Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா?
Permalink  
 


Is Jesus Michael the Archangel?

 

"The foremost angel, both in power and authority, is the archangel, Jesus Christ, also called Michael."  -The Watchtower, November 1, 1995, p. 8


As the above quote from a Watchtower magazine indicates, the Jehovah’s Witnesses think that Jesus Christ is the incarnate Michael the archangel. They believe that Michael was Jehovah’s first creation and that Jehovah, through Michael who became Jesus, created all [other] things. Additionally, they instruct the Witnesses that at Jesus’ Second Coming, he will return as Michael the archangel. Contrary to the views held by the Watchtower Society, the Bible testifies that they are seriously flawed!

In order to demonstrate that Jesus was never an angel, it is necessary to first find the definition of angel in the Bible. According to Hebrews 1:7, 14, angels are described as spirit-beings who are ministers and servants of God. Naturally, this would include Michael the archangel:

  • Hebrews 1:7   “And of the angels he saith, Who maketh his angels spirits, and his ministers a flame of fire.”
  • Hebrews 1:14  (Regarding the angels)  “Are they not all ministering spirits, sent forth to minister for them who shall be heirs of salvation?”

Since all angels are servants of God, Philippians 2:6-7 declares that Jesus Christ, being in the form of God, “took upon him the form of a servant, and was made in the likeness of men:”

“Who, being in the form of God, thought it not robbery to be equal with God: (7) But made himself of no reputation, and took upon him the form of a servant, and was made in the likeness of men.”

Since Philippians 2:7 states that Jesus took the form of a servant, He could not have possessed the nature of a servant prior to His birth in Bethlehem. As a result, this verse provides conclusive proof that Jesus could not have been Michael ‘prior to’ His birth because an archangel is one of God’s servants (Hebrews 1:7, 14).

The Scriptures continue to stress that Jesus is more than a divine and created being, i.e. an angel. Regarding Him, Hebrews 1:4-5 states:

“Being made so much better than the angels, as he hath by inheritance obtained a more excellent name than they. (5) For unto which of the angels said he at any time, Thou art my Son, this day have I begotten thee? And again, I will be to him a Father, and he shall be to me a Son?”

This passage teaches that Jesus was made “so much better than the angels.” Hebrews 1:6 continues, “And again, when he bringeth in the firstbegotten into the world, he saith, And let all the angels of God worship him.” Here, God commands that all angels worship Jesus. Obviously, this would include Michael the archangel.

Additionally, according to the 1961 New World Translation (NWT) used by the Jehovah’s Witnesses, Hebrews 1:6 agrees that all God’s angels should worship Jesus. However, the more recent editions have been altered to read, “And let all God’s angels ‘do obeisance’ to him.” This sudden alteration by the Watchtower Society was clearly an attempt to conceal that Jesus is to be worshipped. Since only God is to be worshipped (Matthew 4:10), and they deny Jesus’ Deity, this change became necessary to support their flawed theology.

With the greatest of emphasis, Hebrews 2:5 and Hebrews 2:8 confirm that Jesus is not an angel at all! Hebrews 2:5 states, “For unto the angels hath he not put in subjection the world to come, whereof we speak.” Though this declares that God did not place the world in subjection to angels, Hebrews 2:8 testifies that God placed the world in subjection to His Son: “Thou hast put all things in subjection under his feet. For in that he put all in subjection under him, he left nothing that is not put under him. But now we see not yet all things put under him.”

Since Hebrews 2:5 states that God did not place the world in subjection to angels, and Hebrews 2:8 reveals that He placed the world in subjection to His Son, the conclusion is rather obvious: Jesus Christ is NOT an angel, Michael or otherwise!

There is another reason why Jesus cannot be Michael the archangel. Jude 1:9 states, "Yet Michael the archangel, when contending with the devil he disputed about the body of Moses, durst not bring against him a railing accusation, but said, The Lord rebuke thee." In this verse, Michael would not take it upon himself to rebuke or reprimand Satan. The Jehovah’s Witnesses believe that Jehovah created Michael who became Jesus and, through Michael, Jehovah created all [other] things. According to them, this means that Michael created Lucifer who became Satan. Therefore they conclude that Michael, who created Lucifer, was unable to reprimand His creation. This seems quite illogical and, after studying this carefully, even the most zealous Jehovah’s Witnesses should find this difficult to believe. To the contrary, Matthew 4:10-11 and Matthew 16:23 testify that Jesus had no difficulty rebuking Satan. As a result, He cannot be Michael the archangel:

  • Matthew 4:10-11   “Then saith Jesus unto him, Get thee hence, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve. (11) Then the devil leaveth him, and, behold, angels came and ministered unto him.”
  • Matthew 16:23   “But he turned, and said unto Peter, Get thee behind me, Satan: thou art an offense unto me: for thou savourest not the things that be of God, but those that be of men."

Daniel 10:13 provides another reason why Jesus cannot be Michael. In this verse, the archangel is called “one of the chief princes:”

"But the prince of the kingdom of Persia withstood me one and twenty days: but, lo, Michael, one of the chief princes, came to help me; and I remained there with the kings of Persia."

Since the Jehovah’s Witnesses believe that Jesus is Michael, and Daniel 10:13 reveals that he is “one of the chief princes,” does this mean that Jesus has equals? According to the Watchtower, what are the names of Jesus’ peers? Could they tell you? Though the organization remains confident while instructing its followers that Jesus is one of the chief princes of Daniel 10:13, they are unable to identify the others so they could further explain their rationale. How convenient!

One final reason why Jesus cannot be Michael is as follows: As previously mentioned, the Jehovah’s Witnesses think that Jesus will return as the archangel Michael. Keeping this in mind, Revelation 19:11-12 describes the Second Coming of Jesus Christ. Will He be coming as Michael? Not according to verse 12, which states that “he had a name written, that no man knew, but he himself:”

"And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him was called Faithful and True, and in righteousness he doth judge and make war. (12) His eyes were as a flame of fire, and on his head were many crowns; and he had a name written, that no man knew, but he himself."

Since Revelation 19:12 teaches that Jesus will have “a name written, that no man knew, but he himself,” the Jehovah’s Witnesses must be incorrect by thinking that Jesus is Michael. After all, according to this verse, Jesus cannot be Michael because nobody will know His true name at His Second Coming.

Finally, the Jehovah’s Witnesses rely on 1Thessalonians 4:16 as their justification that Jesus must be the archangel. It states:

"For the Lord himself shall descend from heaven with a shout, with the voice of the archangel, and with the trump of God: and the dead in Christ shall rise first."

Since this verse instructs that Jesus will descend from heaven “with the voice of the archangel,” the Jehovah’s Witnesses incorrectly conclude that Jesus must be Michael. Actually this verse teaches that when the Lord Jesus descends, it will be the archangel (with his own voice) who will accompany Him.

In conclusion, the Bible reveals that as long as the Jehovah’s Witnesses continue to believe that Jesus is Michael, they are only fooling themselves. Since they deny that Jesus is Jehovah, the archangel becomes their unreasonable alternative. Unfortunately for them, the Scriptures continually expose this fallacy.

 

http://www.kingmessiahproject.com/jw_michael_archangel.html



-- Edited by joseph on Wednesday 22nd of June 2011 11:23:01 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam wrote:

// என்னை பொறுத்தவரை "இயேசு தேவனின் வார்த்தை" என்றும் அவரும் மெயதேவனின் ஒருபகுதி என்ற நோக்கில் தேவனை  தொழுதுகொண்டால் தேவ்த்துவத்துக்குள் இயேசுவும் அடங்கிவிடுவார்! அனால் இயேசுவை மாத்திரம் தொழுது கொண்டால் இயேசுவுக்குள் தேவன் அடங்கமாட்டார். ஏனெனில் இயேசு தேவனால் அனுப்பபட்டவர் தேவன் இயேசுவைவிட பெரியவர்..! //

மேற்காணும் கருத்து இறைவன் தளத்தின் சுந்தர் பஞ்ச்...ஆமா,சீக்கிரமே இவர் பஞ்ச்..சர் ஆக வாழ்த்துக்கள்..!

இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி விவாதிக்கும் அளவுக்கு காலம் கெட்டுவிடவில்லை; சின்ன பசங்க கண்டதையும்  உளருவாங்க‌... பெரியவங்க பெருந்தன்மையா கண்டுகிடாம போயிடுவாங்க‌... அதுக்கு பேருதான் பெருந்தன்மை...!


 VNK:

// என்னை தொழுதுக்கொள்ளுங்கள் என்று அவரிடமிருந்து எந்த கட்டளை இல்லை!! மாறாக அவர் பிதாவிற்கு கீழ்ப்பட்டிருக்கிறார் என்கிறது வேதம்!! //

'அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்." (எரேமியா 29:12)

"Then shall ye call upon me, and ye shall go and pray unto me, and I will hearken unto you."

தமிழ் வேதாகமத்தைப் பொருத்தவரையிலும் மேற்கண்ட வசனம் மாத்திரமே தொழுகை சம்பந்தமாக கூறுகிறது;அதுவும் ஆங்கிலத்தில் வேறு  பொருளில் வருகிறது; அதுவும் குமாரனாகிய இயேசுவுக்கு சாதகமாகவே இருக்கிறது; ஏனெனில் குமாரனாகிய இயேசு தம்முடைய மகிமையை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்னரே எண்ணற்றோர் அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்கள்;அவர்களுடைய தேவைகளையெல்லாம் அவர் நிறைவேற்றினார்;அவர்மூலம் நன்மையைப் பெற்ற அனைவருமே அவர் நிமித்தம் பிதாவை மகிமைப்படுத்தினார்கள்;இயேசுவானவரை விழுந்து பணிந்துகொண்டார்கள்;அவர்களைத் தடுக்கவில்லை;ஆனால் பத்மு தீவில் பரி.யோவான் சந்தித்த தூதன் தன்னை வணங்காதபடி யோவானைத் தடுக்கிறான்.
 
மேலும் ஒன்றுக்கொன்று இணையான இருவாக்கியங்கள் உண்டு; அவையாவன‌,

  • "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." (எரேமியா.33:3)  "Call unto me, and I will answer thee, and show thee great and mighty things, which thou knowest not."

  • "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான்.14:14) If ye shall ask any thing in my name, I will do it.


மேற்கண்ட இரு வாக்கியங்களிலுமிருந்து இயேசுவானவர் இன்னார் என்று படிப்பறிவில்லாத சாதாரண மனிதன் கூட அறியமுடியும்;அதாவது மேற்கண்ட வசனங்களை வாசித்துக்காட்டி ஒரு குருடனிடம் இயேசு யார் என்று கேட்டால் அவன் உடனே சொல்லுவான்,இயேசு தொழத்தக்கவர்,அவர் ஜெபத்தைக் கேட்கிறவர் மாத்திரமல்ல,அதனை செய்தும் தருகிறவர்; ஏனெனில் அவர் பிதாவின் தன்மையையுடையவராக இருக்கிறார்..." என்பதாக‌.

மேலும் "தொழுதலுக்கு" நம்முடைய மார்க்கத்தில் பிரதான இடமில்லை என்பது தாங்கள் முந்தி அறியவேண்டியது; கற்பனைகளில் பிரதானமான முதல் கற்பனையிலேயே அன்புகூறுவாயாக என்பதே கொடுக்கப்பட்டுள்ளது; அப்படியே தம்மில் அன்புகூறுவதைக் குறித்து இயேசு சொல்லியிருக்கிறார்;

  • "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்." (யோவான் 14:15)
  • " இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்." (யோவான் 14:23)

இங்கே தொழுகை போன்ற சம்பிரதாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு பிரதானமாகிறது;கற்பனையின் பொருள் அன்பு என்றும் அன்பாயிருப்பவன் கற்பனையை நிறைவேற்றுகிறான்,கற்பனையை நிறைவேற்றுதல் என்றும் தேவன் அன்பாகவே இருக்கிறார் என்றும் மீண்டும் மீண்டும் அன்பே வலியுறுத்தப்படுகிறது;அவ்வாறு வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அன்புக்கு மூலபாஷையில் என்ன பொருள் என்று உங்களுக்கே தெரியும்;தூதர்கள் தொடர்பாக அன்பைக் குறித்து ஏதேனும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை;அவர் தமது தூதர்களிடத்தில் மிகவும் அன்புவைத்திருந்தார் என்று எங்காவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை;ஆனால் இயேசுவானவர் அன்பினால் நிறைந்திருந்தார்,இயல்பாகவே அன்பைப் பொழிந்தார்;இயல்பாகவே மன்னித்தார்;மன்னிக்கவோ அன்பு செலுத்தவோ பிதாவிடம் அனுமதி கேட்கவில்லையே..! ஏனெனில் அவர் உணர்வுடையவராக இருந்தார்,அவருக்கு சுயம் இருந்தது;அவர் சிந்தித்தார்,திட்டமிட்டார் செயல்பட்டார்,ஆனால் பிதாவின் சித்தத்துக்கு விரோதமாக செய்யாமல் தம்முடைய சுயத்தை மறைத்துக்கொண்டார்;ஏனெனில் மாம்சத்தில் வந்த இயேசு பிதாவின் ஒரு பாகமே தவிர அவரே பிதா அல்ல;அவரே பிதா என்று யௌவன ஜனம் தளத்தில் எழுதாமலே வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டு எங்கள்மீது சுமத்தப்படுகிறது;

ஆனால் நண்பர் சுந்தர் ஒருமுறை எழுதியிருந்தார், பிதா இல்லாமல் இயேசு முழுமையடையமாட்டார், ஆனால் இயேசு இல்லாமல் பிதாவால் இருக்கமுடியும் என்பதாக; இது நான் அவருடைய வரிகளைத் தழுவியது கருத்தாகும்; ஆனால் நாங்கள் சொல்லுகிறோம், பிதாவின் வார்த்தை எனும் தன்மையே மாம்சத்தில் வெளிப்பட்டது; இதனால் என்ன, பிதாவையும் குமாரனையும் வெவ்வேறு நபர்களாக ஒருவராலும் பிரிக்கமுடியாது;

தூதர்களைக் குறித்தோ அவர்கள் காற்றுகளைப் போன்றவ‌ர்கள் என்றும் பணிவிடை ஆவிகள் என்றும் வேதம் சொல்லுகிறது;அவ்வாறே பெயர் சொல்லி அறியப்பட்ட காபிரியேல் மற்றும் மிகாவேலும் பணிவிடை ஆவிகளே; அவர்களுக்கென்று உணர்வோ சுயமோ கிடையாது;அவர்கள் யாரிடத்திலும் அன்புகூர்ந்தார்கள் வேதத்தில் எங்குமே இல்லை;அவர்கள் பணியாட்கள் அவ்வளவே; இவர்களில் ஒருவராக எப்படி என்னால் இயேசுவை கற்பனை செய்யமுடிகிறதோ தெரியவில்லை.

Tag.VNK:"யார் மேசியாவின் எதிரிகள்"



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// என்னை பொறுத்தவரை "இயேசு தேவனின் வார்த்தை" என்றும் அவரும் மெயதேவனின் ஒருபகுதி என்ற நோக்கில் தேவனை  தொழுதுகொண்டால் தேவ்த்துவத்துக்குள் இயேசுவும் அடங்கிவிடுவார்! அனால் இயேசுவை மாத்திரம் தொழுது கொண்டால் இயேசுவுக்குள் தேவன் அடங்கமாட்டார். ஏனெனில் இயேசு தேவனால் அனுப்பபட்டவர் தேவன் இயேசுவைவிட பெரியவர்..! //

மேற்காணும் கருத்து இறைவன் தளத்தின் சுந்தர் பஞ்ச்...ஆமா,சீக்கிரமே இவர் பஞ்ச்..சர் ஆக வாழ்த்துக்கள்..!

இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி விவாதிக்கும் அளவுக்கு காலம் கெட்டுவிடவில்லை; சின்ன பசங்க கண்டதையும்  உளருவாங்க‌... பெரியவங்க பெருந்தன்மையா கண்டுகிடாம போயிடுவாங்க‌... அதுக்கு பேருதான் பெருந்தன்மை...!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அடியேனை சற்றே இளைப்பாறச் செய்த என்னருமை இரட்சகருக்கு ஸ்தோத்திரம்;எனக்கு அருமையான நண்பர் ஜாண் அவர்களின் வைராக்கியமான எழுத்துக்களுக்காகவும் அன்பான நண்பர் கொல்வின் அவர்களின் ஆதரவுக்காகவும் இதனைக் கூறுகிறேன்...ஆனாலும் மீண்டும் விரைவில் களமிறங்குவேன்...இன்னும் வாஞ்சையுள்ள நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்...கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினால் (மேசியாவின்) எதிரிகளை மேற்கொள்ளுவோம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இயேசுவை மிகாவேல் என்பவனுக்கு தேவனை சத்தியமாய் தெரியாது அவனுடைய பிதா நிச்சயமாக சாத்தான் தான்.//

பாசமும், தேவதூதனுக்கு கால் இல்லை என்று பபிலோனிய நம்பிக்கைப்படி சொல்பவர்களும் இப்படித்தான் பேசுவார்கள். இவர்களுக்கு வேத வசனம் முக்கியமில்லை. ரஸல் எழுதிய நூல்களே வேதம்.  இவர்கள் மனிதப் போதனைகளின் படி நடப்பவர்கள். ரஸலே இவர்களின் இரட்சகர்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

பரிசேயர்களின் அருவருப்பு உபதேசத்தினால் நண்பர் சுந்தர் பீடிக்கப்பட்டு உள்ளது தெளிவாய் தெரிகிறது. இவர்கள் எல்லாம் தேவனிடத்தில் அவருடைய கற்பனைகளை கைகொள்வதன் முலம் நேரடியாய் போய் விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அவருடைய் குமாரனை அறியாதவன் பிதாவையும் அறியான். பிதாவை எங்கள்ளுக்கு நன்றாக தெரியும் என்று பீத்திக்கொண்டு திரிந்த பரிசேயர்களை பார்த்து இயேசு என்ன சொன்னார் தெரியுமா?

ஆயினும் நீங்கள் அவரை (பிதா) அறியவில்லை  யோவான் 8:55

ஏன் அப்படி சொன்னார் என்றால், அவர்கள் பத்து கட்டளையை மாம்சத்தில் நிறைவேற்றி தேவனிடம் சேரலாம் என்று எண்ணி தங்கள் எதிரே நின்ற "ஒரே ரட்சிப்பின் கன்மலையை" அசட்டை செய்து, தேவன் தன்னுடைய ஒரே குமரன் மூலமாய் அளித்த "Amnisty" ஐ காலின் கிழே மிதித்தார்கள்

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள் (எபிரெயர் 10:29)


//யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
//

இயேசுகிறிஸ்துவின் தெய்வத்துவம் என்பதை விட்டு வேறு காரியங்களை இப்போது விவாதம் செய்யவேண்டாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் இந்த பரிசேயர்கள் திரும்ப, திரும்ப மேல்கண்ட வசனங்களை கொண்டு தவறாக பினாத்துவதால் கிரியை கிறிஸ்தவத்தில் எப்படி வருகிறது என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

மேலே உள்ள வசனங்களை தெளிவாய் பார்த்தால் அவை கற்பனைகளை கைகொள்ள சொல்லி வலியுறுத்துகிற வசனங்கள் அல்ல. வசனங்களை ஒருவன் கைகொள்வது அவன் தேவனிடத்தில் அன்புகூருவதின் அடையாளம் என்பதுவே. ஒருவன் உண்மையிலே தேவனை நேசிகிறானா அல்லது போலியா என்பதை அவனே தெரிந்து கொள்ளலாம்.  உலகத்திலே ரெண்டே ரெண்டு வகையான மதங்கள் தான் இருக்கின்றன.

1. நல்ல கிரியைகளை செய்து நீதியை சம்பாதித்து தேவனிடத்தில் ரட்சிப்பை பெறுவது
2. நான் பாவி என்று தேவனுடைய காலில் விழுந்து, அவருடைய குமாரனின் நீதியை பெற்று அதை பெற்றதின் அடையாளத்தை நல்ல கிரியைகளின் மூலமாய் வெளிப்படுத்தி தேவனிடத்தில் ரட்சிப்பை பெறுவது. இங்கே முக்கியமான ஒரு விஷயம் என்ன என்றால், நம்முடைய கிரியைக்கு இரட்சிப்பில் ஒரு பங்கும் இல்லை , சிலுவை மட்டுமே!

இந்த பரிசேயர்கள் போதிப்பது எது என்பதை உங்களுடைய பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், "இதை செய் அதை செய்யாதே" (Do's and Dont's) என்ற கட்டளை பட்டியல் போட்டு கொடுக்கப்படவில்லை. தேவனை நேசிப்பதும் அந்த நேசத்தின் வெளிப்பாடாய் அவர் வெறுப்பதை நாமும் வெறுப்பது தான் கிறிஸ்தவம். இந்த இடத்தில் தேவனுடைய அன்பு "இயேசு கிறிஸ்துவின் மூலம் மாத்திரமே முழுமையாக வெளிப்படுத்த பட்டிருப்பதால் இயேசுவை மகிமைப்படுத்தாமல், அவரை நேசிக்காமல் , அவருடைய பாதத்தில் விழுந்து தொழுது கொள்ளாமல் ஒருவனும் தேவனின் நிழலைக்கூட பார்க்கமுடியாது"

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (I யோவான் 4:9)

தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இயேசுவை மிகாவேல் என்பவனுக்கு தேவனை சத்தியமாய் தெரியாது அவனுடைய பிதா நிச்சயமாக சாத்தான் தான்.

முதலாம் கற்பனையே தேவனிடத்தில் அன்பு கூறுவது தானே! எப்படி அன்புகூர முடியும், அவரை விசுவாசிப்பதின் முலமே. தேவனுக்கு ஏற்கும் கிரியை இயேசுவை விசுவாசிப்பது.

அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:28-29)

 உலகமே இடிந்து என்தலையில் இறங்கினாலும் நித்தியத்திற்குரிய மகிழ்ச்சியில் திளைத்து,  என் தேவனை நான் மறுதலிக்க மாட்டேன் என்கிற உறுதியோடு இருப்பவன் கிறிஸ்தவன்

அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம் (ஏசாயா 51:11)


என் வேலையை இழந்தாலும், தரித்திரம் வந்தாலும், கொள்ளைநோய் வந்தாலும்,  எனக்கு அருமையானவர்களை  மரிக்ககொடுத்தாலும் அவர் எல்லாவற்றையும் என் நன்மைக்காகவே செய்கிறார் என்று மார் தட்டுகிறவன் கிறிஸ்தவன்!

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28)

 
பவுலோடு சேர்த்து உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பின்வருமாறு சொல்லுகிறவன் கிறிஸ்தவன்

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:35-39)

ஒரு பட்டியல் போட்டு கொண்டு இதை எல்லாம் செய்தேன் என்று சொல்லுகிறவன் பரிசேயன்.

வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்  (லூக்கா 18:12-14)

நியாயத்திர்ப்பின் நாளில் இயேசு பரிசேயனை (தன்னுடைய கிரியையில் மேன்மை பாராட்டுகிறவன்)
அவன் எப்பேர்பட்ட கிரியை செய்து இருந்தாலும் அவனை அறியேன் என்று சொல்லுவார்.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)

 



-- Edited by John on Tuesday 1st of March 2011 09:04:36 AM

-- Edited by John on Tuesday 1st of March 2011 09:25:11 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இங்கே நாமெல்லாம் மண்டைய பிச்சிண்டிருக்கோம்..ஆனால் எங்க ஆளு பாருங்க இன்னா சிம்ப்ளா போட்டுத் தள்றாரு...இந்த சின்ன வயசிலே புள்ள இன்னா ஞானமா பேசுது...இந்த சில்சாமுக்கு பொறாமை சாஸ்தி அதான் ஓயாம புள்ளைய கரிச்சி கொட்டிக்கிறான்..!

கிறிஸ்த்தவத்தில் இருப்பவர்கள் அநேகர் இயேசுவையே தேவனாக பாவித்து அவரையே ஆராதித்து வருகிறதை நாம் அறிவோம். ஆனால் அது ஒரு சரியான நிலைதானா? நாம்  யாரை தேவனாக தொழுது கொள்ளவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால்  நானும் எனது  பங்குக்குக்கு நாமறிந்த உண்மைகளை இங்கு அறிவிப்பது நல்லது என்று கருதுகிறேன்.

இங்கு நாம் நாமறிந்த உண்மையை எடுத்து சொல்லாவிட்டால சுவரில் உள்ள கல்லோ அல்லது கழுதையோகூட இந்த உண்மையை  சொல்லகூடும்!

"நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசு சொல்வதால் இயேசுவை ஆராதிப்பவர்கள் பிதாவும் இயேசுவும் ஒருவருக்குள்  ஒருவர்தான் என்ற நோக்கில், இயேசுவுக்குள் ஆவியாயிருக்கும் பிதாவைகண்டு விசுவாசித்து  ஆராதிக்க வேண்டும். அது ஒரு சரியான முறை

அல்லது

அனேகரது  கூற்றுபோல் "தேவன் மூன்று தனிப்பட்ட  ஆள்தத்துவம் உள்ளவர்" என்று கருதினால் "ஆவியோடும் உண்மையோடும் இயேசுவின் வழியாக தேவனையே தொழவேண்டும்" அதுதான் தேவனை ஆராதிக்கும் சரியான வழிமுறை என்றே நான் கருதுகிறேன்.

ஓரு சிறு உதாரணத்தை சொல்கிறேன்:

ஒரு கப்பல் கடலில் மூழ்க போகிறது அதில் இருக்கும் அநேகர் உயிர் பிழைக்க தங்கள் நாட்டின் பிரதமரிடம்  அபயமிடுகின்ற்றனர். அல்லது அந்த கப்பல் மூழ்க போவதை அறிந்த பிரதமர் அதன் கப்பலில் உள்ளவர்களை மீட்கும் சித்தம் கொண்டு, அவர்களை காப்பாற்ற  தனது மகனை அனுப்புகிறார். தகப்பனின் சித்தம் செய்யவந்த அவரது மகனும் தன் ஜீவனை கொடுத்து ஆபத்தில் மாட்டியவர்களை ரட்சிக்கிறார்.

இதை இரண்டு கான்செப்ட் அடிப்படையில் ஆராயலாம்:

1. ஆண்டவராகிய இயேசு தேவனின் வார்த்தையால் ஜெனிப்பக்கபட்ட தேவ குமாரன்!

சாவின் விளிம்பில் இருந்தபோது,  பிரதமரின் குமாரனாக வந்து அவர்கள காப்பாற்றியவரின்மேல் மிகுந்த பாசம் கொண்ட மீட்கப்பட்டவர்கள். அவருக்கே அதிகமாய் நன்றி செலுத்தி அவரையே பெரியதாகவும்  பெரியவராக  நோக்குகின்றனர். ஆனால் அவரோ இவர்கள் செலுத்திய நன்றியை நிராகரிக்கவும் இல்லை அதே நேரத்தில் "என்னை அனுப்பிய எனது அப்பாவாகிய பிரதமர் அவர் என்னைவிட பெரியவர் அவர் சொன்னதைத்தான் நான் செய்தேன் நீங்கள் உங்கள் நன்றியை அவருக்கு செலுத்துங்கள்" என்று சொல்லி சென்றுவிட்டார்.

அதுபோல் அழிவுக்கு நேராக இருக்கும் இந்த உலகத்தில் இருந்து, நம்மை  காப்பாற்ற வந்த தேவனின் குமாரன் இயேசு நமக்காக  ஜீவனையே  கொடுத்ததால், அழிவில் இருந்து மீண்டவர்கள் அவர் மேல் மிகுந்த அன்புகொண்டு  தன்னை காப்பாற்றிய இயேசுவை தேவனாககருதி அவர்மேல் மிகுந்த அன்பு செலுத்தவும் தொழவும்  சேவிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் இயேசுவோ "நான் உங்களை ஜீவனை கொடுத்து  காப்பாற்றியதால்  நீங்கள் என்னைத்தான் தொழவேண்டும்" என்று எங்கும் சொல்லாமல் "பிதாவை  தொழ வேண்டும்" என்றே  அவர்களிடம் சொல்லுகிறார்.  ஏனெனில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பிதாவின் கட்டளை  இல்லை என்றால் இவர் இங்கு வந்திருக்கவேமாட்டார். அவர் இயேசுவை அனுப்பி என்ன செய்யவேண்டும் என்று சொன்னாரோ, அதை மட்டுமே இயேசு நிறைவேற்றினார். எனவே இயேசுவுக்கு நன்றாக தெரிந்தது  "பிதாதான் எல்லோரிலும் பெரியவர்" எனவே அவரை தொழுவதுதான் சிறந்தது என்று சொல்லிசென்றார்.

2. இயேசுவே " பிதாவாகிய தேவன்" என்ற கருத்தின் அடிப்படையில் நோக்கினால்:

ஒருவேளை அழிவில் இருந்தவர்களை மீட்க, "மகன்" என்ற வேறொரு பெயரில் பிரதமரே வந்தார் என்று வைத்துகொள்வோம்  அதாவது  அவரது செயல்கள் மூலமோ, அல்லது அவரது தன்மைகள் மற்றும் வார்த்தைகள்  மூலமோ, வந்தவர்தான் பிரதமர்தான் ஆனால் வேறுஒருரூபத்தில் காப்பாற்ற வந்திருக்கிறார் என்று  எல்லோரும் அறிந்துகொண்டு, அவருக்கு நன்றி சொல்லி அவர்தான் பிரதமர் என்றுசொல்லி அவரை உயரத்த விரும்புகின்றனர். அது உண்மையாகவே இருந்தாலும். இங்கு சாதாரண மனிதனாக காப்பாற்ற வந்த   பிரதமரே சொல்கிறார் "நீங்கள் பதவியில் இருக்கும்  பிரதமருக்கு நன்றி செலுத்துங்கள்" என்று.

அதாவது அநேகர் கருதுவதுபோல்  "இயேசுவே பிதாவாக இருந்தாலும்" அல்லது அந்த "பிதாவே இயேசுவாக பூமிக்கு மாம்ச ரூபத்தில்" வந்திருந்தாலும் கூட, அவர் தன்னுடைய எந்த நிலையை தொழ சொல்கிறாரோ அந்த நிலையை தொழுவது தானே சரியான செயல் அவ்வாறு செய்யாமல் "நீர்தான் பிதா என்று நாங்கள் அறிந்து கொண்டோம் அதனால் உம்மைதான் நாங்கள் தொழுவோம்" என்றுசொல்லி பிடிவாதம் பிடிப்பதும் தேவனின் சித்தத்துக்கு விரோதமாக செயலப்டும் செயல்தான்  என்றே நான் கருதுகிறேன்.

அதாவது பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு, பரிசுத்தஆவியானவர மூவரும் ஒரேதேவனின் வெவேறு ஆள்த்துவங்களாக இருந்தாலும், தேவன் தன்னில் உள்ள ஆள்த்துவங்களில்  யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளாரோ அவரை தொழுவது கொள்வதுதானே சிறந்ததும் ஏற்ப்புடயதுமாக இருக்கும்?

"சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன்" ஒருபுறம்.  அவர் எதிரே பாவங்களுக்காக மரித்து ஜெயம்கொண்ட "தேவாட்டுகுட்டி இயேசு", இவரும் அவரும் ஓன்று" "இவர்தான் அவர் அவர்தான் இவர்"  ஆனால் நிலைதான் வேறு  என்பதை நாம் மறுக்கவில்லை.  ஆனால் வேதம் யாரை தொழுதுகொள் என்று கைகாட்டுகிறது?

வெளி 19:10   தேவனைத் தொழுதுகொள்
வெளி 22:9 தேவனைத் தொழுதுகொள் என்றான்
I நாளாகமம் 16:29கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

மத்தேயு 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக

இவ்வாறு "தேவனை தொழுதுகொள்" என்று திடமாக கட்டளையிடும் நேரடி வசனங்கள் வேதத்தில் இருக்க, அதை அப்படியே ஏற்க்க மனதில்லாமல், "இவர் "அவர் காலில் விழுந்தார்"அவர் "ஆண்டவர் என்று சொன்னார்" அதனால் "இயேசுவைத்தான் தொழ வேண்டும் என்று சொல்லி வியாக்கீனம் செய்வது சரியா?

இயேசுவின்மேல் மிகுந்த அன்புகொண்டு "என் அன்பு தெய்வம்" என்று சொல்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்று இயேசு சொல்கிறார்? ஒருவன் என்மேல் மிகுந்த  அன்பாயிருந்தால் என்னை தேவனாக்கி  கும்பிடுங்கள் என்றா சொல்கிறார்?

இல்லையே:

யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்

அதாவது இயேசு மிக தெளிவாக சொல்கிறார் நீ ஜெபம்பண்ண  வேண்டுமா?

மத்தேயு 6:9 பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று ஜெபம் பண்ணு
தொழுதுகொள்ள வேண்டுமா?

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

இல்லை நான் உன்னை பாவ படுகுழியில் இருந்து மீட்டதால் என்மேல் உனக்கு மிகுந்த அன்பு உண்டாகியிருக்கிறதா? என் அன்பு தெய்வம் என்று கருதுகிறாயா?
நான் தெய்வம்தான் மறுப்பதற்கு இல்லை! ஆனால்  நீ செய்யவேண்டியது என்னை தொழுவது அல்ல! "என்மேலுள்ள உன் அன்பைகாட்ட என் கற்பனையை கைக்கொள்"

யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்

இதுவே இயேசு சொல்வது!

ஆனால் நாமோ, அவர் வார்த்தையை கைகொள்வதற்கு மிகவும் வருத்தப்படுகிறோம். அதை நிராகரிப்பதற்கு ஆயிரம் சாக்கு சொல்லுவோம். அதை கைகொள்ளாமல் தவிர்ப்பதற்கு எங்காவது வேறு வசனஅதாரம் இருக்கிறதா என்று மூலை முடுக்கெல்லாம் தேடுவோம்.  ஆனால்  அவர் சொல்லாத காரியமாகிய  "அவரை தொழுவதற்கோ" அதிகஅதிகமாக  ஆர்வம் காட்டுகிறோம். ஏனெனில் கட்டளையை கைக்கொள்ளுவது என்பது மிகமிக கடினம் ஆனால் அவரை சாமியாக்கி தொழுவது என்பது மிக மிக சுலபம்.

(புறம்த ஜனங்கள் கூட ஒரு சாமிமீது மிகுந்த அன்பு வந்துவிட்டால் அங்கு கிடக்கும் நாலு செங்கல்லை தூக்கிவைத்து சந்தனம் குங்குமம் பூசி, பய பக்தியோடு கும்பிடுகின்றனர். ஆனால் சண்டை வந்து விட்டாலோ அந்த சாமிக்கு எதிரேயே இன்று காதால் கேட்ககூட முடியாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறார்களே)

அதற்காக இயேசுவை வணங்குகிறவர்களை எல்லாம் தேவன கைவிடுவார் என்று நான் சொல்லவரவில்லை! நான் யாரையும் நியாயம் தீர்க்க விரும்பவில்லை! இவர்கள் உண்மை நிலை என்னவென்பதை  ஆண்டவர்தாமேதீர்மானிக்க வேண்டும்!

இயேசுவே தேவனாக இருந்தும் அவர்  அவ்வாறு  "தேவனை தொழுதுகொள்"  என்று கைகாட்டவும்  ஒரு  காரணம் இருக்கிறது. ஒருவர்  மனிதனாக உலகத்தில் வந்துவிட்டால் அவருக்கென்று  ஒரு உருவம்  வந்துவிடுகிறது. ஆனால் தேவனோ ஆவியாயிருக்கிறார். எந்நிலையிலும்  "ஒரு உருவம்  நமது  மனதில் சிறிதேனும்   தொழபட கூடாது" என்பதில் தேவனும் இயேசுவும் மிகுந்த கவனமாக இருக்கின்றனர். அதற்க்கு "மந்திரங்கள்" சம்பந்தமான பல  முக்கிய காரணங்கள் உண்டு. அடைபட்டுபோன இருதயத்துக்கும் கண்களுக்கும் அது தெரியாததால், நாம் தேவையற்ற இடும்பு பிடிக்கிறோம்

இயேசு சொன்னது:
  • "உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது"(யோவான் 4:23 )
என்னை பொறுத்தவரை!

பரிசுத்தஆவியின் நிறைவோடும் உண்மையோடும், துதிக்கும் கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரராகிய  இயேசு வழியாக சின்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை தொழுவதே சிறந்தது! என்று தொழுதுகோள்கிறேன்.

அதே நேரத்தில் எனக்காக ஜீவனை தந்து என்னை  பாவ படுகுழியில் இருந்து தூக்கி எடுத்த இயேசுவை எனது உயிராக நேசிக்கிறேன் அவருக்கு கனத்தையும் மகிமையையும்  செலுத்துவதோடு அவரது வார்த்தையை கைக்கொண்டு நடப்பதற்கு மிகுந்த சிரமம் எடுத்து செயல்படுகிறேன்

இவர்களில்  ஒருவரை தாழ்த்தி இன்னொருவரை உயர்த்த நினைத்தாலும் அல்லது ஒன்றை குறைத்து ஒன்றி கூட்டினாலும்  அவர்கள் சரியான உண்மையை அறியவில்லை! என்றே  நான் கருதுகிறேன்! இடும்பு  பிடிக்கும் மனுஷர்களிடம் விவாதித்து எந்த பயனுமில்லை.

  • "ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.(I தீமோத்தேயு 6:16 )
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பாம்பை அடிக்கணும் ,ஆனா பாம்பு செத்துடக்கூடாது , அது எப்படி..?
இப்படி தான்...பிரபலமான வாழைப்பழ காமெடிக்கு சிரிக்காதவர்கள் ,
இதைப் படித்தால் நிச்சயமாகவே சிரிக்க வாய்ப்பு உண்டு..!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


// மோசேயின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதை எப்படி மோசேக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாதோ அதேவிதமாக இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதையும் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லமுடியாது. //

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி" என்று உலகத்தானே சொல்லுகிறான்;ஆனால் இங்கே ஜீவனுள்ள தேவன் அருளிய பரிசுத்த வேதாகமத்தை கையில் வைத்துக்கொண்டு தப்புந்தவறுமாக வாசித்து புரிந்துகொண்டு போய் சேருகிற காலத்தில் நற்கதியை அடையும் வழியையே கேள்விக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் புல்லர்களுக்கு எந்த போதகன் வந்து போதித்து மீட்பதோ? இன்னும் இந்த மாபாவிகளால் புதியவர்களும் தடுமாறும் அவலநிலை உண்டாகிறது; தடுமாறுகிறவர்களுக்கு இரக்கம் உண்டு;ஆனால் தடுமாறச் செய்தவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது.

  • "எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது."(2.கொரிந்தியர்.3:6)
  • "பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்." (1.கொரிந்தியர்.15:45)
இரத்தின சுருக்கமாகக் குறிப்பிடப்படும் வேத வாக்கியங்களிலிருந்து நாம் மோசேக்கும் இயேசுவானவருக்குமான வித்தியாசத்தை உணரமுடியும்; மோசேக்கும் இயேசுவானவருக்குமிடையே ஊழியத்தில் மட்டுமல்ல, தன்மையிலும் வித்தியாசமுண்டு என்பதை அறியாதோர் கையிலே வேதத்தை எடுக்கவோ விசேஷமாக புதிய ஏற்பாட்டு புத்தகங்களை கண்களால் பார்க்கவே உரிமையில்லை;ஆனால் அனைவருக்கும் பொதுவான பழைய ஏற்பாட்டை நீங்கள் தாராளமாக எடுத்தாளலாம்; ஆனாலும் பிள்ளைகள் என்ற ஸ்தானத்திலிருந்து அல்ல,அடிமைகள் என்ற நிலையிலிருந்து;மேலும் உடனே அவசரமாக செய்துகொள்ளவேண்டியது சுன்னத்து கலியாணம்..!

மோசேயைப் போல இயேசுவும் தன்னை ஒரு தீர்க்கதரிசியாகவோ சாதாரண போதகராகவோ முன்னிறுத்தியிருந்தால் அவரை சிலுவையில் அறையும் நிலையே வந்திருக்காது என்பதை முட்டாள்கள் உணரவேண்டும்; இன்னும் ஏதாவது அசிங்கமாக திட்டறதுக்கு முன்பாக ஓடிப்போயிடுங்க; உங்களிடமெல்லாம் பொறுமையா நியாயத்தை எடுத்துக் கூறி ஆதாயப்படுத்தும் எண்ணமோ ஆதாயப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோ எனக்கு இல்லாத காரணத்தினாலேயே முழுப் பகையாகப் பகைக்கிறேன்;ரெண்டில் ஒன்று பார்க்கும் நாள் நெருங்குகிறது, பாத்துடுவோம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

யெகோவாவின் சாட்சிகளை பற்றி நினைத்து பல முறை நான் வருந்தியது உண்டு. ஏனென்றால் இயேசு இல்லாமல் பிதாவிடம் நேரடியாக போவது போன்ற ஒரு பயங்கரமான காரியம் வேறு ஒன்றும் இல்லை. “இயேசு இல்லாமல் பிதாவிடம் போவதை விட சாத்தானிடம் போவது உத்தமம்” (I really mean it). ஏனென்றால் இயேசு இல்லாதபட்சத்தில் நாம் தேவனுக்கு சத்துருக்கள்

  • “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்….” (ரோமர் 5:10)

 

எதோ சியோன் மலைக்கு போவதால் நம்முடைய கதை (விழுந்து, எழுந்து) பரிந்து பேசும் இயேசுவின் ரத்ததால் ஓடிக்கொண்டு இருக்கிறது

  • “புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.” (எபிரெயர் 12:24)

சீனாய் மலையில் ஏறுவது சுலபமல்ல கர்த்தருடைய பிரசன்னம் உத்தமனாகிய மோசேயும் பயந்து நடுங்கதக்கதாக இருந்தது.

  • “ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது." (எபிரெயர் 12: 20-21)

இயேசு இல்லாத பட்சத்தில் தேவனுடைய கோபம் பற்றி எறியும் ஒருவனும் அதற்கு முன் நிற்க முடியாது

  • “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.” (யோவான் 3:36)

இவர்கள் ஏன் இயேசுவை தொழககூடாது என்று சொல்லுகிறார் என்றும் புரியவில்லை. வேதத்தில் திரித்துவதிற்கிற்கு அனேக சான்றுகள் உண்டு.

  • "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." (யோவான் 1:1)
  • "பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்." (ரோமர் 9:5)
  • "தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்." (யோவான் 20:28)
  • "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." (ஏசாயா 9:6)

ஸ்தேவானின் ஜெபம்.

  • "அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்." (அப்போஸ்தலர் 7:59)

 

24 மூப்பர்களின் ஜெபம்.

  • "அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து.." (வெளி 5:8 )

யோவானின் ஜெபம்.

  • "நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.." (வெளி 1:17 )

இயேசு மிகாவேலாக இருந்ந்தால் கீழே உள்ள மாதிரி சொல்லியிருப்பார்...

  • "யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்." (வெளி 22:8-9)

 

ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை!

கடைசியாக பிதாவே குமாரனை தேவன் என்று விளிக்கிறார்,

  • "குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது." (எபிரெயர் 1:8 )

இன்னும் அனேக வசனங்கள் இருக்கிறது ஆனால் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறன். சில முஹம்மதிய நண்பர்களோடு நான் உரையாடியது உண்டு அவர்கள் “இயேசு பிதாவை தன தேவன் என்றும்” , “நாளையும் நாழிகையையும் பிதா ஒருவர் தவிர..” போன்ற சில வசனங்களை வசனங்களை வைத்து வாதிடுவது உண்டு . இயேசுவுக்கு இருந்த இரண்டு சுபாவங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் தேவகுமரான் என்று அழைக்கபடுவதை மனுஷகுமாரன் என்று அழைக்கபடுவதை விரும்பினார். பாவிகளாகிய நம்மோடு இருப்பதாய் விரும்பினார்.

  • "அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்." (நீதிமொழிகள் 8:27-31)

மனுசிகம் ஆவர் விரும்பி ஏற்றது.

  • "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2:6-7 )

அன்பு சகோதரர் விஜய் சொன்னது போல, என் நேசரை ஆராதிப்பதினால் நான் நரகம்தான் போவேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே! இரட்சிக்கப்பட வாழ்கையின் முக்கிய நோக்கம் இயேசுவோடு வாழ்வதே! அவருடைய மகிமையை பார்ப்பதே! பொற்றாலம் போட்ட வீதியில் உலாவுவது அல்ல.

  • "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்." (யோவான் 17:24 )


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 



http://iemtindia.blogspot.com/2011/01/blog-post.html

இந்த திரியில் தரப்பட்டிருக்கும் தொடுப்புக்குச் சென்று கவனித்தால் திரித்துவ சத்தியத்துக்கு அற்புதமான ஒரு விளக்கத்தை புதிய கோணத்தில் செய்தியாளர் தருகிறார்; இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; காலங்காலமாக சந்திரக் கடவுளான அல்லாவையும் அவரது தூதராகத் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட முகமதுவின் குரானையும் ஓதி தொழுதவர்கள்; அவர்களை விட திரித்துவத்தை சரியாக உணர்ந்தோர் யார் இருக்கமுடியும்..? எனக்கு சமயம் கிடைக்குமானால் அந்த காணொளிப் படத்தின் விவரங்களை எழுத்து வடிவில் கொண்டு தருகிறேன்.

கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.யோவான்5:18

அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்."அப் 7:59,60

ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.சங்கீதம் 45:7
எபிரெயர்1:6-13
6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
7. தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.(But unto the Son he saith, Thy throne, O God, is for ever and ever: a sceptre of righteousness is the sceptre of thy kingdom.)
9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;(Thou hast loved righteousness, and hated iniquity; therefore God, even thy God, hath anointed thee with the oil of gladness above thy fellows.)
10. கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
11. அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;
12. ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
13. மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.வெளி5:13






__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். (ஏசாயா.45:22,23)

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர்.2: 9,10,11)

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்."(அப்போஸ்தலர்.4:12)

"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்."(அப்போஸ்தலர்.2:36)

"அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது."(ரோமர்.14:11)

G2962
κύριος
kurios


Thayer Definition:
1) he to whom a person or thing belongs, about which he has power of deciding; master, lord

1a) the possessor and disposer of a thing
1a1) the owner; one who has control of the person, the master
1a2) in the state: the sovereign, prince, chief, the Roman emperor

1b) is a title of honour expressive of respect and reverence, with which servants greet their master

1c) this title is given to: God, the Messiah

எல்லாம் அறிந்த ‍ ‍-  அன்பில்லாத அன்பு அவர்களே, உங்களைக் குறித்து மூலவியாதி பிடித்த கூட்டத்தார் என்று குறிப்பிட்டால் கொல்வின் போன்ற மென்மையான குணங்கொண்ட நண்பர்கள் கோபித்துகொள்ளுகிறார்கள்; இதோ அனைவருக்கும் நான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் மூலவியாதியால் சாகட்டும் என்று
நான் யாரையும் ஒருபோதும் சபிக்கவேயில்லை; ஆனால் மூலவியாதியில் முக்கட்டும் என்று ரெண்டர்த்தத்தில் குறிப்பிட்டேன்; அதன் நேரடியான காரணமாவது எந்தவொரு விவாதமானாலும் இவர்களுடைய ஸ்டைல் என்னவென்றால் தமிழ் மொழி பெயர்ப்பு சரியில்லை,மூலபாஷையில் அதற்கு இது தான் பொருள் அல்லது இந்த வசனமே மூலபாஷையில் இல்லை என்பதாக கதை வளர்த்துக்கொண்டே போவார்கள்;எனவே தான் இவர்களை மூல (பாஷை) வியாதி பிடித்தவர்கள் என்று குறிப்பிட்டேன் என்பதை தெரிவிக்கிறேன்;மேலும் இது எழுத்தாளர்களுக்கே உரித்தான சுவாரசியமான குணமாகும்;அதை இரசித்துப் பாராட்டாவிட்டாலும் தெரியாவிட்டாலும் மனமடிவாக்காதிருந்தால் போதுமானது.

இதோ மூல பாஷையில் சத்தியத்தைத் தேடும் நம
க்கு அருமையான பெரியவருக்கு அவருக்குப் பிடித்தமான நிறைய வசனங்களுடன் குறிப்பாக இந்த வசனங்களின் சிறப்பான கிரேக்க வார்த்தையைக் கொண்டு சத்தியத்தை விளக்க முயற்சிப்போம்; இதையெல்லாம் அவர் கரைத்துக் குடித்தவராக்கும்; இதற்கெல்லாம் அசர மாட்டார்; ஆனாலும் அப்பாவியான புதிய நண்பர்களுக்காகவே நான் முயற்சிக்கிறேன்; ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் மேலே குறிப்பிட்ட வசனங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்; இவை அனைவரும் அறிந்த வசனங்கள் தான்,ஆனாலும் நினைப்பூட்டுதலுக்காகவே குறிப்பிடுகிறோம்; மேற்காணும் வசனங்களின் முக்கிய வார்த்தையானது இயேசுவே ஆண்டவர்,அவரை பிதாவாகிய தேவன் மனுக்குலத்துக்குத் தம்முடைய பிரதிநிதியாகக் கொடுத்தார்,அவரை ஏற்றுக்கொள்ளுவதால் நாம் பிதாவுக்கு கீழ்ப்படிந்தவர்களாகி  அவருடைய இராஜ்யத்துக்குரியவர்களாக மாறுகிறோம்,' என்பதே எளிமையான செய்தியாகும்; இங்கே பிதாவினால் நியமிக்கப்பட்டவரை கிரேக்க மொழியில் "குரியோஸ்" எனப்படுகிறது;அதன் பொருளாகக் கொடுக்கப்படுபவை, அவரே அதிகாரி,குறிப்பிட்ட பொருளுக்கு சொந்தமானவர், எடுத்துக்கொள்பவர், முடிவெடுப்பவர், எஜமானன், ஆளுநர், ஏற்பவர் அல்லது தள்ளிவிடுபவர், ஒரு குறிப்பிட்ட கிரியை அல்லது நபரைக் கட்டுப்படுத்தக்கூடியவர், சர்வவல்லமையும் மாட்சிமையுமுள்ளவர் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தையாகும்; மேலும் குரியோஸ் எனும் வார்த்
தையினால் ரோமப் பேரரசனையும் அவனுடைய பட்டத்துக்கு வரக்கூடிய ஸ்தானத்திலுள்ள இளவரசனையும் அழைப்பார்கள்;

எனவே இங்கே பல நண்பர்களும் குறிப்பிட்ட வண்ணமாக மனித மொழியினாலும் அவனது சிற்றறிவினாலும் மகா தேவனுடைய இரகசியங்களை அறிவதும் அதனை விளக்குவதும் இயலாத காரியமாகும்;அதைவிட அர்ப்பணமே சிறந்தது; தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் சென்ற பவுலைத் தடுத்த ஒளியானவர் யார்? அந்த சத்தம் யாருடையது? அவருக்கு பவுல் செய்தது என்ன? அதையே நாமும் செய்வோமாக‌.

"அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்."(அப்போஸ்தலர்.9:6)

"அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்." (அப்போஸ்தலர்.9:5)

முக்கியமாக இங்கே அன்பு விடுத்திருக்கும் எச்சரிக்கை காரணமாக இராஜ்குமார் போன்ற மென்மையான இருதயம் உள்ளவர்கள் சற்றுங் கலங்கக்கூடாது; பிசாசு இப்படித்தான் மிரட்டுவான்; நண்பர் இராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்கு அன்பு அவர்கள் தேவைக்கும் அதிகமாக ரியாக்ட் செய்து ஸீன் போடுகிறார்; உதாரணமாக இராஜ்குமார் குறிப்பிட்ட வரிகள் என்ன‌?

//அன்பு போன்ற பிசாசுகள் பிதாவை வணங்குங்கள் ஆராதியுங்கள் என்று நயவஞ்சகமாகச் சொல்லுவதன் நோக்கம் நம்முடைய இரட்சகர் தேவாதிதேவன் இயேசு மகாஜாராஜா அவர்கள் சிலுவையில் சம்பாதித்து வைத்திருக்கும் பாவ மன்னிப்பான பொக்கிஷத்தை எப்படியாவது மனிதர்கள் அடையாமல் தடுத்துவிட வேண்டும் என்ற மட்டமான புளித்துப்போன சாத்தானின் தந்திரங்களில் ஒன்றுதான்.//

இதற்கு உடல் நடுங்க உதடுகள் துடிக்க அன்பு வெளிப்படுத்தும் கருத்து என்னவென்றால்,

//ராஜ்குமார் அவர்களே! என்னை நீங்கள் பிசாசு என்றோ இன்னும் எத்தனை இழிவான வார்த்தையாலோ மட்டந்தட்டுவதைக் குறித்து நான் சற்றும் வருத்தமடையப்போவதில்லை. ஆனால், பிதாவை வணங்குங்கள் ஆராதியுங்கள் என நான் சொல்வதை நயவஞ்சகம்  என்றும் அதன் காரணமாக என்னை பிசாசு என்றும் சொல்லி தயவுசெய்து பழிக்காதிருங்கள் என உங்களை மிகமிக கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், பிதாவை ஆராதனை செய்யும்படி நான் சொல்வதை அப்படியே இயேசுவும் சொல்லியுள்ளார்.//

ஐயா, நீங்கள் பிதாவை ஆராதியுங்கள் என்று சொல்லுவதை நாங்கள் நயவ‌ஞ்சகம் என்று கூறத் துணியவில்லை; ஆதிமுதல் ஆராதிக்கப்படுபவர் பிதா ஒருவரே, இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை;ஆனால் இந்த பீடத்தை பாவ மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம் அதனை கலைத்து அந்த மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு வழிகாட்டியவரே இயேசுகிறித்து;அவர் வழியாகவே எமது அனைத்து ஸ்தோத்திரங்களும் துதிகளும் பிதாவுக்கு செலுத்தப்படுகிறது;இதன்மூலம் பிதா மகிமையடைகிறார்; இயேசுவின் மூலம் பெற்ற பாவ மன்னிப்பாகிய மீட்புக்காக அவருக்கு நன்றி செலுத்தும்போது பிதாவுக்கு மகிமையுண்டாகிறது;இயேசுவை இரட்சகராக அனுப்பியதற்காக பிதாவுக்கு நன்றி செலுத்தினால் குமாரன் மகிமையடைகிறார்;நீங்கள் பிதாவை ஆராதியுங்கள் என்று மாத்திரம் சொல்லவில்லையே,குமாரன் ஆராதிக்கத் தகுதியற்றவர் என்றல்லவா சொல்லுகிறீர்கள்?

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

// பிதாவை ஆராதனை செய்யுங்கள் என நான் கூறுவதால் என்னை நீங்கள் பிசாசு எனச் சொன்னால் உங்கள் கூற்று இயேசுவுக்கும் பொருந்தும். அதாவது இயேசுவையும் நீங்கள் பிசாசு எனச் சொல்கிறீர்கள். //

விதண்டாவத்துக்கு மருந்தே இல்லையென்பதை நிரூபிக்கிறீர்கள்; இயேசுவைக் குறித்து நாங்கள் சொல்வதாக ஒரு அபாண்டமான ஒரு தூஷணத்தை எழுத உங்களால் மட்டுமே முடியும்;உங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள எதைவேண்டுமானாலும் எழுதலாமல்லவா..?

சாலமோனின் அவைக்கு உங்களைப் போன்ற மோசடி தாயானவள் வந்து தன் பிள்ளையை சாகடித்துவிட்டு அடுத்தவளுடைய சொந்தங்கொண்டாடி நின்றாள்; உங்களுக்கு
ம் அந்த போலி தாய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ஒரு நல்ல வசனத்தைக் குறிப்பிட்டுவிட்டு அதற்கடுத்த வசனத்தைக் கண்டுகொள்ளாமல் விடலாமா?

Mat 4:11  அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

இங்கே தூதர்களின் பணிவிடையை ஏற்றுக்கொண்ட ஆண்டவரைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்? இதையே எலியாவுக்கும் தூதர்கள் செய்தார்கள், அதனால் அவர் தேவனா என்று சொல்லுவீர்களானால் தூதர்கள் இயேசுவுக்கு செய்ததையெல்லாம் தொகுத்துப் பாருங்கள்,விவரம் தெரியவரும்.

"ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே."(
மத்தேயு 13:14,15)

இந்த வசனத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழலை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை;இது இயேசுவின் தேவத்தன்மையையும் அவர் பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்பதையும் ஏற்க மறுப்பவர்களுக்காக இயேசுவினால் மேற்கொள்காட்டப்பட்டது.

"அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
(மத்தேயு 13:11,12,13)

இங்கே யார் மந்தமானவர்கள் என்றும் யாருக்கு கொழுப்பேறியிருக்கிறது என்று விளங்கவில்லையா? சீடர்களாகிய எங்களுக்குப் புரிந்தது ஞானப்பிரகாசமாகிய உங்களுக்கு விளங்கவில்லையே, பரிதாபம் ஐயோ பரிதாபம், நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டீர்கள் ;இயேசுவின் மூலம் விளங்கிய பிதாவின் இரகசியமானது உங்களுக்கு அருளப்படவில்லையே என்று வருந்துகிறேன்;

// இயேசுகிறிஸ்துவை சிருஷ்டி என நான் எந்தப் பதிவிலும் கூறவில்லை. ஆயினும் இயேசுவை தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிறவர் என அவரைப் பின்வரும் வசனம் கூறுவதை ராஜ்குமார் அறிவாராக.//

வெளி. 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; ..

இந்த வசனத்தை நீங்களும் கோவை பெரியன்ஸும் சேர்ந்து பிரித்துபோட்டு மேய்வது எங்களுக்குத் தெரியும்; சிருஷ்டியின் ஆதி என்று புகழ்வது போலப் புகழ்ந்து இயேசு சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்காகவே சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று நீங்கள் கூறுவதும் அவரைப் பிரதான தூதன் ஸ்தானத்தில் மட்டுமே வைத்துப் பார்ப்பதும் தேவ தூஷணம் என்பது உங்களுக்கு விளங்கவில்லை;ஆண்டவர் ஆதியானவர் என்று ஒப்புக்கொண்டு பிதாவானவர் அனாதியானவர் என்று  புதுக்கரடி விடும் தந்திரமும் எமக்குத் தெரியும்;

இயேசுவானவர் சிருஷ்டிகளின் சிருஷ்டிகர் மாத்திரமல்ல, சிருஷ்டிகரின் தன்மையானவர்; அவர் நினைப்பதை இவர் செய்வார்;இவர் செய்ததை அவர் நிறைவேற்றுவார்; இரண்டு கண்கள் இருந்தாலும் ஒரே பொருளை நோக்குவதைப் போலவும் ஐந்து விரல்கள் இருந்தாலும் இணைந்து இயங்குவதைப் போலவும் பிதாவும் குமாரனும் ஆதிமுதலே அனாதியாய் இருக்கிறவராக இருக்கிறவர்களாக்கும்;

பிதாவின் ஆதி என்பதே அனாதி எனப்படுமானால் குமாரனின் ஆதி என்பது அவர் செய்யவேண்டியதாக இருக்கும் பிதாவின் சித்தமாக  அனாதியாக இருக்குமல்லவா? அந்த குமாரனானவர் அனாதியானவராக‌ இல்லாமல் அவரிடம் கர்த்தருடைய கிரியை வெளிப்படுமா? குமாரனுக்கு ஆதிமட்டுமே உண்டானால் அவருக்கு முன்னரே தேவனுடன் இருந்த தூதர்களும் ஏன் விழுந்துப்போன சத்துருவும் குமாரனுக்கு அனாதியான‌வர்களா? அதாவது ஆதிக்கு முந்தியது அனாதி என்ற கூற்றின் அடிப்படையில் குமாரனைவிட தூதர்களும் மனுக்குல வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த ஏதேனில் பிசாசும் பெரியவர்கள் என்றல்லவா ஆகும்? குமாரனும் அனாதியானவராக இருந்தால் தானே முன்னர் இருந்த மகிமைக்கு மீண்டும் ஏறிச் செல்லும் வண்ணமாக தம்மைத் தாழ்த்தமுடியும்?

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர்.2:6,7)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

காலத்திற்கு காலம் இவர்களைப் போன்றவர்கள் எழும்பிக்கொண்டுதான் இருப்பார்கள். வேத விற்பனர்கள் போன்றுதோன்றுவார்கள். சத்தியத்தை அறிய மாட்டார்கள். வேதத்தை கருத்தாய் வாசித்தால் திரி்த்துவத்திற்கு பதில் கிடைத்துவிடும். 

இவர்கள் போன்ற கூட்டங்களுக்கு இது தெரியமாமலிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எத்தனை ஆத்துமாக்களை வஞ்சித்துப் போடுகிறோம் என்ற கவலை இல்லை இவர்களுக்கு. கேட்டால் வேதாகமத்தின்படிதான் போதிக்கிறோம் என்ற நையாண்டி வேறு.


இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஐயா பெரியவரே, நாங்களெல்லாம் அதிகம் படிக்கல, ரொட்டித் துண்டுக்கும் நாலு எழுத்து படிப்பதற்குமே இங்கே வந்தோம்; எங்களுக்கு ரொட்டித் துண்டைக் கொடுத்து நாலு எழுத்து சொல்லிக் கொடுத்த பெரியவர்கள் "இயேசுவே, தெய்வம்" என்று சொல்லிக் கொடுத்தார்கள்; அதுமாத்திரமல்ல, அவரே "தெய்வம்" என்பதை அவர் எங்கள் வாழ்வில் மெய்ப்பித்து காட்டினார்; "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே " எனும் அதிகார தொனியும் ஆர்ப்பாட்டமுமான கர்த்தத்துவம் ஒரு மாவீரனை குதிரையின் மீதிருந்து கீழே தள்ளவில்லையா? உங்கள் கூற்றுப்படி அங்கே "யாவே " தேவன் அல்லவா வெளிப்பட்டிருக்கவேண்டும்? இயேசு எப்போது ஒரு மனிதனுடன் இடைப்பட்டு பேசினாரோ அப்போதே அவர் "தெய்வம்" தான்; இனி நான் அவரை "தேவன்" என்றும் சொல்லமாட்டேன்; அதற்கும் உங்கள் ஆட்கள் புது விளக்கங்களை வைத்திருக்கிறார்கள்; அது நீங்களோ, சுந்தரோ, கோவை பெரியன்ஸோ யாராக இருந்தாலும் "இயேசு தொழத் தக்க தெய்வமல்ல " என்று சொன்னாலே நீங்கள் - ' யெகோவா கூட்டத்தாரே ' என்பதை நேரடியாகவே கூறுகிறேன்; சுந்தர் கொஞ்சம் ஸாஃப்ட்டாக, "அவரும் தொழக்கூடியவர் தான்" என்று ஒருமுறையும் "அவருக்கும் கொஞ்ச காலம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றும் குழப்புவது உங்களையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறது; கர்த்தராகிய தேவன் வேறு, தேவனாகிய கர்த்தர் வேறு, கர்த்தராகிய இயேசு கிறித்து வேறு என்றெல்லாம் சுந்தர் அலம்பல் பண்ணவில்லையா? எல்லா தொடுப்பையும் எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து நான் என்ன டாக்டர் பட்டமா வாங்கப்போகிறேன்? எங்களுக்கு அந்த விசுவாசமே போதும்; காணாதவைகளுக்குள் நுழையும் துணிகரம் எங்களுக்கு இல்லை; பொறுத்துக்கொள்ளுங்கள்..!

இந்த பொருளில் விவாதித்த விவரங்களை அறிய தொடுப்பைத் தொடரவும்...

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=1&topic=2024&Itemid=287


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழலாமா..?
இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா..?


-மேற்கண்ட இரு தலைப்புகளுக்குள் எத்தனை வித்தியாசம்..!
ஆம், முதலாவது தலைப்பு நம்முடைய தளத்தினுடையது;
இரண்டாவது தலைப்பு சக தளத்தின் தலைப்பு.

அடுத்ததாக இவர்களுக்கு பதிலளிப்பதாக நான் எழுதியதில் இந்த திரி காத்திருக்கிறது;ஆனாலும் நான் தாமதித்ததே பல்வேறு மாற்றங்களுக்கு ஊக்கமாக இருந்ததில் மகிழ்கிறேன்;நான் மிகுந்த சிரமத்துடன் தேடி எழுத வேண்டிய உண்மைகள் மற்றும் அணுகவேண்டிய பகுதிகள் எல்லாம் நண்பர்களுடைய தளத்தில் வெளிப்படையாகி விட்டதுடன் அவர்களுடன் நாம் முரண்படும் காரியங்களும் அவர்களுக்குள்ளேயே இருக்கும் முரண்பாடுகளும் இன்னது என்று தெளிவாகிவிட்டது நல்லதொரு விஷயமாகும்; இதற்காகவே நான் காத்திருந்தேன்.

என்னை பொது எதிரியாக வைத்து அவர்கள் தங்களுடைய தாறுமாறுகளை மறந்திருந்தார்கள்;தற்போது அது மீண்டும் வெளியாகத் துவங்கியிருக்கிறது; தற்போதய நிலையில் அவர்கள் வெவ்வேறான பின்னணியிலிருந்து வந்த பொருந்தாத குழுக்கள் இஸ்ரவேலருக்கு எதிராக ஒன்றுபடுவதைப் போலக் காணப்படுகிறார்கள்;அவர்கள் விழுந்து போனதைப் போலவே இவர்களும் விரைவில்...!

"அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள். (2.நாளாகமம்.20:22,23)

இதனால் என்ன, இயேசுவை தெய்வமாகத் தொழுவோர் அவர்களை விட்டு விலகவோ அல்லது குழப்பமான அவர்களுடைய கொள்கையை ஏற்றுக்கொள்ளவோ வழிபிறந்துள்ளது;

வானாதி வானங்கள் வழியாகப் பரலோகத்துக்கு ஏறிச் சென்ற சர்வ வல்ல தேவனே (பூமியில் தாழ்விடங்களில் நமக்காக இறங்கினார்...) இந்த காரியத்தில் தீர்மானத்தின் விவரத்தை (Psalm) தூதர்கள் முன்பாக அறிவித்துவிட்டு காத்திருக்கும்போது சாதாரண மனிதனான நான் என்ன செய்யமுடியும்?

இதற்கு மேலும் நான் என்ன எழுதுவதென்று தெரியவில்லை; அவர்களுடைய தொடுப்பைத் தந்திருக்கிறேன்;அதில் சென்று அந்த வித்தியாசமான போதனைகளையும் மாறுபாடான சத்தியத்தையும் நிதானமாக ஆய்ந்து அவரவர் சிந்தனையில் வைத்து ஆம் என்க அல்லது மறுக்க வாசல் திறந்திருக்கிறது;இதுவே போதும் என்று நினைக்கிறேன்;

பிலாத்து கேட்கிறான்,"நசரேயனாகிய இயேசுவை என்ன செய்யவேண்டும்" என்று. அதற்கு இந்த உலகம் இரண்டே பதிலைச் சொல்லமுடியும்; ஒன்று, அவரை சிலுவையில் அறையவேண்டும் அல்லது அவரை விடுதலை செய்யவேண்டும்; அடுத்து அவர் மரித்தும் உயிருடன் எழுந்தபோது அவரை என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி வரும்; சீடர்களை அவரை என்ன செய்தார்களோ அதையே செய்தால் போதும்;சீடர்கள் அவரை விழுந்து பணிந்துகொண்டார்கள், தொழுதார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உயர எடுத்துக்கொள்ளப்பட்டபோது வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள்;இன்றைக்கும் தெய்வத்தைத் தேடும் மனிதர் வானத்தையே அண்ணாந்து பார்க்கிறார்கள்;அவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி இதுதான்;அவர் மீண்டும் வரும் வரை அவருடைய பலத்தினால் பாவத்தை மேற்கொண்டு அவரைத் தொழுது சேவித்து பங்கமில்லா வாழ்வு வாழ பரிசுத்த வாழ்வு வாழ்ந்து அவருடைய வருகைக்காகக் காத்திருக்கவேண்டும்.

இறுதியாக,சக தளத்தில் இந்த திரியின் பதிலாகப் பதிக்கப்பட்டவைகளின் விவரம் அறிய எனது அன்புக்குரிய வாசகர்கள் தாராளமாக அந்த தளத்துக்குச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாததால் அதன் தொடுப்புகளைத் தந்திருக்கிறேன்.
இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமா?

இயேசுவை தொழுதுகொள்வது பற்றிய வேத வசனம்!


இயேசுவை தொழுதுகொள்வது பற்றிய வேத வசனம்:இறைவன் தளம்


தேவைப்பட்டால் என்னை ஆவியானவர் அனுமதித்தால் அது சம்பந்தமான எனது மாற்றுக் கருத்தையும் இந்த சர்ச்சையில் எனது பார்வையையும் நிச்சயமாக எழுதுவேன்; தள நண்பர்கள் தங்கள் நிலையை அதாவது இயேசுவை தெய்வமாகத் தொழலாம் என்ற கருத்துக்கு ஆதரவான சத்தியங்களைப் பதிக்க வேண்டுகிறேன்;ஏனெனில் நாம் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையை விளக்கத் தெரியாததாலும் எதிரி உரம் கொண்டு புதியவர்களைத் தடுமாறச் செய்வான் என்பதை நாம் மறந்து போகவேண்டாம்; ஒரு பொய்யை எத்தனை சிரத்தையுடன் ஆராய்ந்து இதமான- மென்மையான வார்த்தைகளால் சத்துரு உள்ளே நுழைக்கிறான் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

சிலர் தன்னளவில் யோசித்து அதானே என்று உண்மையைச் சற்று தாமதமாக உணர்ந்துகொண்டாலும் அதனை வெளிப்படையாக அறிவிக்க தைரியமில்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்; ஆனாலும் இவர்கள் ஒரு கட்டத்தில் இயேசுவைத் தொழுவதை எதிர்த்து எழுதியது அத்தனை விரைவில் யாருக்கும் மறந்துபோகாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.அவர்கள் தங்களை விசேஷித்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் பெலவீனத்தால் நம்மை எதிர்க்கிறார்களே தவிர அவர்கள் குழப்பவாதிகள் என்பதையும் விரைவில் வெளிப்படுத்துவேன்.

நான் ஒரு குருடன்; கர்த்தர் என் கண்களுக்கு வெளிச்சம் தந்தார்; அவருடைய சித்தத்தை செய்யாமல் அவரை நான் கர்த்தாவே ,கர்த்தாவே என்று அழைப்பதால் அவர் மகிழ்ந்துவிடமாட்டார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்;அவருடைய சித்தம் என்பதே இயேசுவே ,கர்த்தர் என்பதை எல்லா ஜனத்துக்கும் அறிவிப்பதே என்பதில் என்னுடைய அழைப்பின் நோக்கம் நிறைவேறும்;ஆனால் இந்த வசனத்தைத் தவறாக வியாக்கியானம் செய்யும் உணர்வே இல்லாமல் இஸ்லாமியரைப் போல இவர்களும் இயேசு
வே தன்னைக் கர்த்தர் என்று அழைப்பதை விரும்பவில்லை,அதை அவரே கண்டித்தார் என்று கூறுவது சத்தியப் புரட்டாகும்;விரைவில் விவரத்துடன் வருகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நாம் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட வண்ணமாக தெளிவான போதனையின் மூலம் நம்முடைய நம்பிக்கையைத் தெரிவிக்கவே நம்முடைய எதிரிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்;அதன்மூலம் அவர்களுக்கு இன்னும் நம்மை தூஷிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களது எண்ணமாகும்;ஆனால் நாம் அவர்களுடைய சூழ்ச்சிகளை அறிந்திருந்ததால் தொடர்ந்து அவர்களுடைய எழுத்துக்களையே விமர்சித்து வந்தோம்;இதன் காரணமாக நம்மீது எரிச்சல் கொண்ட அவர்கள் பலவாறாக கிண்டலும் கேலியும் செய்து எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதை இங்கே காணமுடியும்.

இதற்கு உதாரணமாக பொருந்தாத உபதேசக்காரர்களெல்லாம் நம்மை எதிர்க்கும் ஒரே நோக்கத்துடன் ஒன்றுபடுவதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்; இதற்கு முன் அவர்களுக்குள் நடைபெற்ற விவாதங்களை உற்று நோக்கினாலே அது தெரியவரும்;ஆனாலும் நாம் இவர்களுடன் எந்த காலத்திலும் சேர்ந்துபோகவே முடியவில்லை.

இவர்களை இணைக்கும் பிரதான கொள்கையின் அடிப்படையிலேயே இந்த கட்டுரையே பிறந்தது;அதாவது இயேசுகிறித்து தொழத்தக்க தெய்வமல்ல என்ற கொள்கையிலேயே இவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

"முதல் கோணல், முற்றும் கோணல் "என்பார்களே அதுபோல ஆரம்பத்திலேயே சரியில்லாத இவர்கள், எதைப் போதித்தால் என்ன எல்லாம் வஞ்சகமும் அதன் சாரமுமாகவே இருக்கும்;

நம்முடைய கட்டுரையானது பல்வேறு எதிர்விளைவுகளை எதிர்முகாமில் ஏற்படுத்தியிருக்கிறது;ஆனால் அவர்கள் கூற்றுப்படி இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம் என்று (தவறாக‌..?) கூவியே சிடி போட்டு பிழைக்கும் நம்முடைய "ஆரோக்கிய (..?) " உபதேசக்காரர்களை இது எதுவுமே பாதித்தது போலத் தெரியவில்லை;வழக்கம் போல பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

குறைந்த பட்சம் ஒரு மின்னஞ்சல் மூலமாகவாவது தமது கருத்தை தெரிவிக்கலாம்;ஆனால் பாவம் அவர்களுக்கு என்ன அவசர வேலையோ..?

இதன் விளைவு என்ன, இந்த துருபதேசக்காரர்கள் நீட்டி முழக்குவதெல்லாம் சரிதானோ என்ற குழப்பத்துக்கு அப்பாவியான ஆத்துமாக்கள் வரக்கூடும்;உடனே சுந்தர் போன்றவர்கள் சொல்லுவார்கள்,"பிதா இழுத்துக்கொள்ளாவிட்டால் எவனும் வரமாட்டான் " என்று..!

ஆம்,நம‌து கட்டுரையின் அடுத்த கட்டத்தின் முதலாவது பகுதியில் சுந்தர் அவர்களின் தளத்தில் நம்முடைய கட்டுரை ஏற்படுத்திய விளைவுகளையும் நாம் விவாதிக்கும் (இயேசுகிறித்து தொழத்தக்க தெய்வமா...) பொருளில் அவருடைய முந்தைய கட்டுரைகளின் நிலையினையும் நாம் நிதானிக்கப்போகிறோம்.

நம்முடைய கட்டுரை வெளியான அடுத்த ஒருமணி நேரத்தில் சற்றும் சம்பந்தமில்லாதது போலவும் தமக்கே தோன்றிய ஞானம் போலவும் பட்டும் படாமலும் "இயேசுவை தொழுதுகொள்வது பற்றிய வேத வசனம்! " என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை சுந்தர் அவர்கள் வீசினார்.

நிறைய வசனத்தைப் போட்டால் மட்டும் போதாது,அதனை நிதானமாக வியாக்கியானம் செய்ய கொஞ்சம் அறிவு வேண்டும் என்பது பாவம் அவருக்குத் தெரியாது;கேட்டால் ஆவியானவர் ஓதினார் என்பார்,அடுத்த நாள் ஆவியானவர் கண்டித்தார் என வாபஸ் வாங்குவார்;இவரைப் போன்ற கருத்துடைய ஒரு மனிதன் மட்டுமே இருந்தாலும் அவனுடன் போராட நான் ஆயத்தமாக இருக்கிறேன்;ஏனெனில் ஒரு துளி விஷம் ஒரு குடம் பாலையும் கெடுத்துப் போடும்;அப்படியே செத்த ஈக்களும்...

// இந்த வசனப்படி பிதாவை யாரென்று  இயேசு  ஒருவருக்கு வெளிப்படுததாதவரை அவர்கள் இயேசுதான் பிதா என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பர்கள் இவ் வார்த்தைகளை நாம் தவறு என்றும் சொல்லுவதற்க்கில்லை. ஏனெனில் சென்னை பக்கத்தில் உள்ள  "வங்க கடலை" அறிந்த ஒருவர் இதுதான் பசிபிக் பெருங்கடல் என்று சொன்னால், வங்க கடல் ஒருபுறம்  இந்துமாக சமுத்திரத்தில் சேர்ந்து அந்த இந்துமகாசமுத்திரம் பசுபிக் கடலில்  சேர்ந்துள்ளதால் அதிலும் சில உண்மைகள்  இருப்பதுபோல் இக்காரியம் உண்மையாகிறது. அதுபோல் இயேசுவும் தேவனும் ஒன்றுக்குள் ஒன்றானவர்களே! //

ஏதேதோ வசனங்களைக் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக சுந்தர் குறிப்பிட்டது மேற்கண்ட வரிகள்;விவரத்தை பொறுமையிருந்தால்
வாசகர் அவருடைய தளத்திலேயே வாசித்துக்கொள்ளலாம்.

இயேசுவையே பிதா என்று இங்கு யாரும் சொல்லவில்லை;அது தனியான துர்ப்போதனை அதைக் குறித்த விவாதம் இப்போது எழவில்லை;இதுவே இந்த துருபதேசக்காரர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்;நம்மிடமிருந்து இன்னும் இன்னும் விஷயங்களை வரவழைக்கும் தந்திரமாகவே இதுபோல மேலோட்டமாக நம்முடைய கருத்துக்களை இப்படி திரித்து வெளியிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.

எனவே தொடர்ந்து சமுத்திரத்தை உதாரணமாகக் கூறி சுந்தர் உளரும் உளறல்களுக்கு நாம் பொறுப்பல்ல;இது இந்துத்துவா(வாத்து)க்களின் கருத்தாகும்;இவருக்கு அந்த பாசம் இன்னும் விட்டுப்போகாததால் அந்த உதாரணத்தையே காட்டுகிறார்;இதுபோன்ற ஒப்பீடு பரிசுத்த வேதத்திலிருந்து வந்ததல்ல; தெய்வத்துவத்தை கடலைக் கொண்டு நிருபிக்க இயலாது; ஆனால் அதன்மீது நடந்தவரைக் கொண்டு நிரூபிக்கலாம்.

நம்முடைய நண்பர் சுந்தர் அவர்களைப் பொருத்தவரையிலும் தேவனாகிய கர்த்தர் வேறு, கர்த்தராகிய தேவன் வேறு, கர்த்தராகிய இயேசுகிறித்து வேறு, சர்வ வல்லமையுள்ள தேவன் என்பவர் வேறு, வல்லமையுள்ள தேவன் என்பவர் வேறு;இப்படி எண்ணற்ற கொள்கை குழப்பங்களைக் கொண்டவரிடம் எப்படி ஆரோக்கிய உபதேசத்தை எதிர்பார்க்க முடியும்?

அருமை நண்பர் தான் செல்லும் சென்னை சின்னமலை ஏஜி சபையில் இந்த கொள்கைகளைக் குறித்து பிரசங்கம் செய்யலாமே? அங்கே இயேசுவையும் ஆராதிக்கிறார்களே?இன்னுமா அவர்களுக்கெல்லாம் பிதா வெளிப்படுத்தப்படவில்லை? அப்படிப்பட்ட தவறான ஆராதனைக்கு செல்வதால் யாருக்கு என்ன இலாபம்?

// இன்னும்கூட ஒரு சிறு விளக்கம் கொடுக்க விளைகிறேன்!

பிதாவாகிய தேவன் }======= தேவனாகிய கர்த்தர்
}======= கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து

அதாவது "தேவனாகிய கர்த்தரின்" அடுத்தநிலையோ அல்லது "தேவனாகிய\ கர்த்தரோ"  இயேசு அல்ல! பிதாவாகிய தேவனின் இன்னொரு நிலையே கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்து. "பிதாவாகிய  கர்ததர்" என்றோ "கர்த்தராகிய பிதா" எனறோ வசனம் எங்கும் சொல்லவில்லை யெகோவா தேவனேதான் இயேசுவாக வந்தார் என்பதெல்லாம் தேவத்துவத்தின் உண்மைகளை அறியாதவர்கள் சொல்லும் தவறான ஒரு கருத்துபோல இருந்தாலும் மிகவும் மைநூட்டாக ஆராய்ந்தால் அதிலும் உண்மை இருப்பதை அறியலாம். //

மேற்கண்ட வரிகள் சுந்தர் அவர்களுடைய மற்றொரு திரியிலிருந்து எடுக்கப்பட்டது;அதன்படி மகா குழப்பமான ஒரு இறையியல் கொள்கையை சுந்தர் அவர்கள் எழுதியிருக்கிறார்;இதை வாசிக்கும் புதிய விசுவாசிக்கு, "சர்தான் போங்கடா நீங்களும் உங்க இறைக் கொள்கையும் " என்று தானே தோன்றும்?

இதன்படி யெகோவா தேவனே , இயேசுவாக வந்தார் என்று சொல்லவரும் நண்பர் மற்றொரு நிலையில் இயேசுவும் பிதாவும் ஒன்றல்ல என்றும் சொல்லுகிறார்;அவரை விரும்பி அவருடன் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்களே இதனை விளக்கவேண்டும்.

அப்படியானால் பிதா என்பவர் யெகோவா தேவன் இல்லை என்பாரா?
இயேசுவானவர் இரண்டாவது நிலையில் கூட இருக்க தகுதியற்றவர் அவர் மூன்றாவது நிலையிலேயே இருக்கிறார் என்றும் துணிகரமாக எழுதியிருக்கிறாரே,அவரை இப்படியே விட்டுவிடலாமா? ஒரிரு வருடம் கழித்தும் இந்த கட்டுரையானது இங்கே இருக்கும் அப்போது அதை வாசிக்கும் பல எளியவர்கள் இதுபோன்ற கருத்துக்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே இவற்றை நீக்க அல்லது மறுக்கக் கடுமையாகப் போராடுகிறோம்.

// இயேசு எங்கும் தன்னை தேவன் என்று சொல்லிக்கொண்டதாக வேதாகமத்தில் இல்லை. என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான் என்பதுவரை சொன்ன இயேசு நான்தான் பிதா/தேவன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இங்கு இந்த விவாதம் இல்லை! ஆனால் அவர் "என் பிதா என்னிலும் பெரியவர்" என்றும் "அவர் சித்தம் செய்யவே  என்னை அனுப்பினார்" என்றும்   சொல்லியிருப்பதால்   இயேசுவுக்கு மேல் பிதாவாகிய தேவன் இருப்பது  யாராலும் மறுக்கமுடியாது.  //

மேற்கண்ட வரிகளும் சுந்தர் அவர்களுடைய தளத்தில் "மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்த்து யார்? " என்ற தலைப்பில் கடுமையாக விவாதிக்கப்பட்டு பிறகு பூட்டப்பட்ட திரியாகும்;அதில் அவர் என்னை மறுத்து சொல்லும் கருத்தை கவனித்தால் அவரது நிலை புரியும்;இயேசு தன்னை தேவன் என்று சொல்லிக்கொள்ளாததால் அவரை தெய்வநிலையில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்,சுந்தர்;இந்த கட்டுரையை வாசகர் நிதானமாகப் படித்தால் அவர்களுடைய முரண்பாடுகளைத் தெளிவாக அறியலாம்.

இதிலிருந்து நம்முடைய பதிவுகளை நீக்கிவிட்டோம்;ஆனாலும் அதன் விவரம் நம்முடைய தளத்தில் இருக்கிறது;இதில் வாதிடும் வேதமாணவன் என்பவர் இயேசு சிருஷ்டிக்கப்பட்ட பலிப் பொருள் மாத்திரமே எனும் கருத்துடைய கோவை பெரியன்ஸ் தளத்தின் நிர்வாகி ஆவார்;அவரிடம் சுந்தர் மென்மையாக நடந்துகொள்வதையும் இயேசுவை சிறுமைப்படுத்தும் வரிகளை நீக்கப் போராடும் நம்மை அவர் கண்டிப்பதையும் வாசகர் கவனிக்கவேண்டும்.

// ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பிதாவினிடத்திலிருந்துதான் வந்தார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!  ஆனால பிதா அவரை  எதை அடிப்படையாக கொண்டு அல்லது எதிலிருந்து இயேசுவை   உருவாக்கினார் என்பதற்கு வேதமே தெளிவான விளக்கம் கொடுக்கிறது. //

இது மற்றொரு திரியில், "இயேசுவும் பிதாவும் ஒருவரா? " எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டது; அதன்படி இயேசு ஏதோ ஒரு பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டார் என்கிறார்,சுந்தர்;இன்னும் வாசித்தால் மட்டுமே முரண்பாடுகள் விளங்கும் பல்வேறு தவறான கொள்கைகளையும் அந்த திரியில் வாசித்தறியலாம்.

இவர்களுடன்,"மற(றை)(று)க்கப்பட்ட தேவ வல்லமை : (PART 1 TO PART 5) என்ற திரியில் சந்தோஷ் எனும் நண்பர் மிக மென்மையாக
அதில் மறக்கப்பட்ட தேவ வல்லமை -மறுக்கப்பட்ட
தேவ வல்லமை மறைக்கப்பட்ட தேவ வல்லமை ஆகிய மூன்று பொருளில் தனது கருத்துக்களை வழங்குகிறார்;அவரையும் விவாத சுழலில் சிக்க வைக்க தந்திரம் செய்கிறார்கள்;அவரோ அதில் சிக்குகிறதில்லை;அவருடைய கொள்கைகள் சற்று ஏற்புடையதாக இருக்கிறது;அவற்றை வாசித்தாலும் போதும் இவர்கள் திருந்த வாய்ப்புண்டு;ஆனால்..?

மேற்கண்ட திரிகளின் தாறுமாறான கொள்கைகளை வாசகர்கள் நிதானமாக வாசித்து இயேசுவைக் குறித்த இவர்களுடைய எண்ணமானது எத்தனை குழப்பமானதாக இருக்கிறது என்றும் இவர்களிடம் நாம் எத்தனை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் வாசக நண்பர்கள் அறிய வேண்டுகிறோம்.

அடுத்து பெரியவர் அன்பு அவர்களின் நித்திய ஜீவன் தளத்தின் முறையீ(கே)டுகள்...


(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அடியேனை ஊக்கப்படுத்திய அருமையான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்,அருமை நண்பர் அசோக் அவர்களே..!

நான் இதுவரை சில தளங்களுக்கு நேரடியாக
த் தொடுப்பைத் தராது தவிர்த்ததுண்டு; 'புதியவர்கள்' இந்த மாறுபாடான உபதேசத்தினால் குழம்புவார்களே என்ற அச்சத்தின் காரணமாக.ஆனால் இனி எதையும் தவிர்த்து தடுத்து பயனில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்;தேவாதி தேவனே தமது நன்மையையும் எதிரியின் தீமையையும் எதிரெதிரே வைத்து சுயமாக தெரிவு செய்யச் சொல்லுகையில் நான் எம்மாத்திரம்?

எனவே எனது எதிரிகள் என்னுடைய தொடுப்புகளைத் தருகிறார்களோ அல்லது எனது கருத்துக்களையொட்டி சற்று மாற்றி புது கட்டுரைகளை வரைகிறார்களோ அதைக் குறித்து கவலை கொள்ளாமல் நான் அவர்களுடைய மோசடிகள் வெளிப்படும் வண்ணமாக அவர்களுடைய மாறுபாடான கொள்கைகளை தோலுரிக்கும் தொடுப்புகளையும் இணைத்து வருகிறேன்; குறிப்பிட்ட இந்த கட்டுரையானது ஏற்படுத்திய விளைவுகளை தொடரும் தொடுப்புகளில் காணலாம்...

முதன்முதலாக பெரியவர் அன்பு அவர்கள் மிகச் சிறப்பானதொரு பதிலை ஆயத்தம் செய்து போட்டிருக்கிறார்;அதனை ஒவ்வொரு வாசகரும் அவசியம் வாசிக்கவேண்டும்;மணிக்கணக்காக தட்டச்சு செய்யும் எனக்கு அதன் சிரமங்கள் தெரியும்;நான் அவரைத் தூண்டிவிட்டேன்;அதன் விளைவாக அவர் எனது ஒவ்வொரு வரிகளையும் வாதத்துக்கு எடுத்துக்கொண்டு விமர்சித்திருப்பது அருமையிலும் அருமை;அவர் பூரண சற்குணத்தினை விரும்புபவராயிற்றே,எனவே பகைவனுக்கும் அருள்வாய் என்ற கொள்கையின்படி இதோ பாராட்டி விட்டேன்;மெய்யாகவே அவரது அணுகுமுறை இரசிக்கும்படி நாகரீகமாகவே இருந்தது.

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=39619396


ஆனால் கோவை பெரியன்ஸ் வழக்கம்போல கொக்கரித்து தீர்த்துவிட்டார்கள்;அவர்களைப் போய் அன்பு வாழ்த்துவதைக் கண்டு சிரிப்பாக வந்தது;இது என்ன உறவோ,என்ன இரகசியமோ எல்லாம் அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்..!

நல்லவேளை அவர்கள் தங்களை கோவை பெரியன்ஸ் என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொண்டு நம்மையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்துகிறார்கள்;அவர்கள் தங்களை வேதகால‌ பெரியன்ஸ் என்று போட்டுக்கொண்டு சாமியாடினால் இரணகளமாக இருக்கும்..!

மற்றுமொரு நல்லவருடைய கருத்தையும் சற்று இங்கே சொல்லி வைக்கிறேன்;அவர் ரெம்ப வித்தியாசமானவர்;அவரு யாரையும் நோகாம நோகடிக்கிறவர்;நேரடியா எழுதினா தானே சண்டைக்கு வருவாங்க என்று ஜாடை மாடையா கிசுகிசுபாணியில் எழுதிவிட்டு காப்பி குடிப்பவர்..! அவருடைய அறுப்புதமான கருத்தையும் வாசகர் நிச்சயம் கவனிக்கவேண்டும்.

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=39606686



நாலு எழுத்து படிச்சிட்டு அதான் "ABCD" ஆட்டம் போடற இவங்களுக்கே இவ்வளவு "இது" இருந்தால் இது எதுவுமே இல்லாதவர்களிடம் சத்தியத்தைக் கற்ற நமக்கு எவ்வளவு இருக்கவேண்டும்..?!


எதுக்கெடுத்தாலும் "மொழிபெயர்ப்பு கோளாறு " என கொக்கரிக்கும் மதியீனத்தையே சொல்கிறேன்;வேதமோ ஏன் பேப்பரோ அச்சு இயந்திரமோ இல்லாத காலத்தில் எப்படி விசுவாசித்தார்கள்,யாருடன் பேசி யாரால் அதிசயங்களை கண்டார்கள் என்பதை இந்த அறிவுஜீவிகள் சிந்திக்கிறதில்லை..!

இதுக்கும் விட்டுக்கொடுக்காமல் ஒரு விளக்கம் கண்டிப்பாக தருவர்;எனவே அவன் நடையானது மாறி மாறி விகாரப்படும் என வேதம் சொல்லுகிறது.

வ‌ர்...றேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 நண்பர் சில்சாம்,
     வாழ்த்துக்கள். நீங்கள், குறிப்பிட்டுள்ள சுந்தர் மற்றும் அன்பு அவர்களின் கட்டுரைகளை நான் படிக்கவில்லை(இப்போதெல்லாம், இணைய தளங்களை பார்த்து மனதை குழப்பிகொள்வதை தவிர்த்து வருகிறேன்). நீங்கள் கூறிய வார்த்தைகளை வைத்து பார்த்தால், அவர்கள் சத்தியத்தை (கிறிஸ்துவை) அறிந்தவராக தெரியவில்லை.
   சமீப காலமாக சிலரிடம் நீங்கள் கடினமாக நடந்துகொள்ளும் போது எனக்கே வருத்தமாக இருந்தது. இவ்வளவு கடினம் தேவையா என்று நானே நினைத்ததுண்டு. இப்பொழுது நீங்கள் நடந்து கொள்வது சரியே என்று எனக்கும் படுகிறது.
   பரிசேயரிடம் கிறிஸ்துவும் இப்படியே நடந்து கொண்டாராம்.

மாபாவி என அறியப்பட்டவரிடம் கூட அன்பாய் பேசிய கிறிஸ்து, இந்த மாயக்காரரிடம், எப்போதும் கடினமாகவே நடந்து கொண்டார். (Luke 11:40, Luke 12:1, Luke 13:15, Luke 18:10-14).

வேண்டுமென்றே அவர்களின் சடங்குகளை அவமாக்கினார் (Luke 6:7-11, Luke 11:37-44, Luke 14:1-6).
So, you need not to be "nice" with them. Be bold in taking the Gospel to the unreached.

This one is good and Expecting More from you.
Ashok



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இயேசு கிறித்துவை தெய்வமாகத் தொழுவதைக் குறித்து கிறித்தவர்கள் என்ற போர்வையில் இணையத்தில் உலவும் சில ஓநாய்கள் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது;அந்த குழுக்களுடன் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்;முறையான எந்த ஆரோக்கிய உபதேசத்துக்கும் கீழ்ப்படியாத இவர்கள் தங்கள் மாயமான உபதேசத்தினால் பலரையும் குழப்பி வருகின்றனர்;பொதுவாகப் பார்த்தால் அவர்களிடம் எந்த மாறுபாடும் தெரிவதில்லை.

உதாரணமாக சுந்தர் என்பவர் தனது சத்தியத் தடுமாற்றத்தின் உச்சகட்டமாக பரிசுத்தாவியானவருக்கே புதிய கொள்கைகளைக் கற்பித்து துருபதேசம் செய்துவருகிறார்.

அன்பு எனும் பெரியவர் கிருபையையும் கற்பனையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்;கிறித்தவர்களுக்கே அதில் தெளிவு இல்லாததால் இவரையும் குற்றஞ்சாட்டி நிரூபிக்கமுடியாது; அதானே,ஆண்டவருடைய கற்பனைகளான பத்து கற்பனை எப்படி ஒழியும் என்ற மனப்போக்கே பலரிடமும் காணப்படுகிறது;இதனால் கிருபையின் மார்க்கத்துக்கு பகிரங்க சவால் விடப்பட்டுள்ளது.

இதனை எதிர்ப்பது போல கோவை பெரியன்ஸ் காட்சியளித்தாலும் அவர்கள் இயேசுவின் தெய்வத்தன்மையைக் குறித்து உருவாக்கி வைத்திருக்கும் கொள்கைகளும் இன்னும் அவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும் நிறக்குருடன் மனோபாவமும் மிகவும் ஆபத்தானது;அவர்கள் மீட்கமுடியாத நிலைக்குச் சென்று விட்டனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்;ஏனெனில் அவர்களிடம் இணக்கமான தன்மையோ நட்புணர்வோ சிறிதும் இல்லை என்பது தெளிவு;ஒரு இஸ்லாமியனிடமும் இந்து வெறியனுடனும் கூட இசைந்து போகும் இவர்கள் சத்தியத்தை எதிர்த்து தங்களுக்கு கேடுகளை வருவித்துக் கொள்ளுகிறார்கள்.

இயேசுகிறித்துவை
அவர்கள் தெய்வமாகத் தொழுவதற்கு வாய்ப்பில்லை; வாதத்துக்காக இயேசுவைத் தொழுவதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அது மரியாதை செலுத்துவது என்ற நிலையிலேயே உள்ளது;அது மரியாளை வணங்குவதைக் குறித்து நாம் கொண்டுள்ள கொள்கை மாறுபாட்டுக்கு சற்றேறக் குறை இணையாக உள்ளது.

ஏனெனில்
அவர்கள் அவரை தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள்;வேதம் அதுபோல எங்கும் கூறவில்லை;எனவே வேதத்துக்கும் சர்வவல்ல தேவனுக்கும் விரோதமாகக் கலகம் செய்யும் அவர்களுக்கு மோசேயை எதிர்த்தவர்களின் கதியே ஏற்படும்.

இயேசுவானவரின் தெய்வத்துவத்தைக் குறித்து வேதம் சொல்லும் போது...

"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர்.2:9)

அதாவது தேவத்துவத்தின் ஒரு பகுதி இயேசுவில் இல்லை;இயேசுவுக்குள் தெய்வத்துவத்தின் அனைத்தும் இருக்கிறது.

"ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." (அப்போஸ்தலர்.3:15)

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளிப்படுத்தல்.1:18)

மரணம் என்பதன் புதிய பொருள் இதன்மூலம் விளங்குகிறது;மரணம் என்பது ஒரு சரீரத்திலிருந்து ஆவியானது வெளியேறுவது மட்டுமே என்றும் அந்த சரீரம் மீண்டும் அதே தன்மையில் உயிரடையும் என்பதையும் இங்கே சிருஷ்டிகர் நிகழ்த்தி காட்டுகிறார்.எனவே தெய்வம் மரிக்கலாமா என்ற சர்ச்சையும் இங்கே நிறைவடைகிறது;அவர் வெளியே சென்றார், மீண்டும் உள்ளே வந்தார்,ஆக‌ எல்லாம் சரியாகவே நடந்தேறியிருக்கிறது.

"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்."(அப்போஸ்தலர்.2:36)

இங்கே ஆண்டவரும் கிறித்துவும் என்பதில் அனைத்தும் அடங்கும்;அதாவது அவரே அனைத்துக்கும் அதிகாரியாகிறார்; அதாவது கிறித்துவின் தன்மையில் தம்மை வெளிப்படுத்தின தேவன் தாம் சிருஷ்டித்த மாம்ச இயேசுவுக்கு புதிய ஸ்தானத்தைக் கொடுத்தார்.இதன் அடுத்த கட்டம் அடுத்துவரும் வசனத்தில் நிறைவேறும்.

"சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்."(1.கொரிந்தியர்.15:28)

இங்கே கீழ்ப்பட்டிருத்தல் என்பது ஆதியில் இருந்த தன்மையே; எப்போதுமே வார்த்தையானது ஆவியில்லாமல் செயல்படவில்லையே;எனவே ஆவியே முந்தினது என்றும் ஆவியிலிருந்து ஆவியின் அதிகாரம் மற்றும் வல்லமையோடு வார்த்தையானது வெளிப்பட்டு தன் காரியமாகும்படி வாய்க்கும் என்பதும் விளங்குகிறது.

எனவே நூற்றுக்கு அதிபதி ஒருவார்த்தை சொன்னால் போதும்
என்று வேண்டும் போது அவன் தன்னை வார்த்தையின் பிரதிநிதியாகக் கொண்டு தனக்கு மேலுள்ள அதிகாரத்துக்கு அதாவது ஆவிக்கு தான் கட்டுப்பட்டவன் என்று கூறுகிறான்;ஆண்டவரும் அவன் சொன்னதைப் பாராட்டி இஸ்ரவேலருக்குள்ளும் இதுபோன்ற விசுவாசத்தைக் காணவில்லையே என்று ஸ்லாகிக்கிறார்;ஆண்டவரால் பாராட்டப்பட்ட ஒரு சிலரில் இவனும் ஒருவன்;காரணம், அவன் இராஜ்யத்தின் தன்மையையும் அதன் ஸ்தானங்களையும் குறித்து அறிந்திருந்தான்.

"நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.

இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மத்தேயு.8:8,9,10)


"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்."(அப்போஸ்தலர்.4:12)

இதுவரை மீட்கப்படுதல் என்பதைக் குறித்த அறிவே இல்லாமல் ஞானிகளின் வாக்கியம் போலவும் தத்துவம் போலவும் எங்கோ இருந்த ஒரு பொக்கிஷம் நம்மருகில் வந்துவிட்டது.

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (Phப் 2:9,10,11)

எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் என்பது யூதருடைய நம்பிக்கையின்படி "யாவே" சிருஷ்டிகருடைய நாமமே;அதற்கும் மேலாக இவருடைய நாமம் உயர்த்தப்பட்டது.

"ஏலோஹிம்" என்று சிருஷ்டிப்பிலும்  "எல்ஷடாய்" என்று ஆபிரகாமு
க்கும் தம்மை வெளிப்படுத்தின கர்த்தர் மோசேக்கு தன்னுடைய விசேஷித்த நாமத்தில் வெளிப்படுத்தினார்.

"மேலும், தேவன் (
"ஏலோஹிம்") மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் ("எல்ஷடாய்")என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."(யாத்திராகமம்.6:2,3)

இதன் பின்னணியிலுள்ள சில சத்தியங்கள் என்னவென்றால், முதன்முதலாக மோசேக்கு தம்மைக் குறித்து கர்த்தர் சொன்னபோது,

"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்."(யாத்திராகமம்.3:14)

இதே "இருக்கிறேன்" என்ற சொல்லை இயேசுவும் தம்முடைய போதனையில் அடிக்கடி பயன்படுத்துவதையும் கவனிக்கவேண்டும்; அதாவது "இருக்கிறேன்" என்ற சொல்லானது இறந்த காலத்தின் சொல்லாகவோ எதிர்காலத்தின் சொல்லாகவோ இல்லாமல் நிகழ்காலத்தின் சொல்லாகவே இருக்கிறது.

(உ-ம்) "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான்.14:6)

"ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் (
யேகோவா ) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். " (யோவான்.8:24)

மேற்கண்ட எனது வியாக்கியானங்களுடன் ஒத்துப்போகாதிருப்பவர்கள் தாராளமாக - நாகரீகமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்; அதற்குரிய சரியான பதிலைத் தர ஆயத்தமாக இருக்கிறோம்.அதேபோல நாம் எழுதியது சரிதான் என்று ஒப்புக்கொள்ளுபவர்களும் ஒரு சில வரிகளை எழுதி ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.

நாம் சத்திய விரோதிகளிடம் இதேபோன்ற நாகரீகமான முறையினையே கடைபிடித்து வருகிறோம் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளுகிறோம்;இந்த அளவுக்கு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம் என்பதை
யும் அவர்கள் உணரவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard