Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


நமக்கு ஊழியர்களைக் குற்றம் சொல்லுவது பொழுதுபோக்கல்ல;அது வேதனை நிறைந்த அறுவை சிகிச்சை மேடையாகும்;வேதத்திலுள்ள பரிசுத்த புருஷர்களை மேற்கோள் காட்டி 'அவர்,அவரை குற்றஞ்சாட்டினாரே நானும் செய்வேன் ' என்று கண்மூடித்தனமாக அடிப்படைக் காரணமில்லாமல் நாம் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை.

பவுல் பேதுருவைக் கண்டித்த நியாயத்தை பேதுருவே பிறகு உணர்ந்து அவருடன் ஒப்புரவாகி இருவரும் இரத்தசாட்சியாக மரித்தனர் என்பது வரலாறு; அவர்கள் மூலமே சபையானது இருதரப்பாக இருந்தது என்பதும் அந்த இந்த இருதிறத்தாரையும் கிறித்துவின் தியாகம் ஒன்று சேர்த்தது என்பதையும் அறிய முடிந்தது;

பவுல் மற்றும் பேதுருவின் கருத்துவேறுபாடு வெளிச்சமானதால் சபையானது தனது நோக்கங்களையும் எல்லைகளையும் நிர்ணயம் செய்யும் வாய்ப்பு கிட்டியது; எனவே பவுலைக் குறித்தோ பேதுருவைக் குறித்தோ யாரும் இடறலடைய வாய்ப்பே இல்லை.

மேலும் பவுல் தனது பிரயாசங்களைப் பெருமைக்காகக் குறிப்பிடவில்லை என்பதும் தெளிவு; ஏனெனில் அவர் மனதில் பட்டதை, பட்டவர்த்தனமாகப் பேசுபவர்;அவரே யாரிடமும் பொழிவையோ உபச்சாரத்தையோ நாடியதில்லை என்று கூறுகிறார்; தனது தியாகத்தையும் அர்ப்பணத்தையும் எடுத்துக் கூறி அவர் எழுதுபவற்றை வாசிப்போருக்கு கண்கலங்குமே தவிர அவரைக் குறித்தும் மனம் இடறலடையாது.

ஆனால் தற்கால செழிப்பு உபதேசிகள் கூறுவது என்ன‌?
அந்த காலத்தில் ஆட்களைச் சேர்க்க மிகவும் கஷ்டப்பட்டார்களாம்; தற்போதோ வருபவர்களை வேண்டாம் தடுத்தாலும் வந்து குவிகிறார்களாம்; இது தான் பெருமை..!

இவர்கள் முதலிலிருந்தே கிறித்துவை ஹீரோவாகக் காட்டி தங்களை ஜீரோவாகக் காட்டியிருந்தால் இரட்சிக்கப்பட்ட தேவஜனமானது அடுத்த களத்தை நோக்கி விதைக்கச் சென்றிருக்கும்;

ஆனால் இவர்களோ கிறித்துவைக் குட்டிசாத்தானைப் போலவும் ஏவல் சக்தியையும் போலவும் மாற்றி அவர் நித்தியத்துக்காக வைத்திருப்பதையெல்லாம் கடை சரக்காக்கியதில் சத்திய துரோகம் செய்து இரகசியத்தை விற்று இராஜ துரோகக் குற்றம் புரிந்து அவரை ஜீரோவாகவும் தங்களை ஹீரோவாகவும் விளம்பரப்படுத்துவதால் கூட்டம் குவிகிறது;அதனை நாங்கள் வளர்ச்சியாகப் பார்க்கவில்லை, வீக்கமாக மட்டுமே பார்க்கிறோம்.

சில‌ ஞானபோதகர்கள் (..?) பத்சேபாள் அவள் வீட்டு குளியலறையில் குளித்ததையே குறை சொல்லி அதன் காரணமாகவே தாவீது தவறு செய்ய நேர்ந்தது என புது விளக்கம் கொடுத்து தேவ மனுஷனான தாவீது கண்டிக்கப்பட்டதைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு எங்களுக்கு ஞானமோ தைரியமோ இல்லை;

அதேபோல‌ உங்கள் நவீனகால‌ போதகர்கள் ஆபிரகாமையும் யோபுவையும் ஆராய்ந்து அவர்களிடம் காணப்பட்ட குறைகளைக் கண்டுபிடித்து அதன்மூலம் செழிப்பு உபதேசம் செய்கிறார்களே அந்த நிலைக்கும் நாம் இன்னும் செல்லவில்லை.

நம்முடைய முயற்சியெல்லாம் மிக நேர்மையானது, எளிமையானது; எது தவறானது என்பதை உரக்க உறைக்கச் சொல்லுகிறோம்; சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து நியாயம் கேட்டாலும் விளக்கம் சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்; அவர்களுடைய விளக்கமானது நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருந்ததானால் அதனைப் பரிசீலித்து வருத்தம் தெரிவிக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம்.

ஊரில் தீயணைப்பு நிலையமும் மருத்துவமனையும் காவல் நிலையமும் நீதிமன்றமும் இருப்பது அவசியமானால் சபைக்குள் இதுபோன்று வெளிப்படையாகக் கண்டிப்போரும் வேண்டும்; இதனால் சபையாகிய அன்னைக்கு புளிப்பும் கசப்பும் ஏறாமல் அவள் ஆரோக்கியமாக இருப்பாள்;பிள்ளைகளும் சுகமாக வளரும்.

மற்றொரு தளத்தில் நண்பர் இராஜ்குமார் குறிப்பிடுவது போல ஆங்காங்கு போதகர்கள் செய்யும் தவறுகளைப் பட்டியலிடுவது நமது நோக்கமல்ல; அதனை நாம் இதுவரை செய்தது இல்லை;பாப்பானைப் பார்த்து இன்னொருத்தன் வேடமிட்ட கணக்காக ஒரு ஆள் பாஸ்டர் வீடுவீடாக சென்று காணிக்கை பிடிப்பதைப் பற்றியும் மோசடி செய்வதைக் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்;உண்மையில் அதுதான் குறைகூறும் ஆவி; அதுவே தேவனுக்கு விரோதமான பாவ காரியம்; நீங்கள் ஒரு பாணியை செட் பண்ணிவிட்டீர்கள்;பிறகு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் எங்கள் பாணி உங்களுக்கு ஒத்துவராது; ஏனெனில் நீங்களெல்லாம் ரொம்ப நல்லவர்கள்;பத்து கற்பனைகளையும் கடைபிடித்து அடுத்த அவதாரத்திலாவது நல்ல பிறவியெடுக்க ஓடிக்கொண்டிருப்பவர்கள்..!

அடியேன் இணையத்தில் எழுதத் துவங்கிய நாள் முதலாகவே எனது பயணத்தைத் திரும்பிப் பார்த்து ஒரு சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்;எனது நோக்கமெல்லாம் வேதத்தின் ஆதார சத்தியங்களைச் சொல்லுவதும் அதற்கெதிரான தற்கால நடைமுறைகளை அடையாளம் காட்டுவதாகவே இருந்து வந்துள்ளது;

எந்தவொரு ஊழியருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான காரியங்களை ( நான் நன்கு அறிந்திருந்தாலும்...) எடுத்துச் சொல்லுவதில்லை.

இந்த குறிப்பிட்ட திரியைப் பொறுத்தவரையிலும் நாம் எடுத்துக்கொண்ட களத்தை நிறைவு செய்யமுடியாத வண்ணமாக சிலர் உள்நோக்கத்துடன் திசைதிருப்பிக்கொண்டிருக்கிறார்களே தவிர நாம் இன்னும் எடுத்துக்கொண்ட நோக்கத்தை சென்றடையவில்லை;

கடந்த தலைமுறைத் தலைவர்களான டிஜிஎஸ் தினகரன், ஜான் ஜோசப் போன்றவர்களின் மறைவுக்குப் பிறகு யார் அப்படிப்பட்ட வெகுஜன ஈர்ப்புக்குட்பட்ட வட்டத்தில் இணைகிறார்கள் என்று பார்த்தால் அதில் பிரதானமாக நிற்பவர் போதகர் சாம்.P அவர்களே; நிற்கிறதாகக் காணும் அவர் விழாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமல்லவா, எனவே அவருக்காக ஒரு க்ரூப் மோசேயைப் போல ஜெபம் பண்ணுங்க, இன்னொரு க்ரூப் எதிரி எழும்புவதற்குள் தடுத்து யோசுவாவைப் போல யுத்தம் செய்கிறோம்;உங்களுக்கு என்ன பிரச்சினை? இது தனக்குத் தானே பிரிந்திருக்கும் இராஜ்யத்தின் போக்கல்ல,வெளியிலிருந்து வந்து தந்திரமாக மந்தையைக் கொள்ளையிடப்பார்க்கும் எதிரியை அடித்துவிரட்டும் முயற்சி; அந்த ஓநாயின் சூழ்ச்சிகளையறியாத அப்பாவி ஆடுகள் வஞ்சிக்கப்படாதிருக்கவே எச்சரிக்கிறோம்.

பிரபல போதகரான சாம்.P அவர்கள் இன்றைய கிறித்தவத்தின் ஒரு  குறியீடு மட்டுமே;அவர் மட்டுமே முழு குற்றவாளியல்ல;அவரை இப்படி செயல்பட வைத்தது,இந்த சமுதாயம்;அதன் பின்னணியில் கிறித்து சபையின் எதிரியான சாத்தான்; நித்தியத்துக்குரிய - மேன்மையான‌ அழிவில்லா போஜனத்துக்காக கிரியை நடப்பிப்பதை மறைத்து - மறுத்து அழிவுள்ள அநித்திய சுகங்களைக் குறித்து பேசி மனதை மயக்குபவன் அவனே.

தாவீது இருந்த காலத்தில் அப்சலோமும் இருந்தான்; அவன் மிக அழகானவன்; நியாயம் தெரிந்தவன்;போராளி வீரன்; சிங்காசனத்துக்கு உரிமையானவன்; பெரும்பான்மையான மக்களுடைய ஆதரவும் அவனுக்கு இருந்தது;அவன் ஜனங்களையும் ஏன் தாவீதின் உற்ற நண்பர்களையும் கூட கவர்ந்து இராஜ்யத்தைக் கைப்பற்றினான்; தனது  தகப்பனாகிய தாவீதுக்கு விரோதமாக எழும்பினான்;அவன் நிமித்தமாக இஸ்ரவேலில் பெரிய கலகம் உண்டானது;சக்ரவர்த்தியான இராஜா உயிர்தப்ப நாட்டைவிட்டே ஓடினான்;அதனால் தான் 3 ‍-‍ம் சங்கீதமே நமக்குக் கிடைத்தது;அவன் முடிவு பரிதாபமாக இருந்தது; ஆனாலும் அவனால் ஏற்பட்ட குழப்பம் தேசம் முழுவதையும் பாதித்தது.

அதுபோலவே இன்றைய செழிப்பு உபதேசிகளும் இருக்கின்றனர்;ஒரு நண்பர் இப்படி சொல்லுகிறார், "கிறித்தவத்தின் இன்றைய உடனடி தேவை பரிசுத்தம் மற்றும் வேறுபிரிக்கப்பட்ட ஜெய ஜீவியத்தைக் குறித்த போதனைகளே;ஆனால் தங்கள் அந்தரங்க வாழ்வில் பரிசுத்தமும் நேர்மையும் இல்லாத பிரபல தலைவர்களே பெரும்பாலும் செழிப்பைக் குறித்து போதிக்கிறவர்களாக இருக்கிறார்கள்." என்று.

அது சரியான கூற்றுதானே..? ஆம், இதுவரை நண்பர்கள் செய்த எல்லா இடையூறுகளுக்கும் நன்றியுடன் தேவையான விளக்கமும் கொடுத்துவிட்டோம்; இத்துடன் எல்லாம் முடியவில்லை;எது சரி என்பதைச் சொல்லவேண்டும் என்பது முக்கியமானது என்பதை நாமும் உணர்ந்திருக்கிறோம்;ஆனாலும் அதனைச் சொல்லும் முறையே வித்தியாசமாக இருக்கிறது.

உதாரணமாக, போர் பயிற்சி செய்யும் வீரர்கள் தங்களுக்கென்று சில குறிக்கோள்களை வகுத்துக் கொள்வார்கள்;அதாவது தீவிரவாதிகள் வந்து விட்டது போலவும் விமானத்தைக் கடத்தப்போவது போலவும் சூழ்நிலையினை செயற்கையாக உருவாக்கி அதனை நடத்திக் காட்டுவார்கள்; இது உண்மையான நிகழ்ச்சி அல்ல; ஆனாலும் நடக்கக்கூடிய ஒரு துர்சம்பவத்தை தடுக்கத் தங்களை வீரர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சி, அதுவே பயிற்சி.

அதுபோலவே நாம் சரியான உபதேசம் எது என்பதை  மட்டும் வெண்ணெய் வெட்டுவதைப் போல, போட்டு வைத்தால் யாருக்கும் ஒன்றும் பாதிக்காது;ஆனால் நாம் எடுத்துக்கொண்ட வழிமுறையானது ஒரு ரியாலிட்டி ஷோ போல, நேரடியாக விசுவாசிகளின் கவனத்துக்குச் சென்று அவர்களை சிந்திக்க வைக்கிறது; இதனால் விழிப்புணர்வடையப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இன்னும் கேட்டால் இது போதகர் சாம்.P அவர்களின் போதனையைக் கேட்ட மக்களின் எதிர்மனநிலையின் பிரதிபலிப்பாகும்; ஏற்கனவே இதுபோன்ற கருத்து கிறித்தவ சமுதாயத்தில் இருக்கவே தான் அது இங்கே எதிரொலிக்கிறது; அவரை முழுமையாக எதிரிக்க தைரியமில்லாதோர் பெலவீனமான தொனியில் சொல்வதென்ன,"வேதம் செழிப்பு உபதேசத்துக்கு எதிரி அல்ல " என்பதே; அதைக் குறித்ததல்ல விவாதம், நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள தலைப்புகள் வேதத்தின் அடிப்படையிலானது தானா என்பதே; நீங்கள் கூறும் செழிப்பும் வேதம் போதிக்கும் செழிப்பும் ஒன்றுதானா?

இவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் முறையில் சத்தியத்தை விரைவாகப் புரிந்துகொள்ளமுடியும் என்பது இயல்பான உண்மை;வெறுமனே கிசுகிசு பாணியில் யாரையோ மனதில் வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவில் தாக்கும் போதே பல்வேறு சர்ச்சைகளும் யூகங்களும் உண்டாகும்;அல்லது யாரையும் குறிப்பிடாமல் மேற்கோள் காட்டாமல் எது சரி என்பதை நிரூபிப்பது ஆண்டவராலேயே கூடாத காரியம்;அவரும் கூட தம்மைச் சுற்றிலும் இருந்த தவறானவர்களைக் கொண்டே சத்தியம் இன்னதென்று போதித்தார்.

அதே வழியில் நாமும் செல்லுவோம்; இது இலக்கை நோக்கி விரைந்துச் சென்று நோக்கத்தை அடையும் முயற்சியாகும், முயற்சிப்போம்...

(தொடரும்..)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


அருமை நண்பர் எபி அவர்களே,நீங்கள் வருத்தப்பட வேண்டாம்; ஆனானப்பட்ட ஆண்டவரையே புறக்கணித்த சமூகமல்லவா இது..? போகட்டும்; கர்த்தருடைய நாளில் வைக்கோலுக்கும் பொன்னுக்கும் அக்கினியால் உண்டாகும் சோதனையில் அனைத்தும் வெளியர‌ங்கமாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சில்சாம் அவர்களே, நான் தான் தெரியாத்தனமா முந்திரிகொட்டையாக அங்கு ஆரம்பித்து வைத்தேன். அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன வருத்தங்களுக்கும் மன்னிக்கவும். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். விஜய் அவர்களின் கட்டுரைகளும் பயன்தரும் விதத்தில் அருமையாக உள்ளது.
இரட்சிப்படந்தாலும் கடைசி வரை இரட்சிப்பை காத்துக் கொள்ளாவிட்டால் பயனில்லை.இரட்சிப்பை காத்துக் கொள்வதிலிருந்து திசை திருப்புபவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் யாருக்கும்  விருப்பமில்லை. ஆசீர்வாதம் மற்றும் நம்மை மகிழ்விக்கும் பிரசங்கங்களையே அதிகளவு கேட்டு பழக்கப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட விளைவா என்றும் தெரியவில்லை. confuse


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த குறிப்பிட்ட திரியின் விவாதத்தை தமிழ்க் கிறித்தவ தளத்தில் விவாதிக்கும் எண்ணமே நமக்கு இல்லை;ஆனாலும் யாரோ ஒரு நண்பர் இதனை துவக்கி வைக்க நாமும் நம்பிக்கையுடன் பங்கேற்று நிதானமாக பல்வேறு வசன ஆதாரங்களுடன் பொறுமையாக விவாதித்தோம்;தளத்தின் விதிமுறையின்படி தள நண்பர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்காமலும் வாதத்தை திசைதிருப்பாமலும் இயன்ற மட்டும் கௌரவமாக வாதத்தை நடத்தினோம்; இத்தனை எழுதியபிறகு திடீரென ஞானோதயம் வந்தது போல- 'குறை சொல்லுவதே எமது முழுநேரப்பணி' என்பதைப் போலவும் "எது சரி" என்பது சொல்லப்படவில்லை என்றும் சிலர் கருத்து கூறவும் நாம் கட்டியது அனைத்தும் வீழ்ந்து போன்ற உணர்வு; மேலும் மெய்யாகவே வாதத்தை திசைதிருப்பும் வண்ணமாகவும் பிரித்தாளும் சூழ்ச்சியுடனும் திட்டமிட்டு சிலர் பதித்த கருத்துக்களால் மனம் நொறுங்கிப்போனோம்; தனிமைப்பட்டுப்போனோம்; ஆனாலும் பட்டுப் போகவில்லை..!

இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் 'சரியானது எது 'என்பதும் 'தவறானது எது 'என்பதும் கலந்தே வரும், 'அதுவே கலந்துரையாடலின் இலட்சணமே 'என்ற அடிப்படையறிவில்லாதோருடன் போராடி என்ன சாதிப்பது? எது சரியானது என்பதை மட்டுமே பலர் சேர்ந்து சொல்வது இயலாத காரியமாகும்;அதில் எது குறையானது என்று மற்றொருவர் சொல்லுவார்;அல்லது ஓரிரு வரிகளில் பாராட்டிச் செல்வார்;அதற்கு விவாதம் என்று பொருளல்ல;அதைவிட தனி கட்டுரையாகப் போட்டு , ஓட்டை அள்ளி , எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விடலாம்;எல்லோரும் வளரவும் படிப்படியாகத் தேறவுமே நாம் முயற்சிக்கிறோம்.

ஆனால் இதைக் குறித்தெல்லாம் கவலையில்லாமல் திடீரென வந்து குதித்த ஒருவர், ' ஒரு குறிப்பிட்ட நண்பருடைய கருத்தை மட்டும் தனியாக எடுத்துப்போட்டால் இன்னும் நன்றாக எல்லோரும் தத்தமது கருத்தைச் சொல்லலாமே ' என்கிறார்; இதையே பிரித்தாளும் சூழ்ச்சி என்கி
றோம்;நம்முடைய கருத்தெல்லாம் புறக்கணிக்கப்பட்டு கருத்து சொல்லக்கூடத் தகுதியில்லாத நிலையிலிருக்கும் போது நம்முடைய எழுத்துக்கள் அங்கே இருப்பது பொருத்தமில்லாதது போலத் தோன்றுகிறது.

நம்மைப் போன்ற குறைந்த அறிவுள்ளவர்கள் பெரியவர்கள் பேசிக்கொள்ளும் அறையில் நுழையாமலிருப்பதே நமக்கு நல்லது என்ற உணர்வினால் அழுத்தப்பட்ட நாம் நமது கருத்துக்களையெல்லாம் அந்த தளத்திலிருந்து வழக்கம்போல நீக்கிவிட்டோம்; இனி யாரும் எந்த இடையூறும் இல்லாமல் "எது சரி" என்று விவாதிக்கட்டும்.

நண்பர்கள் சிரமத்துக்கு மன்னிக்க வேண்டுகிறோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


அன்பு சகோதரர் அற்புதம் அவர்களுக்கு, தாங்கள் தேவனுக்கு உண்மையாக இருப்பதால் ஒரு அற்புதமான பரிசைப் பெற்றிருக்கிறீர்கள் (போன்ல கிடைத்த வசவைத்தான் சொல்கிறேன்). வாழ்த்துக்கள். சமீபத்தில் எனக்கு போன் செய்த ஒரு நண்பர் “இண்டர்நெட் இருக்கிறது என்பதற்காக என்னவேண்டுமானாலும் எழுதுவாயா? வானத்திலிருந்து தேவ கோபாக்கினையாகிய அக்கினி இறங்கி உன்னைப் பட்சிப்பதாக” என்று சாபம் கொடுத்தார். நாம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் எதிர்ப்பே இல்லாமல் பஞ்சு மெத்தை போன்ற பாதையில் கடந்து சென்றால்தான் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். சத்தியத்தின் நிமித்தம் நாம் அநேகருக்கு சத்துருவானால் அது ஆசீர்வாதமே!!

ஆனாலும் அவர் கேட்ட சில கேள்விகள் நியாயமானவையே, குறிப்பாக “தளத்துக்காக எத்தனை பேர் ஜெபிக்கிறீர்கள்?” என்று கேட்டது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியதும் செயல்படுத்த வேண்டியதுமாகும்.

இந்தக் குறிப்பிட்ட திரி சம்பந்தமானதாகத் தோன்றும் சில கேள்விகளுக்கு என்னாலான பதிலைத் தந்திருக்கிறேன்.

//ஒரு கிறிஸ்தவன் நம் பதிவுகளைப் பார்த்து இரட்சிக்கப்படுவானா? (தளத்திலிருக்கிற கட்டுரைகளை நகலெடுத்து இரட்சிக்கப்படாத ஐந்து பேருக்கு கொடுத்தால், அவன் இரட்சிக்கப்படுவானா?//

வேதத்திலே கூட சரித்திரம், நியாயப்பிரமாணம், ஆலயம் கட்டும் முறை, ஆசரிப்புக் கூடாரம் அமைக்கும் முறை, பலி செலுத்தும் முறைகள், என்ற பல பகுதிகள் உள்ளது. அவையெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வுக்குரிய ஆழமான அர்த்தங்களைத் தாங்கி நிற்பவை என்றாலும் நாம் அவற்றை சுவிசேஷக் கைப்பிரதிகளில் பயன்படுத்துவதில்லை. இந்தக் குறிப்பிட்ட பகுதியை பிரதியெடுத்துக் கொடுத்தால் யாரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் எனவே இவற்றைக் கிழித்து விடலாம் என்று சொல்லலாகுமோ?

வெறும் சுவிசேஷம் அறிவிப்பது மாத்திரமே கிறிஸ்தவப் பணி அல்ல. சீஷர்களை உருவாக்குதல் சமஅளவு முக்கியப் பணியாகும். இந்த விவாதம் மக்களை சீஷத்துவப் பாதையில் இருந்து பழைய ஏற்பாட்டுப் பாதைக்கு திருப்பும் வேறொரு சுவிசேஷம் பற்றியது.

தெரிந்தோ தெரியாமலோ ”ஒரு கிறிஸ்தவன் நம் பதிவுகளைப் பார்த்து இரட்சிக்கப்படுவானா?” என்று எழுதியுள்ளீர்கள். ஆம், உண்மைதான் இன்று கிறிஸ்தவர்களுக்கே இரட்சிப்பு தேவை என்னும் அளவுக்கு திருச்சபைக்குள் உலகம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.

//பலரை தவறானவர்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிற நீங்கள் எத்தனை பேரை சரி என்று சொல்லி யிருக்கிறீர்கள்?//

சரியான ஊழியர்கள் யாருமே இல்லை என்பது எங்கள் வாதமல்ல. நாங்கள் யாரையாவது நல்ல ஊழியர் என்று சுட்டிக்காட்டினால் நாங்கள் யாரையெல்லாம் தவறானவர்கள் என்று சொன்னோமோ அவர்களுடைய ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இவர்கள்மேல் அவதூறுகளைச் சுமத்துவார்கள். அமைதியாய் ஊழியம் செய்துகொண்டிருப்பவர்களை தேவையற்ற கலக்கத்தில் மாட்டி விடுவானேன்.

//தவறான கள்ள உபதேசம் என்று சுட்டிக் காட்டுகிற நீங்கள் சரியான உபதேசம் எது என்பதை என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?//

அதை இந்தத் திரியிலேயே பரவலாகச் சொல்லியிருக்கிறோம். போதாவிட்டால் அதற்காக தனியாக ஒரு பதிலை எழுதுகிறேன்.

//நீங்கள் குற்றம் சாட்டும் ஊழியர்களுக்காக ஜெபித்திருக்கிறீர்களா?//

தெரிந்தே ஜனங்களை வஞ்சிப்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, பாரமுமில்லை. அவர்கள் பாபிலோனிலேயே மரித்துப் போனவர்கள். அவர்களைப் புதிப்பிப்பது அரிதான காரியம். அவ்ர்களுக்காக மன்றாடுவது எங்கள் வேலையுமல்ல. எங்கள் பாரமும், கண்ணீரும், மன்றாட்டும் அவர்களை நம்பி சிறைப்பட்டுப் போகிற ஆடுகளைக் குறித்தே.

//பவுலை பற்றிப் பேசுகிற நீங்கள் பவுலைப் போல வாழ்கிறீர்களா?//

இந்தக்கேள்வி எங்களுக்கு மாத்திரமன்றி கேள்வி கேட்ட நண்பருக்கும், மற்றும் உலகம் முழுவதுமுள்ள பிரசங்கிகளுக்கும் உரியது. ஏனெனில் பவுலைக் குறித்து பேசாதவர்கள் யாருமில்லை. பவுல் நமக்கு சிறந்த உதாரணம், அவரை முன்மாதிரியாக வைத்து நாம் வாழவேண்டும்.

பிரசங்கிகளில் முன்றுவகை.
  1. ஆரோக்கியமானதைப் பிரசங்கித்து பிரசங்கத்தின்படி வாழ்கிறவர்கள் - அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் (எபி 13:7)
  2. ஆரோக்கியமானதைப் பிரசங்கித்து தனிப்பட்ட வாழ்க்கையில் பிரசங்கத்தின்படி வாழாதவர்கள் - நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் (மத் 23:3)
  3. தங்கள் வயிற்றுக்காக வேதத்தைப் புரட்டி தவறாக உபதேசிப்பவர்கள்- அவர்களை சோதித்து அறிய வேண்டும், விசுவாசிகளை அவர்களது போதனை குறித்து எச்சரிக்க வேண்டும். (நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் ... அறிந்திருக்கிறேன். வெளி 2:2)

கேள்வி கேட்ட சகோதரரும் ஊழியர் என்று சொல்லுகிறீர்கள். அவர் பவுல் பற்றி பிரசங்கித்ததில்லையா? அவரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அவர் பதில் என்னவோ?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham:

heaven-re.jpg

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோ. சில்சாம் உங்களை மட்டுமல்ல, தள உறுப்பினர்கள் அனைவரையும் குறித்தும்தான் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். நீங்களே முன்வந்து அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டால் எப்படி? நாம் நம்மிடத்தில் விசாரித்து கேட்கும் எவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதிலளிப்போம். அதுவே சரியான அணுகுமுறை.

chillsam:
wordofgodhitssatan.gif

நல்ல அணுகுமுறை தான் நண்பரே, ஆனாலும் நம்மிடத்தில் யாரும் இங்கே விசாரித்து கேட்கவில்லை; தவறான ஒரு காரியத்தை வேத வசன ஆதாரத்துடனும் உதாரணங்களுடனும் நிதானமாக விளக்க முயற்சிக்கும் நம்மீது சம்பந்தப்பட்டவர்களுடைய இரசிகர்கள் சீறுகிறார்கள் என்பதே வேதனையான விஷயமாகும்.

இதில் நீங்கள் வேண்டுமானால் கருத்து கணிப்பு கோருங்கள், அதில் நான் தான் முதலாவது இடத்தில் இருப்பதாக உணருகிறேன்; இங்கே ஒரு சிலரைத் தவிர மற்றவர் போதிக்கிறவர்களல்ல; ஆனாலும் அவர்கள் கேட்பதை காட்டிலும் பேசுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்; வேதத்தின் ஆதார சத்தியங்களை எடுத்து பதிவு செய்வதில் ஆர்வமாக இருக்கும் என்னைப் போன்றோரை எதிர்க்கிறார்கள்; அவரவர் இஷ்டத்துக்கு அவரவருடைய உலகப் பிதாக்கள் சொல்லித் தந்த கொள்கைகளை அறிவிக்கிறார்கள்; இங்கே உறுப்பினர்களாக இருப்பதாலேயே அவர்கள் போதகர்களாகி விடமுடியுமா, அல்லது ஏதோ ஒரு மனிதன் எழுதிய புத்தகத்தில் படித்துவிட்டு வந்ததையெல்லாம் வேதமாக்கி விடமுடியுமா என்று அறிய விரும்புகிறேன்;

வேதம் என்பது எந்த தனிப்பட்ட மனுஷனின் வியாக்கியானத்துக்கும் கட்டுப்படாதது என்பதை அறியவேண்டும்; தங்கள் அனுபவங்களைப் பேசுவோரெல்லாம் போதகர்களாகி விடமுடியாது; இந்த கறாரான அணுகுமுறைகளை எந்த விசுவாசியும் அல்லது மனுஷனும் மனதில் கொண்டால் நமக்குள் கருத்து வேறுபாடே வரவாய்ப்பில்லை;

இதே Rev.சாம்.P அவர்கள் ஒரு காலத்தில் சொன்ன உதாரணம்:
மேய்ப்பன் வரும் வரை ஆடுகள் ஒன்றையொன்று முட்டியடித்துக்கொண்டும் கத்திக்கொண்டுமிருக்கும்; மேய்ப்பன் வந்து ஒரு விசேஷித்த ஒலி எழுப்பியதும் அவை அனைத்தும் தங்களுக்குள்ளிருக்கும் முட்டல் மோதல்களை விட்டு மேய்ப்பனுடைய சத்தத்துக்கு நேராக தங்கள் காதுகளைத் திருப்புமாம்; மேய்ப்பனுடைய சத்தம் கேட்கிறதா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


arputham:

heaven-re.jpg
செழிப்பு உபதேசம் கள்ள உபதேசமா என்பதை நாம் இத்திரியில் விவாதித்து வருகிறோம். இதில் ஒரு சிலருக்கு செழிப்பு உபதேசம் வேதப் பூர்வமானதாக எண்ணுகிறார்கள், சிலர் அதை வேதத்துக்கு முரணானது என்கிறோம். வேறு சிலருக்கு இத்திரி உபதேச விவாதமாக தோன்றாமல் ஊழியக்காரகள் மற்றும் தனி நபர் தாக்குதலாக் தோன்றுகிறது. தற்போதைக்கு செழிப்பு மட்டுமே வேத உபதேசம் அல்ல என்பதற்கான வசன ஆதாரங்களுடன் பல சகோதரர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஒன்றை தவறு என்று சொல்கிற நமக்கு எது சரி என்கிற புரிதலும் கண்டிப்பாக இருக்கும், இருக்க வேண்டும். ஆகவே எது சரியான உபதேசம் எனதை வேதாகமத்தின் அடிப்படையில் நம் தளத்தில் பதிவு செய்வது பலருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊழிய சகோதரர் என்னை தொடர்பு கொண்டு நம் தளம் தொடர்பாகவும் அதிலும் குறிப்பாக் இத்திரியில் நாம் விவாதித்து வரும் காரியங்கள் குறித்தும் இரண்டு மணி நேரமளவுக்கு விடாது திரும்ப திரும்ப கேள்விகளால் துளைத்தெடுத்தார்.. உடனடியாக அவருக்கு நான் பதிலளிக்க வில்லை. ஆனால் அவரின் கோபக் கேள்விகளைக் குறித்துக் கொண்டேன். அவற்றில் சில கீழே:
1.ஒரு கிறிஸ்தவன் நம் பதிவுகளைப் பார்த்து இரட்சிக்கப்படுவானா? (தளத்திலிருக்கிற கட்டுரைகளை நகலெடுத்து இரட்சிக்கப்படாத ஐந்து பேருக்கு கொடுத்தால், அவன் இரட்சிக்கப்படுவானா? என்று சவாலிட்டார்)
2. பல்ரை தவறானவர்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிற நீங்கள் எத்த்தனை பேரை சரி என்று சொல்லி யிருக்கிறீர்கள்?
3. தவறான் கள்ள உபதேசம் என்று சுட்டிக் காட்டுகிற நீங்கள் சரியான உபதேசம் எது என்பதை என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?
4. நீங்கள் குற்றம் சாட்டும் ஊழியர்களுக்காக ஜெபித்திருக்கிறீர்களா?
5. எந்த உபதேசத்தைக் கூறினாலும் தமிழ்கிறிஸ்தவ தள உறுப்பினர்களாகிய நீங்கள் குறை கூறுகிறீர்கள். எதுதான் உங்க்ள் உபதேசம்?
6. இந்த தளத்தில் வரங்களினால் அடையும் நன்மையை என்றைக்காவது எழுதியிருக்கிறீர்களா?
7. பவுலை பற்றிப் பேசுகிற நீங்கள் பவுலைப் போல வாழ்கிறீர்களா?
8. எந்த சபைதான் சரி என்று சொல்கிறீர்கள்.
9. உங்கள் காணிக்கைகளால் கர்த்தரை கனப்படுத்துகிறீர்களா?
10.உங்கள் வலைதளத்தின் நோக்கம் என்ன?
11.எத்தனை பேர் தளத்திற்காகச் ஜெபித்திருக்கிறீர்கள்?


chillsam:
wordofgodhitssatan.gif
அன்பு சகோதரர் அற்புதம் அவர்களே, இரவு பகல் பாராது இங்கே நாங்கள் யாருக்காகவோ வேலை பார்க்கிறோம்; இதுபோல சேற்றை அள்ளி பூசிக் கொள்ள அல்ல; தாமதித்தால் தவறாகி விடுமே என்று, வைராக்கியத்துடன் இன்று காலை வெறும் இரண்டு மணிநேரம் இணையத்தில் செலவிட்ட பலனை, இன்று முழுவதும் அனுபவித்தேன்;அது எனக்கு தனிப்பட்ட முறையில் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

உங்களிடம் புலம்பிய அந்த "நல்ல" ஊழியரிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியிருக்கலாமே; நான் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும் அல்லது எனது பதிப்புகளை நீக்கிவிடுங்கள்; பயனற்றதை உரைக்காதிருப்பது குறித்து வேதத்திலிருந்தல்ல, நான் திருக்குறளிலிருந்தே அறிந்திருக்கிறேன்.

சுருக்கமாக சொல்கிறேன், உங்களைத் தொடர்பு கொண்ட ஊழியருக்கு சொல்லுங்கள், அரிசியிலிருந்து கல்லைப் பொறுக்கியெடுத்தது அந்த காலம், இன்றைக்கு கற்களிலிருந்து அரிசியை மீட்க வேண்டிய நிலை.

என்னைப் பொறுத்தவரை நான் யாரை குறித்தெல்லாம் இதுவரை எதுவும் எழுதவில்லையோ அவர்களெல்லாம் ஏதோ பரவாயில்லை இரகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பர்; நான் சொல்வேன், குற்றம் பார்க்காவிடில் சுத்தம் இராது; சில வருடம் முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நம்ம வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றினார்களே யாராவது மான நஷ்ட வழக்கு போட்டார்களா?

அந்த ஊழியரிடம் கேளுங்களேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

vijay76 எழுதியது
-----------------------------------------------------------
அதுமாத்திரமல்ல ஒரு மடையனாக மாக்கானாக குழந்தையாக தேவனுடைய பாதத்திலும் சகோதர ஐக்கியத்திலும் அமர்ந்தால்தான் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள முடியும் சகோதரனே!

மீன்பிடிக்கிறவர்களும், ஆயக்காரரும் எழுதியவைகளைத்தான் இன்று பண்டிதரும், முனைவரும் மண்டையை உடைத்துக் கற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்!!
-------------------------------------------------------------------

அருமையான கருத்துகள் சகோதரனே....................மிக அருமை


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 18th of December 2010 05:01:09 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அன்பான சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு,

அற்புதம் எல்லா இடங்களிலும் எல்லா மதங்களிலும் நடக்கிறது. எனக்கு ஒரு அற்புதம் நடந்துவிட்டது, நான் பயனடைந்துவிட்டேன் அதனால் நான் அங்கே தவறு நடந்தாலும் அதை எதிர்க்க மாட்டேன் என்பது வடிகட்டிய சுயநலம். பவுல் யூதமார்க்கத்தில் ஒரு ராஜகுமாரன் போல வலம்வந்தார். கனம் பொருந்தியவராக இருந்தார். ஆனால் இயேசுவால் தொடப்பட்டபோதோ அவருக்காக சகலத்தையும் குப்பையென்று எண்ணி தன்னை ராஜகுமாரன் போல நடத்தியவர்களையே கிறிஸ்துவின் நிமித்தம் பகைக்கத் துணிந்தார். அவர்களால் கல்லெறியப்பட்டார், அவர்கள் கையிலேயே மரணமும் அடைந்தார். எது முக்கியம் இயேசுவா? சுயமா?

//அவரது உபதேசம் கள்ள உபதேசம் அது வஞ்சகமானது என சொன்னால் அந்த உபதேசம் பற்றி முடிவு செய்ய வேண்டியது நானே. ஒரு உபதேசம் சரியா, தவறா என்பதை முடிவு செய்ய மற்றவர்களை நம்பியிருக்கும் அளவுக்கு நான் மடையனும், மாக்கானும் அல்லது குழந்தையோ அல்ல என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்//

புதிய ஏற்பாட்டு சபையோ ஊழியமோ ஒன்மேன் ஷோ அல்ல அது ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் சகோதர ஐக்கியம். வேறு எந்த உறுப்பையும் சார்ந்திராமல் நானாகவே இருப்பேன் என்று ஒரு சரீரத்தின் எந்தவொரு அவயவமும் சொல்லமுடியாது. அதுமாத்திரமல்ல ஒரு மடையனாக மாக்கானாக குழந்தையாக தேவனுடைய பாதத்திலும் சகோதர ஐக்கியத்திலும் அமர்ந்தால்தான் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள முடியும் சகோதரனே!

நம்மைவிட வயதிலும் படிப்பிலும் அறிவிலும் குறைந்தவர்கள் ஒருவேளை தேவனோடு நெருங்கி நடப்பவர்களானால் நாம் அவர்களிடம் நிறையவே கற்றுக்கொள்ள முடியும். மீன்பிடிக்கிறவர்களும், ஆயக்காரரும் எழுதியவைகளைத்தான் இன்று பண்டிதரும், முனைவரும் மண்டையை உடைத்துக் கற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்!!

//அவரால் நான் பாதிக்கப்படாதவரை அவர் எப்படியிருந்தால் எனக்கென்ன?//

சகோதரனே இது மிக மிக ஆபத்தான மனநிலை, போப்பின் ஆதிக்கத்தால் நான் பாதிக்கப்படாதவரை யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று மார்ட்டின் லூத்தர் நினைத்திருந்தாரானால் நாமெல்லாம் வெளிச்சத்துக்குள் வந்திருப்போமா என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்!

ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமை என்னும் பாவத்தினித்தம் சுயத்தை மையமாகக் கொண்ட சபிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்கள். அதிலிருந்து நம்மை விடுவிக்கவே கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்று 2 கொரிந்தியர் 5:15 சொல்லுகிறது. ”பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்”

கிறிஸ்துவோடு நாமும் கூட சுயத்தை சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்லியிருக்க, அதே சுயத்தை மையமாகக் கொண்டே இன்று நிறைய ஊழியங்கள் நடைபெறுவதையும், எனக்கு பாதிப்பு ஏற்படாதவரையில் யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று விசுவாசிகள் இருப்பதும் வருந்தத்தக்க காரியம்.

நான் செத்தாலும் பரவாயில்லை அல்லது எனக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் கூடப் பரவாயில்லை, என் தேவனுடைய சபை காக்கப்படவேண்டும் என்று திறப்பில் நிற்பவனே ”மகன்”.

அன்று தாவீது ஆடுதானே, சிங்கமும் கரடியும் தூக்கிப் போனால் போகட்டும் என்று இருந்திருக்கலாமே!! அவன் ஏன் தன் இன்னுயிரைப் பணயம் வைத்து ஒரு சாதாரண ஆட்டுக்காக  சிங்கத்திடம் மல்லுக்கட்ட வேண்டும்?? காரணம் அது அவனுடைய அன்பான தகப்பனின் சொத்து. சகோதரன் சந்தோஷ்! உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் கர்த்தர் கறவலாடுகளுக்குப் பின்னால் போன தாவீதை சக்கரவர்த்தியாக்கினார் என்று.

நம் வாழ்க்கை ஏன் வறண்டு போய்க்கிடக்கிறது என்றும் புரிந்திருக்கும்.


-- Edited by vijay76 on Friday 17th of December 2010 08:58:39 AM

-- Edited by vijay76 on Friday 17th of December 2010 09:04:11 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

யௌவன ஜனத்தின் இந்த குறிப்பிட்ட திரியின் முழு விவரத்தையும் வாசித்த பாதிப்பு சந்தோஷ் அவர்களின் கருத்திலிருந்து தெரியவருகிறது;அவர் யாருடைய கருத்தையும் மேற்கோள் காட்டாமலே அவற்றை உள்வாங்கிக் கொண்டு நிதானமாக - சாதகமான பதில்களைக் கொடுத்துள்ளார்;இதற்காக அவருக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்;

அன்பு நண்பருக்கு ஒரு தகவல், இந்த திரியின் தலைப்பில் கள்ள உபதேசம் என்று இருந்தாலும் எங்குமே நான் Rev.சாம்.P அவர்களின் போதகம் கள்ள உபதேசம் என்று குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டுகிறேன்; அவருடைய போதனைகளை ஆராய்வதன் மூலம் அவரை யாரும் சிறுமைப்படுத்த முயற்சிக்கவில்லை;மாறாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள மாறாத பிரமாணத்துடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்கிறோம்,அவ்வளவே; இதை செய்யக்கூட உரிமையில்லையா?

நம் கையிலிருக்கும் வேதாகமமே காலங்காலமாக ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பிட்டுப் பார்த்து பிரதியெடுக்கப்பட்டதுதானே? நம்முடைய சகோதரர்கள் தான் மாற்றுக் கருத்துக்கோ சிந்தனைக்கோ இடந்தராமல் நம்மை முடக்குகிறார்கள்;நீங்களும் கூட எனது வரிகளை அருமையாக கோடிட்டு காட்டி கருத்து கூறுகிறீர்களே தவிர நான் மிகச் சரியாக உங்கள் நிலையை கணித்ததைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை;

ஆம், நம்முடைய போதகர் சாம்.P அவர்கள் மூளையை நோக்கியே ஊழியம் செய்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதோடு அதனை மிகச் சிறப்பாக விளக்கியதில் என்னுடைய பணியானது இன்னும் எளிமையாகிவிட்டது; நாங்களெல்லாம் பேசி அவரைப் பெரிய ஆளாக்கவில்லை நண்பரே,அவர் ஏற்கனவே பெரிய ஆளாகிவிட்டார்;அவருடைய வெப்சைட்டுக்குச் சென்று பாருங்கள்,அவருடைய வளர்ச்சி நிதானமானது, நியாயமானது;அவர் உழைத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை;ஆனால் அவர் எடுத்துக்கொண்ட களம் அவருடைய தகப்பனார் அமைத்துத் தந்த அடித்தளம்- அவர்கள் குடும்பம் கடந்த சுமார் 40 வருடங்களாகப் போதித்து வருபவை அதிர்ச்சி இரகம்;

இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமே செல்லத்துரை அவர்களின் இரத்த சம்பந்தமானவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்த குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் குறைந்தது 80 பேராவது நல்ல நிலையில் அங்காங்கு அமர்ந்து கொண்டிருந்து தமிழகத்தை இந்த தவறான உபதேசத்தினால் மாயையில் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்;அவர்களில் யாரும் எங்குமே தங்கள் உறவுமுறைகளை வெளியே சொல்லிக்கொள்ளுகிறதில்லை என்பது மற்றொரு சுவாரசியம்;

எனவே போதகர் சாம் அவர்களுக்கு எதிராக நாம் எழுதுபவை அவரை மட்டுமே தாக்குகிறது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது;இதை வைத்து நீங்கள் (Phd)பிஹெச்டியே பண்ணலாம்;இது பரவலான ஆழமான பார்வையாகும்;இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு;நன்மையும் உண்டு தீமையும் உண்டு எதில் தான் இரு தன்மை இல்லை என்பீர்களாகில் சத்தியத்தில் இருதன்மையில்லை என்பேன்;

தானியேல் சொப்பனத்தை சற்று தியானிப்பீர்களா,அந்த கலப்பான உலோகம் மற்றும் மண் போன்ற போதகங்களே இன்றைக்கு பீடங்களை வாந்தியால் நிரப்பியிருக்கிறது;எங்கும் அசுத்தமும் இச்சைகளும் தலைவிரித்தாட காரணமே சுத்த சுவிசேஷம் உரைக்கப்படாததே.

அரைகுறையாகச் செய்யும் போதே ரிசல்ட் இப்படியிருக்கிறதே,முழுமையாகச் செய்தால் எப்படியிருக்கும் என்பதே என்னைப் போன்றோரின் ஆதங்கம்;

ஆபிரகாமின் வித்து கலந்த ஒரே காரணத்தினால் தேவனுக்கு விரோதமாக செயல்பட்டாலும் இஸ்மவேலின் சந்ததியார் பெற்ற பாக்கியங்களை நாம் தற்போது காண்கிறோமல்லவா? அதாவது மத்தியக் கிழக்கை ஆட்டிப்படைக்கும் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடுகளைச் சொல்லுகிறேன்;அவர்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் அநேக போதகர்கள் அவர்களை நம்முடைய அண்ணனாக அறிமுகப்படுத்துவதால் ஒரு வாதத்துக்காக இதனைக் குறிப்பிடுகிறேன்;

அதுபோலவே பரிசுத்த வேதாகமத்தை எடுத்து யார் போதித்தாலும் போதிப்பவரும் கேட்பவரும் கனமும் தனமும் அடைவர்;ஆனாலும் நோக்கம் இரட்சிப்படைவதாக இராதிருந்தால் மொத்தமும் டொமினோ
சீட்டு கட்டு அலங்காரத்தைப் போல
சரிந்து போகுமே;

ஒரு கூட்டம் மக்களை வஞ்சித்தவர் நரகத்துக்காகவாவது போகட்டும், தேவ கிருபையால் பரலோகத்துக்காவது போகட்டும், அதுவல்ல பிரச்சினை அவருடைய போதகத்தால் எத்தனை பேர் பரலோகம்
போகமுடியும் என்பதே;அவர் தான் மீண்டும் மீண்டும் சொல்லுகிறாரே,இந்த வேதம் இரட்சிக்கப்பட்டு  பரலோகம் செல்ல கொடுக்கப்படவில்லையென்று;

அதனை அவரது தளத்தின் பெட்டகத்திலிருந்து காட்சி பேழையாகவே நீங்கள் பார்க்கலாம்;டார்கெட்டாக இரட்சிப்பை வைத்து அதையடைய என்ன செய்ய வேண்டும் என்று தானே போதிக்கவேண்டும்?

http://www.revsam.org/?q=archives


http://revsamvideos.chennaistream.net/revsamvideos/08Dec10ThanksGiving.wmv


ஆண்டவரும், "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது " என்பதை
த் தானே தனது முதல் சுவிசேஷ வார்த்தையாக உச்சரித்தார்?

இது என்ன,கிறிஸ்மஸ் செய்தி,ஈஸ்டர் செய்தி என்று வெரைட்டி வைத்து போதிக்கிறார்களே அதுபோன்று பத்தில் ஒன்றான விஷயமா?

கடந்த மாதம் முழுவதும் இரட்சிப்படைவது பற்றி கற்றுக்கொண்டோம், இந்த மாதம் கோடீஸ்வரனாவது எப்படி என்று கற்றுக்கொள்ளப்போகிறோம் என்றா போதிக்கமுடியும்?

"மனந்திரும்பும் அழைப்பைக் கொடுக்காத ஒரு பிரசங்கம் முழுமையான பிரசங்கமல்ல" என்று டிஎல் மூடி எனும் பிரபல பிரசங்கியார் சொன்னாராம்;

ஆதி அப்போஸ்தலர் நாட்களில் எப்போது ஜனங்கள் மனந்திரும்பினார்கள், சிலுவையின் உபதேசத்தை பேதுரு பிரசங்கித்தபோதுதானே? அது அந்த காலம் என்பீர்களா?

இங்கும் சிலுவை பிரசங்கிக்கப்படுகிறது..,
அது ஆசீர்வாத சிலுவை,
அரவணைக்கும் சிலுவை,
எல்லாம் செய்து முடித்த சிலுவை,
மனதுருகும் சிலுவை...

எல்லாம் சரிதான் ஆனால் இதெல்லாம் யாருக்கு,தான் ஒரு பாவி என்ற உணர்வைப் பெற்றவனுக்கு அல்லவா? பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்துவதற்காகத் தானே தேற்றரவாளனே அருளப்பட்டார்?

அன்றைக்கு வார்த்தையினால் யோசுவா கானானை இஸ்ரவேலருக்குப் பங்கிட்டு கொடுத்தான்;அவர்கள் தேசத்தை சுதந்தரித்தார்கள்.

இன்றைக்கும் அதே கான்செப்ட்டில் வார்த்தையினால் தேசத்தை சுதந்தரிக்கவும் செல்வ செழிப்பைடையவும் அறைகூவல் விடுக்கப்படுகிறது;

ஆனால் அன்றைய வார்த்தைக்கும் இன்றைய வார்த்தைக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருப்பதை யாருமே பொருட்படுத்தவில்லையே?

அன்றைய வார்த்தை வெறும் எழுதப்பட்டதாகவும் உரைக்கப்பட்டதாகவும் மட்டுமே இருந்தது;ஆனால் இன்றோ அந்த வார்த்தை மாம்சமாகி விட்டது;மாத்திரமல்ல,வார்த்தையான அவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார்;

வார்த்தையில் ஏற்பட்ட மாற்றம்
அதன் விளைவிலும் ஏற்படவேண்டுமே; எனவே தான் நம்முடைய ஆண்டவர் தமது இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று கூறி தம்மை சிலுவைக்கு ஒப்புகொடுத்தார்; ஒருவேளை அவர் சிலுவைக்கு ஒப்புக்கொடுக்காமலிருந்திருந்தால் நான் சொல்லுகிறேன்,அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்.

அதற்கு உதாரணம் முகமது எனும் அரேபிய பாலைவன இளைஞன், கல்வியறிவில்லாதவன்,சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஒரு அனாதை;ஆனால் அவர் வெறும் சுமார் முப்பது வருட உழைப்பில் ஒரு சக்ரவர்த்தியாகவும் இன்று மரித்தபிறகும் உலகையே ஆட்டிப்படைக்கும் தலைவராகவும் உயரவில்லையா?

என் ஆண்டவர் தம்முடைய தேவத்துவ வல்லமையை முடக்கிக்கொண்டதாலேயே அவரை துரோகிகள் பிடிக்கவும் அடிக்கவும் முடிந்தது;

அவர் சிலுவைக்கு சென்றது,சிங்காசனத்தைக் கொடுக்க,அது இவ்வுலக சிங்காசனமல்ல;

அவர் சிலுவைக்குச் சென்றது ஐசுவரியத்தைக் கொடுக்க,அது இவ்வுலக ஐசுவரியமல்ல;ஏனெனில் அதில் வேதனை உண்டு;

அவர் சிலுவைக்குச் சென்றது எனக்கு ஆரோக்கிய சுக வாழ்வைக் கொடுக்க,அது இவ்வுலகின் நீடித்த வாழ்வுக்காக அல்ல;இவையெல்லாம் மறுமையில் முழுமையடையும்;

அப்படியானால் யோசுவா எனும் இரட்சகன் கானான் தேசத்தைப் பங்கிட்டது போலவே யெஷுவா (Yashuah) எனும் இரட்சகர் பரம கானானை நோக்கி நடத்துகிறார்;

எனவே அவர் சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், அதைச் சொல்லியே எல்லாவற்றையும் சுதந்தரிப்பேன் என்பது வைக்கோல் அடைக்கப்பட்ட மாயக் கன்றை நம்பி பாலைக் கறக்கக் கொடுக்கும் பரிதாபமான பசுவைப் போன்ற நிலையாகும்;

மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எல்லோருக்கும் சென்று சொல்ல கட்டளை பெற்றார்கள்;இது அவரது பிறப்பில்.

சீஷர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எல்லோருக்கும் சென்று சொல்ல கட்டளை பெற்றார்கள்;அது அவரது பரமேறிச் சென்றபோது.

அவருடைய பிறப்பின் செய்தி எல்லோரையும் ஒரு இடத்தை நோக்கி அழைத்தது;அவர் பரமேறிய செய்தி எல்லோரையும் வெவ்வேறு இடங்களுக்கு சிதறடித்தது;

மேசியாவைக் காண எருசலேமுக்கு வந்த சிதறியிருந்த யூதர்களைப் போலவே இன்றைய கிறித்தவர்களும் இருக்கிறோம்;

அன்று கூடி - சிதறி மீண்டும் 1948 -இல் இணைந்த யூதரைப் போலவே நாமும் இணையும் நாள் நெருங்குகிறது;

அன்று யூதர் அடிமைகளாக இருந்து அடிமைகளாக இணைந்து அடிமைகளாகவே சிதறினார்கள்;சேரும்போதோ சுதந்தரவாளிகளாகக் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள்;தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

அதுபோலவே இன்றும் கிறித்தவர்களாகிய நாமும் இந்த உலகில் அடிமைகளாகவும் தேவனுடைய சுதந்தரமாகவும் இருக்கிறோம்;இந்த உலகில் நமக்கேது சுதந்தரம்? நாம் சிதறியிருக்கிறோம்;

ஆனால் மாம்ச சந்ததியான யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டு சுதந்தரத்தையடைந்தது போலவே ஆவிக்குரிய சந்ததியான நாமும் கூட்டிச் சேர்க்கப்படுவோம்;(கலாத்தியர்.4 ஆம் அதிகாரத்தை வாசிக்க.) நமக்கு வாக்களிக்கப்பட்ட சுதந்தரத்தையடைவோம்;யூதரல்ல,நாமே ஆபிரகாமின் வழிவந்த வாக்குதத்த சந்ததி என பவுல் அருமையாகப் போதிக்கிறார்;ஆனால் இந்த போதகத்துக்கும் Rev.சாம்.P அவர்களின் போதகத்துக்கும் இடையில் தான் எவ்வளவு வித்தியாசம்..?

எனவே வரப்போகிறதையே நாடுகிறோம்;(எபிரேயர்.11.) பெற்றவன் இனி ஒன்றையும் பெறமுடியாது;பெறாதவனோ தன் சந்தோஷம் நிறைவாகும் படி பெறுவான்;அது தற்கால அரசமைப்பின் கீழல்ல,வரப்போகும் மகாராஜாவின் அரசாங்கத்தில்;

ஆனானப்பட்ட ஆபிரகாமே இன்னும் பெறவில்லையாம்; நாம் எந்த மூலைக்கு? ஆபிரகாமே நமக்காக வரிசையில்  காத்திருக்கிறாராம்,எத்தனை பாக்கியம்? கிறித்துவின் இந்த எளிமையான மகிமையின் சுவிசேஷத்தையே ஆளாளுக்கு பிரித்து கூறு போட்டு கூவி கூவி விற்கிறார்கள்; ஆனால் அது இலவசமானது என்பதை வாங்குவோர் அறிகிறதில்லை..!

அருமை சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி: விரைவில் ஜாமக்காரனை ஆதியோடந்தமாக அலசப்போகிறோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


சந்தோஷ் எழுதியது
//இப்போது என்னுடைய கேள்வி என்னவெனில் இவரது பத்திரிக்கையை படிக்கும் நான் இவரது கருத்தை நம்பி (அது உண்மையாக இருப்பினும்) எனக்கு உதவி செய்த ஊழியர்களை மட்டமாக நினைப்பதா அல்லது எனக்கு உதவி செய்த அவர்களூக்கு நன்றி உணர்வுடன் இருப்பதா என்பதே. நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன் என சொல்வேன்.//

அதாவது ஒரு ஊழியரிடமிருந்து அற்புதம் பெற்றால், அவர் என்ன செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், ஊழியருக்கு நன்றி செலுத்தவேண்டும் என்கிறீர்கள்.

கடைசி நாட்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அற்புதம் செய்வார்கள் என இயேசு சொல்கிறாரே?

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மாத்திரமல்ல, பவுல் சொல்வதையும் படியுங்கள்.

2 தெச 2:9-12  அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இப்படியெல்லாம் வேதாகமம் சொல்லும்போது அற்புதத்தையே சொல்லிச் சொல்லி நாமும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாறச் செய்யலாமா? அற்புதம் செய்து, பிசாசு துரத்தி, தீர்க்கதரிசனம் சொன்ன ஊழியர்களின் கதி பற்றி மத்தேயு 7:22,23 சொல்வதை அறிவீர்கள் அல்லவா? அந்த அக்கிரமக்காரர்களை நம்பிச் செல்லும் ஜனங்கள் இடறுவதற்கு வாய்ப்பு உண்டல்லவா? எனவே அந்த அக்கிரமக்காரர் பற்றி எச்சரிப்பது அவசியந்தானே?


__________________
sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

சந்தோஷ் எழுதியது
//அடுத்ததாக ஒரு ஊழியரின் ஆடம்பர வாழ்க்கை மூன்றாவது மனிதர்களான நமக்கே தெரிய வரும் போது அவருக்கு காணிக்கை கொடுக்கும் அவர் சபையை சேர்ந்தவர்களுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. அது தெரிந்தும் அவர்கள் கொடுக்கிறார்கள் எனில் அவர் அதை அனுபவிப்பதில் என்ன தவறு.//

சகோதரரே, பல விஷயங்களில் நல்ல பல கருத்துக்களைக் கூறுகிறீர்கள். ஆனால் மேலே தாங்கள் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு ஊழியரின் ஆடம்பரத்தை அவரது சபை மக்கள் ஏற்றுக்கொண்டால், அதைக் குறித்து நாம் கேள்விகேட்கக்கூடாது என்கிறீர்கள். அதாவது ஒரு ஊழியரின் ஆடம்பரம் எல்லைக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அவரது சபை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறீர்கள். இப்படியே எல்லா விஷயத்திலும் சபை மக்களையே அளவுகோலாக வைத்தால், பின் எதற்கு வேதாகமம்?

வேதவசனம் சொல்வதை சற்று கவனியுங்கள்:

ஏசாயா 5:13,14 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்.
14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.

ஆடம்பர ஊழியர்கள் மட்டுமின்றி, அவர் பின்னே செல்லும் திரள்கூட்டமுமல்லவா பாதாளம் செல்வார்கள். இப்படி அவர்கள் ஜனங்களுக்கு இடறலாக இருப்பதால்தான் அவர்களைக் குறித்து சொல்லவேண்டிய அவசியம் நேரிடுகிறது.

ஜனங்களிடம் அறிவு இருக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால் ஜனங்களிடம் அறிவில்லாததால்தானே, அறிவைத் தேடி பிரசங்கிமாரிடம் போகின்றனர். அப்படி போகும்போது, பிரசங்கிமார் என்ன செய்யவேண்டும்?

மல்கியா 2:7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

பிரசங்கியார் வேதத்திலிருந்து தங்களுக்கு என்ன சொல்லப்போகிறார் என்பதைத் தேடி வருகிற ஜனங்களிடம், கர்த்தரின் தூதனாக நின்று, வேதத்தைச் சொல்லி அறிவைக் காக்கவேண்டும். ஆனால் பிரசங்கியாரே உலகத்தில் அன்புகூருகிறவராக இருந்தால், அவர் ஜனங்களுக்கு என்ன சொல்வார்?

உலக சினேகம் தேவனுக்கு விரோதமான பகை எனக் கூறும் யாக்கோபு, உலக சிநேகமுள்ளவர்களை விபச்சாரக்காரர் என்றல்லவா சொல்கிறார்? எனவே உலகசினேகத்திலுள்ள ஜனங்களை கண்டித்து உணர்த்துவதுதான் மெய்யான ஊழியரின் கடமை. ஆனால் அதைச் செய்யாமல், தானும் உலகத்தை சிநேகத்து தன் பின்ன்னால் வருகிற ஜனங்களிடம் உலகசிநேகம் தவறல்ல என்பதுபோல நடந்துகொண்டால் அதை எப்படி ஏற்கமுடியும்?

இம்மாதிரி உலகத்தை சினேகிக்கும் ஊழியர்களை ஜனங்களிடம் அடையாளம் காட்டி எச்சரிப்பது மெய்யான ஊழியனின் கடமைதானே? அதை ஏன் செய்யக்கூடாது என்கிறீர்கள்?


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

இந்த விவாதத்தை பல கோணங்களில் ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவது செய்தி சொல்பவருக்கும், அவர் சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ளுகிறார் என்பதற்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க வேண்டுமா என்பதை பார்க்க வேண்டும்.

ஜாமக்காரன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான புஷ்பராஜ் என்பவர் சகோதரர் டி.ஜி.எஸ் தினகரன் அவர்களை பற்றியும் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்களை பற்றியும் குற்றம் சொல்கிறார். அதில் தினகரன் அவர்கள் பணம் சம்பாதிப்பதாகவும், லாசரஸ் அவர்கள் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தினகரன் அவர்களின் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலமும், தினகரன் அவர்களின் ஜெபத்தின் மூலமும் மற்றும் லாசரஸ் அவர்கள் ஊழியத்தின் மூலமும் தேவன் எனக்கு அற்புத சுகத்தை கொடுத்துள்ளார் என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அற்புத சுகத்தை பெற்ற பிறகு அவர்களின் ஊழியங்களுக்கென்று எதையும் கொடுத்தாக எனக்கு நினைவில்லை. அதாவது அவர்கள் ஊழியத்துக்கு என்று எதையும் கொடுக்காமல் இலவசமாக நான் பலனடைந்துள்ளேன்.

மோகன்.சி.லாசரஸ் அவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, ஏறக்குறைய டி.பி யாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டிருந்த (உறுதி செய்யப்படவில்லை) வியாதியை ஏற்படுத்தின ஒரு அசுத்த ஆவி என்னை விட்டு ஓடினது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நான் அந்த காரியத்துக்காக வேண்டியதாக நினைவில்லை. வேறு சில காரியங்களையே வேண்டி கொண்டேன். ஆனால் ஒரு அசுத்த ஆவி என்னை விட்டு ஓடினதை உணர்ந்தேன்.

அது என்னுடைய குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தின அசுத்த ஆவிதான் என உறுதி செய்யவே பல மாதங்கள் பிடித்தன. அதை பற்றி யாருக்கும் எந்த சாட்சியும் சொல்லவில்லை. என் பெயர் என்ன? எனக்கு வந்த வியாதியின் பெயர் என்ன? அது எவ்வளவு நாளாக இருந்தது? போன்ற விவரங்களை அவர் கூட்டத்தில் சொல்லவில்லை. பொதுவாக இந்த வியாதி சரியாகிறது அந்த வியாதி சரியாகிறது என்றே அவர் சொன்னார். என் வியாதி குணமாகியும் குறிப்பாக அதை அவர் சொல்லாமல் போனது அவரின் குற்றமா என தெரியவில்லை. ஏனெனில் வியாதி சுகமாகாமல் சுகமாகியது என சொல்கிறார் என்பது அவர் மேல் கூறப்படும் குற்றசாட்டு. இது சரியாக இருக்குமானால் சுகமானதை சுகமானது என சொல்லாமல் போனதும் குற்றமா என தெரியவில்லை. இது பற்றி ஜாமக்காரன் சொல்வாரா?

இவ்வாறு புஷ்பராஜ் அவர்கள் குற்றம் சாட்டும் ஊழியக்காரர்கள் மூலமாக ஆன்மிக ரீதியாக முன்னேற்றத்தை கண்ட நான் இவரின் பத்திரிக்கையை படிப்பதன் மூலமாக எனக்கு உதவி செய்த இந்த ஊழியர்களை மட்டமாக நினைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறேன்.

சரி இப்போது புஷபராஜ் அவர்களின் மூலமாக ஏதாவது ஆன்மிக முன்னேற்றம் அடைந்தேனா என்று பார்த்தால் ஒன்றுமில்லை. மிக பிரபலமான தமிழ் பாடலான மயக்கமா? கலக்கமா? பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்ற வார்த்தையின் படி ஊழியக்காரர்கள் செய்யும் தவறுகளையும், அவர்களது ஆடம்பர வாழ்க்கையையும் பற்றி படிக்கும் போது மனதுக்குள் நம்மை விட மோசமானவனும் (அதுவும் ஊழியராக) இருக்கிறார்கள் என்று ஒரு குரூர திருப்தி வருவதை தவிர்க்க முடியாது,

இது மட்டுமே அவரின் மூலமாக நான் பெற்றது.

மேலும் தேவனின் ஸ்தோத்திர பலிகளை சொல்லுவது சரியல்ல அல்லது தேவையில்லை என்பது போன்ற கருத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்த கருத்தையும் தெளிவில்லாமல் சொல்வதும் இவரது பாணி. குறிப்பாக தினகரன் அவர்களின் ஆத்துமா பற்றி சொல்லும் போது அது இங்கே இருக்காது, அங்கே இருக்காது என சொல்கிறாரே தவிர அவர் ஆத்துமா மரணத்துக்கு பிறகு எங்கே போகும்? ஏன் போகும் என்பது போன்ற விவரங்களை சொல்வதில்லை. இது போன்ற ஊழியர்கள் அனேகர் மரணத்துக்கு பிறகு மனிதனின் நிலைமை பற்றி எதுவும் சொல்லாமல் அவர்களை தலையை பிய்த்து கொள்ள வைப்பதில் மகிழ்பவர்கள் அல்லது அது பற்றி அவர்களூக்கே சரியாக தெரியாது.

இப்போது என்னுடைய கேள்வி என்னவெனில் இவரது பத்திரிக்கையை படிக்கும் நான் இவரது கருத்தை நம்பி (அது உண்மையாக இருப்பினும்) எனக்கு உதவி செய்த ஊழியர்களை மட்டமாக நினைப்பதா அல்லது எனக்கு உதவி செய்த அவர்களூக்கு நன்றி உணர்வுடன் இருப்பதா என்பதே. நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன் என சொல்வேன்.

இப்போது இதே அளவு கோலை வைத்து சாம் செல்லத்துரை அவர்களை பற்றி பார்க்கும் போது, அவரின் செய்தி எனக்கும் தேவனுக்கும் நெருக்கத்தை உருவாக்கியது உண்மை. (அது என்ன செய்தி என்று நினைவில்லை) அதற்காக அவருக்கு ஒன்றும் கொடுக்கவுமில்லை. அதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் அவர் சரியில்லாதவர் என ஒரு சாரார் கூறுகின்றனர். அவரால் நான் பாதிக்கப்படாதவரை அவர் எப்படியிருந்தால் எனக்கென்ன? அவர் ஒருவேளை பிறரை சொர்க்கம் அனுப்பி விட்டு தான் மட்டும் நரகத்துக்கு போக விருப்பம் உள்ள தியாகியாக கூட இருக்கலாம். அவரது உபதேசம் கள்ள உபதேசம் அது வஞ்சகமானது என சொன்னால் அந்த உபதேசம் பற்றி முடிவு செய்ய வேண்டியது நானே. ஒரு உபதேசம் சரியா, தவறா என்பதை முடிவு செய்ய மற்றவர்களை நம்பியிருக்கும் அளவுக்கு நான் மடையனும், மாக்கானும் அல்லது குழந்தையோ அல்ல என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

மனிதர்களில் இரு வகைப்பட்ட மனிதர்கள் உண்டு. ஒரு பகுதியினர் இருதயத்தை (உணர்வை)மையமாக கொண்டு செயல்படுபவர்கள். இன்னொரு பகுதியினர் மூளையை மையமாக கொண்டு செயல்படுபவர்கள். இருதயத்தை மையமாக கொண்டு செயல்படுபவர்களை மூளையை மையமாக கொண்டு சொல்லும் செய்திகள் அசைக்க முடியாது. அது போலவே மூளையை மையமாக கொண்டு செயல்படுபவர்களை இருதயத்தை மையமாக கொண்டு சொல்லும் செய்திகள் அசைக்க முடியாது.

நான் மூளையை மையமாக கொண்டு செயல்படும் டைப். என்னை உணர்ச்சி வசப்பட்டு, அழுது கொண்டு சொல்லும் செய்திகள் ஒன்றும் செய்வதில்லை. சில சமயங்களில் அவர்கள் நடிக்கிறார்களோ என்று கூட தோணுவதுண்டு. ஆனால் மூளையை குறி வைத்து தாக்கும் செய்திகள் என்னை உணர்ச்சி வசப்பட வைத்துவிடும்.

பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் வரிகளை கேட்கும் போது அசைக்கப்பட்ட நான் ஒரு தடவை அவர் பிரசங்கத்தை கேட்க போனேன் ஆனால் அதனால் எனக்கு அவ்வளவு பயன் இல்லை. ஏனெனில் அவர் இருதயத்தை மையமாக கொண்டு பிரசங்கிக்கிறார்.

சாம்.செல்லத்துரை அவர்கள் மூளையை மையமாக கொண்டு பிரசங்கிக்கும் பிரசங்கியரில் ஒருவர். யாருக்கு அடங்காத பலரை அவர் கட்டி போட்டிருப்பதாக கருத காரணம் இன்று உலகில் அனேகர் மூளை டைப். ஆனால் அவர்களுக்கு சரியான செய்தி சொல்ல அதே டைப் ஊழியர்கள் அதிக அளவில் இல்லை. அபூர்வமாக ஒரு சில ஊழியர்களே இரு பிரிவினரையும் திருப்திபடுத்துகின்றனர். சாம் செல்லத்துரை அவர்கள் 100%  மூளை டைப். அவர் சொல்லும் செய்திகள் தேவன் சொல்ல சொல்லி சொல்வதாக தெரியவில்லை (டி.வியிலும் தேவன் சொல்லும் செய்தியை எதிர்பார்க்க முடியாது) ஆனால் அவர் சில பயனுள்ள வழிகளை, உண்மைகளை சொல்லுகிறார். அவர் செழிப்பின் உபதேசம் பற்றி சொன்னது போலவும் எனக்கு தெரியவில்லை.

அவர் பிற ஊழியர்களை பற்றி மட்டமாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது. நீரை விட்டு பாலை பருகும் அன்னம் போல அவரின் சரியில்லாத செய்தியை விட்டு விட்டு நல்ல செய்திகளை மட்டும் எடுத்து கொள்ளூம் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த விவாதத்தின் மூலம் தேவையில்லாமல் அவரை மிகப் பெரிய ஆளாக கருத வேண்டியிருப்பதாக நான் நினைக்கிறேன்.

அடுத்ததாக ஒரு ஊழியரின் ஆடம்பர வாழ்க்கை மூன்றாவது மனிதர்களான நமக்கே தெரிய வரும் போது அவருக்கு காணிக்கை கொடுக்கும் அவர் சபையை சேர்ந்தவர்களுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. அது தெரிந்தும் அவர்கள் கொடுக்கிறார்கள் எனில் அவர் அதை அனுபவிப்பதில் என்ன தவறு. உதாரணமாக பிரேம் விஷயத்தை கேள்விப்பட்ட ஒருவர் அவரிடம் சென்று என்ன பாஸ்டர்? அசிங்கமாக 80000 ரூபாய்க்கு ஒரு பிரேம் வாங்கி இருக்கீங்க? இனிமேல் வாங்கினால் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் வாங்கி எங்க மானத்தை காப்பாத்துங்க என சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அல்லது தேவனை பற்றிய சில செய்திகளை சொல்லி அதன் மூலம் மற்றவர்கள் நல்ல வழி அடைய வழி வகுத்து விட்டு, அதற்கு பதிலாக இவ்வுலக இன்பங்களை அனுபவித்து விட்டு இறப்புக்கு பிறகு நரகத்துக்கு போய் விடலாம் என முடிவு செய்திருக்கும் ஊழியராக அவர் இருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

ஊழியரின் ஆடம்பர வாழ்க்கையை பற்றியும், அவரின் பாவத்தை பற்றியும், அவரின் தவறான செய்திகளை பற்றியும் மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தவறல்ல. ஆனால் ஒருவரின் ஒரு தவறை வைத்து அவர் முற்றிலும் தவறானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


// சில்சாம் அவர்கள் ஏதோ அவர் பெயரைக் குறிப்பிடாமல் பேசுவதாகச் சொல்லுகிறார். இந்த விவாதத்தை தொடங்கியவரும் சாம் பி யின் உபதேசம் கள்ள உபதேசமா? என்ற கேள்வியையும் அவர்தானே கேட்டார். அப்படியிருக்க நான் சில்சாமுக்கு பதில் தருகிறேன் என்று ஒவ்வொரு பதிவிலும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா புரியவில்லை.

உதாரணத்திற்காக சில்சாம் அவர்கள்: சாம் அவர்களின் போதனை எனக்கு இடறலாய் இருக்கிறது, தளஉறவுகள் இந்த காரியத்தில் ஒரு புரிதலையோ ஒரு மாற்றத்தையோ கொண்டுவருவதற்காக ஒன்று கூடி ஏன் ஒருவேளை உபவாசம் இருந்து ஜெபிக்கக் கூடாது? என்று சொல்லியிருப்பாரானால் அது சிறந்ததில் சிறந்ததாக இருக்கும்,

தொடக்கத்தில் மிகவும் அருமையாக ஆழமான கருத்துக்களை எழுத ஆரம்பித்த தள நண்பர்களான ஜோசப், ராபின், கோல்வின் ஆகியோரில் கோல்வின் மட்டுமே மிஞ்சியிருக்கிறார். மற்றவர்கள் இரண்டுவரிகளில் திருப்திப் பட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் அதிகமாக் எழுதினாலும் அதில் சில்சாமின் வாசம் தான் இருக்கிறது, இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொண்டுவருகிறது. அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆனால் அவர்கள் கற்றுத்தர ஆயத்தமாக இல்லை.

சரி விசயத்துக்கு வருவோம். சில்சாம் அவர்கள் சாம் பி யை குற்றம் சாட்டுகிறார், அதில் தவறு ஒன்றும் இல்லை என்பது நண்பர்களின் கருத்து. ஆனால் சாம் பி க்காக சில்சாம் எத்தனை முறை ஜெபித்திருக்கிறார்?

அவருக்கு(சாம் P), இப்படி பாடம் நடத்திஅவரை திருத்த முயற்சிப்பதை விட‌ அவருக்காக ஜெபிக்க வேண்டும், ஆண்டவர் நிச்சயமாக மாற்றித்தருவார் என்ற எண்ணம் சில்சாம் உட்படயாருக்கும் வரவில்லை?

சில்சாம் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்க கோவை அண்ணாவால் தான் இப்படியெல்லாம் என்று குற்றம் சாட்டுகிறார். கோவை அண்ணா ஒரு மகிமைக்குள் பிரவேசித்த செய்தியை மாத்திரமே சொன்னார். அதற்கு அனுதாபங்களை மட்டுமே பதியவேண்டும், அல்லது அவர் நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம். உடனே அவர் மகன் கள்ளத்தீர்க்க தரிசியா என்ற விவாதத்தை தாங்களே உண்டாக்கிவிட்டு கோவை அண்ணாவை குற்றம் சாட்டுவது ஏனோ? //

அருமை சகோதரர் இராஜ்குமார் நீங்கள் அஃபென்ட் (Offend)ஆனது போல புலம்புகிறீர்கள்; நான் யாருடைய செயல்பாட்டுக்கும் இடையூறாக இருக்கவுமில்லை,அது என்னுடைய நோக்கமுமில்லை; என் வாசனையோ நாற்றமோ மற்றவரிடம் வருவதாகக் கூறுவது ஒரே டப்பாவில் எல்லோரையும் போட்டு அடைக்கும் முயற்சியாகும்;

யந்நே மற்றும் யம்பிரேவுக்காக மோசே விண்ணப்பித்திருந்தாலும் அதன் அடிப்படையில் நானும் விண்ணப்பத்தின் ஆவியினாலும் மனதுருக்கத்தின் ஆவியினாலும் நிரப்பப்பட்டு நீங்கள் எனக்கு அறிவுறுத்தும் முன்பதாகவே காரியத்தில் இறங்கியிருப்பேன்;அல்லது இந்த பவுல் பண ஆசையினால் ஓடிப்போன தேமாவுக்காக புலம்பியிருந்தாலும் நான் அதேபோன்று செய்யும் தைரியம் எனக்கு வந்திருக்கும்;

பெரிய மனிதர்களை இன்றைக்கு சந்திக்கவோ அவர்களைத் திருத்தவோ நானும் கொஞ்சம் பெரிய ஆளாக இருக்கவேண்டும்; ஆண்டவரோ உத்தமர்கள் இன்னாரென்று அறியும்படி அவருடைய ஆதீனத்திலுள்ள நியமத்தின்படி சிலதை அனுமதித்திருக்கிறார்; ஆண்டவர் செய்து கொண்டிருக்கும் ஒரு காரியத்தைத் தடுத்து அவருடைய மனதை திருப்பும் பராக்கிரமம் யாருக்கும் கிடையாது; இதற்காக ஜெபிப்பது எனக்கு கட்டளையல்ல‌ ;எனவே என் வேலையை நான் செய்கிறேன்; அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள்; இடறல் வருவது இயல்பு; ஆனால் இடறல் வர யார் காரணமாக இருக்கிறாரோ அவருக்கு நேருவது பயங்கரமாக இருக்கும் என்று ஆண்டவர் சொல்லவில்லையா; இரட்சிப்பு மாத்திரமல்ல‌, தீர்ப்பும் கர்த்தருடையதே;

மேலும் இந்த திரியை நான் துவங்கவில்லை என்பதை அருமை நண்பருடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; இங்கே நான் சர்ச்சைக்குரிய காரியங்களை விவாதிக்க அஞ்சுகிறேன் என்பதே உண்மை; என் குப்பையெல்லாம் என்னோடு போகட்டும்; நீங்கள் விரும்பினால் ஒரே ஒரு கோரிக்கையின் மூலம் எனது அனைத்து எழுத்துக்களையும் நீக்கி உங்கள் தளத்தை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்;

உங்களுக்குள்ளே ஆவியானவர் உணர்த்தி விஜய் அவர்களையும் முக்கியமாக என்னையும் கண்டித்தார் என்பதை அறிந்து அலறிவிட்டேன்; எனவே வலிய வந்து ஆஜராகி என்னைக் குற்றவாளியாக்கிக் கொள்ள நான் துணியவில்லை; நீங்களோ அந்த மிரட்டல்கள் எனக்கு தான் என்று வெளிப்படையாகக் கூறும்போது உண்மையிலேயே பயமாக இருக்கிறது; இதுகூட அவிசுவாச அறிக்கையோ என்னவோ,என் விசுவாசம் பெருக எனக்கு உதவி செய்யுங்கள்;

எந்த ஒரு போதனையிலாவது திரு.சாம்.P அவர்கள், " வேதம் இப்படி சொல்லுகிறது,ஆனால் சிலர்....இப்படி சொல்லுகிறார்கள் " என்று சொல்லி "ஹலோ,இருக்கீங்களா " என்று கூறி பரியாசம் செய்யவில்லை என்று சொல்லுங்களேன்; அவருடைய எல்லா போதனையிலும் நீங்கள் இதனை கவனிக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், தனது போதனைக்கு இடையே வழக்கமான போதகர்களைப் போல ப்ரெய்ஸ் காட் (Praise God..) என்றோ "அல்லேலூயா" என்றோ, "ஆமென் " என்றோ சொல்வதைப் போல, "ஹலோ, இருக்கீங்களா " என்றே சொல்லுவார், அது அவருடைய பாணியாக இருக்கலாம்; நான் அதைக் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை;

ஆனாலும் நம்முடைய பாரம்பரியத்தில் ஆண்டவரே பேசும் உணர்வைத் த் தோற்றுவிக்கும் வண்ணமாக செய்தியின் ஆரம்பத்தில் ஒரு ஜெபம் செய்வதுடன் அந்த உணர்வைப் பேணுவதில் கவனமாக இருப்போம்; ஆனால் இவருடைய ஒரு ஸ்பீச் (Speech )- சொற்பொழிவு போல சுவாரசியமாகவும் புரட்சிகரமாகவும் இருக்கும்; ஆனால் தேவப் பிரசன்னத்தில் இருக்கும் உணர்வு வராது; மனம் முழுக்க இவருடைய இமேஜும் செவியில் இவருடைய சத்தமும் ரீங்காரம் செய்துகொண்டே இருக்கும்; அது மட்டுமே இவரைப் போன்ற ஊழியர்களின் வெற்றி இரகசியம்;

இறுதியாக, இந்த விவாதத்தின் சூட்டைத் தணிக்கும் வண்ணமாகவே மைகோ அவர்களை நகைச்சுவையாக சீண்டியிருந்தேன்; இதை வைத்து அவருக்கும் எனக்கும் சிண்டு முடிய பார்க்கும் உங்கள் தந்திரம் (மீண்டும் நகைச்சுவை...) பலிக்காதுங்'ணே..!

"அல்லது நீக்கி அரியது பருகும் அன்னத்தைப் போல"
(பாலைப் பருகும் அன்னப்பறவை அதில் கலந்துள்ள தண்ணீரை மட்டும் தனியாகப் பிரித்து பருகாமல் விட்டுவிடும்...) என்பார்களே (என்பது ஒரு கதை...) அதுபோல நானும் நம்முடைய ஊழியர்களின் தாறுமாறுகளை எடுத்துக்கூறும் போது மக்கள் தெளிவடைகிறார்களே தவிர இடறிப்போகிறதில்லை; அதாவது கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து அவருடைய பிள்ளைகளானோர்; எனவே உங்கள் பயம் தேவையற்றது; மற்றபடி பிரபலமானவர்களை நான் விமர்சிப்பதால் அவருடைய இரசிகர்களுக்கு நான் எதிரியாவதைக் குறித்து எனக்கு கவலையில்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 



vijay76
@TCS

eagle.jpg

அன்பு சகோதரர் சில்சாம் அவர்களுக்கு, தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஆம், நாம் தவறுதலாகச் செய்யும் சிறு பிழைகூட சத்தியத்துக்கு விரோதமாகத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது.

சகோதரர்களே மன்னிக்கவும்! இங்கு நான் பாவத்திலேயே (Willful Sin) வாழ்ந்து கொண்டிருப்பதைக் குறிப்பிடவில்லை என்பதை அழுத்தமாகப் பதிக்க விரும்புகிறேன். நாம் விட்டுவிட்ட பாவங்களில் மீண்டும் விழுவதைப்பற்றியும் குறிப்பிடவில்லை. நாம் பாவத்தில் வாழ்ந்துகொண்டு தேவ பிள்ளைகள் என்ரும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. தேவனால் பிறந்தவன் பாவம் செய்யான் என்றும் வேதம் சொல்லுகிறது.


நான் குறிப்பிட்டது அஜாக்கிரதையாகச் செய்து விடும் தவறுகளைத்தான். உதாரணமாக பவுல் பிரதான ஆசாரியனைக் கடிந்து கொண்டு பின்னர் வருத்தம் தெரிவித்ததுபோல. வாழ்க்கையில் சுயம் உடைக்கப்படாத பகுதிகளில் நாம் அறியாமல் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் உள்ளே இருக்கும் ஆவியானவர் உடனடியாக உணர்த்துவார். உடனே நாமும் உணர்ந்து மனந்திரும்புவோம். இது ஆவிக்குரிய வாழ்க்கையில் பயணத்தில் எந்த விசுவாசிக்கும் நடக்ககூடியதே. இதுவே நமக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவை மாற்றாது என்று சொல்லியிருந்தேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


// பாவம் செய்தாலும் நீ நீதிமான்தான் என்கிறார்கள். நாம் பாவம் செய்தாலும் தேவபிள்ளை என்ற நம் உறவு மாறாது என்பது உண்மைதான். //

"கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு."(எசேக்கியேல்.2:7)

அன்பு சகோதரரே, மேற்கண்ட வசனமே நம்முடைய ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது; எனவே தொடர்ந்து தயக்கமில்லாமல் எழுதி வருகிறோம்;

இதுபோன்ற வசனங்களை நான் முந்தி பதிக்க மற்றொரு காரணமும் இருக்கிறது; கொஞ்சம் விட்டால் இந்த மாபாவிகள் (‍அதாவது பல்வேரு துருபதேசக்காரர்களைப் பொதுவாகச் சொல்லுகிறேன்; நம்முடைய தள நண்பர்களையல்ல... ) இந்த வசனத்தை நமக்கெதிராகவே பிரயோகிக்க துணிகரம் கொள்வர்;

நானும் சில வரிகளை பின்னூட்டமிடாவிட்டால் - நீங்களும் சோர்ந்துவிட்டால் - இந்த திரியும் எந்த முடிவையும் எட்டாமல் கறைந்து - மறைந்து போகுமே என்று என்னுடைய கருத்தை இங்கே பதிக்கிறேன்;

எனக்குள்ளிருந்து எழும்பும் எந்த ஒரு கருத்தையும் குறித்து சிந்தித்து சின்னச் சின்ன காகிதத் துண்டுகளிலாகிலும் எழுதி வைப்பது எனது சிறுவயதிலிருந்தே பழக்கம்; அந்த பழக்கத்துக்கு வடிகாலாகவே நம்முடைய இணைய தளப் பணிகள் அமைந்திருப்பது கண்கூடு;

இந்நிலையில் நம்முடைய கருத்துக்களை எழுதும்போது எந்த நிலையிலும் சத்திய விரோதிகளுடன் நாம் சமரசம் செய்துகொள்ள முடியாது; இணக்கமான உறவுக்கு அது உதவும் போலிருப்பினும் அது அசத்தியத்துக்கும் சற்றே தண்ணீர் தெளிப்பது ஆகிவிடும்;

மேற்கண்ட தங்கள் வரிகளைப் படிக்கும் போது அப்படிப்பட்ட உணர்வு மேலிட்டது; நம்முடைய எந்தவொரு கருத்தும் வேதத்தின் ஏதாவதொரு வசனத்தை இடித்துச் செல்லாதபடி கவனமாக இருத்தல் வேண்டும்;

எப்படி சாலையில் செல்லும் போது எந்த நபர் மீதோ வாகனத்தின் மீதோ இடித்துவிடாமல் சாலைவிதிகளையும் கடைபிடித்து நாம் வாகனத்தில் செல்வதற்குரிய ஆவணங்களுடன் நாம் செல்லும் பாதையில் சென்று சேரவேண்டிய ஸ்தானத்துக்கு நேராகச் செல்லும் பாதையில் செல்வதுடன் அதன் நோக்கத்தையும் மனதில் கொண்டு அதற்குரிய நேரத்தை மனதில் கொண்டு எச்சரிக்கையாகப் பயணிக்கிறோமோ அப்படியே விசுவாசப் பயணத்திலும் நடைபோடுவோமானாம் நமக்குப் போதகர்களே வேண்டாம்;

அதையும் வேதமே சொல்லுகிறது, "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக"(1.யோவான்.2:27)

இதன்படி மேற்கண்ட கருத்துடன் சேரக்கூடாத ஒரு வசனம் உண்டு; இதனை உங்களுக்கு எதிராகப் பிரயோகிக்காமல் வாசகருடைய தெளிவுக்காக மட்டுமே எழுதுகிறேன்...


"ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்." (எபிரேயர்.6:4,5,6 )


இந்த வசனத்தின் தாக்கம் எனக்குள் எப்போதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்; ஆம், இதன்படி கிறித்துவுக்குள்ளாகி புது சிருஷ்டியான ஒருவன் தான் விட்டு வந்த அருவருப்புகளை எப்படி மனதார செய்ய இயலும்; அதைத் தானே வேதம், ' பாவம் ' என்று சொல்லுகிறது? அப்படி மீண்டும் பாவத்தில் விழுபவன் எப்படி தேவனுடைய பிள்ளையாகத் தொடர முடியும்?

" பாவம் செய்பவன் பாவத்துக்கு அடிமை " என்றும் வேதம் சொல்லுகிறதே, பாவத்தைக் குறித்த துக்கமே ஆவியானவரின் நடத்துதலுக்கு அடையாளமாக இருக்கிறது; அதாவது அந்த துக்கமானது நம்முடைய மாம்ச மனுஷலிருந்தோ ஆவியிலிருந்தோ எழும்பாமல் நமக்குள் தேவ அன்பினால் ஊற்றப்பட்ட ஆவியிலிருந்து எழும்பி நம்முடைய ஆவியில் சாரலாக விழுகிறது;

அந்த துக்கத்தை நிவர்த்தி செய்யக்கூடியது மனந்திரும்புதலும் தேவப் பிரசன்னமும் மட்டுமே; இது ஆரம்ப நிலையாகும். இது அதற்கு அடுத்த நிலையில்- உதாரணத்துக்கு, குடிப்பழக்கம் உள்ள ஒருவரது நிலையை எடுத்துக் கொள்ளுவோம்; அவருடைய பிரச்சினை, அனுதின பிரச்சினையாகும்; அது சாதாரணமான நீர்மப் பொருள் தானே அது உள்ளே செல்லுவதால் தான் நான் தீட்டுப்படமாட்டேன்; நான் கிறித்துவுக்குள் தேவனுடைய சுதந்தரமாக இருக்கிறேன் என்று எளிதாகச் சொல்லிவிடமுடியும்; அதற்கு தேவையானது இதுபோன்ற போதனைகளும் குடிபோதைக்கு அடிமையாகக் கூடிய இருதயம் மட்டுமே; (தேவப் பிரசன்னம் என்று சொல்லப்படுகிற அந்த மேடையில் நின்று இசைக் கருவிகளை வாசிப்போர் பலர் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என்பது எனக்குத் தெரியும்... )

இப்படிப்பட்டவர்களுக்கான வேத வசனம்...மயிலிறகால் ஒற்றியெடுக்கிற வஞ்சக உபதேசமல்ல‌...


"அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."(நீதிமொழிகள்.29:1)

"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.(2.பேதுரு.2:20,21)

"ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்."(எபிரேயர்.12:15,16)


இந்த வசனங்கள் அனைத்து உலக இச்சை மற்றும் பணப் பெருமைக்கெதிராக உறைக்க உரக்க உரைக்கப்பட்டதாகும்; இது நம்முடைய மேடைகளில் எப்போதாவது வாசிக்கப்பட்டிருக்கிறதா?

அது வாசிக்கப்பட்டால் எதிரே இருக்கும் திரள்கூட்டம் காணாமற் போகும் என்றறிந்தே தேவனையும் தேவ ஜனத்தையும் ஒரே நேரத்தில் வஞ்சிக்கிறார்கள்;

பயங்கரமான அந்த சர்வவல்ல‌ தேவனை, நீங்க என் செல்லம், ஐ லவ்வூ டாடி, நீங்க என் பிஸ்கோத்து என்று ஒரு குடிகாரனைப் போல வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆம்,ஒரு குடிகாரனைப் போல மென்மையான இதயங் கொண்டவர்களைப் பார்த்ததில்லை; அவர்களை நான் நெருங்கினால் பாம்பைப் போல வளைந்து கும்பிட்டு காலில் விழுந்து என்னை அணைத்து முத்தமிட்டு எல்லா அலம்பலும் செய்வார்கள்;

அப்படியே நம்முடைய நவீன எழுப்புதல் ஊழியர்களும் செய்கின்றனர்; இவர்களெல்லாம் வேருக்கு நீர் ஊற்றச் சொன்னால் அதற்கு அமிலத்தை ஊற்றிவிட்டு அதன் இலைகளுக்கு தண்ணீரைத் தெளிக்கும் மதிகெட்ட தோட்டக்காரனைப் போல இருக்கிறாகள்;

"சுட்டெரிக்கப்படுவதே இவர்களுடைய முடிவு" -இது தீர்ப்பல்ல, தேவ நியதியும் நியமமுமாக இருக்கிறது; நானும் ஆராதனை வீரன் என்ற உரிமையில் ஒரு வசனத்தினைப் போட்டு வைக்கிறேன்.


"அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,

அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்."
(சங்கீதம்.149:7,8 )


நான் உரிமையுடன் துதிக்காததால் வேறு அபஸ்வரமான - நாராசமான இசை அங்கே கேட்கிறது; தேவஜனம் (..?) குதித்துப் பாடி மகிழுகிறது; நல்ல விருந்து காத்திருக்க - நொறுக்குத் தீனிக்கு ஏங்கும் சிறுபிள்ளையைப் போல தேவஜனம் (..?) அற்பத்தில் திருப்தியாகிக் கொண்டிருக்கிறது.

எனவே பாவம் செய்தாலும் தேவனுடைய பிள்ளை எனும் உறவு தொடரும் என்பது தவறான போதனையாகி விடும் என்ற எனது அச்சத்தைப் பதிவு செய்கிறேன்; இது நம்முடைய வாதத்தை திசைதிருப்பும் போலிருந்தால் தனி திரியாகத் துவங்கி பதிலளிக்கவும்.

விஜய் தொடருங்கள்...!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

செழிப்பின் உபதேசத்தில் உள்ள சில குறைபாடுகளைப் இங்கு பட்டியலிட விரும்புகிறேன். சகோதர/சகோதரிகள் இது குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். நான் தவறாக இருந்தால் தயவு செய்து அதைக் குறிப்பிட்டு தவறை சரி செய்யுங்கள்:

தவறான உபதேசம் #1 பாடுகள்/ பாவங்கள்

நாம் பாடுகளைச் சகிக்க வேண்டும் என்றும், பாவத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேதம் சொல்லுகிறது. ஆனால் செழிப்பு உபதேசகர்கள். விசுவாசிகளுக்கு பாடுகளே வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் விசுவாசத்தில் ஏதோ குறை இருக்கிறது என்றும் போதிக்கிறார்கள். பாவத்தைக் குறித்தோ நீ தேவனுடைய நீதியாயிருக்கிறாய் பாவத்தைக் குறித்து கவலை கொள்ளாதே என்கிறார்கள் அதாவது பாவம் செய்தாலும் நீ நீதிமான்தான் என்கிறார்கள். நாம் பாவம் செய்தாலும் தேவபிள்ளை என்ற நம் உறவு மாறாது என்பது உண்மைதான். ஆனால் பாவத்தோடு போராட வேண்டும் என்பது கற்றுத்தரப்படுவதில்லை.

ஊழியக்காரன் ராஜாவின் பிள்ளை ஆகவே அவன் பாடுபட வேண்டியதில்லை என்கிறார்கள். ஆனால் கர்த்தர் பவுலை அழைக்கும்போதே பாடுபடும்படிதான் அழைக்கிறார்.

கர்த்தர் அனனியாவிடம்: “அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். (அப் 9: 15,16)

II தீமோத்தேயு 4:5 இல் பவுல் தீமோத்தேயுவுக்கு சொல்லும் அறிவுரை “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.”


பாவத்தைக்குறித்து கவலைப்படத்தேவையில்லை என்கிறார்கள் ஆனால் வேதம் சொல்லுகிறது பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. (எபிரெயர் 12:4 )

தவறான உபதேசம் #2 யோபு புத்தகத்துக்கு விளக்கம்

யோபு தான் பயந்த காரியம் தனக்கு நேரிட்டது என்று சொல்லும் ஒரே ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு, அவன் பயந்து போய் அவிசுவாச அறிக்கை செய்துகொண்டு இருந்தான் அதுவே அவன் பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள். ஆனால் அவன் தனது வாயினால் பாவம் செய்யவில்லை என்று யோபு 2:10 சொல்லுகிறது. கடைசியில் கர்த்தர் யோபுவிடம் பேசும்போது உன் பயமும் அவிசுவாசமும்தான் இதற்குக் காரணம் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

(தொடருவேன்)

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

vijay76 Wrote on 15-12-2010 16:19:35:
//"மேமன்"- இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,விஜய்..!//

ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு விவாதத்துக்கு வலுசேர்த்த சகோ.சில்சாம் அவர்களுக்கு நன்றி!


மேமன் என்ற அரமேய வார்த்தைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன முதல் அர்த்தம் “உலகப்பொருள் அல்லது ஐசுவரியம்” இரண்டாம் அர்த்தம் “பேராசை”.


Mammon.jpg


லூக்கா 16:13 மற்றும் மத்தேயு 6:24 ஆகியவற்றில் ஆண்டவரகிய இயேசுகிறிஸ்து உலகப் பொருள் என்ற வார்த்தையை “மேமன்” என்றே குறிப்பிடுகிறார். “ அதாவது தேவனுக்கும் மேமனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது” என்று மூலபாஷையில் எழுதப்பட்டுள்ளது.

Chillsam:

ஆர்ப்பாட்டமான புதிய தகவலுக்கு நன்றி...விஜய்..!

இராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; நமது பள்ளிக்காலத்தில் மாணவர்கள் ஒருவரையொருவர் மறைமுகமாகத் திட்டிக்கொள்ளுவார்கள்; கேட்டால், " நான் என்ன உன்னையா சொன்னேன் ",என்பார்கள்; நமக்கு அவமானமாகப் போய்விடும்; மனதுக்குள்ளே குமுறிக் கொண்டு அமர்ந்திருந்து வீட்டில் தாய் மடியில் சென்று அழுது அரற்றி ஆறுதல் பெறுவோம்; எனவே எனது பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுச் சொல்லாத ஒன்றுக்கும் நான் பதில் சொல்லுகிறதில்லை; என்ன, என்னுடைய முடிவு சரிதானே..?

மற்றபடி ஆண்டவர் தன்னுடன் பேசியதாக சொல்லிக்கொள்ளுவதற்கு எல்லோருக்கும் உரிமையுண்டு;அதைக் குறித்து யாரும் கேள்வி கேட்கவும் முடியாது;அதனைப் பரிசோதிக்கும் இயந்திரமும் இங்கே இல்லை;அதனை காலம் தான் விளங்க வைக்கவேண்டும்;ஆனாலும் உங்களோடு ஆண்டவர் பேசியது குறித்து மிகவும் சந்தோஷம்;எங்களுக்கோ வேறு வழியில்லை,மீண்டும் மீண்டும் இந்த பைபிளையே படித்துக்கொண்டிருக்கிறோம்;எனக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்;

Rev.சாம்.P அவர்களின் எளிமையான மனோதத்துவரீதியிலான போதனைகளை விட்டுவிட்டு நாங்களே எங்களை கடினப்படுத்திக்கொண்டு தரித்திரத்தில் வைத்திருக்கிறோம் போலிருக்கிறது; யோசிக்கவேண்டிய விஷயம் தான்..!

எலியா காலத்தில் இந்த படுபாவி கேயாசி இருந்திருந்தால் அவன் வாங்கிப்போட்டிருந்த பண்ணை வீட்டில் அந்த பஞ்சகாலத்தில் இளைப்பாறியிருக்கலாம்;அந்த அற்பன் தேவையில்லாமல் யேசபேலுடன் போராடியிருக்க வேண்டியதுமில்லை; இதெல்லாம் நமக்கு ஒரு பாடம் தானே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


vijay76@TCS:

eagle.jpg

அன்பு சகோதர் ராஜ்குமார் அவர்களுக்கு,
தங்களது ஜெப நேரத்தில் தாங்கள் உணர்ந்தது குறித்து:

தாங்கள் ஆண்டவரகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட தேவனுடைய பிள்ளை, ஆகவே கர்த்தர் தங்களுடன் பேசுவார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. ஆனாலும் தாங்கள் இதை தேவனுடைய வார்த்தையாக பொதுவில் பதிவிட்டிருக்கிறபடியால் ஒருவன் தீர்க்கதரிசனம் சொல்லும்போது மற்றவர்கள் நிதானிக்கக் கடவர்கள் என்று வேதம் சொல்லுகிறது. இது நியாயம்தீர்த்தல் அல்ல நிதானித்தல். எனவே தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

//அற்ப எலியாக்களே....//
அற்பர்களே! என்ற வார்த்தையே போதும், அதனுடன் எலியாவைச் சேர்த்து அழைக்கும் அளவுக்கு நாங்கள் யாரும் தகுதியானவர்கள் அல்ல.

//பாகாலாகிய பணத்தின் முன் மன்டியிடாதவர்கள் நீங்கள் மாத்திரமே உண்டென பொய்யன் உங்கள் இருதயத்தை வஞ்சித்ததென்ன? மனிதர்களின் இருதையத்தை நான் உருவாக்கியபோது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தீர்களோ? அதில் பர்னபாக்களும், கொர்னலியூக்களும், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும், ஐனாயாக்களும், இன்று இல்லையென்று கணக்கெடுத்துத் தீர்த்துவிட்டீர்களோ.... அனனியாவுக்கும் பரியேசுவுக்கும் யூதாஸ்காரியோத்துக்கும் எதுமட்டும் துக்கித்துக் கொண்டிருப்பீர்கள்//

இந்த விவாதம் செழிப்பின் உபதேசம் ஆரோக்கியமான உபதேசமா? கள்ள உபதேசமா? என்பது பற்றியதால், செழிப்பின் உபதேசங்களில் இருக்கும் நிறை குறைகளை ஆராய்ந்து வருகிறோம். ஒரு சில ஊழியக்காரரின் தவறுகள் இங்கு சுட்டிக்காட்டப்படிருந்தாலும், நாங்கள் மட்டுமே சரி ஏனையோர் எல்லோரும் பாகாலுக்கு முன் மண்டியிட்டு விட்டார்கள் என்ற தொனி எங்குமே ஒலிக்கவில்லை.

உங்களில் உத்தமர் இன்னாரென்று விளங்கும் படிக்கு உங்களுக்கும் மார்க்கபேதங்கள் உண்டாயிருக்க வேண்டியதே என்று பவுல் சொல்லுகிறார். அது போல இந்த விவாதத்தில் நாம் சகோதர சிநேகத்துக்கு பங்கம் வராதபடிக்கு வேதத்தை ஆராய்கிறோம், ஆரோக்கியமாக விவாதிக்கிறோம். ஆரோக்கியமான விவாதம் தவறு அல்ல. தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் நோய்கொண்டோராய் இருப்பதுதான் தவறு. இந்த ஆராய்ச்சியே தவறு என்றால் மார்ஸ்மேடையே தவறு.

//நான் உங்களிடத்தில் இறங்கிவந்து என் மந்தைகளுக்கு எந்த உபதேசம் சிறந்தது என்று ஆலோசனை கேட்டேனோ?//

நாம் எந்த உபதேசம் சிறந்தது என்று ஆராய்ந்து அதைப் பற்றிக்கொள்ளும்படி நம்முடைய நன்மைக்காக ஆராய்கிறோமே தவிர கர்த்தருக்கு புத்தி சொல்லும்படி அல்ல. எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று 1 தெச 5:21 சொல்லுகிறதே!

//பணப்பாகாலுக்கு முன்னால் மன்டியிடும் கூட்டம் என்று நீங்கள் நியாயம் தீர்க்கத் துணிந்த என்னுடைய சபை என் சித்தத்தை மீறிக் கட்டப்பட்டதோ? நியாயம் தீர்த்த கூட்டத்தாரில் பாகால் பணத்துக்கு முன் மன்டியிடாத ஏழாயிரம் பேர் எனக்கு உண்டு" என்று தேவனே இறங்கி வந்து வழக்காடத் தான் வேண்டுமோ? //

நாங்கள் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் சாடவில்லை. இன்று கிறிஸ்தவத்தில் இரண்டு கூட்டமுண்டு ஒன்று கிறிஸ்துவின் சரீரமாக, மெய்யான சகோதர ஐக்கியமாக, உலகத்தை விட்டு பிரிந்து வாழும் ஒரு சிறு கூட்டம். இச் சிறு எருசலேம் கூட்டத்தார் எல்லா சபைகளிலும் உட்காந்து இருக்கிறார்கள். மற்றொன்று உலக ஆசீர்வாதத்தின் பின்னால் போய், மத ரீதியான காரியங்களில் திருப்தியடைந்து குளிருமின்றி அனலுமின்றி லவோதிக்கேயராக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான பாபிலோன் கூட்டம். இக்கூட்டமும் எல்லா சபைப்பிரிவுகளிலும் உண்டு. இதை தாங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நாங்கள் அந்த சிறு உத்தம எருசலேம் கூட்டத்தைப்பற்றி பேசவே இல்லை அவர்களுடன் இணையவும் அவர்களைப்போல் வாழவும் விரும்புகிறோம். நாங்கள் பெரும்பான்மையான பாபிலோன் கூட்டத்தைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். கர்த்தர் அந்தக்கூட்டத்துக்காக வழக்காடுகிறார் என்கிறீர்களா???



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: போதகர் சாம் P. செல்லத்துரை அவர்களுடையது கள்ள உபதேசமா?
Permalink  
 


rajkumar_s@TCS:

blog_logo.jpg

நண்பர்களே நான் செழிப்பின் உபதேசத்துக்கு ஆதரவளானனும் அல்ல, எதிர்ப்பாளனும் அல்ல. தனிமனித தாக்குதல்களை நான் நடத்தவும் இல்லை, இன்று காலை நான் இந்த பகுதியில் என்ன எழுதவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தும் அப்பா ஜெபித்தபோது நான் உணர்ந்து கொண்டதை இங்கே அப்படியே பதிகிறேன். நண்பர்கள் பதித்த மறுப்பு பதிவுகளை நான் படிக்கவில்ல தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் உணர்ந்தது தவறாகக் கூட இருக்கலாம், ஆண்டவர் என்னை மன்னிப்பாராக...

அற்ப எலியாக்களே....
பாகாலாகிய பணத்தின் முன் மன்டியிடாதவர்கள் நீங்கள் மாத்திரமே உண்டென பொய்யன் உங்கள் இருதயத்தை வஞ்சித்ததென்ன? மனிதர்களின் இருதையத்தை நான் உருவாக்கியபோது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தீர்களோ? அதில் பர்னபாக்களும், கொர்னலியூக்களும், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும், ஐனாயாக்களும், இன்று இல்லையென்று கணக்கெடுத்துத் தீர்த்துவிட்டீர்களோ.... அனனியாவுக்கும் பரியேசுவுக்கும் யூதாஸ்காரியோத்துக்கும் எதுமட்டும் துக்கித்துக் கொண்டிருப்பீர்கள்? நான் உங்களிடத்தில் இறங்கிவந்து என் மந்தைகளுக்கு எந்த உபதேசம் சிறந்தது என்று ஆலோசனை கேட்டேனோ? பணப்பாகாலுக்கு முன்னால் மன்டியிடும் கூட்டம் என்று நீங்கள் நியாயம் தீர்க்கத் துணிந்த என்னுடைய சபை என் சித்தத்தை மீறிக் கட்டப்பட்டதோ? நீங்கள் நியாயம் தீர்த்த கூட்டத்தாரில் பாகால் பணத்துக்கு முன் மன்டியிடாத ஏழாயிரம் பேர் எனக்கு உண்டு" என்று தேவனே இறங்கி வந்து வழக்காடத் தான் வேண்டுமோ?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard