//இதனால் அடியேன் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தாலும் தைரியமாகவே இருக்கிறேன். //
சகோ. சில்சாம். நிச்சயமாக இல்லை. I Share the Same Feelings With You. நானும் தொடர்ந்து இவர்களோடு பேசினால் கட்டுப்பாட்டை நிச்சயம் இழந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன். அதேசமயம் வேதம் எல்லாரோடும் "Passive" ஆக இருக்க வேண்டும் என்றும் போதிக்கவில்லை (இந்த இடத்தில் கிறிஸ்தவ சகோதரர்களை பற்றி சொல்லவில்லை). இயேசு கிறிஸ்து 5 புருஷர்களை விவாகம் பண்ணி Boy Friend உடன் வாழ்ந்து கொண்டிருந்த சமாரிய ஸ்திரியை கடிந்து கொள்ளவில்லை, விபச்சாரத்தில் கையும், மெய்யுமாய் பிடிபட்ட பெண்ணையும் கடிந்து கொள்ளவில்லை ஆனால் வேதத்தை படிக்கத்தாகத விதத்தில் படித்து, மனிதருடைய கற்பனைகளை போதனைகளாய் போதித்த பரிசேயர்களிடம் சாட்டையை சுழற்றினார், கடிந்து கொண்டார். ஏனென்றால் அவர்கள் தெரிந்து கொண்டே தங்களுடைய இருதயகடினத்தின் நிமித்தமும், மேட்டிமையின் நிமித்தமும் மற்றவர்களை வஞ்சித்தார்கள்.
அவரால் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாமல் இருக்க முடிந்தது ஆனால் நம்மால் முடியாது அகையால் கோபம் வருகிற விஷயங்களை தவிர்ப்பதே நலம். இவர்களுடைய புரட்டலுக்கு பதில் சொல்லுவதை விட நாம் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுவதிலும், கிறிஸ்துவை அறியாத மற்றவர்களுக்கு நல்ல செய்தியை (Gospel) சொல்லுவதிலும் கவனம் செலுத்துவோம்.
chillsam wrote:தேவைப்பட்டால் இனி மாற்று தளங்களின் தொடுப்புகளையும் கட்டுரைகளையும் இங்கே போட்டு விவாதிக்காமல் அதற்குரிய பதிலை பொதுவான கட்டுரை பாணியில் கொடுக்க முயற்சிக்கலாம்;இதனால் நேரடி மோதல்கள் ஒரளவுக்கு குறையும் என்று நம்புகிறேன்;
சகோ. இதற்கு நானும் உடன்படுகிறேன். இவர்களின் உபதேசங்கள் ஒன்றும் புதியதல்ல என்பதை யொகோவா சாட்சிகளின் வெளியீடுகளைப் படிப்பவர்களுக்குப் புரியும். எனவே எந்தவொரு தளத்தின் பெயரையோ அல்லது நபரையோ குறிப்பிடாமல் எழுதுவது சிறந்தது. வீண பிரச்சினைகளையும் வாதங்களையும் இதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம். தங்களின் உற்காகப்படுத்தல் வார்த்தைகளுக்காக மிக்க நன்றி
யௌவன ஜனம் தளத்தின் பாசமிகு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;கடந்த இரு தினங்களாக (மேசியாவின்) எதிரிகள் செய்துவரும் குழப்பங்களை கவனித்திருப்பீர்கள்; இதில் நம்முடைய தரப்பான நியாயத்தை நடுநிலையாளர்கள் அறிந்திருக்கிறார்கள்;ஆனாலும் இது வாரக் கடைசியாதலால் ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது;பொதுவாகவே வாரக் கடைசியில் நண்பர்களுடைய பங்களிப்பும் பார்வையும் குறைவாக இருக்கும்; இதனால் அடியேன் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தாலும் தைரியமாகவே இருக்கிறேன்.
மதிப்பிற்குரிய வாசகர்களும் மனதிற்கினிய நண்பர்களுமாகிய தங்களுடைய ஒத்துழைப்பில்லாமல் ஒருபயனும் இராது;எனவே இதுபோன்ற நேரங்களில் தள நண்பர்களின் ஆலோசனை வழிகாட்டுதலும் மிகமிக அவசியம்; நம்முடைய ஒற்றுமையைக் குலைத்து அச்சுறுத்தி பணியவைக்க பிசாசின் கூட்டத்தார் அதிகபட்ச முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்;அவர்களுடைய கூடாரம் காலியாகிற எரிச்சலில் அத்தனை கோபத்தையும் நம்மீது திருப்பியிருக்கிறார்கள்; முக்கியமாக கோல்வின் மற்றும் ஜாண் போன்ற களங்கமில்லாத நண்பர்கள் அதிகமாக மனதால் நெருக்கப்படுகிறதை உணருகிறேன்; இது தேவையா என்று நாம் எல்லோருமே ஓடிவிடலாம்; ஆனால் இதைக்கூட செய்வதற்கு இங்கே யாருமில்லை என்பதை தயவுசெய்து நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டுமல்லவா?
இணையதளத்தில் ஆரோக்கிய உபதேசத்தை முன்னிறுத்தி பல்வேறு தளங்கள் செய்திகளை எழுத்தாகவும் (Articles) படக்காட்சியாகவும் (Video) ஒலிப்பேழையாகவும் (Audio) வெளியிட்டிருந்தாலும் அவை (மேசியாவின்) எதிரிகளை பாதிக்கவில்லை;ஏனெனில் அதில் இவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்யும் வாசகங்களோ அதற்கான முயற்சியோ இல்லாததே; ஆனால் நேருக்கு நேர் இவர்களோடு மோதி இவர்களை அடையாளப்படுத்த நாம் செய்யும் முயற்சிகளே பிரச்சினைக்குக் காரணமாகிறது;இது சரியா தவறா என்றால் என்னைப் பொறுத்தவரை இதுவே சரியான அணுகுமுறை என்பேன்; ஏனெனில் இந்த நெகட்டிவ் அப்ரோச் மூலமே எதிரியைக் குறித்த முழுவிவரமும் பகிரங்கப்படுத்தப்படுகிறது; பாஸிட்டிவ் அப்ரோச் ஆகிய மென்மையான போக்கு நாணயத்தின் ஒருபக்கத்தை மட்டுமே பார்ப்பது போலாகும்.நாணயத்தின் மறுபக்கம் மோசமாக இருந்தால் அதை தூக்கி வீசுவது எளிதானது தான்;ஆனாலும் அதனை வேறு யாரும் எடுத்து ஏமாற்றமடையாத வண்ணம் அதைக் குறித்து அறிவிப்பு செய்யவேண்டுமல்லவா?
மேலும் இது நம்முடைய கிறித்தவ விசுவாசத்துக்கு விடப்பட்டுள்ள நேரடியான சவால் என்பதால் மொத்தக் கூட்டமும் இரணடாகப் பிரிந்து நிற்பது தவிர்க்கமுடியாதது;அன்று சீனாய் மலையின் அடிவாரத்தில் என்ன நடந்ததோ அதுபோலவே தற்காலத்திலும் நடைபெறவேண்டும்;அதற்குரிய மனத் திண்மையுள்ள போர்ச் சேவகர்களையே இராஜாவின் சேனையானது தேடிக்கொண்டிருக்கிறது;இங்கு பார்வையிட வரும் நண்பர்கள் அன்பான சகோதரர்களான கோல்வின் அவர்களையும் ஜாண் அவர்களையும் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்;
தேவைப்பட்டால் இனி மாற்று தளங்களின் தொடுப்புகளையும் கட்டுரைகளையும் இங்கே போட்டு விவாதிக்காமல் அதற்குரிய பதிலை பொதுவான கட்டுரை பாணியில் கொடுக்க முயற்சிக்கலாம்;இதனால் நேரடி மோதல்கள் ஒரளவுக்கு குறையும் என்று நம்புகிறேன்;
கர்த்தர் தாமே நமக்கு ஞானத்தையும் கிருபையையும் பெருகச் செய்வாராக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமை நண்பர் கொல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;எனக்காகப் பரிந்துபேசத் துடிக்கும் தங்கள் நல்ல உள்ளத்துக்காக கர்த்தரைத் துதிக்கிறேன்;ஆனாலும் அதைவிட விசேஷமானது நீங்கள் சத்தியத்துக்காக மட்டும் நின்றால் எனக்கு அதிக சந்தோஷம்; என்னிடம் இருப்பது சத்தியமாக இராதிருந்தால் நிச்சயமாகச் சொல்லுங்கள்.
நான் அவசரப்பட்டு ஒரு வார்த்தையும் எழுதுகிறதில்லை;யார் யாருக்கு என்ன உத்தரவு கொடுக்கவேண்டுமோ அந்த எல்லையிலிருந்தே உத்தரவு கொடுக்கிறேன்;எனவே நான் எதையாவது உளறிவிட்டு அதனை நியாயப்படுத்தப் போராடுவதில்லை.
நான் நிதானமாக அவதானித்து அவன் ஒரு நெருப்பு என்கிறேன், நீங்களோ அவ்வளவா சூடு தெரியலையே என்கிறீர்களே..!
எல்லாம் அறிந்தும் வேதத்தின் மூல உபதேசங்களைத் திரித்துப் பேசுவோரிடம் எந்த தயவு தாட்சண்யமும் காட்டச் சொல்லி எனக்கு கட்டளையில்லை; நான் ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கிறேன், இறையியல் சம்பந்தமான கருகலான காரியங்களில் அவசரப்பட்டு தீர்மானமாக எதையும் சொல்லாதிருங்கள், என்று;
கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டிய காரியங்களில் கொள்கை அறிவிப்பு செய்வது சத்தியத்துக்கு விரோதமானது; நான் இஸ்லாமியனாக இருந்தால் நடப்பதே வேறாக இருக்கும்.
இந்த காரியத்தில் வரிக்கு வரி வேதப் புருஷர்களை மட்டுமே சார்ந்திருக்கிறேன்;பிசாசின் மகன், பேலியாளின் மகன், வேசியின் மகன் உட்பட அனைத்து தூஷண - சாப வார்த்தைகளும் வேதத்தில் தானே இருக்கிறது; சத்தியத்துக்காக வைராக்கியம் கொண்டு கொலைகளும் நடந்ததல்லவா?
சத்தியத்துக்கு விரோதமாக எழுதுபவனை அடிக்க வாய்ப்பில்லாத காரணத்தாலே வார்த்தையினால் அடிக்கிறேன்; ஒன்று அவன் சாகணும், இல்லை நான் சாகணும் பார்த்துடுவோம்' யா..!
தோட்டத்துக்கு வெளியே இருப்பவனை நான் நடத்தும் முறைக்கும் தோட்டத்துக்கு உள்ளே இருந்து குழப்பம் விளைவிப்பவனை நடத்தும் முறைக்கும் நிச்சயமாகவே வித்தியாசத்தினை உணர்ந்திருக்கிறேன்.
எனக்கு இழக்க எதுவுமில்லாததனால் எனக்கு எதைக் குறித்தும் கவலையில்லை; நான் பெயர் புகழ் பெற்றவனோ அல்லது புகழடையத் துடிப்பவனோ அல்ல; யாரிடமும் பணத்துக்காக யாசகம் செய்ததுமில்லை; அதனால் என்னால் வெளிப்படையாகவும் தைரியமாகவும் எழுதமுடியும்.
நாயை, நாய் என்று தான் எங்கள் ஊரில் சொல்வோம்,யாரும், "மதிப்பிற்குரிய நாய் அவர்களே" என்று சொல்லுவதில்லை;
உங்களுக்கு நெஞ்சத்தில் நஞ்சையும் வஞ்சத்தையும் வைத்துக்கொண்டு இனிமையாகப் பேசுவோரிடமே அதிக ஈடுபாடு இருக்கும் போல;
எனக்கு அதுபோல நைச்சியமாக தந்திரமாகப் பேசி துருபதேசத்தினை நுழைக்கும் சாதுரியம் தெரியாது;ஆனால் இவர்களுடைய ஆதியோடந்தமாக வழித் தடம் முதலாகத் தெரியும்;வஞ்சக சர்ப்பம் சாதுவாக தோற்றமளிக்கும்;ஆனால் அது தீண்டினால் விஷம் மூளை வரைச் சென்று ஆளைக் கொல்லும் என்பதை அறியவும்;
ஆம்,இவர்கள் விஷ ஜந்துக்கள்,இவர்களிடம் சமரசத்துக்கோ மரியாதைக்கோ வாய்ப்பில்லை;ஒரே நிபந்தனை அவர்கள் இதுவரை தவறாக எழுதிய உபதேசங்களை எல்லாம் நீக்கட்டும்;நானும் அவர்களை தூஷித்த சாப வார்த்தைகளை நீக்குகிறேன்;
நீங்கள் என்னைக் குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு நல்ல பதிவுகளைத் தாருங்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ. சில்சாம் இதுதான் உங்கள் பிரச்சினையே. விவாதியுஙகள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. தவறான வார்த்தையை உபயோகித்து விட்டு அதனை நியாயப்படுத்தும் விதமாக எழுதாதீர்கள். ஒருவேளை அவர்கள் உங்களுக்கு இத்தகைய வார்த்தை பிரயோகித்து விட்டு இதே நியாயத்தை உங்களுக்கு எழுதினால் ஏற்றுக் கொள்வீர்களா?
உங்களுக்கு சார்பாக கதைக்ககூட முடியாது போய்விடும். மீண்டும் சொல்கிறேன் உங்கள் வாதத்தை குறைகூறவில்லை. தேவையற்ற சொல்லாடல்களைதான் கூறுகிறேன். இதுபோன்ற வார்த்தைகளை பாவிக்காதிருங்கள்.
நீங்கள் மாறுபட்ட இருவருக்கு நண்பராக இருப்பது உங்களால் கூடாத காரியமாகும்; ரெண்டு எஜமானுக்கு வேலை செய்வதும் கூடாத காரியமாகும்; சுந்தர் தெய்வத்துவத்தைப் போட்டு குழப்பியது போல யாரும் செய்ததில்லை; அவர் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் பாணியைக் கடைபிடிக்கிறார்.
எதற்கெடுத்தாலும் மூலபாஷை யைக் குறித்து பேசுவதால் இரட்டை அர்த்தத்தில் (ஆம்..) மூல வியாதியிலேயே முக்கு என்றேன்;அது தவறல்ல.
இயேசுவின் இரத்தத்தை க் குறித்து கரிசனை கொண்டவனைப் போல பிசாசு தந்திரமாக செயல்படுகிறான் என்று சுந்தர் அவதூறு செய்தார்; இயேசுவின் இரத்தத்தின் பலன்கள் வந்து சேரவேண்டுமானால் கற்பனைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றார்,சுந்தர் ; இயேசு சிந்திய இரத்தத்தை அவமாக்கும் எந்த ஒரு போதனைக்கும் என்ன கொடிதான தண்டனை வாக்களிப்பட்டதோ அதையே அவருக்குச் சொன்னேன்.
குஷ்டம் கேயாசிக்கும் மிரியாமுக்கும் பிடித்தது வேதத்தின் வரலாறு தானே..? நான் வேதத்தில் இல்லாததையா குறிப்பிட்டேன்;வசனத்தைக் குறிப்பிட்டால் இன்னும் பயங்கரமாக இருக்கும்; என் வார்த்தை என்னுடன் போகும் என்று அவர்களே அதனை என்னை நோக்கி திருப்பிவிட்டார்கள்; ஆனால் வசனத்தை அதுபோல திருப்ப அவர்களால் முடியாது; எனவே நான் கத்தி (shout) சண்டை போடுகிறேன்;கத்தி (s(word) சண்டை போடவில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மூல வியாதியிலேயே முக்கட்டும்... / குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும்/ இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/
இப்படிப்படட சொல்லாடல்களை ஏன் இறைவன் தளத்தில் பாவித்தீர்கள். காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு ஏற்புடையதல்ல. ஒரு தளத்தில் கருத்துப் பதிந்த பின் அவற்றுக்கு பல விதங்களிலும் மறுமொழி அளிக்கப்பட்டிருக்கும். திடீரென உங்கள் பதிவுகளை admin இன் அனுமதியில்லாது நீக்குவது அவ்வளவு உகந்த நல்ல காரியமன்று. இதனால் பதிவுகள் தொடர்பற்று தெளிவில்லாது போகும். உங்கள் எந்த கேள்விக்கு அவர்கள் பதில் அளித்தார்கள். நீங்கள் கேட்ட கேள்வி, மற்றும் உங்கள் பதில்கள். நிற்க இறைவன் தளத்தில் இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்ற தோரணையில் பதிவுகள் அமையவில்லை. ஆனால் கோவை பெரியண்ஸ் தளத்தில் அவ்விதம் உள்ளது. அதாவது பிதாவை விட தாழ்வானவர். அவர் தேவன் அன்று.
நீங்கள் சொல்வதும் ஏற்கத்தக்கதுதான். ஆனால் ஆதார தொடுப்புக்களை இன்னும் நீங்கள் தரவில்லை. அவற்றை தரமுடிந்தால் நல்லது. நான் போய் சோதனையிட்டு வருகிறேன்.
இயேசுவைக் குறித்து அவர்கள் அப்படி கூறியிருந்தால் அது பெரிய வேதப்புரட்டு. ஜெகோவாவின் சாட்சிகள் கூறுவது போன்று அவர்களின் பேச்சு இருக்கிறது. இவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்காமல இருப்பது மிகச் சிறந்தது.
அன்பான நண்பர் கொல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;தங்கள் உணர்வினை மிகவும் மதிக்கிறேன்;என்னுடைய தரப்பை சற்று கவனிக்க வேண்டுகிறேன்;இருவருமே அண்மையில் எந்த பதிவையும் தரவில்லை என்பதை கவனிக்க வேண்டுகிறேன்;நாகரீகத்துக்காக மேலோட்டமாக காரணங்களைக் குறிப்பிட்டேன்;தாங்கள் இத்தனை கேட்டதால் விளக்குகிறேன்...
முதலாவது தேவப்ரியா குறித்து... அவர் மாற்று கருத்து மட்டும் எழுதினால் பொறுமையாக விளக்கலாம்;ஆனால் அவர் முழு வேதத்தையும் மறுப்பதோடு இயேசு என்ற ஒருவரே வரலாற்றில் இல்லை,என்பதோடு சாலமன் என்பவர் சாதாரண பஞ்சாயத்து நாட்டாமை மட்டுமே என்கிறார்;நீங்கள் அவருடைய கருத்துக்களை கவனித்தால் இது தெரியவரும்;இதனை நீங்கள் ஏற்கிறீர்களா? அவரைவிட திருச்சிக்காரன் என்பவர் எவ்வளவோ பரவாயில்லை;நான் இவர்களுடன் தொடர்பில் இருக்கக் காரணமே, அவர்களை வாசிக்க வருவோர் நம்முடைய தளத்திலிருந்து ஏதாவதொரு எழுத்தின் மூலம் ஆண்டவரை அறிய வாய்ப்புண்டாகுமே என்பதாலே;
ஆனால் தேவப்ரியாவைத் தொடர்ந்து வந்த சிலர் பதித்த சில தொடுப்புகளால் எனது கணிணி செயலிழந்தது; கணிணியைக் குறித்த எந்த அடிப்படையறிவுமில்லாத நான் தவித்துப்போனேன்;எனது மகன் தான் 10வது படிக்கும் போது கற்றுக்கொண்ட அடிப்படை கணிணி பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவத்தில் சுமார் 10 நாட்கள் போராடி அனைத்தையும் சரிசெய்தோம்.
அடுத்து சுந்தர் அவர்களைக் குறித்து... அவரையும் நீங்கள் சரியாக நிதானிக்கவில்லையென்றெண்ணுகிறேன்;நான் எழுதுவதை விட அதிகம் படிக்கிறேன்;இதனால் அவர்களது முழு தன்மையையும் அறிந்திருக்கிறேன்;நாம் விவாதிப்பது உலகக் காரியமானால் உதாரணமாக, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்பது போன்ற திருவிளையாடல் விவாதங்களில் மாற்றுக் கருத்துக்கு இடம் தரலாம்;அதாவது நம் தலைக்கு மேலே பறவைகள் பறப்பதைத் தடுக்க நம்மால் இயலாது,ஆனால் அவை கூடு கட்டும் வரை விட்டு வைக்கவேண்டுமா?
தமிழ்க் கிறித்தவ தளத்தை ப் பொறுத்தவரை அன்பு மற்றும் சுந்தர் ஆகியோர் பதமாக எழுதி வருகின்றனர்;சர்ச்சைக்குரியதை அங்கே எழுதுகிறதில்லை;உதாரணமாக இயேசு தொழத்தக்கவரல்ல என்றோ பத்து கற்பனைகளைக் கைக் கைக்கொள்வதின் மூலமே கிறித்துவின் இரட்சிப்பைப் பெற முடியும் என்று எழுதியது போலத் தெரியவில்லை; அப்படி எழுதினாலும் அவர்கள் நீக்கவேண்டிய அவசியமில்லை,ஏனெனில் இஸ்லாமியருடன் நாம் மாற்றுக்கருத்துக்களை அனுமதித்து பேசுகிறோம்;ஆனால் வெளிப்படையாக கிறித்தவரல்லாதோருடன் விவாதிப்பதற்கும் கிறித்தவராக வேடமிட்டுக் கொண்டும் கிறித்துவின் புண்ணியங்களை மறுதலிப்போருடன் விவாதிப்பதற்கும் நிரம்ப வித்தியாசமுண்டு என்றெண்ணுகிறேன்.
மேலும் இதே கருத்து மோதலையும் வீணான சர்ச்சைகளையும் தவிர்க்க நான் இறைவன் எனும் சுந்தர் அவர்களின் தளத்திலிருந்து என்னை விலக்கிக்கொண்டு எனது எழுத்துக்களைப் பாதுக்காக்க கடந்த ஒரு வருடமாக எழுதிய அனைத்தையும் எனது தளத்துக்கு சரியாக 32 மணிநேர தொடர் உழைப்பில் மாற்றினேன்.
அதன்பிறகும் அவர் நாகரீகத்துக்காகக் கூட வருத்தம் தெரிவிக்காததோடு அவர் மேட்டிமையோடு பேசியதை அவருடைய தளத்துக்குச் சென்று வாசித்துப்பாருங்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நகைப்புக்குரிய கூத்து என்னவென்றால் நான் விலகி 15 நாட்களுக்குப் பிறகு என்னை அந்த தளத்திலிருந்து நீக்கிவிட்டார்; இதற்குப் பிறகும் அவர் நம்முடைய தளத்துக்கு ஏன் வரவேண்டும்,கோரிக்கை வைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என தற்காலிகமாக அவருடைய கணக்கை முடக்கி வைத்திருக்கிறேன்; அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த தளத்திலிருந்து அவர் தன்னுடைய எழுத்துக்களை நீக்கவோ திருத்தவோ வாய்ப்புண்டு;அப்படி செய்தால் நான் யாருடன் போராடினேன் என்பதற்கு ஆதாரமே இல்லாமற் போகும்.
வழக்கமாகவே சுந்தர் எதையாவது எழுதுவார், திடீரென ஆவியானவர் கண்டித்தார் என நீக்கிவிடுவார்;நானோ அவருடைய ஒவ்வொரு வரியையும் ஒரு தாறுமாறான உபதேசத்துக்கு ஆதாரமாகப் பார்க்கிறேன்;வேத வசனங்களை எப்படியெல்லாம் திரிக்கவும் தவறாக வியாக்கியானம் செய்யவும் முடியும் என்பதை இவர்களிடமிருந்தே கற்றுவருகிறேன்;இவர்கள் தான் என்னை மீண்டும் மீண்டும் என்னை வசன ஆதாரத்துடன் வாதிக்க வற்புறுத்துவார்கள்;ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை;எனக்கு வசனம் தெரியாது என்பதல்ல காரணம்,அந்த வசனத்தையும் இவர்கள் தவறாக வியாக்கியானம் செய்து என்னுடைய நோக்கத்தையே சிதைத்து புதியதொரு விவாதத்தைத் துவக்குவார்கள்.
தமிழ்க் கிறித்தவ தளத்தில் ஆரம்பத்தில் ஒரு சிங்கக்குட்டி வந்து எழுதியது;அதன் கொடூர முகத்தை உணர்ந்த நிர்வாகிகள் அதை நீக்கினார்கள்;அதன் பெயர் ஈராஸ் (eras); தற்போது கோவை பெரியன்ஸ் எனும் பெயரில் துருபதேசத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்;அதுகள் சிங்கக்குட்டிகள் என்றால் அதுகளை எதிர்ப்பவரெல்லாம் பன்றிகளாம்; அதுகள் கழுகுக்குஞ்சுகள் என்றால் மற்றவர்கள் காக்கைகளாம்; அவர்களுடைய கொள்கை என்னவென்றால் இயேசு சாதாரண சிருஷ்டி ஒரு காலத்தில் மிகாவேல் தூதனாக இருந்தவர்;சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதாம்.
இவர்களுடன் இசைந்தும் பிசைந்தும் செல்லும் அன்பு மற்றும் சுந்தர் ஆகியோர் இயேசு தொழத்தக்கவரல்ல என்ற கொள்கையிலும் பத்துக்கட்டளைகளை கடைபிடிப்பதன் மூலமே மறுபிறப்பு அடையமுடியும் என்பவர்கள்.
சுந்தருக்கு மறுபிறப்பு என்பது மறுஜென்மமாகும்;அதாவது அவரே வேறு யாரோ அந்த பெரியவரின் மறுபிறவி தானாம்; அன்பு இன்னும் ஒருபடி மேலாக ஞானஸ்நானமே தேவையில்லை என்கிறார்.
இவர்களில் சுந்தர் மற்றும் கோவை பெரியன்ஸ் தளத்திலிருந்து நான் வெளியேறி விட்டேன்;அன்பு அவர்களுடைய தளத்தில் இதுவரை எழுதியதில்லை;ஆனாலும் இ0வர்களுடைய தளத்தை தவறாமல் கவனித்து வருகிறேன்;அதைக் கூட சமயத்தில் கிண்டலடிக்கிறார்கள்;நான் இரகசியமாக வந்து பார்த்துவிட்டு போகிறேனாம்;இணைய உலகில் இதைப் போன்ற நகைச்சுவையைக் கேள்விபட்டிருக்கிறீர்களா..?
இது தேவையில்லாத நடவடிக்கை என்பது என் கருத்து. கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு. குறிப்பாக தேவிப்பிரியாவை தடை செய்வதனால் இந்துக்களின் கருத்துக்களை அறிய முடியாத நிலை உருவாகும். கிறிஸ்தவர்கள் கருத்து சுதந்திரத்தை மதிக்க மாட்டார்கள் என்றே செய்தி பரப்புவார்கள்.
இந்த சுந்தர் யார்? தமிழ்கிறிஸ்தவர்கள் வலைமனைக்கு வரும் சகோ. சுந்தர்P அவர்களா? தமிழ்கிறிஸ்தவ வலைதளம் தடை செய்யாத போது நீங்கள் ஏன் அவரை தடை செய்தீர்கள். இதுவா உங்கள் கருத்துச் சுதந்திரம்? அப்படி அவர் துர்உபதேச கருத்துக்களை கொண்டு வந்தால் அதனை சுட்டிக் காட்டுங்கள். அவருக்கா ஜெபியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய காரியம்.
உறுப்பினராகி பதிவிடுவதும் பதிவிடாமல் விடுவதும் அவரவர் சுதந்திரம். அதனை மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.
அதிக பதிவுகளைத் தந்தும் தொடர்ந்து துருபதேசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் திரு.சுந்தர் அவர்களையும் கிறித்தவ விரோத பதிவுகளால் நம்மை தூஷிக்கும் தேவப்ரியா என்பவரையும் தளத்தினுள் நுழைய தடை செய்திருக்கிறேன்;சிரமத்துக்கு வருந்துகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய "யௌவன ஜனம் " தளத்தில் உறுப்பினராகத் தங்களை இணைத்துக்கொண்டும் இதுவரை எந்த பதிவையும் தராத உறுப்பினர்கள் நுழைவதை நிறுத்தி வைத்திருக்கிறேன்;அவர்கள் விரும்பினால் ஒரு கோரிக்கையின் மூலம் மீண்டும் இணைந்து கொள்ளலாம்; அதிக உறுப்பினர்கள் இருந்தும் செயல்படாத ஒரு தளமாக நாம் இராதிருப்பதற்கும் செயல்படுவோரை அடையாளம் காண்பதற்கும் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நண்பர்களுடைய ஒத்துழைப்பை இன்னும் நாடுகிறேன்.
அன்பன்,
"chillsam"
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பேரன்புக்கும் மதிப்பிற்குமுரிய தள நண்பர்களுக்கு யௌவன ஜனத்தின் வாழ்த்துக்கள்;கடந்த சுமார் பத்து மாதங்களாக நீங்களெல்லாம் நம்முடைய தளத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த பங்காற்றியமைக்கு நன்றி கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்;
நம்முடைய தளத்தை மேம்படுத்துவதிலும் குறைகளைக் களைவதிலும் உறுப்பினர் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
இந்த மின்னஞ்சலுக்கு (chillsam@rocketmail.com) தாங்கள் எந்தவொரு ஆலோசனையையும் தங்கள் படைப்பையும் அனுப்பித் தரலாம்;அவற்றை பரிசீலித்து உடனுக்குடன் ஏற்றுக்கொள்ள ஆவன செய்யப்படும்;மேலும் என்னுடன் தொடர்புகொள்ள விரும்புவோர் என்னுடைய அலைபேசி எண்ணை தனிமடல் மூலம் கோரவும்.
நம்முடைய தளமானது குழுவாக இயங்க உறுப்பினர் ஒவ்வொருவருடைய ஆதரவையும் யௌவன ஜனம் நாடுகிறது.
கடவுள் தாமே தங்களையும் தங்கள் வாழ்வையும் மேன்மைபடுத்துவாராக.
With Love in His Grace, "chillsam"
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)