவனுக்கு எது அவசியமாய்ப் படுகிறதோ அதுவே சபையில் போதிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாம் அவருக்கென்று அவரால் படைக்கப்பட்டவர்கள். எனக்கு எது தேவையோ அதைக் குறித்த போதங்களைத்தான் கேட்பேன் என்பது அவரை நமது ஆண்டவராகக்(Master) கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. நமது தேவைக்கேற்ற, செவித்தினவுக்கேற்ற போதகர்களை சேர்த்துக் கொள்வது ஆபத்து சகோதரனே!

//பிச்சைக்காரனாய் இருப்பதும், துன்பப்படுவதும் தான் தேவனுடைய செய்தி என்று யார் சொன்னது?//

நாம் பிச்சைக்காரராய் இருப்பது தேவசித்தமல்ல என்பது உண்மைதான். நாம் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டும் என்று எந்த நூற்றாண்டிலும் யாரும் போதித்ததாக எனக்குத் தெரியவில்லை. நாம் முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியயும் தேடினால் அவர் எல்லாவற்றையும் கூடக்கொடுப்பார், தேவைகளை சந்திப்பார். நமக்கு அந்த அறிவும் விசுவாசமுமே போதும். மேலும் கிறிஸ்துவுக்காக நின்றால் துன்பம் அனுபவிக்கத்தான் வேண்டும். ஏனெனில் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. அது கிறிஸ்துவைப் பகைக்கிறது. நீங்கள் அவருடையவராக இருந்தால் நீங்களும் பகைக்கப்படுவீர்கள்.


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

இன்றைய ஆவிக்குரிய சபைகள் பல ஆழமான வேதாகம சத்தியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போதிக்காததே இதுபோன்ற செழிப்பின் (கள்ள) உபதேசங்கள் தமிழகத்தில் வேரூன்றக் காரணம். நாம் கிறிஸ்துவுக்குள் யாராக இருக்கிறோம், இயேசுகிறிஸ்து கல்வாரியில் நமக்காக சம்பாதித்தது என்ன என்ற போதகங்கள் நமது ஆவிக்குரிய சபைகளில் தெளிவாக இல்லை.

பரிசுத்த ஆவியில் நிரம்ப வேண்டும், அந்நிய பாஷை பேசவேண்டும், உபவாசம் பண்ணவேண்டும், சபைக்கும் பாஸ்டருக்கும் உண்மையாக இருக்க வேண்டும், சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் இவை மாத்திரமே ஒரு கிறிஸ்தவனுடைய நீதி என்று ஆகிப்போய் விட்டது. ஆவிக்குரிய சபைகள் தங்கள் மக்களிடம் எதிர்பார்ப்பதும் இவைகளே!


ஆனால் விசுவாசிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்ன? பவுலின் ஏக்கம் நிறைந்த ஜெபத்தைப் பாருங்கள்:


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 1:17-19)


ஆவிக்குரிய சபைகள் சொல்லிக்கொடுக்க வேண்டியவைகளை சொல்லிக்கொடுக்காமல் மக்களைப் பட்டினி போட்டு வைத்திருக்கும் நிலையில், செழிப்பின் உபதேசகர்கள் வந்து
“ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள் தேவநீதியாய் இருக்கிறான்” என்ற மாபெரும் சத்தியத்தைச் சொல்லும் போது அந்த விசுவாசி உண்மையிலேயே உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான். ஒரு மாபெரும் உண்மைக்கு தன் கண்கள் திறக்கப்பட்டதாக உணருகிறான். இதைத்தான் அவர்கள் பிரியாணி என்கிறார்கள்.

அதுவரை செழிப்பின் உபதேசம் சரியானது, வேதாகமத்துக்கு உட்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு நடப்பவைகள்தான் துக்கமானவைகள். அந்த செழிப்பின் உபதேசகர் அந்த விசுவாசியை
”பார்! நீ கிறிஸ்துவுக்குள் எவ்வளவு மேன்மையானவனாக இருக்கிறாய்!!” என்று சொல்லி அவனை புதிய ஏற்பாட்டு பிரதிஷ்டை வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லாமல் பழைய ஏற்பாட்டு பொருளாதார ஆசிக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார். (அவரது வயிற்றுக்காக)

இது வேறு ஒன்றுமல்ல ஏதேன் தோட்ட சர்ப்பத்தின் ஸ்டைல் அவ்வளவே! பிசாசு பேசும்போது 100% பொய் பேசமாட்டான், முதல் 50% சுத்த சத்தியமும், அடுத்த 50% ஆலகால விஷமும் இருக்கும்.

  • செழிப்பின் உபதேசகர்கள் சொல்லும் கிருபை, கிறிஸ்துவுக்குள் தேவ நீதி போன்றவை சுத்தமான வேத சத்தியங்கள்
  • பொருளாதார ஆசீர்வாதம், தசமபாகம், போன்றவை பழைய ஏற்பாட்டுக் காரியங்கள். புதிய ஏற்பாட்டில் தசமபாகம் இல்லை. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் உண்ணவும் உடுக்கவும் அடிப்படை தேவைகள் சந்திக்கப்படவும் இருந்தால் போதும் என்றிருக்க வேண்டும் என்று 1 தீமோ 6 ஆம் அதிகாரம் கூறுகிறது. இந்த உலகத்தில் நாம் அந்நியரும் பரதேசியுமாய் இருக்கிறோம் என்ற வேத வார்த்தைக்கும், இவர்கள் சொல்லித்தரும் கோடீஸ்வர வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? கேட்டால் ஆண்டவருக்குக் கொடுக்கவே ஐசுவரியத்தைக் கேட்கிறோம், எங்களுக்காக அல்ல என்பார்கள். இது எப்படி இருக்கு? ஆண்டவர் நம்மிடம் பணம் கேட்கவில்லை, உலகத்தை வெறுத்து சிலுவையை சுமக்கும் வாழ்க்கையையே கேட்கிறார்.
  • செழிப்பின் உபதேசகர்கள் சொல்லித்தரும் விசுவாச அறிக்கை செய்தல் (Faith Confession), விசுவாசியின் அதிகாரம், நோயே இல்லாத வாழ்க்கை இவைகளெல்லாம் முழுக்க முழுக்க மனோதத்துவம் சொல்லித்தரும் Personality development ஆகும். இதற்கும் வேதத்துக்கும் சம்பந்தமே இல்லை. வாய் வசனத்தை அறிக்கை செய்தால் அதை காதுகள் கேட்டுக் கேட்டு விசுவாசம் பெருகிவிடும் நாம் நிறைய சாதித்துவிடலாம் என்பது இவர்களது போதனை. இயேசு இப்படித்தான் வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டாரா? என்று பேதை விசுவாசிகள் கேள்வி கேட்பதில்லை. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் இவர்களோ வாயினால் பேசி இருதயத்தை நிறைக்க முயலுகிறார்கள்.

செழிப்பின் உபதேசம் வேரறுக்கப் படவேண்டுமென்றால் முதலாவது ஆவிக்குரிய சபைகள் திருந்த வேண்டும்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

2SANDOSH Wrote on 11-12-2010 21:55:30:
போதகர் சாம் செல்லத்துரை அவர்களின் போதகத்தை பல வருடங்களுக்கு முன்பாக டி.வி யில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் பெயர் நினைவில் இல்லை. போட்டோவை பார்த்த பின்பே அவர்தான் என தெரிந்து கொண்டேன். இவரின் செய்திகளை நான் விரும்பி பார்ப்பேன். அவைகளில் ஒன்றாகிலும் எனக்குள் தடுக்கலை ஏற்படுத்தியது கிடையாது. இவர் செழுமையை பற்றி பேசினாலும் அதை இவர் தன் வாழ்வில் உணர்ந்து அதனாலேயே பேசுகிறார். செழுமைமை போதிக்கும் ஊழியர்கள் அனேகர் உள்ளுக்குள் பிச்சைக்காரர்களாக இருப்பது உண்டு. ஆனால் இவர் அப்படி அல்ல‌.மேலும் தேவனுடைய செய்தி செழுமையை பற்றி இருக்க கூடாது என்பது என்ன கட்டாயம்? இன்று சிலருக்கு செழுமையை பற்றிய செய்தியும் அவசியமாகவே இருக்கிறது.அவர் என்ன செய்தி சொன்னாலும் அவை தேவ வார்த்தையின்படியே அமைந்திருக்கிறதை கண்டிருக்கிறேன். இவரை போன்ற போதகர்கள் அபூர்வமானவர்கள். பிச்சைக்காரனாய் இருப்பதும், துன்பப்படுவதும் தான் தேவனுடைய செய்தி என்று யார் சொன்னது?

My Reply:


அண்மையில் நம்முடைய பயங்கரவாதி (Reverend) அதாவது Rev.Sam.P அவர்கள் ஒரு பிரபலமான கண்ணாடி கடைக்குச் சென்றாராம்; அங்கு இருப்பதிலேயே விலையுயர்ந்த கண்ணாடி ஃப்ரேம்- ‍ஐ விலைபேசியிருக்கிறார்; வழக்கமாக இதுபோன்ற பந்தா பேர்வழிகள் வந்தால் பணியாளர்கள் தங்களுக்குள் கண்ணடித்துக்கொண்டு பகிர்ந்துகொள்ளும் சங்கேத பாஷை வார்த்தையானது "பலிகடா வந்திருக்கு,போட்டுத் தள்ளு..." என்பதாம்; அதன்படி அத்தனை விலைபெறாத ஒரு சாதாரண தங்கமுலாம் பூசிய கண்ணாடி ஃப்ரேம்- ஐ கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய்க்கு பில் போட்டு அதற்கு வரியும் தீட்டி அனுப்பினார்களாம்; இது கட்டுக்கதையல்ல, இதை நம்முடைய ஐயா படித்தால் நிச்சயமாக நாக்கைக் கடித்துக்கொள்ளுவார்; இதைச் சொன்ன கத்தோலிக்க சகோதரன் வருத்தத்துடன் சொன்னது, "கிறித்தவ ஊழியர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும்,அவர்கள் செலவிடுவதெல்லாம் கடவுளுடைய பணமல்லவா, ஆனால் அவர் சொல்லுகிறார்,நல்ல ஃப்ரேம் ‍ஐ கொடுங்கப்பா, நான் டிவியில பேசற ஆளு என்று, அப்படியானால் இவர் கடவுளுக்காகப் பேசுவதைவிட தான் பந்தாவாகத் தோன்றுவதிலேயே கவனமாக இருக்கிறாரல்லவா..?" என்று அந்த சகோதரர் சொன்னார்.

போதகர் சாம் அவர்களுடைய வெற்றி மிக நிதானமான திட்டமிட்ட வெற்றி என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை; ஆனாலும் நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பிரதானப்படுத்தியவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆபிரகாமையும் செழிப்பையும் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது சரியா, என்பதே.

ஆனால் நண்பர்கள் சிலர் இங்கே அவர் பரவலாக வேதம் முழுவதையும் பல்வேறு தலைப்புகளில் பிரசங்கிப்பதாகக் கூறுகிறார்கள்; அந்த தலைப்புகளில் ஏற்கனவே இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான போதனைகள் கொட்டிக் கிடக்கிறது; நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொன்றையும் ஏற்கனவே செய்து வைத்திருப்பதையே எடுத்து பரிமாறுகிறார்கள்; இதில் தனியான உழைப்போ, வெளிப்பாடோ, சாதனையோ ஏதுமில்லை; ஆங்கிலத்தில் ஜாய்ஸ் மேயர் போன்றோர் செய்வதையே சற்று மாற்றி கொடுக்கிறார்; (அந்தம்மாவின் கதைகள் தனி...) அதிலும் அண்மையிலே போதகர் சாம் அவர்கள் தன்னை நவீனப்படுத்திக்கொண்டு மூளையறிவினால் செய்து வருபவை நிச்சயமாகவே மக்களால் புகழப்படும்; ஏனெனில் இவருடைய ஆரம்பகால போதனைகளில் பலவும் சலிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக‌ மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்பது போலிருக்கும்; இவையெல்லாம் சுயமுன்னேற்றம் (self motivation) மற்றும் தன்னம்பிக்கை (self confidence) தியரிலும் நிர்வாகயியல் (Management) படிப்பில் நேர நிர்வாகம் (Time management) மற்றும் பண நிர்வாகம் (Money management) போன்ற தளங்களிலும் ஏற்கனவே போதிக்கப்படுவதுதான்;எனவே அதில் எந்த அதிசயமுமில்லை.

நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் APJ.அப்துல் கலாம் மற்றும் MS.உதயமூர்த்தி போன்றோர் புகழப்படுவதுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமேயில்லை; வாழும் கலை (Art of Living)யோகி இரவிசங்கர் இதைவிட அதிகமாக சாதிக்கிறார்;நாம் செல்ல முடியாத தளங்களுக்கெல்லாம் அவரால் செல்லமுடிகிறது;காரணம் அவர் மதப் பிரச்சாரகராக தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.அதுபோலவே நம்முடைய போதகர் சாம் அவர்களும் வருங்காலங்களில் புதிய அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தயவுசெய்து எனது கருத்துக்களை நிதானமாக அவதானிக்கவும்; நான் சொல்வதெல்லாம், நம்முடைய போதகர்கள் தங்களை நவீனப்படுத்திக்கொண்டு பேசும் கலப்பான போதகங்களையும் உலகத்தார் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் பேசிக்கொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நான் சொல்லும் கருத்துக்களின் ஆழம் நண்பர்களுக்குத் தெரியவரும், என்பதே.

இங்கே நமது புதிய‌ நண்பர் யோவான் 10ம் அதிகாரத்தை எதற்காகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரியவில்லை; அதிலும் அவர் ஹைலைட் (in Red) செய்துள்ள //
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். //வார்த்தைக்கும் போதகர் சாம் அவர்களுக்கும் என்ன சம்பந்தமோ நண்பரே விளக்கட்டும்.

போதகர் சாம் அவர்கள் அற்புதமான விஷய ஞானத்துடன் செயல்பட்டு மெத்தப் படித்தவர்களையும் யாருக்கும் அடங்காதவர்களையும் கூட கட்டிப்போட்டிருக்கிறார்; ஆனால் அவர் நடத்துவது "அப்போஸ்தல ஐக்கிய சபை " யல்ல, என்பதை நாம் வேதத்தின் வெளிச்சத்திலிருந்து அறிகிறோம்;அவர் ஏழ்மையை நிந்திப்பது எந்த வகையிலும் பாராட்டுக்குரியதல்ல; இதனை யாரும் மறுக்க முடியாது; மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணிப்பு செய்யச் சொன்ன பேதுருவின் குறியீடுகளுடன் இவர்களை ஒப்பிட முடியாது; உலகத்திலும் கூட நாம் கவனிக்கலாம், மகா கடன்காரன் ஒருவன் "கடன்பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி" என்று புத்தகம் எழுதி பணக்காரனாக முடியும்; "நூறு வயது வரையிலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி " என்று புத்தகம் எழுதியவன் நூறு வயது வரை வாழவேண்டிய அவசியம் இங்கே இல்லை.

// இவர் செழுமையை பற்றி பேசினாலும் அதை இவர் தன் வாழ்வில் உணர்ந்து அதனாலேயே பேசுகிறார். //

நண்பர் சந்தோஷ் அவர்களுடைய கருத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை; ஒன்று மட்டும் நிச்சயம் பவுலடிகள் உட்பட யாருமே பிச்சைக்காரர்களல்ல,அவர்களுக்கு இந்த உலகம் பாத்திரமாயிருக்கவில்லை, அவ்வளவுதான்; போக்கிரிகளை பக்கிரிகள் மேலானவர்கள்..!

ஆனாலும் நண்பர் சந்தோஷ் குறிப்பிட்டது போல‌ தனது வாழ்வில் சோற்றுக்கு கஷ்டப்பட்டவரல்ல என்பது உண்மையே; அவருடைய தகப்பனார் மூலம் அவருக்கு நல்ல வழிக்காட்டுதல் கிடைத்தது; அவர் தனது வாலிபத்தில் செய்த குறும்புகள் தாங்காமல் அவரைத் திருத்தவே அவருடைய தகப்பனார் வெளிநாட்டுக்கு பேக் செய்தார்; சென்னையிலேயே முதன்முதலாக பாய்லரில் தண்ணீரைக் கொதிக்க வைக்க அடுப்பங்கரிக்குப் பதிலாக‌ பணக்கட்டுகளைப் பயன்படுத்திய செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவரல்லவா? அவர் ஏன் செழிப்பைக் குறித்து பேசக்கூடாது? அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு இந்த காலத்தில் நம்முடைய ஊழியர்களிடம் நாம் சொத்துக்கணக்கு கேட்கமுடியுமா?

மன்னிக்கவும் , நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சி
க்க விரும்புவதில்லை;ஆனாலும் இது அனைவரும் அறிந்த விஷயம் என்பதால் விவாதத்தின் வலுவுக்காகக் குறிப்பிடுகிறேன்; சில பெரிய மனிதர்கள் குறுக்கே வந்து, "அவர்களை நியாயந்தீர்க்க நீ யார் " என்று கேட்டால் நான் சொல்வேன், இவர்களே கிறித்துவின் மாதிரிகளாக - கிறித்தவ உலகின் அடையாளங்களாக இருக்கிறார்கள்; இவர்களுடைய மோசடிகளால் தியாகிகளின் இரத்தம் விலைபேசப்பட்டு, தூஷிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இவர்களை குறிவைத்து எதிரி முழு கிறித்தவத்தையும் சாடுகிறான்.

இந்திய அரசாங்கத்தில் அந்நிய செலாவணி மற்றும் அமலாக்கப் பிரிவின் பெருங் குற்றங்களில் சிக்கி கிறித்து சபைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள்; இன்றைக்கும் அயல்நாட்டு பணத்தால் இங்கே மதமாற்றம் நடைபெறுவதாக எதிரிகள் குற்றஞ்சாட்டுவதற்கு இவர்களே கார‌ணம்; இவர்களுக்கு வரும் பெரும்பணத்தை அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேர்க்காமல் அவர்களை பணையமாக வைத்து தங்களை வளர்த்துக்கொண்டவர்கள்.

இங்கே ஊழியர்களே இல்லாதது போல வெளிநாட்டிலிருந்து மிஷினரிகள் என்ற பெயரில் சில செல்வந்தர்களை அழைத்து வந்து கூட்டங்கூட்டி அவர்களிடம் நம்மையெல்லாம் பிச்சைக்காரர்களைப் போலவும் இவரே நம்மைத் தவறாமல் போஷிக்கும் மேய்ப்பர் என்றும் சீன் போட்டு இரண்டு தரப்பையும் ஏமாற்றியவர்கள் இந்த கூட்டத்தார்.

தற்போது அந்த வெளிநாட்டு ஸ்தாபனங்கள் விழித்துக்கொண்டு தாங்களே இங்கே தனி கடை போட்டு விட்டார்கள்; இவர்களால் ஆசீர்வாத இளைஞர் இயக்கம், நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு போன்ற தியாகமான ஸ்தாபன‌ங்களுக்கு எந்த பயனுமில்லை; மாறாக உபத்திரவம் தான் பெருகுகிறது.

மெய்யாகவே இவர்கள் இரட்சிப்பைப் போதிப்பதாக இருந்தால் இவர்களுடைய முன்னோர்கள் செய்த முறைகேடுகளால் குவிக்கப்பட்ட சொத்துகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு பிறகு ஊழியம் செய்யட்டும். உதாரணம்: குள்ள‌ சகேயு

கடைசியாக ஒரு வசனம் என் நினைவில் வருகிறது,
"திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்."(நீதிமொழிகள்.27:7) ஆம், நாங்கள் பசியுள்ளவர்கள், அவர்களோ திருப்தியடைந்தவர்கள்.

(இன்னும் தொடருவேன்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


rajkumar_s Wrote on 08-12-2010 21:36:23:

சாம் P‍ செல்லதுரை அவர்களின் செய்திகள், என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடையாக இருந்திருக்கின்றன, மாறுபட்ட கோணத்தில் சத்தியத்தைப் புரியவைப்பதில் தேவன் ஆவருக்கு அருளிய ஞானத்திற்காக தேவனைத் துதிக்கிறேன்.

சகோதரர் இராஜ்குமார் அவர்களின் கருத்துக்காக நன்றி; தங்கள் திரட்டியில் எனது ஒரு குறிப்பிட்ட கட்டுரையானது இடம் பெறாதபோதே அதனை விளங்கிக்கொண்டேன்; ஆனாலும் நீங்கள் பார்க்கும் பார்வை வேறு, எனது அனுபவம் வேறு; நான் எனது நேரடி அனுபவத்திலிருந்து எழுதுகிறேன்; அது விரைவில் தெரியவரும்..!

அனைத்து மாறுபாடான உபதேசமும் சரிவிகிதத்தில் கலந்து தரப்படும் ருசிகரமான உணவு போன்றதே; விஷம் கொஞ்சமே இருக்கும்; அது தெரியாதோர் ஆஹா ஓஹோ எனப் புகழலாம்; எனவே இங்கே நண்பர்கள் அதனை விஷம் கலந்த - விஷமமான - விஷயமில்லாத பிரியாணி என்கின்றனர்; சிந்திக்க வேண்டாம், தொடர்ந்து செல்லுங்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ebi wrote:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களின் பிரசங்கத்தை பொதிகையில் ( இரவு 10:30-11) அடிக்கடி கேட்டிருக்கிறேன். இவரின் போதகம் ”இந்த உலகத்தில் உலகத்திற்குரியவைகளை எல்லாம் பெற்று நாம் எப்படி ஆடம்பரமாக வாழலாம். ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் எவ்வாறு ஊழியம் செய்யலாம்” என்பதே. இவர் விசுவாசம் என்பதையே தவறாக போதிக்கிறார். தேவன் என்பவர் நமக்கு ஆசீர்வாதங்களை(இவர் பாஷையில்:வசதியான வாழ்வு) மட்டுமே தருபவர், அதற்கு தான் இருக்கிறார் என்பது போல சித்தரிக்கிறார். இதனை தவறு என்பவர்களப் பார்த்து கெக்கெரிக்கிறார். எந்நிலையிலும் மனரம்மியமாக இருத்தல், பாடுகளை சகித்தல், அன்பாயிருத்தல், பொறுமையோடு இருத்தல், விசுவாசத்தில் வளருதல்... போன்றவைகள் பரலோக ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிக்க உதவும் தேவனின் ஆசீர்வாதங்களே.

நாம் எதனையும் சோதித்துப் பார்த்து சரியானதை தெரிந்து கொள்ள வேண்டும். Like Adam, the choosing responsibility is ours

அருமையானதொரு கருத்தை முன்வைத்துள்ள எபி அவர்களுடைய வருகைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக‌.!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


ejoseph அவர்களின் பதிவைப் பார்த்த பிறகு இன்று ஒரு சிறு வரியாவது போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். தாங்கள் நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
சந்தேகமேயில்லை ஆம்ம்ம்ம்ம்

போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களின் பிரசங்கத்தை பொதிகையில்( இரவு 10:30-11) அடிக்கடி கேட்டிருக்கிறேன். இவரின் போதகம் ”இந்த உலகத்தில் உலகத்திற்குரியவைகளை எல்லாம் பெற்று நாம் எப்படி ஆடம்பரமாக வாழலாம். ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் எவ்வாறு ஊழியம் செய்யலாம்”என்பதே. இவர் விசுவாசம் என்பதையே தவறாக போதிக்கிறார். தேவன் என்பவர் நமக்கு ஆசீர்வாதங்களை(இவர் பாஷையில்:வசதியான வாழ்வு) மட்டுமே தருபவர், அதற்கு தான் இருக்கிறார் என்பது போல சித்தரிக்கிறார். இதனை தவறு என்பவர்களப் பார்த்து கெக்கெரிக்கிறார். எந்நிலையிலும் மனரம்மியமாக இருத்தல், பாடுகளை சகித்தல், அன்பாயிருத்தல், பொறுமையோடு இருத்தல், விசுவாசத்தில் வளருதல்... போன்றவைகள் பரலோக ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிக்க உதவும் தேவனின் ஆசீர்வாதங்களே.

// செழுமை உபதேசத்தின் பயங்கரம்
என்னவென்றால் விசுவாசிகள் ஒரு சின்ன
உபத்திரத்தைக் கூட எதிர்கொள்ள இயலாத மென்மையான‌ -எதிர்மனநிலைக்குச் சென்றுவிடுவார்கள்;அதிலிருந்து அவர்களை மீட்பது பெரும்பாடாக இருக்கும்.” //

மிகவும் சரி. இதே கருத்தை தான் எங்கள் வீட்டில்நேற்று பேசிக்கொண்டிருந்தோம். தங்களுக்கு வேண்டிய ஒன்று கிடைக்காத போது அல்லது சிட்சையின் போது அவர்களால் தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்வது கடினம். நாம் எதனையும் சோதித்துப் பார்த்து சரியானதை தெரிந்து கொள்ள வேண்டும். Like Adam, the choosing responsibility is ours.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


பயந்து பயந்து உள்ளே சென்றவனை ஊக்கப்படுத்தும் அருமையான வரிகளுக்காக நன்றி,விஜய் அவர்களே..!

தயவுசெய்து எனது வாசக நண்பர்கள்
நான் எல்லோரையும் குற்றப்படுத்துபவன் என்ற ஒரே கோணத்தில் பார்க்காமல் அனைத்தையும் திறந்த மனதுடன் பார்க்க மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

"எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.

மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே."(ரோமர்-Rom 9:1,2,3)

மேற்கண்ட வசனங்கள் வேறு சூழலுக்காக பவுலடிகள் குறிப்பிட்டடது;ஆனால் எனக்கு இந்த சூழலில் நினைவுக்கு வருகிறது;எனது முன்னோடிகளான மூத்த ஊழியர்களைக் குறைசொல்லுவதால் நான் பெறப்போகும் நன்மை ஏதுமில்லை;அப்படியே நன்மைக்கு பதிலாகத் தீமையைப் பெற்றாலும் என் ஜனம் தெளிவடைந்தால் போதுமே என மிகுந்த அச்சத்துடன் பவுல் அருகில் நிற்கும் உணர்வுடன் சொல்லுகிறேன்.

மீண்டும் விஜய் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அவர் தளத்தில் இணைந்து பதித்துள்ள முதல் பதிவுக்காக அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


அன்பான சகோதரர் அவர்களுக்கு, காலஞ்சென்ற மூத்த போதகர் மதிப்பிற்குரிய செல்லத்துரை ஐயா அவர்களுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். செழிப்பின் உபதேசத்தைத் தோலுரிக்கும் தங்கள் பதிவுக்கு நன்றி

”போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு”. (1தீமோ 6:6-11)

மேற்கண்ட வார்த்தைகள் மூலம் அப்போஸ்தலன் பவுல் செழிப்பின் உபதேசகர்களின் செவுளில் அறைகிறார். இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்ட வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டே ஜனங்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சத்துருவானவன் புதிய ஏற்பாட்டு கிருபையையும், பழைய ஏற்பாட்டு பொருளாதார ஆசிகளையும் கலந்து அற்புதமாக சமைத்து ஒரு விஷத்தை இன்று விருந்தாக படைத்து விட்டான். வேதத்தை சுயநல நோக்கோடேயே வாசிக்கும் நமது அன்பான சகோதர சகோதரிகள் அந்த விஷ விருந்தை உண்டு அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த செழிப்பின் உபதேசத்தை நம்பும் விசுவாசிகளின் ஆவிக்குரிய பெருமைதான் தாங்க முடியாதது. மூச்சுக்கு முந்நூறு முறை "Word of God" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். வேறு யாருக்குமே வேதம் தெரியாது என்ற தோரணையில் பேசுவார்கள். வேறு சபைக்குச் செல்லும் விசுவாசிகளை அவர்கள் தங்கள் சபைக்கு அழைக்கும் விதமே வித்தியாசமாய் இருக்கும் “எல்லா வாரமும் உன் சபையில் (ஆவிக்குரிய) பழைய கஞ்சி சாப்பிடுகிறாய், இந்த ஒருவாரம் எங்கள் சபைக்கு வந்து (ஆவிக்குரிய) பிரியாணி சாப்பிடு” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் சபையில் உபதேசம் அவ்வளவு ஆழமானதாக இருக்குமாம். அது ”விஷம் கலந்த பிரியாணி” என்று சொல்ல தங்களைப் போன்ற சிலர் வேண்டும்.

தங்கள் ஜிம் பேக்கர் பற்றி சொன்னீர்கள். புதிய தகவலுக்கு நன்றி! நானும் கூட இந்த செழிப்பின் உபதேச சிறையில் இருந்தவன்தான். அதை நம்பியவன், பின்பற்றியவன், போதித்தவன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!! ஒருநாள் இயேசுவின் சீஷன் என்றால் யார்? என்று எனக்குக் கற்றுக்கொடுத்து ஆவியானவர் என்னை மாற்றினார்.

தங்கள் பணி தொடரட்டும்! கர்த்தர்தாமே தங்களை இன்னும் பெலப்படுத்துவாராக!!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

3.jpg

இன்று பாஸ்டர்.P.S.செல்லத்துரை அவர்களது அடக்க ஆராதனை நிகழ்ச்சியில் போதகர் சாம்.P.
செல்லத்துரை அவர்கள் சொன்னது, "நம் கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேதப் புத்தகமானது இரட்சிக்கப்பட்டு பரலோகம் செல்வதற்காக அல்ல, நாம் இதன்படி இவ்வுலகில் வாழ்ந்து ஆசீர்வாதமாக இருப்பதற்கே, அநேகர் ஆண்டவரிடம் என்னை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கின்றனர், ஆம் நம்மைக் கேட்டுக்கொண்டே அவர் நமது ஜீவனை எடுக்கிறார், அல்லது அவர் அழைத்தாலும் நான் வருகிறேன் என்று நாம் சொல்லாவிட்டால் அவர் நம்முடைய ஜீவனை எடுக்கிறதேயில்லை; இதன்படி எனது தகப்பனார் இன்னும் நான் வாழுவேன், ஊழியம் செய்வேன் என்று விசுவாச வார்த்தை சொல்லியே 88 வருடங்கள் உயிருடனிருந்து இறுதிவரை ஊழியம் செய்தார், கடந்த 47 வருடங்களாக அவர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு அவரை மேற்கொள்ளவில்லை,பாதி மாத்திரைதான் போடுவார்,அதை கூட அவர் பிரதானமாக நம்பியிருக்கவில்லை...." என்பதாகக் கூறினார்;

நான் கவனித்ததிலிருந்து சுருக்கமாகவும் பொதுவாகவும் எழுதியிருக்கும்  மேற்கண்ட எனது எழுத்துக்களில் பெரும்பகுதி மரித்த ஊழியருக்கு கனம் செலுத்துவது போலிருந்தாலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதில் இடம் பெற்றிருப்பது அனேகருக்குத் தெரியாது;இதுபோன்ற "பஞ்ச்சிங்" டயலாக் பேசியே போதகர் சாம் அவர்கள் மக்களைக் கவர்ந்தார்;அதாவது நாம் இரட்சிக்கப்பட்டு பரலோகம் செல்ல வேதம் கொடுக்கப்படவில்லை;வேதத்திலுள்ள டெக்னிக்குகளைப் பயன்படுத்தி இந்த உலகிலேயே நீண்ட காலம் சௌக்கியமாக செல்வ செழிப்புடன் வாழவே வேதம் கொடுக்கப்பட்டது என்கிறார்; இந்த கூற்றை நிறுவ அவர் ஏழை ஊழியர்களையும் அவர்களது தரித்திர நிலைமையும் பரியாசம் செய்யத் தவறுவதில்லை.

இதனால் சத்தியத்தில் ஒரு இடைவெளியும் சமநிலையற்ற தன்மையும் நிலவுகிறது;பரிசுத்தமும் தன்னை ஒடுக்கிக்கொண்டு எளிமையாக வாழும் ஆதி அப்போஸ்தலர் தம் வாழ்க்கை முறையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்கால நவீன கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒருவித மாயமான பக்தியும் சுயநீதியும் பெருகுகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் மீண்டும் மீண்டும் ஆசீர்வாதத்தைக் குறித்தும் வெற்றிகரமான வாழ்க்கையைக் குறித்தும் மட்டுமே போதிப்பதால் மக்கள் எழுச்சி கொள்ளுகின்றனர்,ஊக்கப்படுத்தப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது;ஆனாலும் இந்த செழுமை உபதேசமானது (Prosperity Gospel) முழுமையான சீஷத்துவ பணியை நோக்கி அவர்களை நடத்துகிறதா என்பதில் மிகப் பெரிய கேள்விகுறி எழுகிறது.

இந்த செழுமை உபதேசம்
(Prosperity Gospel) அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது;அங்கே ஜிம் பேக்கர் எனும் பிரபல போதகர் இதனால் பெரும் செல்வந்தராகி, பின்னர் தடுமாறி, தற்போது ஒரு தலைமுறையே மாறிவிட்ட நிலையில் அதனை மறுத்து நான் தவறாகப் போதித்துவிட்டேன் ("I Was Wrong." )என ஒரு புத்தகம் எழுதி மீண்டும் அரங்கத்துக்கு வந்திருக்கிறார்.

http://blog.generationscult.com/2007/01/30/jim-bakker-prosperity-gospel-is-wrong.aspx


அதனைப் பின்பற்றி இங்கே நுழைந்த இந்த செழுமை உபதேசமானது இந்திய கிறித்தவர்களுக்கு அதிலும் தமிழ் கிறித்தவர்களுக்கு புதிய விஷயம் என்பதால் சட்டென்று பற்றிக் கொண்டது;போதகர் சாம் அவர்கள் இதனை முன்னெடுத்துச் செல்ல  தனது தகப்பனார் பல வருடங்களாகக் கட்டிக் காத்த சபையைக் கைப்பற்றி அதன்  விசுவாசிகளையும் கலைத்துப் போட்டுவிட்டு தனது புதிய முறைகளையும் உபதேசங்களையும் புகுத்தினார்;இதன் வேதனை காலஞ்சென்ற செல்லத்துரை ஐயா அவர்கள் மனதில் இருந்தது அநேகருக்குத் தெரியாது.

இதேபோல சகோதரர் டிஜிஎஸ் அவர்களின் இயேசு அழைக்கிறார் ஸ்தாபனமும் அவரது மகன் பால் தினகரன் அவர்கள் தலையெடுத்த பிறகே பாதை மாறினது;தாழ்மையான சுவிசேஷகரான டிஜிஎஸ் அவர்களை சங்கடப்படுத்திய பல மாற்றங்கள் அந்த ஸ்தாபனத்தில் வந்த பிறகு அவர்கள் வசதியானாலும்- தரிசனம் மாறினதோடு சகோதரர் டிஜிஎஸ் அவர்களுக்கும் அது மனநோவாக இருந்தது என்பது அந்த ஸ்தாபனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களின் கருத்தாகும்.


தற்கால சூழ்நிலையில் அடியேன் சொல்வதெல்லாம் பலருக்கும் புதிராக இருக்கும்; இந்த பின்னணி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; பாஸ்டர் செல்லத்துரை ஐயா அவர்கள் தனது சபையை ஒரு அப்போஸ்தல சபையாகவே துவங்கினார்;அதன் பெயரே "அப்போஸ்தல ஐக்கிய சபை  (AFT-Apostalic fellowship Tabernacle)"ஆனால் அதன் நோக்கங்களை அது அடைந்ததா என்றால் அதற்கு யாரும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாது;அப்போஸ்தல சபையின் மாதிரியை எங்கே காண்கிறோம்? அது அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் மாத்திரமே அல்லவா? அதன்படி பிரதானமாக ஏழைகள் ஆதரிக்கப்படவேண்டும்,சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும், தியாகமான எளிமையான வாழ்க்கை முறை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்;இதெல்லாம் இல்லாமலும் ஊழியம் செய்யலாம்;வெற்றி பெறலாம்;ஆனால் ஆண்டவருடைய பார்வையில் அது போற்றப்படுமா?

இன்றைக்கு போதகர் சாம் அவர்கள் ஊடகத்தின் பார்வையில் வெற்றி பெற்றுவிட்டார்;ஆனாலும் வேதத்தின் பார்வையில் முழுமையான வெற்றி பெறவேண்டுமானால் அவர் தான் ஆதியில் செய்யத் தவறின பல காரியங்களை எடுத்து செய்யவேண்டியதிருக்கும்.

அதாவது ஆண்டவர் தம்முடைய சீஷர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினதும் போதித்ததும் என்னவென்றால் நீங்கள் பாடுகளை சகிக்க வேண்டும்,உபத்திரங்களை எதிர்கொள்ளவேண்டும் என்பதே;பவுலடிகளும் இதனை வலியுறுத்துவதைக் காணலாம்;ஆனால் இதற்கு நேர்மாறான போதனையான செழுமை உபதேசத்தின் பயங்கரம் என்னவென்றால் விசுவாசிகள் ஒரு சின்ன உபத்திரத்தைக் கூட எதிர்கொள்ள இயலாத மென்மையான‌ -எதிர்மனநிலைக்குச் சென்றுவிடுவார்கள்;அதிலிருந்து அவர்களை மீட்பது பெரும்பாடாக இருக்கும்.

சிறு ஊசி குத்தினால் அந்த ஊசியைப் பார்த்து பேசத் துவங்கிவிடுவார்கள்;"ஏ ஊசியே..! நீ என்னைக் குத்துகிறாயா,நான் யார் தெரியுமா,ஆபிரகாமின் கொ (லொ?)ள்ளுப்பேரனாக்கும், இன்னும் கேட்டால் நீ ஊசியே அல்ல,நீ சாதாரண நூல் தான் இதோ இப்போதே பார் உன்னை என்ன செய்கிறேன் என்று ...."இப்படியாக தனக்குத் தானே பேசிக் கொண்டும் தன்னைக் குறித்தே சிந்தித்துக்கொண்டும் ஆராய்ந்துக்கொண்டும் இருந்து, "ஐயய்யோ தவறான அறிக்கை செய்துவிட்டேனோ ஏன் இப்படி ஆனது ஆண்டவர் தான் எல்லா அதிகாரத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டாரே பின் ஏன் இது நடந்தது ஒரு வேளை என் விசுவாசத்தை நான் சரியாக பிரயோகிக்க வில்லையோ" என்று தொடர் நினைவுகளால் அழுத்தப்படுவார்கள்;"அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.(2.கொரிந்தியர்.Co 12:9) எனும் வசனத்தையும் உரிமையுடன் எடுத்து பயன்படுத்த முடியாது,ஏனெனில் பெலவீனமே வரக்கூடாது போதிக்கப்படுவதே;இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." (யோவான்.Joh 16:33)

ஆண்டவருடைய இந்த நேரடியான கட்டளைக்கு மாறாக எப்படி ஒருவர் போதிக்க முடியும் அல்லது சிந்திக்க முடியும்? வாசக நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை முன்வைக்க வேண்டுகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard