நான் சிறுவயதிலிருந்தே இயற்கையில் ஒரு அதிசயத்தை கவனித்து வருகிறேன்; முக்கிய தலைவர்களின் மரணத்தின் போது மழை பெய்யும்; இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்; இறந்த தலைவர்களின் மீது அன்பு கொண்டோர் சொல்வர்,"வானமும் அழுகிறதே" என்பதாக.
அதற்கேற்ப நம்முடைய மூத்த அப்போஸ்தலர் பாஸ்டர் செல்லத்துரை ஐயா அவர்களின் மரணத்தின் போதும் இந்த அடையாளம் நிறைவேறியது; மற்றொரு அதிசயம் என்னவென்றால், அன்னாரது நல்லடக்க ஆராதனை நடைபெற்ற பிற்பகல் 02:30 மணி முதல் மாலை சுமார் 5 மணி வரை வானம் அமைதலாக இருந்தது; அவரது சரீரத்தை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியிருப்போம், அதற்குப் பிறகு மீண்டும் மழை துவங்கியது; சகோதரர் டிஜிஎஸ் அவர்களின் மரணத்திலும் இதே அடையாளங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு விதையை விதைக்கும் முன்பும் மழை வந்து பூமியை நனைக்கும்; விதைத்தபிறகும் மழை பெய்யும்; அதன் பலனாகவே அந்த விதையானது வேர்கொண்டு எழும்பும்; அதுபோலவே நாம் சொல்லுவோம், "நாங்கள் சரீரத்தை புதைக்கவில்லை,விதைக்கிறோம் " என்று; அதற்கேற்ப பெய்து கொண்டிருந்த மழை அதிசயமாக நின்றது, அன்னாரை அடக்கம் செய்து திரும்பியதும் மீண்டும் மழை தொடர்ந்தது.
இதைக் குறித்த தங்கள் தனிப்பட்ட அனுபவங்களை தள நண்பர்கள் பகிர்ந்துகொள்ளவும்; இதெல்லாம் மூடநம்பிக்கை என்றோ, ஏக சம்பவம் (coincidence) என்றோ புறக்கணிப்போர் அமர்ந்திருக்கவும்; நாமெல்லாருமே நம்முடைய சூழ்நிலையிலிருந்தே தேவ சித்தத்தையும் நடந்துதலையும் அறிகிறோம் என்ற குழந்தையுள்ளம் கொண்டோர் மட்டும் இதில் பங்கேற்று தத்தமது கருத்தைப் பகிரலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மூத்த அப்போஸ்தலர் பாஸ்டர் செல்லத்துரை ஐயா அவர்களின் நல்லடக்க ஆராதனையில் இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிரதிநிதிகள் தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்ற அருமையான பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி எஸ்தர் இரத்தினராஜ் அவர்கள் ஒரு இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்;கிறித்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக வீட்டாரால் துரத்தப்பட்டு இன்று வரையிலும் சபையினரால் ஆதரிக்கப்பட்டு வருபவர்;அவர் தனது ஆரம்ப கால விசுவாசத்துக்கு ஊட்டமாக இருந்த அப்போஸ்தலர் P.S.செல்லத்துரை ஐயா அவர்களது இறுதி அடக்க ஆராதனையின் போது பகிர்ந்துகொண்ட சாட்சி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org
Pls Fwd to all...Thank You..!
Pastor P. S. Chelladurai - The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.
பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் சென்னையில் வைத்து நடைபெறுவதாக அறிகிறோம்.
ஐயா அவர்கள் தனது 88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.
அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது;பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)