எச்சரிக்கை:இது ஒரு மீள்பதிவு; தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதியப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த கட்டுரையை மீண்டும் பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; காலம் போனாலும் எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு - அதாவது நான் எழுதிய எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு எல்லாம் இருப்பது ஆச்சர்யமே..!
27-01-2009 05:04:51 அண்மையில் சென்னையில் (தானா எல்லா அநியாயமும்..?) பிரபல ஆராதனை வீரரின்(???) ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09< நடைபெற்றது;
மனதைக் கெடுத்த விஷயம் என்னவென்றால் "அக்கினி,அக்கினி" என்றதும் ஆணும் பெண்ணுமாக தரையில் விழுகிறார்கள்;உச்சக்கட்ட இசை (உணர்ச்சி)வயப்பட்டு அவர்கள் விழுந்தாலும் இசை மட்டும் நிற்கவில்லை; அவ்வளவு பேரும் இளைஞர்கள் மற்றும் வாலிபப் பெண்கள்..! எங்கிருந்தது வந்தது இந்த கலாச்சாரம்? இதையா எழுப்புதல் என்கிறார்கள்? எதிலிருந்து எழுப்புதல்? எதற்காக? வேதம் இதை அனுமதிக்கிறதா?
அருவருப்பான ஆடை வடிவமைப்புடன் அந்த "ஆராதனை வீரர்" ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்; "பயங்கரமாக" டான்ஸ் ஆடுகிறார்;
இவர்கள் யாரைத் துதிக்கிறார்கள்? இத்தனையும் "இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மையெல்லாம் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும்" பிரபல கிறிஸ்தவ சானலில்தான்..!
இதைப் பார்க்கும் மாற்று மதத்தவர் என்ன நினைப்பார்கள்?
எல்லாவற்றுக்கும் மேலான உச்சக்கட்ட மோசடி... இதை "days of prophecy" என்ற பேனரில் நடத்துகிறார்கள்;
prophecy என்றால் எது? அதை எப்படி, யாருக்கு, எங்கே சொல்லவேண்டும்?
"prophecy" என்பதற்கு "ஞானமாய் உபதேசிப்பது" என்றொரு பொருளை சமீபத்தில் அறிந்துகொண்டேன்.(Proverbs.30:1)
யோவேல்.2:28 ஐயும் அப்போஸ்தலர்.2:17 ஐயும் இவர்கள் ஆதாரமாகக் காட்டினாலும் இதுவா "அவர்களால்" முன்னுரைக்கப்பட்டது?
தேவக் காரியங்களில் துணிகரங்கொண்டு செயல்படும் சிலரால் ஆண்டவரிடம் வரவேண்டிய ஒரு கூட்டம் ஜனம் வஞ்சிக்கப்படுவது போலிருக்கிறது;
"ஆராதனை" திறந்தவெளியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்தபோது தேவமனுஷனான மோசே சீனாய் மலையுச்சியில் இருந்தான்; அழைக்கப்பட்ட ஆசாரியனோ "ஆட்டத்தில் கலந்திருந்தான்..."
இன்றைக்கும் அதே கதைதான்..சபை மேய்ப்பர்களின் முழு ஒத்துழைப்புடந்தான் இது நடக்கிறது;
ஆனால் சடுதியில் பிரதான மேய்ப்பரும் சாவாமையுள்ள ஆசாரியருமான இயேசு(வானவர்) வெளிப்படப் போகிறார்;அப்போது "வெந்தது எவ்வளவு, வேகாதது எவ்வளவு " என்பது நிச்சயம் தெரிந்துவிடும்;காரணம் இந்தமுறை இறங்கப் போவது உண்மையான அக்கினி..!
"Worship" என்ற வார்த்தையின் புனிதமான பொருள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது;அது ஆலயத்தில் எல்லாவித பயபக்தியுடன் நடைபெற வேண்டும்;
திரள்கூட்ட "ஆராதனை " வீரர்கள் விளம்பரங்கள் செய்து- திறந்தவெளியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடத்தி "வியாபாரம்" செய்யட்டும்;ஆனால் அதை "ஆராதனை" என்றோ "தீர்க்கதரிசன பெருவிழா" என்றோ சொல்லவேண்டாமே...!
நீ சீயோன் குமாரத்தியா,பாபிலோன் குமாரத்தியா..? எனும் தலைப்பில் ஒரு செய்தியினை பதிப்பதாக ஏற்கனவே சொல்லியும் செய்வதற்கு அவகாசம் இல்லை;ஆனாலும் இப்போது சொல்கிறேன்,உங்கள் பதில்தான் எனது பதிவுக்கு ஆதாரம்., மனித பார்வையில் வெவ்வேறு கருத்துக்கள் வரலாம்;ஆனால் தேவ ஆவியானவர் அல்லது தேவ ஆவியினைப் பெற்றவர்கள் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள்; ஒரு மனுஷனைப் பார்த்தவுடனே உங்களுக்குள் இருக்கும் தூயாவியர் உங்களை எச்சரிப்பார் அல்லது ஆமோதிப்பார்;ஒருவனும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை(1.யோவான்.2:25 -27)
பிரச்சினை 1:-
தகுதியான ஆடையினைப் பற்றி வேதம் ஒன்றும் சொல்லவில்லையா..? அதில் தவறு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க நாம் நியமிக்கப்படவில்லை;வேதத்தின் வெளிச்சத்தில்தான் சரி பார்க்கிறோம்; வேதம் தற்காலத்துக்கு உதவாது,யார் தான் ஒழுங்கு,நியாயந்தீர்க்க நீ யார் என்பதெல்லாம் "பாபிலோன் புத்திரரின்" வழக்கமான வெற்று வாதம்..!
பிரச்சினை 2:-
அங்கே கிடைக்கும் "ப்ரீடம்" எவ்வளவு நேரத்துக்கு என்பது தான் கேள்வி,இதே மனக்கட்டுகள் அகலவே "டிஸ்கொதெ க்ளப்" செல்கிறார்கள்;அங்கே பாதுகாப்பு குறைவு; கெடுபிடியும் செலவும் அதிகம்;அதே திருப்தி குறைந்த செலவில் கிடைப்பதால் தான் இங்கே வருகிறார்கள்.
பிரச்சினை 3:-
அங்கே கூடிவரும் ஆயிரக்கணக்கான மக்களில் பெரும்பாலோருடன் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளதாலும் இன்றைய சமுதாயத்தின் பொதுவான பிரச்சினைகளை அறிந்து வைத்திருப்பதாலும் மனோதத்துவ ரீதியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கும்,தொடும்,அழச் செய்யும்;அது தீர்க்கதரிசனமல்ல;
கண்ணீருக்கு தேவப்பிரஸன்னம் மாத்திரம் காரணமல்ல;அதில் சிலர் காதல் தோல்வியால் அழுகிறார்கள்;கற்பை பறிகொடுத்தோரும் அழுகிறார்கள்;கடன் பிரச்சினையினால் தற்கொலை செய்யப் போனவர்களும் அழுகிறார்கள்;
யாரும் ஆத்தும பாரத்தினாலோ,ஆண்டவருடைய வருகைக்காகவோ அழவில்லை;இவையிரண்டும் தரும் மன அழுத்தத்தைத் தீர்க்கும் இடம் இதுவல்ல;"பிரதான கட்டளையில்" இது இடம் பெறவில்லை;
நான் சொல்வது என்னவென்றால் இசையில் ''ஃப்யூஷன்'' என்றும் ''மிக்ஸிங்'' என்றும் சொல்கிறார்களே, அதை தேவக்காரியத்தில் முயற்சிக்கக்கூடாது; மக்கள் விடுதலை பெற்றால் அது தேவ இரக்கம்,அவருடைய சுத்தக் கிருபை; நிச்சயம் இவர்களுடைய இசையினால் அல்ல;
பிரச்சினை 4:-
மிரியாம் ஆடியது இன்றைய சினிமா நடனமல்ல;தாவீது ஆடியது ஆலயத்திலோ தேவப் பிரஸன்னத்திலோ அல்ல.
இவ்வுலகத்தின் வேஷம் வேண்டாமென்றுதான் "ஆட்டுத் தோலைப்" போர்த்துக் கொண்டு மலைகளிலும் குகைகளிலும் சிதறுண்டு அலைந்தார்கள்;(வாசிக்க எபிரெயர்.11)இவர்களும் "ஆட்டுத் தோலைத்" தான் போர்த்துக் கொண்டு வருகிறார்கள்;ஆனால் உள்ளத்திலோ..?
எனது விமர்சனம் தவறானதென்றால் வேதம் தவறானதாக இருக்கும் அல்லது இன்னும் நான் வேதத்தை சரியாக அறியாதவனாக இருப்பேன்; நான் தோற்றாலும் வேதம் தோற்கக்கூடாது..!
இதை அறிந்து கொள்ளவே "ஓட்டு" கேட்டுள்ளேன்;இந்த ஓட்டு போடக் கூடவா "அதைத்" தரவேண்டும்..?!
எனது இந்த பதி (ல்)வு நண்பர் ஜோ அவர்களுக்கு முன்பதாக வந்திருக்கவேண்டும்.(29/01//2009 அதிகாலை 2:30 மணிக்கு) ஆனாலும் "Band width exeeded" என தடைப்பட்டு விட்டது; எனவே பொருந்தா கருத்துக்களைப் பொருத்துக் கொள்ளவும்... இதோ நண்பர் SundarP அவர்களை நோக்கி...
நான் ரசிக மன்றம் ஆரம்பிக்கப் போவதில்லை;இங்கே ஒவ்வொருவரும் என்னை ஆதரித்தோர் எதிர்த்தும் எதிர்த்தோர் ஆதரித்தும் எழுதியதுண்டு;அதற்காகவே நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்;
நாமெல்லோரும் ஒரு நாள் சந்திக்கப் போவதையும் எனது ஆவியில் உணர்கிறேன்;நமது தளம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்;அதையும் நமது தொலைக்காட்சிகளில் காண்போம்;இதுதான் ஆரோக்யமான நட்புணர்வு;
"வேற்றுமையில் ஒற்றுமை" என்பது தானே இந்தியனின் அழகு..! "Argument wins the situation but loses the person" -William words worth. So never argue with others. -இது இன்று எனது நண்பன் அனுப்பி நான் ரசித்த SMS
எனவே நாம் நமக்காக எதையும் பேசாமல் நம்மை கவனிக்கிறவருக்காகவே (நேயரும் ஆயரும்...!) செய்வோம்; "அவரே" அனைத்தையும் முடிவு செய்வார்;நமக்கு வெற்றியும் தோல்வியும் இல்லை;
தொலைக்காட்சி பேட்டியில் இரு தரப்பு வீராவேசமாக மோதிக்கொள்வர்; முடிவில் அதை ஒருங்கிணைத்து நடத்துபவர் எந்த முடிவையும் எடுக்காமாலே "நேரம்" கருதி முடித்துவைப்பார்;இதில் யாருக்கு லாபம்?அதை கவனித்தவருக்கே..அவருடைய கருத்தில் தெளிவும் ''இன்னார் இப்படியா'' என்ற தெளிவும் பிறக்கும்;
அப்படியானால் "மார்ட்டீன் லூதர்" முதலாக சீர்திருத்தவாதிகள் எல்லோருமே தவறானவர்களா? அவர்கள் காலம் முடிந்திருக்கலாம்;அவர்களது யுகம் இன்னும் முடியவில்லை;அவர்கள் மாம்சத்திலில்லா விட்டாலும் எமது சிந்தையில் கருத்தாக்கம் உண்டாக்கி வாழுகிறார்கள்;
அவர்கள்தான் பரிசுத்த வேதாகமத்தை சிறை மீட்டவர்கள்;நமது தாய்மொழியில் {மொழிகற்று} மொழிபெயர்த்துத் தந்தவர்கள்;(எனவே தான் நாம் இத்தனைப் பிரிவாகப் பிரிந்தோம் என்பது தனி கதை..!)அதை வைத்து தான் நாம் சண்டையிடுகிறோம்; சீர்திருத்தவாதிக்கும் குற்றஞ்சாட்டுகிறவனுக்கும் வித்தியாசமில்லையா?
எனவே தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கும் எனது கருத்துக்களுக்கும் சம்பந்தமில்லை என அறிய வேண்டுகிறேன்;எனது எழுத்து சற்று தீவிரமாக தோன்றினாலும் அது வைராக்கியத்தினாலும் உளக் கொதிப்பினாலும் வெளிப்பட்டதேயன்றி வெறியினாலும் பொறாமையினாலும் வெளிப்பட்டதன்று. vincentmca: // சகோதரர் சில்சாம் சொல்வதில் சில என்னை பொறுத்தவரை சரியானதாக இல்லை. தங்களது பதிப்பை படிக்கும் போது வந்தவர்கள் அணைவரும் உண்மையாக ஆராதிக்க வரவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. //
நான் சொல்வது எல்லாம் சரியானதாக எனக்கே தோன்றுகிறதில்லை;ஆனால் வேதம் சரியானதாகவே இருக்கிறது;
நான் இசைக் கலைஞன்;ரசிகன்;நானும் அவர்களுடைய பாடல்களில் சிலதை உணர்ந்து பாடி (ஆனந்த)கண்ணீரோடு ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறேன்;எனவே தான் மக்கள் ரசனைக்கேற்ப "ஃப்யூஷன்" பண்ணவேண்டாமென்கிறேன்;அதனால்தான் "கன்ஃப்யூஷன்" ஆகிறது;
எனது "எங்கே கிறிஸ்தவ தமிழிசை" எனும் பதிவை கவனிக்க வேண்டுகிறேன்.
அங்கே ஆராதிக்க வருகிறவர்களைக் குறித்து நான் எதையும் சொல்லவில்லை;அவர்கள் ஆவலுடன் தான் வருகிறார்கள்;ஆனால் உணர்வைத்தூண்டுவதில் வெற்றி பெறும் தலைவர்கள் அவர்களை "ஆண்டருடைய அடிச்சுவடுகளின் வழியில்" நடத்தாமல்(சங்கீதம்.85:13) தங்களை முன்னிலைப்படுத்துவதால் ஒருகட்டத்தில் அந்த தலைவர்கள் மக்களின் ரசனைக்கேற்ப செயல்பட்டு தேவனற்ற மாயமான ஆராதனை வீரர்களாகிறார்கள்;
ஆவியானவர் சொல்வதையோ வேதம் சொல்வதையோ அவர்கள்(தலைவர்கள்) செயல் படுத்தும் நாளில் அவர்கள் செல்வாக்கு இழந்து புகழ் மங்கும்;அதற்குள் "சம்பாதித்துவிட்டால்" ப்ரச்சினையில்லை;"செட்டில்" ஆகிவிடலாம்;இதை சமாளிக்கவே "வாரிசுகளை" முன்னிலைப்படுத்துவார்கள்;அவர் வந்து "புதுமையாக" எதையாவது செய்வார்;இது உண்மையான சீஷத்துவம் அல்ல. SundarP Wrote :
// கடைசி கால சபையை சீர்திருத்தும் ஒரு பிரதான மேய்ப்பனாக உங்களை தேவன் தேர்ந்தெடுத்திருந்தால்...//
கர்த்தர் ஒருவரே பிரதான மேய்ப்பர்..! (1.பேதுரு.5:4) அவர் ஒருவரே நல்ல மேய்ப்பர்..! (யோவான்.10:11) எல்லோருக்கும் பெரிய மேய்ப்பரும் அவரே..! (எபிரெயர்.13:20)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)