மனிதன் உருவாகி பல லட்ச வருடங்கள் என்றால் இன்றைய மனிதன் வசிப்பதற்கு இந்த உலகத்தில் இடம் இல்லாது போயிருக்கும். பின்னோக்கி போகும் தத்துவம் அடிப்படையில் எளிமையாக கணக்கிடுவோமாயின் மனிதன் உருவாகி 10,000 ஆண்டுக்குள் தான் என்ற முடிவிற்கு வரலாம்.
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் ஒவ்வொரு விஞ்ஞானியும் கூறும் கால இடைவெளி பல இலட்சங்கள், மில்லியன்களாக வேறுபடுகின்றது. ஆயினும் அண்மைக்காலமாக துல்லியமான முறையில் நாட்களை கணக்கிடும் முறை உருவாகி வருகிறது. காபன் கதிர்ப்புமுறை மூலம் உறுதி செய்யப்பட்ட பல இலட்சங்கள் ஆண்டுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்பது சந்தேகமே.
பரிமாண கருத்தே தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது்.வெளித்தோற்ற அடிப்படையில் பரிணாமத்தை நிறுவுவது மிகத் தவறான ஒன்றாகும். சான்றாக மனிதன் பன்றிக்கே மிக நெருக்கமுடையவன். எனவே குரங்கிலிருந்து அல்ல மாறாக பன்றியிலிருந்தே மனிதன் பரிணமித்தான் எனக் கூறுவதே விஞ்ஞானத்திற்கு ஏற்படைய கொள்கையாக இருக்கின்றது.
சிருஷ்டிப்பின் காலம் சம்பந்தமாக பைபிளுக்கும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களுக்கும் பெரும் இடைவெளி காணப்படுகிறதே?
அகழ்வாராய்ச்சியில் பண்டைய காலத்து பொருட்களைக் கண்டுபிடித்தால் அதன் காலம் என்று பலகோடி வருடங்களைக் குறிப்பிடுவர்;அது வேதத்தின் மனுக்குல சமபந்தமான சிருஷ்டிப்பின் வரலாற்று உண்மைக்கு சவாலாக இருந்து வருகிறது;இதனால் பரிணாமக் கொள்கையே சரியானதோ என்ற மயக்கம் ஏற்படுகிறது;இதனைப் பொய்யாக்கும் உண்மைகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.
// நிற்க இன்னுமொன்று இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.எனவே ஒளி பயணம் செய்யும் தூரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு, அதாவது இவ்வளவு பழையது என்று கூறுவது குருட்டுத்தனமான வாதமாகும். // இவையெல்லாமே கடந்த 200 வருட காலத்துக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் தானே;இவையாவும் விரைவில் சரிசெய்யப்படும் பரிசுத்த வேதாகமம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்று நம்புவோமாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)