// ஆண்டவராகிய இயேசுவை பற்றிய காரியங்கள் எல்லாம் தெளிவாக பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளதே,அதை விட்டுவிட்டு தங்களை ஆராய்ச்சியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் கூறிக்கொள்ளும் புற மதத்தவர்களின் கட்டுரைகளை படிப்பதினால் எந்த பிரயோஜனமும் கிடையாது. எப்படியாவது ஆண்டவரின் நாமம் தூஷிக்கப்படவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.அது ஒருபோதும் நிறைவேறாது. //
சகோ பவுல் இக்கட்டுரையை சரியாக வாசித்தீர்களா? இஸ்லாமிய பிரிவுகளில் ஒன்றான அகமதியா பிரிவினர் இயேசுவின் கல்லறை காஷ்மீரில் உள்ளதாக கூறுகின்றனர். அதனை ஆதார பூர்வமாக மறுப்பது எமது கடமை. இதனை இங்கே பதிக்க காரணம் என்னவென்றால் இஸ்லாமிய சகோ. கான் அவர்கள் காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதாக கூறினார். இதற்கு ஆதாரமாக விக்கிபீடியா தொகுப்பினை தந்தார். எனவே நடுநிலையாக பதில் எழுத வேண்டியது அவசியம்.
இக்கட்டுரை புறமதத்தவரினால் எழுதப்பட்டுள்ளதாக எதனை அடிப்படையாக வைத்து சொல்லுகிறீர்கள். எந்த வரி அல்லது எந்த பந்தி எங்களுக்கு அப்படிபட்ட எண்ணத்தை தந்தது என அறிய முடியுமா?
"பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். " ( லூக்கா.2:34 )
அருமை நண்பர் கொல்வின் அவர்களே, தங்களுடைய பதிவை வாசித்தபோது நினைவில் வந்த வாக்கியமே மேற்கண்ட வேத வாக்கியம்;இதன்படி இன்று வரை அனைத்தும் நடந்து வருகிறது;மேலும் தாங்கள் எடுத்து வெளியிட்டுள்ள கட்டுரையின் தொடுப்பைத் தந்திருந்தால் இன்னும் உபயோகமாக இருந்திருக்கும்;
சகோ.பவுல் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ளவேண்டாம்; அவர் இந்த கட்டுரையைக் குறித்து சொன்னது போலத் தெரியவில்லை; புறவினத்தாரின் கட்டுரைகளை வாசித்த பாதிப்பிலும் அதற்கு பதில் சொல்லும் விதத்திலும் இந்த கட்டுரை வரையப்பட்டிருப்பது தெரிந்ததே; தேர்ந்த ஆராய்ச்சி மனப்பான்மையுடனும் எச்சரிக்கையுடனும் இதுபோன்ற கட்டுரைகளை வாசித்து சரியான மறுப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமே; அதற்காக விசேஷித்த கிருபை பெற்றவர்களை இந்த கடைசி நாட்களில் கர்த்தர் எழுப்பி வருகிறார்.
எனவே தாங்கள் சோர்ந்து போக வேண்டாம்; நண்பர் "ஜோ" மற்றும் பவுல் ஆகியோருக்கு ஒரு வார்த்தை; நாம் எவ்வளவு தான் நம் கரத்திலுள்ள பைபிளிலிருந்து பைபிளை நிரூபிக்க முயற்சித்தாலும் அது வெளியிலிருப்போருக்கு திருப்தியைத் தராது; ஏனெனில் நீங்களோ அல்லது நானோ நிரூபணத்தின் அடிப்படையில் கிறித்துவிடம் வரவில்லை; விசுவாசத்தின் அடிப்படையிலும் இனம்புரியாத அன்பினால் உண்டான உள்ளுணர்வின் அடிப்படையிலே கிறித்துவிடம் வந்தோம்; எனவே எந்தவொரு காரியத்தையும் நிரூபிக்க உட்புற சாட்சிகள் (internal evidence) மாத்திரமல்ல, வெளிப்புற சாட்சிகளும் (external evidence ) நிரூபணமாக வேண்டும் ஆராய்ச்சியாளர்களின் நிலையாகும்; அதன்படி பைபிளிலிருக்கும் அனைத்து காரியங்களுக்கும் சம்பவங்களுக்கும் வெளிப்புற ஆதாரங்கள் தந்துகொண்டிருப்பது இயலாத காரியமாகும்;இவற்றுக்கு ஜோஸிஃபஸ் போன்ற அறிஞர்களின் கூற்றுகளையே நாம் இன்னும் சார்ந்திருக்கிறோம்; உதாரணமாக எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைகளாக இருந்ததற்கான ஆதாரமில்லை என்கிறார்கள்.
எனவே, 'அதான் பைபிள் தெளிவாக சொல்லிவிட்டதே', என்பது பொதுவில் பார்த்தால் நகைப்புக்குரியாகிவிடும்; ஏனெனில் நாம் விசுவாசத்தின் அடிப்படையில் நம்புவதை எதிராளி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கக் கோருகிறார்; அது எப்போதுமே சரியாக இருக்காது; ஏனெனில் இன்று ஒன்றை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நாளை இன்னொன்றை கேட்பார்; இது இப்படியே தொடரும்; அப்போது நீங்கள் சோர்ந்துப்போகவும் உங்கள் ஆவியில் ஒருவித கடினத்தன்மை உருவாகவும் வாய்ப்புண்டு; நம்மை ஆண்டவர் அழைத்தது புறாவைப் போன்ற கள்ளங்கபடற்ற மென்மையான ஆவியைக் காத்துக்கொண்டு எதற்குமே அவரை சார்ந்திருப்பதற்கு தான்; இதனை எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.
அப்படியானால் நம்முடைய நிலை என்ன? ஆராய்ச்சியாளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதுடன் அவர்களுடைய தடம் மாறாத விசுவாசத்துக்காக ஜெபித்து உதவலாம்; அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாக நாம் நடந்துகொள்ளலாம்.
ஏனெனில் சாத்தானுடைய வஞ்சகத்தினைப் பாருங்கள், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையில் இன்றைக்கு இந்து தீவிரவாதிகள் கிறித்தவத்தைக் குறித்த இஸ்லாமிய புரட்டுகளை ஏற்றுக்கொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கின்றனர்; இதில் அவர்கள் வெட்கப்படவில்லை; இதற்காக அவர்கள் - அதாவது இந்துத்வா சனியன்கள் இஸ்லாமையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை; நம்முடைய வேதத்தை தூஷிக்கவும் நம்மை ஒழிக்கவும் அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள், அவ்வளவே;
ஆனால் இதே இஸ்லாமியர்கள் சல்மான் ருஷ்டியைப் படுத்திய பாடுகளும், ஒரு நாளிதழ் முகமதுவை கேலிச் சித்திரம் வரைந்ததற்கு போட்ட கூப்பாடுகளும் உலகறிந்த உண்மைகளாகும்; இந்துவா(த்து)க்களும் சாதாரண மண் மேட்டை ராமர் பாலம் என்று கூறி ஊரை ரெண்டாக்குவதைக் காண்கிறோம்; ஆனால் அதே நம்முடைய மத உணர்வுகளை சற்றும் மதியாமல் தொடர்ந்து இயேசுவானவரின் பிறப்பிலிருந்து அவருடைய உயிர்த்தெழுதல் வரையிலும் கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதோடு நம்முடைய புனித மார்க்கத்தின் வேதத்தையும் இழிவுபடுத்தும் வண்ணமாகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
இவ்வளவு பேசுகிறோம், கிறித்துவுக்காக வைராக்கியம் என்கிறோம், யாராவது சிறப்பு அனுமதியின் பேரில் நம்முடைய அன்பு சகோதரர் உமர் போன்றவர்களுடைய உழைப்பை அச்சிலேற்றி அதனைப் புத்தகமாக்கி விநியோகிக்க எண்ணம் கொண்டோமா?
ஏன்,அனைவருக்குமான அரசாங்கத்தின் புத்தகக் கண்காட்சியில் நம்முடைய பங்கேற்பு இருக்கிறதா?
நம்முடைய சபை போதகர்களுக்கு இங்கே இணையத்தில் கிறித்தவம் சம்பந்தமாக நடந்துகொண்டிருக்கும் வாதப் பிரதிவாதங்கள் சென்று சேருகிறதா?
நம்முடைய மார்க்கம் சம்பந்தமான சர்ச்சைகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் அமைப்பு நம்மிடம் உண்டா?
வெட்கக்கேடான ஒரு காரியத்தைச் சொல்கிறேன், கிறித்தவ போதகர் என்று தேடுபொறி (google) யில் தட்டினால் அங்கே கிறித்தவ போதகர் கற்பழித்த செய்தியும் கைது செய்யப்பட்ட செய்தியும் பிரதானமாக இருக்கிறது; இதன் காரணம் என்ன, நம்முடைய பங்களிப்பு இங்கே மிக மிக குறைவாக இருக்கிறது.
இந்த நிலையில் கொல்வின் போன்ற இளைஞர்கள் எழும்பி வைராக்கியத்துடன் நம்முடைய மார்க்கம் சம்பந்தமான எழுத்துக்களால் இணைய தளத்தினை நிரப்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்; இன்னும் அநேக இளைஞர்கள் எழும்பி இதுபோன்ற பொருளில் - அதாவது கிறித்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பைபிளின் நம்பகத்தன்மை இவற்றில் வேலை செய்ய வேண்டுகிறேன்; போதனைகள் மற்றும் சீர்திருத்தம் சம்பந்தமான காரியங்களில் சற்று முதிர்ந்த அனுபவமுடையோர் சிறப்பாக பணியாற்றலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)