Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!
Permalink  
 


colvin wrote:
// உம்மை போன்றோரின் முக‌த்திரையை கிழித்து எறிய‌வே தேவ‌ன் என‌க்கும் அந்த‌ எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் த‌ந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வ‌ருகைக்கு முன் எலியா வ‌ந்தாக‌ வேண்டும் என்று சொல்லும் வ‌ச‌ன‌ம் எல்லாம் உம‌க்கு புரியாது, அது என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!! //

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=40496864&p=3

சகோ. சில்சாம் இது உங்களுக்குத்தான். உங்கள் அருமை நண்பர் எழுதியள்ளதை வாசிக்கவில்லையா? இனியும் அவருடன் மோதத்தான் வேண்டுமா? தேவன் இவருக்கு எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளாராம். இவர் யோவானா?அல்லது எலியாவா?

எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும்... இந்த ஸ்டேட்மெண்ட்டை எங்கோ கேள்விபட்டது போல இருக்கிறதே ...ஆ...ங்... நம்ம பிரன்ஹாம் ஸ்டேட்மெண்டாச்சே இது... இதையே இவிங்களும் சொல்லிக்கிறாங்களா... ரொம்ப சந்தோஷம்... ஆனா ஆவி அது இதுவெல்லாம் இவிங்க நம்பமாட்டாங்களே... எப்படியும் நாசமா போகட்டும்...

நாம இருப்பதை இருப்பதிலிருந்து எடுத்து சொல்வதால் நமக்கு வேலைப்பளு மிகவும் குறைவு;ஆனால் அவர்கள் இல்லாததில் இருப்பதைத் தேடுவதால் இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் நிரூபித்தாக வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்;ஏனெனில் வேதம் முழுவதும் நமக்கு திறந்த புத்தகமாக இருக்கிறது;ஆனால் அவர்களுக்கோ மூடப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருப்பதால் அவர்கள் அடிக்கடி "உங்களுக்கு அதெல்லாம் சொன்னால் புரியாது..." என்று சொல்லுவதை கவனிக்கவும்;இந்நிலையில் நாம் நாலாபக்கமும் எழும்பி கேட்கும் கேள்விகளை சமாளிக்கமுடியாமல் வேதம் முழுவதையும் புரட்டிப் போட்டாலும் அவர்களால் சத்தியத்தைப் புரட்டவே முடியாது;ஒருசிலரை வஞ்சிக்கலாம் அவ்வளவே.

ஏனெனில் அண்மையில் நண்பர் சந்தோஷ் அவர்களிடம் சென்று வகையாக சிக்கிக்கொண்டார்;ஏறக்குறைய அவரை ஆதாயப்படுத்திவிடும் நம்பிக்கையில் (மேசியாவின்) எதிரிகளும் குதூகலிக்கின்றனர்;அவர் வஞ்சிக்கப்படாதிருக்க விரும்புகிறேன்;'ஒரு பேச்சுக்காக' என்று அவர்களுடைய ஒரு குறிப்பிட்ட கருத்தை ஆமோதித்தாலும் கூட அதுவும் கூட நம்மை விசுவாச துரோகத்துக்கு நேராக நடத்திவிடும்.

இந்நிலையில் அவர்களுடன் மோதுவது என்பதும் அவர்களை வீழ்த்துவது என்பதும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை;அது மகாதேவனின் திருவுள சித்தமாகும்;'அவர்களை வீழ்த்துவோம்' என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே இருக்கிறது;கடந்த சில வாரங்களிலேயே தங்களைப் போன்ற தங்கமான விசுவாச நண்பர்களுடைய உதவியுடன் அவர்களுடைய கோட்டைச் சுவர்கள் தகர்க்கப்பட்டிருக்கிறது;இனி அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தலையெடுக்காத வண்ணம் தனிமைப்படுத்தப்பட‌ வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே குறிக்கோள்; குறைந்த பட்சம் கிறித்துவை தெய்வமாகத் தொழுவதை மறுக்கும் அவர்கள் தங்கள் கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதை நிறுத்தும் வரையாகிலும் அடியேன் போராடுவேன்,நண்பரே..!

அண்மையில் ஒரு குறிப்பிட்ட விவாதத்தில் சந்தோஷ் அவர்களுக்கு அவர்கள் சொல்லும் பதிலில் இயேசுவைத் தொழுவது குறித்து ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கூறி அந்த பொருளில் அவரைத் தொழுதுகொள்ள ஆயத்தமாக இருப்பதாக சொல்லுகிறார்கள்;இவையெல்லாம் இவர்களுடைய மாறுபாடான வெவ்வேறு நிலைபாட்டுக்கு ஒரு உதாரணமாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

உம்மை போன்றோரின் முக‌த்திரையை கிழித்து எறிய‌வே தேவ‌ன் என‌க்கும் அந்த‌ எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் த‌ந்திருக்கிறார்!! கிறிஸ்துவின் வ‌ருகைக்கு முன் எலியா வ‌ந்தாக‌ வேண்டும் என்று சொல்லும் வ‌ச‌ன‌ம் எல்லாம் உம‌க்கு புரியாது, அது என்னை போன்றோர் தான் என்று நினைவில் வைத்துக்கொள்ளும்!!

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=40496864&p=3

சகோ. சில்சாம் இது உங்களுக்குத்தான். உங்கள் அருமை நண்பர் எழுதியள்ளதை வாசிக்கவில்லையா? இனியும் அவருடன் மோதத்தான் வேண்டுமா? தேவன் இவருக்கு எலியாவின் ஆவியையும், அந்த‌ யோவானின் ஆவியையும் கொடுத்துள்ளாராம். இவர் யோவானா?அல்லது எலியாவா?


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அன்பு சகோதரர் டினோ அவர்களுக்கு,நமது சகோதரர் ரசல் தன்னை ஏழாம் தூதன் என்று சொல்லவில்லை , ஆனால் அவரை பின்பற்றி வந்த மற்ற சகோதரர்கள் தான் அவர் மீது கொண்ட பற்றுதலினால்(அவரிடம் இருந்த பணத்தின் )  அவரை ஏழாம் தூதன் என்று வர்ணிக்கிறார்கள்,

இப்போ யார் மேல குற்றம் சொல்றது??????????????????????????//

இப்ப தானய்யா நீங்களெல்லாம் சரியான ஆம்பளைங்க...இதத்தான இத்தனை காலமா வெளிப்படையாக அறிவிக்கச் சொல்லிப் போராடினேன்;இனிமேல் நீங்கள் தாராளமாக இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லலாம்;உங்களை நாங்கள் எதிர்க்கவே மாட்டோம்;ஏனெனில் நீங்கள் இரஸல் எனும் கள்ளப்போதகனுடைய செய்திகளால் கவரப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகும்;எனவே நீங்கள் "வேதத்திலிருந்து, வேதத்திலிருந்து" என்று மீண்டும் மீண்டும் மூச்சுபிடிக்க வாதாடாமல் ரொம்ப சிம்பிளாக இரஸலின் வேதத்திலிருந்து என்று சொல்லிவிட்டு இராஜா மாதிரி போய்க் கொண்டிருக்கலாம்;அதற்கு மேல் உங்க பின்னால எவன் வந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு அவர்களெல்லாம் அன்றாடம் என்னுடைய தலையிலிருந்து வீழ்ந்து இங்குமங்கும் அல்லாடும் தன் வேர்களை இழந்த மயிரைப் போன்றவர்கள்; என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டுப் போகும் என்று உங்களைக் குறித்தே இயேசுவானவர் சொல்லிச் சென்றார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// தங்களின் பையோடாட்டாவில் தங்களின் முழு விவரங்களையும் தந்தீர்களானால் நன்றாக இருக்கும்!! தாங்கள் வேத மாணவர் சபையை சேர்ந்தவர் என்பதால் தங்களின் விசுவாசம் என்னவென்று நான் கேட்டு அறிந்துக்கொள்ள வேண்டியதில்லை!! //

தன்னுடைய தளத்தில் இணைந்த ஒரு உறுப்பினரை இப்படியாக வரவேற்கிறார்,"கோவை வெறியன்".இதில் என்னைக் கவர்ந்த வார்த்தை என்னவென்றால் வேத மாணவர் சபை" என்பதே;வேதமாணவர் குழுவினர் எப்போது சபையானார்கள்? அவர்கள் பிரிவினைவாத குழு தானே? கோவை வெறியனும் கூட தன்னை யாருடனும் சாராதவர் என்று தானே சொல்லிக்கொண்டிருந்தார்? சபை என்றாலே வேசி மார்க்கம் என்று சொன்னவர் தானும் ஒரு சபையை அங்கீகரித்து அதில் தன்னை உட்படுத்திக்கொண்டது குறித்து அதிக மகிழ்ச்சி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

arputham Wrote on 02-03-2011 22:27:42:

என்ன சகோ.சில்சாம் கள்ள உபதேசக்காரர்கள் உங்களைப் பாராட்டினால் தானே வம்பு? அவங்க நல்லா திட்டட்டும். ஏன்னா அவங்க பொழப்பே அதுதான். அவர்கள் என்றில்லை, கள்ள உபதேசக்காரர்கள் அனைவருமே அப்படித்தான். அவர்களுக்கு சபியைப் பிடிக்காது. உங்க எழுத்துல முன்பை விட நிறைய மாறுதல்கள் பொறுமையா தெரிகிறது. பொறுத்தார் பூமியாள்வார்.

Chillsam:-அபச்சாரங்களுக்கும் அனாச்சாரங்களுக்கும் எதிராக மணியடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற உபச்சார வார்த்தைகளே மருந்தாகும்;அற்புதம் அவர்களின் கருத்துக்கு நன்றி.

இதில் ஒன்று மட்டும் புரியவில்லை... // அவர்களுக்கு சபியைப் பிடிக்காது.//-அப்படி என்றால் என்ன‌?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

sekarsamuel Wrote@Tcs on 02-03-2011 21:14:41:

சகோ.சில்சாம் பற்றிய தேடலில் சமீபத்தில் ஒரு தளத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு தனிமனிதனுக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்கும் தலைப்புகளைக் கண்டு அதிர்ந்து விட்டேன். இதிலிருந்து அந்த கோவை பொடியன்ஸ் எந்தளவுக்கு சில்சாம் அவர்களால் வேதனைப்பட்டுள்ளனர் என புரிந்து கொள்ள முடிகிறது.

நீங்களும் அதப் பாக்கணுமா? வாங்க ....வாங்க

போச்சு...எல்லாம் போச்சு...என் மானமே போச்சு...சேகரண்ணே என் மேல கோவ இருந்தா கொஞ்சம் வார்ன் பண்ணியிருக்கலாமில்ல‌...இப்ப பாருங்க,நம்முடைய தள நண்பர்களும் சேர்ந்துகொண்டு இவனுக்கு நல்லா வேணும்' என்கிற ரீதியில போட்டு தாக்குவாங்க‌...நான் என்ன மத்தளமா...என்னை யாராவது உலக்கையா மாத்துங்களேன்..!

எங்க அம்மா அடிக்கடி என்னைப் பற்றி பெருமையா சொல்லுவாங்க.."யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்பதாக‌..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அன்பான நண்பர் எபி அவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு எழுத அவசியம் முயற்சிப்பேன்; நன்றி, நண்பரே..!

தங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை;நான் எப்போதும் திட்டவும் திட்டப்படவுமே விரும்புகிறேன்..!(jus kiddng..!)




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சில்சாம், அவர்களின் கருத்துகளை வன்மையாக எதிர்ப்பதில் தப்பில்லை. ஆனால் மடையன்,பொறம்போக்கு போன்ற தனிப்பட்ட முறையில் அவர்களை விமர்சிக்கும் வார்த்தைகளை தவிர்த்தலே நலம். இத்தளத்திற்கு பொதுவாக அனைத்து தரப்பு மக்களும்(அதாவது கிறிஸ்துவை அறிந்தோர்,அறியாதோர், உங்களை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்,விசுவாசத்தில் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள்) வந்து போவார்கள். அவர்கள் வாசிக்கும் போது இந்த மாதிரி வார்த்தைகள் வரும் போது இடறலடைந்து, இப்படிபட்ட வார்த்தைகளை உபயோகிப்பவரின் கருத்து எப்படிபட்டதாக இருக்கும் என்று யோசிக்க வேண்டி வரும்.அதனால் சொல்ல வந்த கருத்து பயனற்று போகும் வாய்ப்பு இருக்கிறது. விவாதத்தில் வாதத்தின் மூலம் மட்டுமே எதிர்வாதத்தை தாக்குவோம். வாதத்தை முன்வைப்பவரை தாக்குவது சரியல்ல நண்பரே. அது சண்டையாக மாறிவிடும். இதனை சொல்லவேண்டும் என்று என் மனதில் தோன்றியதால் இங்கு எழுதியுள்ளேன். என் எழுத்து ஏதாவது ஒரு விதத்தில் தங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//இவர்கள் எந்தவகையிலும் நியாயமான விவாதத்துக்கு தகுதியில்லாதவர்கள் என்று அறிந்தே நான் இவர்களுடன் சமமாக நின்று விவாதிப்பதில்லை;வேதப்புரட்டர்கள் என்பதால் எதையும் எப்படியும் புரட்டுவார்கள்;ஆண்டவரே வந்து நின்றாலும் அவரையே சோதித்தபிறகே நம்புவேன் என்று அடம்பிடிப்பார்கள்; இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; தோமா என்பவன் விரல்களால் தொட்டுப்பார்த்தே நம்புவேன் என்றான் எனில், இவர்கள் அந்த ஜீவாதிபதியை மீண்டும் சிலுவையில் அறைந்தாலே நம்புவேன் என்பார்கள்;இவர்களுக்குள் கிறித்துவைக் குறித்த மனதுருக்கம் இருக்குமானால் இவ்வளவு துணிகரமாகத் தாங்கள் காணாதவைகளில் துணிகரமாக நுழைந்து புரட்டி பேசவே மாட்டார்கள். //

மேற்கண்ட வரிகள் "யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா? " எனும் திரியில் நான் எழுதியதாகும்;இந்த பத்தியிலிருந்து ஒரு சில‌வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு சில மேதாவிகள் "குய்யோ முறையோ " என கத்திக்கொண்டிருக்கிறார்கள்;என்னை அச்சுறுத்தவும் அடக்கவும் இவர்கள் எப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டாலும் நாம் அதைக் குறித்து அஞ்சப் போவதில்லை;தேவைப்பட்டால் அவனவனுடைய‌ தெருக்கோடியில் மேடை போட்டுத் தரட்டும்,அங்கு வந்தும் இதையே பேசுவேன்.

ஏதோ அறையில் உட்கார்ந்து கொண்டு பேடியைப் போல எதையோ எழுதிவிட்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல;எருசலேம் நகரத்தின் வீதிகளில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு பகிரங்கமாக ஏறக் குறைய நிர்வாண கோலத்தில் சிலுவையில் அறையப்பட்டவரை தெய்வமாக வணங்குவதற்காக எதையும் சகிப்பேன்;நீ என் பெயரை என்ன,என் முழு குடும்பத்தையும் தெருவில் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதைக் குறித்து அஞ்சி நடுங்கி தலை தாழ்பவனல்ல;என் வரலாறு முழுவதையும் அச்சடித்து ஊர் முழுக்க விநியோகம் செய்துவிட்டு வந்தபிறகே இங்கு வந்து எழுதுகிறேன்;எனவே அச்சமில்லை,அச்சமில்லை,அச்சம் என்பது இல்லை,இல்லை, இல்லவே இல்லை..!

உன்னால் முடிந்ததை நீ தாராளமாகப் பார்க்கலாம்;ஆனால் இயேசுவானவரை தெய்வமாகத் தொழுது ஊழியம் செய்பவரை தூஷித்து எழுதுவதை நிறுத்தும்வரை நானும் நிறுத்தமாட்டேன்;இதன் காரணமாக எனது உயிரே போனாலும், மானம் மரியாதை எல்லாம் இழ்ந்தாலும் அதைக் குறித்து சிறிதும் கவலையில்லை; நேற்று ஒருநாள் மட்டும் சிந்தித்தேன், சோர்ந்துபோனேன்;ஆனாலும் இன்று காலையில் என்னை நான் திடப்படுத்திக்கொண்டேன்;எனது பாதை எது என்பதை தெரிவு செய்துவிட்டேன்,இனி பின்னிட்டு திரும்பமாட்டேன், திரும்பவே மாட்டேன்; அடுத்து உன் நிலைமையைக் குறித்து யோசிக்கும் வழியைப் பார்,உன் ஆடைகளை சரி செய்து கொள்;இனி காரியம் வித்தியாசமாக இருக்கும்..!


ஒரு பத்தியில் எழுதியிருக்கும் முழுவதையும் கருத்தில் கொள்ளாமல் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போலப் புலம்பும் (மேசியாவின்) எதிரிகளைப் பார்த்தால் கோபம் வருவதற்கு பதிலாக பரிதாபமே மேலிடுகிறது;கிளிப்பிள்ளைப் போல தனக்குச் சொல்லப்பட்டதையே சொல்லிக்கொண்டிருக்கும் இவர்களால் ஒரு மனிதனின் ஆவி ஆத்துமா சரீரத்துக்கு எந்த பயனும் இல்லை;நான் எழுதிய நோக்கத்தையும் அதன் அர்த்தத்தையும் அனர்த்தம் செய்வதுபோல கண்மூடித்தனமாக யோசித்து, அறிவிழந்த நிலையில் ஒரு விமர்சனமும் எழுதி, அதில் சில்சாமுக்கு கண்டனம் தெரிவிக்கச் சொல்லி வருவோர் போவோரிடமெல்லாம் அசிங்கமாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்; நான் ஒரே ஒரு தரம் சொன்னதை நீ பத்து தரம் சொன்னதிலேயே உன் தரம் என்னவென்று புரிகிறது;இதில் எனக்கு அவமானம் இல்லை,உனக்கே அவமானம்;உன்னை நேரடியாக குறிப்பிட்டுச் சொல்லாத எழுத்துக்களுக்குள் உன்னை நுழைத்துக்கொண்டு யோசிக்கச் செய்த பிசாசின் தந்திர சத்தம் கேளாமல் சாதாரண மனிதனாக நின்று யோசித்துப்பார்;இந்த வரிகள் உலகளாவிய தன்மையுள்ளது,வேதத்தின் படியானது என்பதை விளக்க முயற்சிக்கிறேன்.

நான் வணங்கும் கர்த்தராகிய இயேசுகிறித்துவைக் குறித்து,
  • "...பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." (ரோமர்.1:5)
- என்று வேதம் சொல்லுகிறது;ஆனால் (மேசியாவின்) எதிரிகளோ ஓயாமல் இரட்சகராகிய இயேசுகிறித்துவைக் குறித்தும் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பிய பிதாவாகிய தேவனைக் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவான
ர் அவருடைய கால எதிரிகளாயே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கும் சோதனைகளுக்கும் தூஷணங்களுக்கும் உட்படுத்தப்பட்டு அவர் மூலமும் அவரது அடியவர்கள் மூலமாகவும் அக்காலத்திலேயே பலமாய் ரூபிக்கப்பட்டவர் ஆவார்;எனவே ஏற்கனவே பயன்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த இயலாத (மேசியாவின்) எதிரிகள் தற்காலத்தில் புதிய முயற்சியாக இயேசு பெரிய ஆள் தான் என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்,ஆனாலும் அவர் சர்வ வல்ல தேவனை விட பெரியவர் அல்ல என்று புதுக் கரடி விடுகிறார்கள்;இவர்கள் இயேசுவை தேவகுமாரன் என்று ஏற்றுக்கொண்டாலும் தேவனாக ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள் என்பதையே சத்திய வேதத்தின் உதவியுடன் எதிர்க்கிறோம்; மற்றபடி எவன் எந்த ஜாதியாக இருந்து எங்கே எப்படி பிறந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன..? நமக்கு சத்தியத்தை கேட்போரே வேண்டுமே தவிர கலகம் செய்பவர்கள் அல்ல; விசாரித்து கேட்பவரிடம் பணிவுடன் சத்தியத்தைச் சொல்ல நாம் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறோம்,செய்தும் வருகிறோம்.

ரூபிக்கப்பட்ட தேவகுமாரனைக் குறித்து மேலும் கேள்வி கேட்டு என்னுடைய விசுவாசத்தைப் பழிப்பதுடன் என்னை என்னுடைய விசுவாசத்திலிருந்து தடுமாறச் செய்வதற்கு (மேசியாவின்) எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கும்போது நான் வெறுமனே விலகிச் சென்றாலும் இவன் வேறு யாரையாவது தாக்குவான்;நான் எப்போதுமே விஷஜந்துவை எனது வீட்டில் பார்த்தால் அதனிடம் ஜீவகாருண்யம் பேசிக் கொண்டிருக்கமாட்டேன்;அதை உடனே அடித்து நாசம் பண்ணுவேன்; அந்த விஷஜந்துவினால் எனக்கு எந்த பாதிப்பில்லாவிட்டாலும் நான் அசந்திருக்கும் நேரத்தில் அது என்னுடைய பிள்ளைகளுக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்;ஆம்,அது சபைகளுக்குள் நுழைந்துவிட்டது;வாலிபர் சங்கத்தின் கூடுகைகளில் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது; பிள்ளைகள் தவிக்கிறார்கள்;அவைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறேன்; இதில் நாகரீகம் மென்மையுணர்வு போதகர் என்ற போர்வை போன்ற பாரம்பரியங்கள் எனக்கு உதவாது;சவுலின் யுத்த ஆயுதங்களும் உடைகளும் போர்முறைகளும் தாவீதுக்கு உதவிசெய்யவில்லை; எனவே அவைகளைக் கழற்றிப்போட்டான்;எனவே கோலியாத்தை வீழ்த்தினான்; நானும் எனது பாரம்பரியங்களைத் தொலைத்துவிட்டே வந்திருக்கிறேன்;கர்த்தருடைய நாமத்தினால் மேற்கொள்ளுவோம்.

நான் எழுதிய பத்தியிலிருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு விமர்சிக்கிறார்கள்,(மேசியாவின்) எதிரிகள்;எனது நண்பர்களின் கண்டனத்தை கெஞ்சிகூத்தாடி, வேண்டிவிரும்பி, கேட்டு, பிரசுரித்து மகிழுகிறார்கள்; நான் எழுதாமல் விட்டதை அப்படியே பதித்திருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள்; இது அவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.இதை நானாக எழுதவில்லை,என்னுடைய இரட்சகர் குறிப்பிட்டது, வரிக்கு வரி இவர்களுக்கு பொருத்தமாக இருந்ததால் நாகரீகம் கருதி மென்மையாகவே எழுதினேன்;அப்படியும் இது இவர்களுக்கு எங்கோ உரைத்துவிட்டது போலும்;இதோ ஆண்டவராகிய இயேசுவானவர் அடையாளமும் ஆதாரமும் கேட்போருக்கு சொன்னது,ஓயாமல் வசனம் கேட்கிறார்களே என்று தான் இந்த வசனத்தைத் தேடியெடுத்து பதிக்கிறேன்; மற்றபடி இவர்களுடன் வசனத்தை விவாதிப்பதில்லை என்று எப்போதோ முடிவு செய்துவிட்டேன்.

"அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை." (மத்தேயு.12:39)

ஆண்டவர் யாரை இவ்வாறு பொல்லாத விபச்சார சந்ததி என்று சொன்னார் என்பது பிரச்சினையில்
லை;அவர் தம்மை நம்பாதவர்களைப் பார்த்தே கேட்டார் என்பது நிச்சயமல்லவா? அடுத்து அவர் சொன்னார் என்பதற்காக நீயும் சொல்வாயா,எனில் நான் சொல்லவில்லை,அது ஏற்கனவே நம்முடைய வேதாகமத்தில் இருக்கிறது;சொல்லப்பட்ட நோக்கம், ஓயாமல் சத்தியத்துக்கு விரோதமாகக் கலகம் செய்வோருக்காகவே;புறவின மக்களுக்கு "யெகோவா" என்பவர் யாரென்றே தெரியாது;அவர்களைப் பொருத்தவரையில் அன்றும் இன்றும் கண்கண்ட தெய்வமான இயேசுவே போதும்;ஆனால் பாரம்பரிய எதிரிகளான யூதருக்கோ தங்கள் மார்க்கெட் டௌனாகி (down) விடுமே என்று யெகோவா நாமத்துக்காகவும் ஆபிரகாமுக்காகவும் மோசேக்காகவும் கொடிபிடிப்பவர்களைப் போல வேடமிட்டார்கள்;இன்றைக்கும் அதுவே நடைபெறுகிறது;தேவ சந்ததியை விட விபச்சார சந்ததி வேகமாகப் பரவுகிறது என்ன செய்வது..?

மேற்கண்ட வசனத்தைப் படித்துவிட்டு கீழே இருக்கும் எனது வரிகளையும் படிக்கிறீர்கள்;எது கடினமாக இருக்கிறது என்று வாசகர்களே சொல்லட்டும்.


//இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் நிரூபணம் வேண்டும்;பெற்ற தாயிடமே தன் தகப்பனைக் குறித்த நிரூபணம் கேட்கும் மாபாவிகள்; //


இந்த வரிகளில் எவன் பெயரையாவது குறிப்பிட்டு எதையாவது எழுதியிருக்கிறேனா? இதற்கு தான் வழக்குச் சொல்லாகச் சொல்லுவார்கள்,"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்பதாக; இந்த வரிகளைப் படித்துவிட்டு யாருக்கு கோபம் வருகிறதோ அந்த மடையன் தன் தாயாரை இதுபோலக் கேட்டு வேதனையடையச் செய்தவன் போலும், எனவே தான் உடனே ரியாக்ட் (react) செய்கிறான், இல்லாவிட்டால் யாரையோ சொல்லுகிறான் நமக்கென்ன கண்டுகொள்ளாமல் இருந்திருப்பானல்லவா?

ஆண்டவரைச் சுற்றி
ச் சுற்றி வந்து ஓயாமல் கேள்விகளால் துளைத்து சோர்வடையச் செய்து அவருடைய ஊழியத்துக்கு தடைக்கற்களாக இருந்தவர்களைப் பார்த்து ஆண்டவர் பொல்லாத விபச்சார சந்ததியார் என்று கடிந்துகொண்டார்; நானோ பெற்ற தாயையே நம்பாதவர்கள் என்றேன்;தவறு எங்கே இருக்கிறது? ஆதாரம், அடையாளம் கேட்பதால் தானே? அப்படியானால் எனது நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதுவதை நிறுத்தலாமே?

  • புறசாதியில் பிறந்த பொறம்போக்கான நீ எப்படி யூதர்களின் தேசியக் கடவுளான நாமமான யெகோவா நாமத்தை இயேசுவானவரை மீறி அறியமுடியும் என்று யோசிக்கத் தெரியாத முட்டாளாக இருக்கிறாயே?
  • சர்வவல்ல கடவுளுக்கு எப்படி ஐயா பெயர் இருக்கமுடியும்?
  • பெயர் வைத்துள்ளவர் எப்படி ஐயா கடவுளாக இருக்கமுடியும்?
  • அவரை யாரும் பெறவுமில்லை,அவர் யார் மூலமும் பெறப்படவுமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது; அப்படியானால் அவர் தனக்குத் தானே பெயர் வைத்துக்கொண்டாரா?

நாமங்களைக் குறித்த சர்ச்சைகளின் மைய நோக்கம் இயேசுவின் தெய்வத்தன்மையை பழிப்பதே என்பதை அறிந்தே உன்னை உன் வழியிலேயே வந்து பிடிக்கிறேன்; பைபிளில் சிருஷ்டி கர்த்தாவைக் குறித்து சொல்லப்பட்ட ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் அவருடைய ஒவ்வொரு செயல் இருக்கிறது;எனவே அவருடைய குணாதிசயம் மற்றும் செயல்களை ஒட்டி வழங்கப்பட்ட எந்த பெயரும் ஒன்றைவிட ஒன்று சிறந்தது அல்ல என்பதை நாம் அனைவரும் அறியவேண்டும்;அப்படிப்பட்ட நாமங்களில் மேன்மையானதாக அவரே வழங்கியது இயேசு எனும் நாமமே;அதாவது இயேசுவே என்று கூப்பிட்டால் பிதாவே வந்து நிற்பார்;பிதாவே என்று அழைத்தால் இயேசுவி
ல் வெளிப்படுவார்;இதுவே பரிசுத்தவான்களின் தனிப்பட்ட அனுபவமாகும்.

தற்கால அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களுக்காக ஊர்களின் பெயர்களையும் தெருக்களின் பெயர்களையும் இன்னும் மாநிலத்தின் பெயர்களையும் நகரத்தின் பெயர்களையும் கூட மாற்றி விடுகிறார்கள்; அப்போது வெளியிடப்படும் அறிவிப்பில்,"இதுவரை இந்த பகுதியானது இந்த பெயரால் வழங்கப்பட்டது இனி இது இந்த புதிய பெயரால் வழங்கப்படும்" என்று அரசாணை வெளியிடுகிறார்கள்;அதன்பிறகு அனைத்து அரசாங்க நடைமுறைகளிலும் அதுவே பின்பற்றப்படும்;அதனை ஒருவரும் மாற்றமுடியாது;இதற்கொரு உதாரணம்:மெட்ராஸ் என்பது சென்னை என்றும் மாநிலம் தமிழ்நாடு என்றும் கல்கத்தா கொல்கட்டா என்றும் பம்பாய் மும்பை என்றும் பெங்களுர் பெங்களூரு என்றும் கிரீன்வேஸ் ரோடு என்பது டிஜிஎஸ் தினகரன் சாலை என்றும் மாற்றப்பட்டதை அறிவோம்.

இதுபோலவே விண்ணக அரசில் ஏற்பட்டதொரு மாற்றமானது சர்வவல்லவரின் நாமத்தையே மாற்றியது;இதுவரை எந்த நாமத்தினால் அழைத்து பக்தர்கள் தொழுது வந்தார்களோ அவர்களைப் பிள்ளைகளாக உயர்த்திய சர்வ வல்ல தேவனாகிய கர்த்தர் அதாவது அவர்களால் யெகோவா என்று பாசத்துடன் அழைக்கப்படும் சிருஷ்டிகர் உலகத்தாருக்கு ஒரு அறிவிப்பு செய்கிறார்,இனி இயேசு எனும் நாமத்தினாலேயே நான் வழங்கப்படுவேன்,அவருடைய நாமத்தில் யார் எதைக் கேட்டாலும் அதை நான் அவரில் மகிழ்ச்சியடையும் வண்ணமாக அவர் மூலமே நிறைவேற்றுவேன்;இனி ஒவ்வொரு விண்ணக அரசின் செயல்பாடும் இந்த நாமத்தையொட்டியே இருக்கும் என்கிறார்;இது பாமரனுக்கும் புரியும்வண்ணமாக அடியேன் யோசித்து எழுதிய உள்நோக்கமில்லாத கருத்தாகும்;இதை எதிர்த்து கேள்வி கேட்பவன், (மேசியாவின்) எதிரி ஆவான்;அவனைக் குறித்தே நான் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டேன், "நீ பெற்ற தாயையே (ஏன் பெற்றாய்,எவனுக்கு பெற்றாய் என்றும் ) கேள்வி கேட்கக்கூடியவன்" என்று..!

அதற்குக் காரணம் அவனுடைய தகப்பன் குடிகாரனாக இருந்து பிள்ளையின் எதிரிலேயே தன் மனைவியின் கற்பைக் குறித்து கேள்விகேட்டவனாக இருப்பான்;பிற்காலத்தில் இவனும் அவனுடைய தகப்பனைப் போலவே குடித்துவிட்டு வந்து தனது தாயைக் கேள்வி கேட்பான்;அப்போது அந்த தாயின் மனம் என்ன பாடுபடுமோ அந்த வேதனையே தமது சொந்த குமாரனை இந்த உலகுக்கு இரட்சகராக அனுப்பிய தேவாதி தேவனுடைய இருதயமும் அடைந்து துடித்துக்கொண்டிருக்கிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"செருப்பு பிந்துவிடும்" மேற்கண்ட வரிகள் எப்போதோ ஏதோ ஒரு கோபத்தில் எதற்காகவோ எழுதியது;அதனை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்தும் முதுகுக்குப் பின்னிருந்தும் கிளறியெடுத்து இங்கே நண்பர் இளங்கோ அவர்கள் பதித்த நோக்கத்தை நினைத்தபோது எனக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு புறம் நான் அன்றைக்கு எழுதிய வார்த்தை இன்றைக்கு எனக்கெதிராக எழும்பி நிற்கிறதே,எதற்காக இப்படி எழுதினோம்,இதற்கு என்ன விளக்கங் கொடுப்பது என்று யோசித்தபோது எனக்கு தோன்றிய சில காரணங்களை இங்கே அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்;அது நண்பர் இளங்கோவுக்காக அல்லாவிட்டாலும் எனது அன்புக்குரிய வாசகர்களுக்காகவேனும் எழுதியாக வேண்டும் என்று யோசித்தேன்.

"செருப்பு பிந்துவிடும்" என்பது நமது தமிழ் சமுதாயத்துக்கே உரிய இனிமையானதொரு தூஷண வார்த்தையாகும்;மேலும் செருப்பு சம்பந்தமாக இன்னும் பல சொற்றொடர்களும் பழமொழிகளும் உண்டு.

உதாரணமாக சில பெரியவர்கள் தங்களை மதியாதவர்களைக் குறித்து 'அவன் வீட்டுக்குப் போனாலே செருப்பைக் கட்டி வெச்சுருக்கான்' என்பதுண்டு;'உன் வீட்டுக்கு வந்து நான் செருப்படி வாங்கிட்டு போகணுமா ' என்றும் புலம்புவதுண்டு;மேலும் ரூத்தின் சரித்திரத்திலும் செருப்பு முக்கியப் பங்காற்றுகிறது;இன்னும் யோவான் ஸ்நானனும் பாதரட்சையின் வாரைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியிருக்க நான் இதுபோல "செருப்பு பிந்துவிடும்"
என்று எதற்காக கடுமையாக எழுதவேண்டும்? அதுதான் இல்லை, நண்பர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது,என்னை எல்லா பக்கமும் நண்பர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கும்போது நான் உயிர்தப்ப ஓடுவேனல்லவா, அப்போது என் செருப்பு பிய்ந்துவிடுமே, அதைத் தான் அவ்வாறு குறிப்பிட்டேன், இதைப் புரிந்துகொள்ளாமல் என்னைக் குறித்து கோவை பெரியன்ஸ் தளத்தில் கேவலமாக எழுதிய சோலுசொலிஷன் எனும் ஜிப்ஸி பார்ட்டி நேராக வந்து அதையே சொன்னாலும் நான் சொன்ன "செருப்பு பிந்துவிடும்" அப்படியே பொருந்தும்;ஏனெனில் அவனுக்கு பயந்து நான் ஓடுவேனல்லவா, அப்போது என் "செருப்பு பிந்துவிடும்", அதாவது செருப்பு உறவுக்கும் ஒரு அடையாளமாக இருப்பதால் அது பிய்ந்துவிட்டால் நம்முடைய உறவுக்கும் பங்கம் வந்துவிடுமே என்ற எனது அச்சத்தையே அவ்வாறு வெளிப்படுத்தினேன்;ஆனால்...? என்னவோ போங்க‌...இப்ப கணக்கு சரியாயிடுச்சா இளங்கோ ஸார்..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Kovai bereans:

// நம் தளத்தில் அந்த எழுத்துக்கள் இருந்தால் அவருக்கு விரோதமாக சாட்சியிடும் என்கிற பேடித்தனமான என்னத்தில் இங்கே இருந்து நீக்கி விட்டு, அதில் வேண்டிய திருத்தம் செய்து தன் தளத்தில் வைத்திருக்கிறாராம்!! என்ன ஒரு கோமாளித்தனம்!! //

தாங்கள் சொல்லுவது போல நான் தங்கள் தளத்திலிருந்து விலகுவதற்கு அடையாளமாக நீக்கிய பதிவுகளில் ஒரு வரியாகிலும் ஒரு எழுத்தாகிலும் நீக்கியிருந்தாலும் கர்த்தரே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக;எனக்கும் உங்களுக்கும் நடுவில் அவருடைய பயங்கரம் வெளிப்படட்டும்;என்னுடைய செயல்பாடுகளில் தாங்கள் கூறும் அநீதியும் மோசடியும் இருந்தால் கர்த்தர் எனக்கு அதற்கேற்பவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும்..!

பல நண்பர்களும் என்னிடம் குறைபடுவதைப் போல‌, நான் எனது எழுத்துக்களை நீக்கிவிட்டு வெளியேறுவதற்கு ஒரே காரணம்,கர்த்தரே கட்டளையிட்ட வண்ணமாக "ஒரு வீட்டார் அல்லது பட்டணத்தார் உன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன் காலில் படிந்திருக்கும் தூசி முதலாக உதறிவிட்டு வெளியேறு", என்பதே.

"செருப்பு பிந்துவிடும்" என்று நான் எழுதியது உண்மையே;அந்த வரிகளும் மாற்றப்படாமல் அப்போதே என்னுடைய தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கிறது;நான் அதுபோல எழுதுவதற்குக் காரணமான ஆத்துமப் பிசின் (Soul Solution) என்பவனின் எழுத்துக்கள் என்ன என்பதையும் வெளியிட்டால் நல்லது;அவன் எழுதிய‌ அதே வார்த்தைகளை என் எதிரே வந்து சொல்லட்டும்,நான் எழுதியதை  செய்து காட்டுகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது கோவை பெரியன்ஸ் எனும் கள்ள உபதேசக்காரர்களின் கூச்சல்...
நாம் அமைதியாக இருந்தாலும் வீண் வம்புக்கு வருவதும் நம்மை சீண்டுவதும் தொடர்ந்து நாம் நம்முடைய விளக்கமாக எதை எழுதினாலும் அதை வைத்து புதிய சர்ச்சையைக் கிளப்புவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.


இது கொல்வினுக்காக நாம் எழுதியது:

//உங்களிடம் நான் வைக்கக்கூடிய ஒரு சின்ன வேண்டுகோள்... என்னுடைய ஆரம்பக்கால பின்னூட்டங்களை அவர்களுடைய தளத்திலேயே சென்று என்னுடைய பெயரைத் தொடர்ந்து வரக்கூடிய உறுப்பினர் பதிவுகள் (member posts) தொகுப்பிலிருந்து வாசித்துப் பாருங்கள், அப்போதாவது உண்மை நிலவரம் உங்களுக்குத் தெரியவரும்; நான் அவர்களை எவ்வளவாய் நேசித்து, நட்பு பாராட்டினேன் என்பதையும் எதிர்கருத்தைப் பொறுக்கமுடியாமல் அவர்கள் நடந்துகொண்ட முறைகளையும் பார்த்தபிறகு என்னைக் குறித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.//

நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ த‌ள‌த்திலிருந்து அவ‌ர் ப‌திவுக‌ளை நீக்கி சென்று விட்ட‌ தைரிய‌த்தில் திரு கொல்வின் அவ‌ர்க‌ளுக்கு சொல்லியிருக்கிறார் சில்சாம்!! ஆனாலும் ஒரு சில‌ ப‌திவுக‌ளில் அவ‌ருக்கு ப‌தில் த‌ருவ‌த‌ற்கு அவ‌ர் எழுதிய‌தை என் ப‌திவுக‌ளில் போட்டிருக்கிறேன்!! "செருப்பு பிந்துவிடும்" என்று எல்லாம் எழுதினார், அந்த‌ ஒரு ப‌திவையே நான் நீக்கினேன் என்ப‌தையும் தெரிவித்துக்கொள்கிறேன்!! த‌ன் ப‌திவுக‌ளை நீக்கி விட்டு இப்படி பேசுவ‌தில் ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை!! த‌ட‌ய‌ங்க‌ளை கொளைசெய்ப‌வ‌ன் நிச்ச‌ய‌மாக‌ விட்டு வைப்ப‌தில்லை, ஆனாலும் சில‌ சிறு த‌வ‌றுக‌ளால் மாட்டி விடுகிறான், அப்ப‌டி தான் சில்சாமும்!! இந்த‌ திட்டி எழுதும் க‌லாச்சார‌த்தை துவ‌க்கிவைத்த‌வ‌ர் சில்சாம் தான் என்று சொல்லுவ‌து பொய் ஆகாது!! என்னை மாத்திர‌ம் திட்டினால் ப‌ர‌வாயில்லை, என் ச‌ந்த‌தியையும் சேர்த்து ச‌பிக்க‌ இவ‌ருக்கு என்ன‌ த‌குதியிருக்கிற‌து, என்ன‌ உரிமை இருக்கிற‌து!! இப்ப‌வும் அதையே தான் அவ‌ர் த‌ள‌த்தில் ப‌திந்துவிட்டு அதற்கு ஒரு நியாய‌ம் வேறு க‌ற்பிப்பார்!! இவருடைய மட்டமான வார்த்தைகள் வெளி வந்துவிடும் என்று தான் இந்த தளத்திலிருந்து தன் பதிவுகளை நீக்கி சென்றிருக்கிறார் என்பதை அனைவரும் அறியவேன்டி மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்!!


//என் தயவில் தங்கள் பிழைப்பு ஓடுவதால் நான் ஒதுங்கிப் போனாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்கும் கீழ்த்தரமான போக்கை கோவை பெரியன்ஸ், அன்பு, சுந்தர் போன்ற (மேசியாவின்) எதிரிகள் கைவிட்டு சத்தியத்தை அறியும் அறிவைப் பெற முயற்சிப்பது அவர்களுடைய எதிர்காலத்துக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் நல்லது.//

இது மாத்திர‌ம் ரொம்ப‌ ஆரோக்கிய‌மான‌ ச‌த்திய‌ம் சொல்லியிருப்ப‌தாக‌ நினைப்பா!? நானும் என் ச‌ந்த‌தியும் என் குடும்ப‌மும் தேவ‌னுக்கு ப‌ய‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள், க‌ண்ட‌ க‌ண்ட‌ போத‌க‌ர்க‌ளின் வெட்டி பேச்சுக்கு ப‌ய‌ந்திருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்ப‌தை சில்சாம் என்கிற‌ ம‌ட்ட‌மான‌ போத‌க‌ரும் அவ‌ரை இன்னும் போத‌க‌ர் என்கிற‌ ஸ்தான‌த்தில் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளும் தெரிந்துக்கொள்ள‌ட்டும்!! ஏற்க‌ன‌வே தொலைபேசியில் இவ‌ருட‌ன் பேசிய‌து இவ‌ருக்கு நினைவுப்ப‌டுத்த‌ விரும்புகிறேன்!! தேவை இல்லாம‌ல் குடும்ப‌த்தை ச‌ந்த‌தியையும் இழுக்க‌ வேண்டாம் என்று சில்சாமை எச்ச‌ரிக்கிறேன்!!........

நீங்க எச்சரித்ததும் நான் பயந்துட்டேன்...போதுமா..?

அன்பரே,உங்களுடனான போராட்டத்தை நான் மறந்தாலும் என் விரல்கள் மறக்கக்கூடாது என்பதற்காகவே இரவும் பகலுமாக நான் தட்டச்சு செய்து பதித்த எனது பதிவுகள் அனைத்தையும் எனது தளத்தில் தனி அரங்கத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்;நான் எழுதியதைக் குறித்து ஒருபோதும் வருத்தப்பட்டதோ மன்னிப்பு கேட்டதோ கிடையாது;ஏனெனில் நான் நிதானமாக யோசித்து திட்டமிட்டு நியாய உணர்வுடனே மீண்டும் மீண்டும் படித்து பிழைதிருத்தி அழகு படுத்தி ஒவ்வொரு வரியையும் பதிக்கிறேன்;எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நான் எங்கோ ஓடிவிடவில்லை'ங்ணா..!

வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சாட்சிகளுக்கான‌ பதில்கள்

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=499712&p=2



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. கோவை பெரியன் எழுதியது

திரித்துவ‌ம் க‌த்தோலிக்க‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌தில்லை என்று முழு பூச‌ணிக்காயைய் இத்துனை வ‌ர‌லாறு ஆதார‌ங்க‌ள் இருந்தும் ம‌றைக்க‌வும் ம‌றுக்க‌வும் துனிந்திருக்கிறீர்க‌ளே.

பிரதர் இற்காகதான் ஆதாரத்தை கேட்டேன். உங்களுக்கு Assignement / Theses எழுதி பழக்கம் இருக்கிறதுதானே. மொட்டையாக ஒரு விடயத்தை ஆதாரமில்லாமல் நீங்கள் எழுதினால் ஏற்பார்களா? என்று கூறுங்களேன். பைபிள் இதற்கு ஆதாரம் கிடையாது. எனவே யார் திரித்துவத்தை கொண்டுவந்தார்கள்? ஏன் கொண்டுவந்தார்கள் என எழுதுங்கள்.

நான் கேட்டது இயேசு யார் என்பது பற்றி? அவர் சிருஷ்டிகர் என்பது அனைத்தையும் படைத்தவர் என்ற விளக்கத்தையெல்ல தேநீர் பூக்களை பாருங்கள் அவர் மிக்காவேல் என எழுதியுள்ளார். இது போன்றுதான் கேட்டேன். 


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கோவை பெரியன் அவர்களே உங்களுக்கு ஆங்கிலத்தை விளங்கிக் கொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? சரியாக முழுமையாக தொடுப்பினை வாசிக்காது கத்தோலிக்கத்தை மதம் என்று குறிப்பிடவில்லை என்று சொல்கிறீர்கள். வியப்பாக உள்ளது. தமிழில் தருகிறேன் படித்துப் பாருங்கள்

கத்தோலிக்கம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் இராஜ்குமார் அவர்களின் பயனர் பெயருக்கான (Eloi4u) காரணம் எனக்குத் தெரியாது;ஆனாலும் எனது சொந்த புரிதலின் அடிப்படையில் அன்பு அவர்களின் தவறான கருத்துக்கு விளக்கங் கொடுத்தேன்; தற்போது இராஜ்குமார் அவர்களே சரியானதொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்;தற்போது அன்பு அவர்களுக்கு திருப்தியாக இருக்குமென்றெண்ணுகிறேன்.

"And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?" (Mark 15:34)

என்னைப் பொறுத்தவரையில் குறைந்த அறிவுள்ளவனும் சக நண்பர்களால் அறிவீனனாகவும் சித்தரிக்கப்படும் அடியேன் மேற்கண்ட வசனத்திலுள்ள வார்த்தையான Eloi, என்பதன் அடிப்படையில் திரு.இராஜ்குமார் தனது பயனர் பெயரை (Eloi) அமைத்துள்ளார் என்று எண்ணியது தவறோ சரியோ அதுபோன்று ஒரு ஊழிய ஸ்தாபனத்தின் பெயர் அமைவதால் அந்த பெயருக்குரியவரே தன்னை தேவனாக்கினார் என்று பெரியவர் அன்பு குறிப்பிடுவது எப்படி சரியாகும்?


பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒரு பெயரை (
Eloi) இஎல்ஓயூ  என்றா சொல்லுவது? அதையே நான் விமர்சித்தேன்;ஒன்றுமில்லாத ஒரு காரியத்தில் கூட தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டத்துடிப்பவர்கள் தான் தேவ இராஜ்யத்தை கட்டப்போகிறார்களாம்..!

திரு.இராஜ்குமார் அவர்களின் ஊழிய ஸ்தாபனத்தின் பெயரில் இப்படியும் ஒரு அர்த்தம் வருவதை அறிந்தே அமைத்தாரா என்பது தெரியவில்லை;அப்படியானால் அதுவே சரியாக இருக்கும்;யௌவன ஜனம் தளத்தைப் பொறுத்தவரையிலும் திரு.இராஜ்குமார் , Eloi4u என்பதையே பயனர் பெயராகக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது;
புனைப் பெயரில் எழுதுவதும் தவறல்ல‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம் தூங்குகிறவர்களைப் போல பாசாங்கு செய்கிறவர்களை........?

புனைப்பெயரை வைத்து எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, இரட்சிக்கப்பட்ட புதிதில் என்னுடைய பெயரை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் user name ‍ ஆக வைத்திருந்தேன், பைபிள் அங்கிள் தளம் ஆரம்பித்த பின்பு புதிதாக பதிவு செய்யும் தளங்களில் bibleuncle ‍ என்று user name ‍வைத்திருந்தேன். இப்போது தேவன் நான் செய்ய வேண்டிய ஊழியத்தையும் அதன் பெயரையும் கொடுத்திருக்கிறார். அதையே இப்போது  user name‍  ஆக பயன்படுத்தி வருகிறேன். என் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளையும் அதே பெயரில் தான் இயக்கிவருகிறேன்.

eloi4u ‍ என்பது என்னுடைய ஊழியப் பெயரின் சுருக்கம் ஆகும், இதன் விரிவாக்கம் Everlasting Light Of Israel for you‍  என்பதாகும், உனக்(குள்)காக இஸ்ரவேலின் நித்திய வெளிச்சம், என்பதாகும்.

உடனே இஸ்ரவேலின் நித்திய வெளிச்சம் யகோவாவா? இயேசுவா என்று கேட்டுவிட வேண்டாம்

ஏசாயா 60:20 கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்;

யோவான் 1:9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான வெளிச்சம். என்று யாரைச் சொல்லியிருக்கிறதோ அவர்தான் அந்த இஸ்ரவேலரின் நித்திய வெளிச்சம்,

அந்த வெளிச்சம் விதையாக‌ எல்லார் இருதயங்களிலும் வேர்விட வேண்டும். வளர்ந்த பின் ஒளியை உணர்ந்து கொண்டவர்கள் மற்ற்வர்களுக்கும் வெளிச்சத்தை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். இது தான் அந்த ஊழியம்

மற்றபடி என் பெயர் ராஜ்குமார் தான் புனைப்பெயரில் மறைந்து கொண்டு எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

Regards
Rajkumar.s


__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்." (யோவான்.14:8)

அது அந்த காலம்..! இப்போதோ, இயேசுவை எங்களுக்குக் காண்பியும் , அது எங்களுக்குப் போதும்,' என்று வேண்டுகிற நிலையில் இருக்கிறோம்...பரிதாபம்..பரிதாபம்..!

அருமை நண்பர் கொல்வின் அவர்களே, ஒரு முடிவோடு வந்திறங்கி செயல்படுவோரிடம் முடிவைக் கேட்கிறீர்களே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அன்பின் கோவை பெரியன்சுக்கு,
இதுவரை நீங்கள் உங்கள் தளத்தில் இயேசுயார் மற்றும் பரிசுத்த ஆவி யார் என்றும் கூறவில்லை. உங்களுக்கு சத்தியம் தெரியும் என்றால் அதனை கூறுங்கள். மாறாக திரித்துவம் பொய் என்று கூறித் திரியவேண்டாம். சத்தியத்தை தெளிவாக எடுத்துரையுங்கள் என்றுதாம் கூறுகிறோம்.

நான் அவதானித்த வரையில் நீங்கள் கூறுகின்றவற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் தருவதில்லை. எல்லாமே உங்கள் சொந்த உபதேசங்கள் தான். நான் ஆன்சரிங் இஸ்லாம் தொடுப்புத் தந்தேன். மொட்டையாக அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னால் எப்படி? அந்த வரி உங்களுக்கு பிழையாக தெரிந்தது? அதற்குரிய விளக்கம் என்ன? அவர்கள் ஒன்றும் சும்மா எழுதுபவர்கள் அல்ல. எதனையும் ஆதாரத்துடன் தான் எழுதுவார்கள்ஃ நான் ஒன்றை கேட்கிறேன். இதுவரை Referecne and Citization உடன் எழுதிய ஒரு கட்டுரையாவது காட்ட முடியுமா?

எனவே தயவு செய்து கூறுங்கள் இயேசு யார்? பரிசுத்தஆவி யார்? சமாளிப்பு வேண்டாமே?


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// ராஜ்குமார் எனும் மனிதன் தன்னை “உனக்காக ஒரு தேவன்” எனக் காட்டத்தக்கதான ஒரு புனைப்பெயரை வைத்துள்ளதை சில்சாமும் அவரைப் போன்ற அறிவீனர்களும் ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள்தான் ஏற்கனவே தேவனுக்கு நிகராக அவரது குமாரானான இயேசுவை வைத்தவர்களாயிற்றே! அதன் தொடர்ச்சியாக ராஜ்குமாரையும் அவ்வாறு வைப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? //

வயதானால் கண் மயக்கம் உண்டாவது இயல்பானது;ஆனால் சத்தியத்திலுமா? இந்த பைத்தியக்காரத்தனமான விளக்கங்களையும் படிக்க வேண்டியதாகிறதே என்று மனச் சோர்வு உண்டாகிறது;ஒரு மனுஷனுடைய பெயரை வைத்து அதுவும் புனைப்பெயரை வைத்து இதுபோன்றும் சர்ச்சை கிளப்பமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

அப்படியானால் இம்மானுவேல் என்று மனிதர்கள் பெயர்களை வைத்துக் கொள்வதும் தவறுதானே..? இந்த நியாயத்தை எங்கு கொண்டு சென்று தீர்த்துக்கொள்வதோ..?

ஐயா பெரியவரே உங்களைப் போல நான் மூலத்தை எடுத்து வைக்கவில்லை; ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளையே குறிப்பிட்டேன்; அது என்னுடைய தமிழ் வேதாகமத்திலேயே இருக்கிறது;உங்களைப் போல வேத வசனங்களுக்கு மூல பாஷையிலிருந்தும் மூலப் பிரதியிலிருந்தும் அது அங்கே இல்லை என்றும் இது இங்கே இல்லை என்றும் விகாரமான வியாக்கியானங்களைக் கொடுக்கும் மனோதைரியம் எனக்கு இல்லை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நான் தான் ரொம்ப பரியாசம் செய்பவனாகவும் சபிப்பவனாகவும் சகோதரர்கள் மத்தியில் காணப்படுகிறேன்;ஆனால் நம்முடைய கிறித்தவ தளத்தில் சந்தோஷ் என்ற ஒரு நண்பர் இருக்கிறார்;அவர் இதுவரை யாருடனும் இதுவரை நேருக்கு நேர் வாதிட்டதோ யாரையும் கடிந்து எழுதியதோ இல்லை;ஆனால் அவருக்கு கிடைக்கும் மரியாதையையும் பார்க்கவேண்டுமே; நண்பர் சந்தோஷ் அவர்களின் நேர்த்தியான கட்டுரையும்...

திரித்துவம், திரியேகம் என்றால் என்ன?

http://www.truthspeaks.activeboard.com/index.spark?aBID=136947&p=3&topicID=40766629

எதிரிகளின் வெற்றுக்கூச்சலும்...

சகோ.சந்தோஷின் அபத்தங்கள்


நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
தாங்களும் இந்த தளத்தில் ஒரு உறுப்பினராக இருப்பதால் தங்களது கட்டுரைகளை நீங்கள் விரும்பினால் இங்கே நம்முடைய தள நண்பர்களின் வசதிக்காகப் பதிக்க வேண்டுகிறேன்.

மேலும் நம்முடைய தளத்தில் புதிதாக இணைந்துள்ள நண்பர் இராஜ்குமார் அவர்களை கேலி செய்வது போல,

// யௌவன ஜனம் தளத்தின் ஒரு திரியில் திரு.கொல்வின் என்பவரும் திரு.இஎல்ஓஐ4யூ என்பவரும் பின்வருமாறு எழுதியுள்ளனர். //


என்று பெரியவர் அன்பு குறிப்பிடுகிறார்;அவருக்கு ஏற்கனவே மூலம் பற்றி நன்கு தெரியும் என்பதால் மூலத்தைக் குறித்து நாம் அவருக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை; "ஏலோயி" என்பது வேதத்தில் ஆண்டவர் தம்முடைய சிலுவையிலறையப்பட்ட நிலையில் துயரத்துடன் கூப்பிட்டுச் சொன்ன வார்த்தையாகும்; அதனை வேண்டுமென்றே திரித்து ஏதோ நான்கு எழுத்தைப் போலக் குறிப்பிட்டதில் அவருடைய மதியீனம் விளங்குகிறது.

"இஎல்ஓஐ4யூ" என்றால் "உனக்காக ஒரு தேவன்" என்று பொருள் படும் என்பது எனது சிற்றறிவுக்கே புலப்படுகிறது; ஏலோயி எனும் அரமேய வார்த்தைக்கு தேவன் என்பது பொருளாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard