சுந்தரை நான் சபித்துவிட்டதாகவும் அது பலிக்குமா பலிக்காதா என்றும் அவரது தளத்தில் பெரிதாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது;நான் எனது தரப்பாக கொடுத்த எந்த விளக்கத்தையும் யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை;இதில் மூன்று பிரதானமான மாற்று உபதேசக்காரர்களும் இணைந்துகொண்டனர்;ஆரோக்கிய உபதேசத்தை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் எனது நண்பர்கள் யாரும் இந்த விஷயத்தில் எனக்கு உதவிசெய்யமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த காரியமே.
ஆனாலும் நான் இறுதியாக சுந்தர் அவர்களை எச்சரிக்கக் காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட கட்டுரையின் தலைப்பையே மாற்றிவிட்ட சுந்தர் அந்த கட்டுரையின் வாசகங்களை மறுபரிசீலனை செய்ய முன்வரவில்லை என்பதை அனைவரும் கவனிக்கவேண்டும் .
இது முதல்முறையல்ல , இதற்கு முன்பும் இதேபோன்ற ஒரு கருத்தை -அதாவது வேதத்துக்காக வைராக்கியம் பாராட்டுவது போல சாத்தான் சிலரைத் தூண்டிவிட்டு வேதத்தின் உண்மைகளை அறியாமல் தடுக்கிறான் என்று தூஷித்தார்;அதுவும் அவருடைய தளத்திலேயே இருக்கிறது .
அவர் சில வசனங்களைக் குறிப்பிட்டு அதற்கு அவர் தனது சொந்த விளக்கங்களைக் கொடுத்து அதை வைத்து நேரடியாக தாக்காமல் ரொம்ப டெக்னிக்கலாக 'சாத்தான் தான் இதையெல்லாம் செய்கிறான் ' என்றால் தூஷணமாகாதா?
அவனவன் புத்தியில் தோன்றுவதையெல்லாம் இது ஒரு புதிய வெளிப்பாடு என்ற பெயரில் எழுதிவைத்துவிட்டு 'இது என்னுடைய மரண சாசனம் போல இருக்கட்டும் 'என்று சொல்லிவிட்டால் அவனவன் தீர்க்கதரிசியாகி விடமுடியுமா?
வேதம் என்பது எழுதி முடிக்கப்பட்ட விஷயமாகும்;அதில் இன்னும் புதிதாக எதையும் சேர்க்கவோ அல்லது அது சொல்லவரும் செய்திக்கு மாறான விளக்கங்களைக் கொடுக்கவோ எவனுக்கும் அதிகாரம் கிடையாது; 'புரியலையா,கொஞ்சம் ச்சும்மா உட்கார்ந்திரு,எதையாவது உளறி வைக்காதே,'என்பதே நம்முடைய நிலை;
ஹாரிபாட்டர் போன்ற பிரம்மாண்டமான படங்களை எடுப்பவனும் மனிதன் தான்;நம்மைப் போன்ற சாதாரண மனிதனால் எப்படி அதுபோல சிந்திக்கமுடிகிறது ?மனிதன் இயல்பாகவே கற்பனை வளமிக்கவன்;அவனது மனதில் தோன்றி மறையும் எண்ணங்களுக்கும் காட்சிகளுக்கும் எவராலும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது;எனவே கனவு காட்சிகளைக் காணும் எவருமே அது தேவனால் தனக்கு கொடுக்கப்பட்டது போன்ற மாயையில் உழலுகிறார்கள்;நம்முடைய கிறித்தவ விசுவாசத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது;சிலருடைய தனிப்பட்ட அனுபவங்களை பொதுவான போதனையாக்கக் கூடாது .
நான் இறைவன் தளத்திலிருந்து வெளியேறக் காரணமாக இருந்தது அவர்களுடைய அணுகுமுறை தான்;இதைக் குறித்து விவரமாக வாசகர்கள் முன் எனது கருத்தை முன்வைத்திருக்கிறேன்;"வேண்டாத காரியங்களில் தலையிட்டு கருத்து சொல்லவேண்டாம்;ஏற்றுக்கொள்ள இஷ்டமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவேண்டும்" என்று எப்போது சுந்தர் அவர்கள் வெளிப்படையாகவும் தனிமடல் மூலமாகவும் சொல்லிவிட்டாரோ அப்போதே நான் அமைதியாகி விட்டேன்;ஆனாலும் அவர்களுடைய செயல்பாடுகளை ஒரு வாசகனாக இருந்து கவனித்துக்கொண்டே இருந்தேன்;எத்தனை முறை அவருக்கு நேசக்கரத்தையும் எனது மன ஓட்டங்களையும் தெரிவிக்க முயற்சித்தேன்;ஆனால் அவரோ தனி ஆவர்த்தனம் செய்வதிலேயே கவனம் செலுத்துவதுடன் சகோதர சிநேகத்தில் ஆர்வமில்லாதவராக இருப்பதை அறிந்துகொண்டேன்;அதாவது அவருக்கு மாணவர்கள் போலிருந்து அவருக்கு அடங்கியிருந்து செயல்படுவோரிடம் பரிவுடனும் என்னைப் போன்று சற்று விவரத்துடன் கேள்வி கேட்போரிடம் பாராமுகமாகவும் இருப்பார் .
இறுதியில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் அவர் எழுப்பிய சர்ச்சை காரணமாக நான் எனது கருத்தை சற்று வைராக்கியத்துடன் எழுத அனைத்து விரல்களும் என்னை நோக்கி திரும்பியது;'இதுதான் கிறித்தவ அன்பா நீயெல்லாம் எப்படி ஊழியம் செய்வாய் ' என்றெல்லாம் கண்டனங்கள் பறந்தது;போகட்டும்;ஒரு தளத்தின் நிர்வாகி வருத்தத்துடன் இருக்கும் மூத்த உறுப்பினரை எப்படி நடத்தவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல் என்னை வெளியேற்ற கருத்துக் கணிப்பு போடுகிறார்;அதற்கு சிலர் அமோதித்து ஆவேசமாக கருத்து கூறுகின்றனர்;இதற்கு மேல் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை காத்திருக்கவேண்டுமா என்ன?
அதன்பிறகு நான் வெளியேறியதற்காக வருந்தாமல் அதற்காக மகிழ்ந்ததில் இவருடைய சுயரூபம் தெரிந்தது;என்னுடைய பதிவுகளை இவர் சிதைத்து அல்லது நீக்கி நாசப்படுத்தாமலிருக்கவே அவசரமாக எனது அனைத்து பதிவுகளையும் நம்முடைய தளத்துக்கு மாற்றிவிட்டு நீக்கினேன் என்பதை வாசகர் அறியவேண்டும்.
மற்றபடி இவருடன் நமக்கு எந்த பங்காளி சண்டையும் இல்லை;இவர் சத்தியத்தை சிதைத்தும் புரட்டியும் எழுதினால் இவருக்கு நான் கொடுத்த சாபம் மட்டுமல்ல,வேதத்திலுள்ள அனைத்து சாபங்களும் இவர் மேலும் இவர் சந்ததி மேலும் வந்து இவருக்கு பலிக்கும்; அது பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல,புதிய ஏற்பாட்டிலும் அதே.
வாசகர் நண்பர்களுக்கும் தள நண்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்..! ஒரு தனிப்பட்ட மனுஷனுடனான போராட்டமாகவோ வீண் விவாதமாகவோ விளக்கங்களாகவோ தயவுசெய்து இவற்றைப் பார்க்கவேண்டாம்;நாம் விரைவில் ஆக்கப்பூர்வமாக செயல்பட துவங்குவோம்;அபோதும் இந்த தளத்தின் நோக்கங்களின் படி பல்வேறு நபர்களுடனும் கருத்து மோதல்கள் ஏற்படும்;அப்போதும் சத்தியத்தின் படி சரியான விளக்கங்களை நாம் நம்முடைய தளத்தில் பதியவேண்டுவது அவசியமாகும்;ஆனாலும் இதனை செய்துகொண்டிருக்கும் எனக்கு ஏற்படும் சலிப்பும் சோர்வும் வாசகருக்கும் ஏற்படுமே என்ற எண்ணத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// சகோதரர் சில்சாம் அவர்களே மிகுந்த தாழ்மையுடம் உங்களிடத்தில் நான் மன்னிப்பு கேட்கின்றேன் தயவு கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்கள் மனம் புண்படும்படியாக நான் எழுதியதற்கு என்னை விட வயதில் பெரியவரும் அனுபவசாலியும் ஆனவர் நீர், உங்கள்வார்த்தைகள் சரியோ அல்லது தவறோ எதுவாக இருந்தாலும் நான் நிச்சயம் அப்படி எழுதி இருக்க கூடாது கர்த்தர் என்னை மன்னிப்பாராக திரும்பவும் உங்களிடத்தில் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கின்றேன் என்னை மன்னித்து விடுங்கள் சகோதரரே...நன்றி,எட்வின் சுதாகர் // நண்பர்களே, நீங்கள் மீண்டும் மீண்டும் என்னை போதகர் என்றும் மூத்தவர் என்றும் உயர்த்தி வைக்கும் போதெல்லாம் நான் அந்த மேன்மையை ஒருபோதும் விரும்புகிறதே இல்லை;அதை தவிர்த்து உங்களையெல்லாம் எனது நண்பர்களாகவும் எனக்கு சமமாகவுமே பாவிக்கிறேன்;இன்னும் நான் எனது குழுவில் அடிக்கடி சொல்லும் வண்ணமாக நம் கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமமானது இளைஞர்களால் இளைஞர்களுக்காகக் கொடுக்கப்பட்டது;ஆனால் அதனை எடுத்து போதிப்பவர்களெல்லாம் முதியவர்களாக இருப்பதால் அது முதியவர்களுக்கு மட்டுமானது என்ற தோரணை ஏற்படுகிறது;நான் இளைஞர்களுக்கு இணையாக சமமாக நின்று வாதிக்கும் போது தலைமுறை இடைவெளியானது நிச்சயம் குறையவும் இளைஞர்கள் யதார்த்தமாக என்னுடன் கலந்துரையாடவும் வாய்ப்புண்டாகும் என்பது என்னுடைய எண்ணமாகும்;ஆனால் தற்காலத்தில் பலரும் இது இப்படித் தான் என ஓரங்கமாக நின்று எதையோ பார்த்து தீர்த்துவிடுவது தொடர்ந்து கற்றுக்கொள்ளும் வாசலை அடைத்து விடுகிறது;எனவே நானும் கூட என்னிடம் நீங்களெல்லாம் பலமுறை கேட்கும் எந்த கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லாமல் நீங்கள் சிந்திக்க உதவியாகவும் தொடர்ந்து தேடவும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக ஒன்றும் தெரியாதவனைப் போல இருக்கிறேன்;எனக்கு ஒன்றும் தெரியாது என்பதும் உண்மைதான்;நான் இன்னும் ஆராய்ந்து கொண்டுதானிருக்கிறேன்;எனவே சிலர் எதிர்பார்ப்பது போல புதிய சர்ச்சைகளை உருவாக்கும் எதையும் எழுதுவதில்லை;நல்ல போதகர்கள் ஏற்கனவே தளத்தில் இருப்பதால் என்னுடைய எல்லைகளை மிகவும் சுருக்கிக்கொள்கிறேன்;
ஆனால் ஒரு தோட்டத்துக்குள் நுழையும் கூலியாள் அங்கிருக்கும் குப்பைகளையும் தோட்டத்தைக் கெடுக்கும் பூச்சிகளையும் மிருகங்களையும் விரட்டி வேலியை பலப்படுத்தி சுத்தம் செய்வது போல தீமையான போதனைகளை அடையாளம் காட்டும் பணியை பிரதானமாக ஏற்றிருக்கிறேன்;இது சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம்,ஆனாலும் இதனால் வரும் சந்ததியினர் அடையப்போகும் பலன்கள் ஏராளம்,ஏராளம்;
இங்கே சில நண்பர்களிடம் எனது தனி விவரங்கள் என்னையறியாமல் பரவிவிட்டதால் சமுதாயத்தில் ஒரு பொறுப்பான நபராக இருந்து நீங்களே இதுபோல செயல்படலாமா என்று வினவுகிறார்கள்;என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்,அது என்னுடைய தவறல்ல;எனக்கு ஆண்டவர் சிறப்பாகக் கொடுத்த எதையுமே சிறுகுழுவில் வைத்து பயிற்சித்து பார்த்த பிறகே அதை நடைமுறைப்படுத்த முடியும்;
கிறித்தவ மேடைகளிலிருந்து மக்களை நோக்கும் தலைவர்களுடைய பார்வையிலிருந்து அல்ல,மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுடைய மனதிலிருந்து நான் காரியங்களை சிந்திக்கிறேன்; இன்னும் என்னை நானே பலமுறை சீர்தூக்கிப் பார்க்கிறேன்; சுந்தர் போன்றவர்களின் எழுத்துக்களை உங்களையெல்லாம் விட வரிக்குவரி வேத வெளிச்சத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தே அவர்களுடன் போராடுகிறேன்;வேதப் புரட்டர்களிடம் இருக்கவேண்டிய அத்தனை குணலட்சணங்களும் ஒருவரிடத்தில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது வேதப் புரட்டர்களின் சூழ்ச்சிகளை எப்படி அறியலாம் என்று நினைக்கிறீர்கள்?
மும்பையில் பல உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கசாப் எனும் கொலைகாரனுக்காக பரிந்துபேசும் அறிவுஜீவிகளும் இந்த தேசத்தில் உண்டல்லவா? அதுபோலவே வேதத்தின் அதிமுக்கியமான புண்ணியங்களை மறைத்து அதன் மேன்மையையும் அதன் விசாலத்தையும் குறுக்கிப்போட நினைக்கும் சிறுநரிகளைக் கொல்ல நினைக்கும் என்னைப் போன்ற சிறுவர்களை சிலர் தூஷிக்கின்றனர்;
இனியும் வேகம் கொள்வேனே தவிர வீழ்ந்து போகவும் மாட்டேன், விலைபோகவும் மாட்டேன்;அதனை பிடிவாதம் என்று சிலர் விமர்சித்தாலும் சரி, நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்;ஆண்டவர் எனக்கென்று குறித்திருக்கிறதை நிச்சயம் நிறைவேற்றுவார்,அவர் செய்ய நினைத்ததை யாரும் தடுத்துவிடமுடியாது;
தாங்கள் விரும்பினால் என்னுடன் இணைந்துகொள்ளலாம்,ஆனால் அது சற்று கடினமான காரியம் தான்;தங்களை மன்னிக்கும் அளவுக்கு நான் பெரிய ஆளல்ல,நண்பரே;தொடர்ந்து பேசுவோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கடினமில்லாத அதே நேரத்தில் கண்டிப்புடன் கூடிய சகோதரர்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி! சகோ. சில்சாமின் பதிவு எனக்கு மன வருத்தத்தை தந்திருந்தாலும் அவரையோ அல்லது அவரது பதிவையோ நீக்கும் எண்ணம் எனக்கு இல்லாமல் இருந்தது. (அப்படியானால் ஏன் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம்..?) காரணம் நான் தேவன் பேரில் நான் கொண்டுள்ள நம்பிக்கையே.
யோவான் 8:15 நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை
அடுத்து
II சாமுவேல் 16:10 அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
என்ற வார்த்தைக்கு ஏற்ப "கர்த்தர் ஒருவரிடம் சொல்லி என்னை சபிக்க சொன்னாராகில் அதை நான் நிச்சயம் ஏற்றே ஆகவேண்டும்" என்ற நோக்கில் இந்த வார்த்தை தேவனின் சித்தத்தால் எழுதப்பட்டால் நான் அதை ஒன்றும் செய்வதற்கில்லை, ஒருவேளை உம்முடைய சித்தத்துக்கு மாறானது என்றால் இந்த வார்த்தைகள் எழுதியவராலேயே நீக்கப்பட வேண்டும் மேலும் இதுபோன்ற வார்த்தைகள் இந்த தளத்தில் பதிவுக்கு வார்த்தைபடி தேவன் தாமே தற்காக்க வேண்டும் என்று என்னுடைய இருதய நிலையை தேவனின் கரத்தில் விட்டு விட்டேன்
ஆச்சர்யமாக இன்று காலை வந்து பார்த்தபோது சகோ. சில்சாம் தானாகவே அவரது அனைத்து பதிவுகளையும் நீக்கியிருந்தார். கர்த்தர் கரத்தில் ஒரு வழக்கை ஒப்புவிக்கும்போது அவரே முன்னின்று நமக்காக அனைத்தை யும் செய்து முடிப்பார்! நாமாக முட்டுக்குநின்றால் தேவையற்ற சண்டைதான் வரும்!
என் இருதய நிலையை அறிந்து இக்காரியத்தை செய்ய தூண்டிய தேவனுக்கு எந்நாளும் மகிமை உண்டாவதாக. நமது தளத்துக்கும் நமக்கும் பாதுகாவல் எந்த மனிதனும் அல்ல, தேவனே!
அவர் நம்மை புரிந்துகொள்ளவில்லை அவ்வளவுதான் எனவே மாம்சமான மனுஷன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்!
சகோ. சில்சாமின் பதிவு காப்பி செய்யப்பட்டு இந்த திரியில் பதிவிடப்பட்டுள்ளது அதையும் நீக்கி விட்டால் நல்லது என்று கருதுகிறேன். வாக்கெடுப்பையும் நீக்கிவிடலாமே! " தன்னைத் தான் நிதானித்து அறிந்தால் நியாயத்தீர்ப்பில்லை " என்று வேதம் சொல்லுகிறது ; ஆனால் இந்த மனுஷனுடன் நான் இத்தனை வைராக்கியத்துடன் போராடியும் கொஞ்சமும் அசைந்துகொடுக்காத நெஞ்சுரத்தை என்னென்று சொல்லுவது ?
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை மேலும் மேலும் உத்தமனாகக் காட்டிக்கொள்ள போடும் வேடங்கள் விரைவில் களையப்படும்; "பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு போனதாக " நினைவுகொள்ளுமாம்; அதுபோலவே இருக்கிறது இவருடைய அறிக்கை..! என்னை நீக்க இந்த ஆள் செய்யும் சூழ்ச்சிகளை உணர்ந்தே எனது எழுத்துக்களுக்கு பாதுகாப்பு கருதியும் "இப்படிப்பட்ட தாறுமாறானவனை விட்டு விலகு " என்று ஆண்டவர் எனக்கு எச்சரித்ததாலும் என்னுடைய எழுத்துக்களுடன் விலகிவிட்டேன்;
இது சாதாரணமான காரியமல்ல ; நேற்றிரவு முழுவதும் உறங்காமல் உட்காந்திருந்து கடந்த சுமார் ஒரு வருடமாக எழுதிய எனது அனைத்து பதிவுகளையும் எனது தளத்துக்கு மாற்றி அதனதன் இடத்தில் வைத்து விட்டு அங்கிருந்த எனது அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு விடியவிடிய ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து போராடி ஜெபித்துவிட்டு அமர்ந்திருக்கிறேன்.
இன்னும் இந்த ஆள் மூடிவிட்ட திரியிலுள்ள எனது எழுத்துக்களை மட்டும் என்னால் நீக்கமுடியவில்லை; "ஒரு பட்டணத்தில் உன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன் காலில் படிந்திருக்கும் தூசியை உதறிவிட்டு வெளியேறு " என இரட்சகர் கொடுத்த கட்டளையை நிறைவேற்றிய என்னை ஏதோ கொடும்பாதகனைப் போல சித்தரித்து கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே என்று சாதிக்கும் மடையனைப் போல எழுதும் இந்த ஆளை நினைத்தால் எனக்கு ஒரே சிரிப்பாக வருகிறது;
இவர்களெல்லாம் கற்பனையைக் குறித்தும் கிறித்தவ அன்பைக் குறித்தும் எனக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்;ஆனால் இவர்களுக்கெல்லாம் என்மீது அப்படி என்ன கோபம் என்று பழைய பதிவுகளையெல்லாம் மாற்றியெடுக்கும் போது படித்துப் பார்த்தே உணர்ந்துகொண்டேன்;கசப்பும் சுய பெருமையும் சுயநீதியும் விரோதமும் அங்கே பொங்கி வழிகிறது;அதாவது எட்வின்,ஸ்டீபன் ஆகியோர் ஏதோ முன்விரோதத்தின் காரணமாகவே என்மீது எரிச்சலாக இருந்திருக்கிறார்கள்; நானோ இதையெல்லாம் அறியாமல் இவர்களை "அன்புடன்" அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன்;
இந்த இருவருடன் ஏற்கனவே என்மீது குரோதங்கொண்ட சுந்தர் மற்றும் அவரது பினாமியான நிர்வாகி ஆகியோர் இணைந்து ஒரு அவசர கமிட்டி கூடி சில மணிநேரங்களிலேயே தீர்ப்பு வழங்குகின்றனர்;
இயேசுவானவர் வெறும் ஆறு மணிநேரத்தில் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு சிலுவையிலறையப்பட்டாராம்;ஆனால் எனக்கோ ஒரே மணிநேர விசாரணையில் அடுத்தடுத்து எல்லாம் நடந்தது;
சுந்தர் தனது தளத்தில் இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்றதோ அவர் தனக்கு மரணமேயில்லை என்பதோ தான் ஒரு இந்து தெய்வத்தின் மறுபிறவி என்பதோ பைபிள் மட்டுமே முழுமையானதல்ல என்பதோ இந்த அரைவேக்காட்டு காக்கைக் குஞ்சுகளுக்கு தெரியவில்லை போலும்; அப்படிப்பட்ட துருபதேசக்காரன் சொல்லுவது அனைத்துமே தாறூமானதாகவே இருக்கும் என்ற அறிவு இந்த காகிதப் புலிகளுக்கு விளங்கவில்லை;
எட்வின் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் பிஞ்சில் பழுத்த - வெதும்பிய காய்களைப் போல ஒருதலைப்பட்சமாக கூறியிருக்கிற கருத்துக்களுக்காக யாரிடமும் கணக்கொப்புவிக்க வேண்டாமோ..?
உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக உறவாடும் மக்களிடமிருந்து என்னை எப்போதும் பிரித்தெடுத்து தனியாகவே - தனித்தன்மையுடன் நடத்தும் ஆண்டவரை இந்த நேரத்தில் கண்ணீருடன் துதிக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது தசமபாகத்தைக் காணிக்கையாகப் பெறுவது தவறா? எனும் திரியில் நடைபெற்ற விவாதத்தில் நண்பர் அசோக் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சுந்தர் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்ட கட்டுரையாகும்;இதில் அவர் மறைமுகமாக அசோக் அவர்களையும் பத்து கற்பனை தேவையில்லை ,தேவ கிருபையினாலும் விசுவாசத்தினாலும் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்பதே கிறித்துவின் சுவிசேஷம் என்ற போதனையைக் கைக் கொள்வோரையும் தாக்குகிறார்;
இது அசோக் அவர்களின் கருத்து: நண்பர்களே, கிறிஸ்துவின் ரத்தத்தை நீங்கள் ஏன் அசிங்கப்படுத்துகிரீர்கள்? நீங்கள் இன்னும் ஏன் உங்கள் கிரியைகளை நம்பி இருக்கிறீர்கள்? கிருபை மூலம் ரட்சிப்பென்றால், எதற்கு இதை செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்ற விவாதங்கள்? உங்கள் கிரியைகளை நோக்கி பார்காதிருங்கள் (அவை நன்மையாய் இருந்தாலும், தீமையாய் இருந்தாலும்). தேவ கிருபையை மாத்திரம் சார்ந்து கொள்ளுங்கள். கிறிஸ்துவை சார்ந்து கொள்ளுங்கள், அவர் கிரியைகள் உங்களை தேவராஜ்யத்தை சுதந்தரிக்க செய்யும். நன்றி, அசோக்
// தலைப்பை பார்த்ததும் பலருக்கு குழப்பமும் ஆச்சரியமும் ஏற்ப்படலாம். நானும் கூட அதே குழப்பத்தோடும் ஆச்சர்யத்தோடும் வேதனையோடும் கூட இந்த பதிவை தருகிறேன்; தேவனின் திட்டங்களை நிறைவேறமுடியாமல் நிர்மூலமாக்கி வருவது "தேவ பிள்ளைகள்" என்றும் "தேவ ஊழியர்கள்" என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு அலையும் மனிதர்களேயன்றி வேறுயாரும் அல்ல, என்பதை நான் புரிந்துகொண்ட அனேக நாட்கள் ஆகிறது அதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!
சாத்தான் மனிதனை தந்திரமாக ஏமாற்றி வருவது என்பது புதிய கதை அல்ல! ஆதி தகப்பனாகிய ஆதாமிலிருந்து அடுத்த காலத்து அனனியா சபீறாள் மற்றும் அண்மை காலத்து பிரன்யாம் (?) வரை அநேகர் சாத்தானின் தந்திரத்தில் விழுந்து போனார்கள், என்பதை அறிந்துள்ள நமக்கு சாத்தான் தந்திரக்காரன் என்பது நன்றாகவே தெரியும் ஆனாலும் அவனது புதுப்புது தந்திரங்களை புரிந்துகொள்ள முடியாமல் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் எல்லோரும் விழுந்துபோயவிடுவது என்பதும் வாடிக்கயாகிவிட்ட ஓன்று. இதற்கு முக்கிய காரணம் விசுவாசிகளின் வாழக்கை தேவனின் வார்த்தைகள் மீது கட்டப்படாததுதான். மலைப்பிரசங்கத்தை போதித்த இயேசு மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மத்தேயு 7:24 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
நம்மெல்லோருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் மேல் அஸ்திபாரம் போடத்தெரியும் அதுபோல் "இயேசு மீது அஸ்திபாரத்தை போடுங்கள்" என்று மற்றவர்களுக்கு போதிக்கவும் தெரியும் ஆனால் இயேசு கூரியிருப்பதுப்போல் விழுந்துபோகாத அஸ்திபாரமாகிய அவர் வார்த்தையின்படி வாழதெரியாது. எனவே சாத்தான் ஒரு புது தந்திரத்தை கையாளும்போது ஒட்டு மொத்தமாக விழுந்து ஒன்றுமில்லாமல் போய்விடுகிறோம்.
தேவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் ஒரு பகுதியை சாதகமாக்கி கொள்வது என்பது சாத்தனுக்கு கைவந்தகலை. அந்த தந்திரக்கார சாத்தானுக்கு இப்பொழுதோ இயேசுவின் இரத்தத்தை குறித்து மிகுந்த கரிசனை வந்துள்ளது. காரணம் அந்த இயேசுவின் இரத்தம்தான் அவனை இன்றுவரை வாழ வைத்துக் கொண்டுள்ளது. அவர் பாங்களுக்காக சிந்திய அந்த இரத்தத்தையே தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு இன்று எல்லோரையும் சுலபமாக திசைதிருப்பி வருகிறான்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆச்சர்யம்தான் ஆனால் அது உண்மை! ஆண்டவராகிய இயேசு தான் வாழ்ந்த காலத்தில் எங்கும் "நான் ஜனங்களின் பாவத்துக்காக மரித்த பின்னர் நீங்கள் எந்த கற்பனையையும் கைகொள்ளவேண்டிய தேவை இல்லை" என்று போதிக்கவில்லை. அவர் மரித்து உயிர்த்து பலருக்கு தரிசனமான பின்னும்கூட அப்படி தேவனின் கற்பனைகளும் கட்டளைகளும் தேவையற்றது என்று யாருக்கும் போதித்ததாக வார்த்தை இல்லை.
ஆனால் இன்று புறப்பட்டுள்ள நூதன போதகர்கள் (?) பவுலின் உபதேசத்தை தவறாக புரிந்துகொண்டு தேவனின் ஆலோசனை அனைத்தையும் ஏன் இயேசுவின் வார்த்தைகளைகூட அவரது இரத்தத்தை காரணம் காட்டி தள்ளிவிடுகின்றனர். அதனால் சாத்தானுக்கு சந்தோஷமோ சந்தோசம்! இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்றொரு மமதையில் இருக்கிறான்
மிகுந்த சித்த்ரவதையின் மத்தியில் இயேசுவின் விலைஏறப்பட்ட இரத்தம் சிந்தப் பட்டதே ஆதியில் இருந்தே மனுஷ கொலைபாதகனாகவும் பொய்யனாகவும் பொய்க்கு தகப்பனாகவும் இருக்கும் இந்த தீயவனாகிய சாத்தானை ஒழிப்பதற்குத் தான்! அவனை ஒழிக்கவேண்டும் என்றால் தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அவனை ஜெயம்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அந்தோ பரிதாபம் அந்த இயேசு சிந்திய இரத்தத்தை காரணம் காட்டியே ஜனங்களை பிசாசின் காரியங்களாகிய பொய்சொல்வது/ திருடுவது/ எமாற்றுவது/இச்சை/சுயநலம் போன்ற காரியங்கள் மட்டுமல்ல எந்த ஒரு காரியமும் பெரிய பாவமில்லை என்பதுபோல் ஒரு மாயதோற்றத்தை ஏற்ப்படுத்தி கெடுத்து வருகிறான்.பவுல் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தேவனுக்காக வாழ்ந்து ஆவியினாலேயே நடத்தப்பட்டு தனது ஜீவனை தேவனின் பாதத்தில் ஊற்றியவர். அவர் சொல்கிறார்
வஞ்சிக்கப்படாதிருங்கள் தேவனை யாரும் ஏய்த்துவிட முடியாது. இயேசு மற்றும் தேவனின் கற்பனைகளை கைகொள்ளுவது என்பது கடினம்தான்! அனால் முடிந்த வரை முயற்ச்சிக்கலாமே! நாம் எத்தனைமுறை விழுந்தாலும் நமது தேவன் நம்மை தூக்கி நிலை நிருத்துவார்.ஆனால் சில வஞ்சக ஆவிகளின் வார்த்தைகளை கேட்டு "ஆவியில் நடத்தபடுகிறேன்" என்று ஒரு மாய வார்த்தையை பசப்பிக் கொண்டு தேவனின் வார்த்தைகளை கற்பனைகளை தள்ளி விட்ட்டீர்களேயானால் தேவன் உங்களை தனது ராஜ்யத்தில் இருந்து தள்ளிவிடுவார் என்பதை வசனம் தெளிவாக சொல்கிறது.
தேவன் புதிய ஏற்பாட்டு சபைக்கு சொல்லியுள்ள எச்சரிக்கை செய்தி இதோ!
வெளி 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்
ஒருவரும் பூட்டாத திறந்த வாசல் வேண்டுமா அவரது வசனத்தை கைகொள்ளுங்கள்!
தசமபாகத்தைக் காணிக்கையாகப் பெறுவது தவறா? எனும் திரியில் சம்பந்தமில்லாத விவாதத்தைத் தந்திரமாக நுழைத்த சுந்தர் தொடர்ந்து தனது துருபதேசத்தை செய்து கொண்டிருந்தால் அதனை விசுவாசிகளாகிய நாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது;விசுவாசிகள் எனும் வார்த்தைக்கு கற்பனையை விசுவாசிப்பவர்கள் என்றல்ல,கிறித்து நிறைவேற்றியவற்றை விசுவாசிப்பவர்கள் என்பதே பொருளாகும்
இவருடன் ஏற்பட்ட போராட்டம் இன்று நேற்றல்ல,கடந்த இரண்டு வருடமாக நடந்துவருகிறது;இவரைத் தெளிவடையச் செய்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில் இவருடைய போதனைகள் முற்றிலும் விகாரமாகவும் விவகாரமாகவும் பெருகிக் கொண்டே இருக்கிறது;அதனைத் தடுக்க முடியாவிட்டாலும் நம்முடைய எதிர்ப்பை பதிவுசெய்யும் வண்ணமாகவே இந்த திரியைத் துவங்கினோம்;தயவுசெய்து இந்த திரியின் முதல் பதிவைப் பார்வையிடவும்.
சத்தியத்தைக் குறித்த அறிவில்லாதவர்கள் மேல் ஆண்டவரே மனதுருகினார்;ஆனால் காலங்காலமாக சத்தியத்தில் ஊறித் திளைத்து கலப்படமானவற்றையும் மாறுபாடானவற்றையும் போதிக்கிறவர்களிடம் ஆண்டவர் கடினமாகவே நடந்துக் கொண்டார்;என்னுடைய நியாயங்கள் புரியவேண்டியவர்களுக்கு விரைவில் தெரியவரும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இறைநேசன்18h, 56m agoசகோ. சில்சாம் அவர்களின் பதிவுகள் பற்றி! நமது தளத்தில் எழுதப்பட்டது "இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு வாழுங்கள்" என்பதை வலியுறுத்தும் சாத்தான் சாதகமாக்கிகொண்ட இயேசுவின் இரத்தம்!ஒரு பொதுவான கட்டுரைதான்.அதற்க்கு பின்னூட்டமிட்டுள்ள சில்சாம் இவ்வாறு எழுதுகிறார்.
/////நான் இறுதியாக எச்சரிக்கிறேன்,இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட தேவ ஜனத்தின் சுயாதீனத்தை உளவு பார்த்து அவர்களை சாத்தானுடன் ஒப்பிட்டு இனியும் தூஷித்தால் இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/////
////இந்த பயங்கரம் உங்கள்மீது வராது,ஆனால் நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் உறவுகளின் மீது வரும்;////
என்கிற வார்த்தையை மட்டுமல்ல, வேதத்தில் சொல்ல பட்டிருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் இவர் கவனிப்பதும் இல்லை அதை ஒரு தேவனின் எச்சரிப்பாக மதிப்பதும் இல்லை. ஆனால் "அன்பின் பிரமாணம்" என்று அலப்பிக்கொண்டு, இதுபோல் சாத்தானின் சாபங்களை அவிழ்த்துவிட்டுகொண்டு இருக்கிறார். அடுத்தவர் இரத்தவியாதி வந்து சாவதில் தான் இவருக்கு என்ன சந்தோசம் பாருங்கள்! அனேக பாடுகள்பட்டு இரத்தத்தை சிந்திய இயேசு கூட இவர் சாபத்தை சகிக்க மாட்டார்(இப்படி அடுத்தவர் அழிவில் சந்தோஷப்படுவது யார் என்பது எல்லோருக்கும் நிச்சயம் தெரியும்)
இவருக்கு ஏற்கெனவே நாம் நல்ல முறையில் புத்தி சொல்லிவிட்டோம் ஆனால் வேதவார்த்தைகளையே கவனிக்காத இவர் நமது வார்த்தைகளையா கவனிப்பார்?. நான் பல பிறமத தளங்களில் அதிகம் எழுதியிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு சகோதரனும் இப்படிப்பட்ட மனதை புண்படுத்தும் வார்த்தைகளை எழுத துணிவ தில்லை அப்படி எழுதினால் அந்த தள நிர்வாகியே அந்த பதிவை நீக்கிவிடுவார்.
தள நிர்வாகி என்ற முறையில் கேட்கிறேன்: நாம் சகிப்புத்தன்மை உள்ளவர்கள்தான்! ஆனால் ஆண்டவரை பற்றி எழுதும் சகோதாரர்களுக்கு மன மடிவை ஏற்ப்படுத்தி கிறிஸ்த்தவ அன்புக்கே தவறான இலக்கணம் காட்டி பிறமத சகோதரர்கள் மத்தியிலும் கிரிஸ்த்தவ்த்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் இவர் போன்றவர்களின் கேடுகெட்ட சாபங்களை நமது தளத்தின் இன்னும் அனுமதிக்க வேண்டுமா?
தள சகோதரர்கள் கருத்து தெரிவிக்கவும்!
EDWIN SUDHAKAR 18h, 16m ago
தேவன் யோபுவின் இடத்தில் கேள்வி கேட்டது போல சகோதரர் சில்சாம் அவரிடம் தேவன் கேட்டு இருந்தால்
தேவனுக்கும் இவர் பதில் அளிப்பார் என்று நினைக்கின்றேன்
தேவன் : சில்சாம் ஆழங்கள் தோன்றுவதற்கு முன்போ நீ இருந்தாயோ அதை நீ அறிவாயோஎன்று ஆண்டவர் கேட்டால்
சில்சாம் : நிச்சயம் அறிவேன்,...! வேதம் சொல்கின்றது உலகம் தோற்றத்திற்கு முன்பே தேவன் நம்மை தெரிந்து கொண்டார் என்று வேதத்தில் எழுதி இருக்கின்றதே தேவனே
இதுவரை ஒரு தலைப்பையும் எழுதாமல் மற்றவர்கள் எழுதிவதில் குறை கூறி கொண்டே தான் இருக்கின்றார்
எனக்கு தெரிந்து ........................
SUNDAR 16h, 40m ago சகோ. சில்சாமின் பல பதிவுகளை அலசி ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு வசனத்துக்கு புறம்பாக காரியங்களை செய்யும் விசுவாசிகளும் முக்கியமாக தேவ ஊழியர்களும் திருந்தவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருபதுபோல் தெரிகிறது. அந்த ஆதங்கத்தில் அடிபடையில் ஊழியர்களின் தவறான நிலைகளை சுட்டிகாட்டி பல ஊழியர்களை கடிந்து எழுதி வருகிறார்.
அவர் ஊழியர்களின் தவறான நிலை பற்றி எழுதியிருக்கும் அனேக காரியங்கள் உண்மை என்பதும் அனேக ஊழியர்கள் கள்ளர்களாகவும், எவ்விதத்திலாவது பணத்தை பிடுங்க நினைக்கும் பண பேய்களாகும் சொகுசு கார்களில் பவனி வருகிறவர்களாகவும், இச்சையின் ஆவியால் பீடிக்கப்ப்ட்டிருப்பவர்களாகவும் சுபாவ அன்பில்லாதவர்களாகவும், தனக்கு கீழுள்ளவர்களை ஒடுக்குகிரவர்களா கவும் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
பிறகு நான் ஏன் அவ்வித ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று கேட்கிறீர்களா? அதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. எந்த மனிதனும் எல்லா நேரங்களிலும் தேவமனிதனாகவே இருப்பது இல்லை. எல்லோருக்கும் மாமிசசுபாவம் என்பது அவ்வப்பொழுது தலை தூக்கத்தான் செய்யும் அதை வைத்து அவரை ஒரேயடியாக தவறானவர் என்று தீர்த்துவிட முடியாது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த பரிசுத்தன் என்றும் யாரையும் தீர்த்து விடவும் முடியாது!
2. அடுத்து ஜனங்கள் வெகுவாக நம்பிக்கொண்டு இருக்கும் அவ்வித பெரிய ஊழியக்காரர்களை குறைகூறிக்கொண்டு திரிவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை. மாறாக நான் மலைபோல தேவ மனிதன் என்று நம்பிகொண்டிருக்கும் இந்த ஊழியரே இப்படி என்றால் பிறகு யாரைத்தான் நம்புவதோ? என்று அக்கலாயத்து இறுதியில் "எல்லோரும் கள்ளர்கள்" என்று தீர்மானித்து சபைக்கே போகாதநிலை கூட சிலருக்கு ஏற்பட்டுள்ளதை நான் கண்டிருக்கிறேன். இவ்விதத தில் ஒரு ஆத்துமாவும் நம்மால் வழிவிலகிவிட கூடாது என்ற ஆதங்கம்தான்
சாம்சன் பால் அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் தேவையில்லாமல் தினகரனை அதிகமதிகமாக சாடுவார். அவர் எழுதுவதில் அனைத்தும் உண்மைதான் அனால் சில சகோதரிகள் சொல்வது "அவர் வேலையை அவர் பார்க்கவேண்டியதுதானே எதற்கு அடுத்தவரை கூறிக்கொண்டு திரிகிறார். தினகரன் எந்த இடத்திலாவது யாரையாவது குறை கூருகிராறாரா?" என்று கேட்பதோடு ஒரு நல்ல ஊழியராகிய சாம்சன் பாலின் மீது ஒரு தவறான அபிப்ராயமும் உண்டாகி விடுகிறது. .
ஊழியர்களும் விசுவாசிகளும் திருந்தவேண்டும் என்பதற்காக தாங்கள் சொல்வது போல் ஒவ்வாருவரையும் குறை சொல்லிக்கொண்டு இருந்தால் எல்லோருக்கும் (புறஜாதியாருக்குகூட) கிறிஸ்த்தவத்தின்மீது நிச்சயம் வெறுப்பைத்தான் கொண்டு வரும்.
இப்பொழுதுகூட நான் எழுதுவதை தவறு என்று சொல்லும் நீங்கள் என்னை திட்டுவதாக திருத்த நினைப்பதாக நினைத்து அனேக இடங்களில் தேவனின் வார்த்தைகளை மீறுகிறீர்கள். நாளை ஆண்டவர் முன்னால் நிற்கும்போது அவர் தங்களிடம் "நீ இப்படி ஒரு கொடூரமான சாபத்தை ஏன் எழுதினாய் என்று நிச்சயம் கேட்பார்? உடனே நீங்கள் "ஆண்டவரே உங்கள் இரத்தத்தின் மகிமையை காப்பாற்றத்தான்" என்று கூறுவீர்கள். உடனே அவர் "எனது இரத்தத்தின் மகியை யாரும் ஒன்றும் செய்யமுடியாது நான் உனக்கு சொன்ன 'உங்களை சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்' என்ற வார்த்தையை நீ ஏன் மதிக்கவில்லை?" என்று கேட்பார். அப்பொழுது என்ன பதில் சொல்லபோகிறீர்கள் என்று தெரியவில்லை.
எனக்கு தாங்கள் நிலையில் சற்றும் உடன்பாடு கிடையாது. நான் தேவனின் நியாயதீர்ப்புக்கு பயந்தவன். என்னை நீங்கள் என்ன திட்டினாலும் சாபம் விட்டாலும் நான் திருப்பி திட்டபோவது இல்லை நான் இதுவரை யாரையும் திருப்பி திட்டாததர்க்கும் சாபம் விடாததர்க்கும் காரணம் நான் வேத வார்த்தைகளை கைகொண்டு நடக்க நினைப்பதும் அதன் அடிப்படையில். எல்லோரிடமும் சமாதனாக இருக்க நினைப்பதுதான்.
யாரையும் ஒரு வார்த்தை கூட கடினமாக எழுத ஆண்டவர் என்னை அனுமதிப்ப தில்லை. ஆனால் உங்கள் ஆண்டவர் மட்டும் எப்படி அடுத்தவருக்கு "இரத்த வியாதி வந்து சாகட்டும்" என்று சபிக்க அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நீங்களும் அந்த கனியற்ற கோஷ்டிகளில் ஒருவர்தான் என்றே நினைக்கிறேன்.
உங்கள் வார்த்தைகளிலேயே அனேக முரண்பாடுகள் இருக்கிறது!. ஓன்று இயேசுவின் பிரமாணம் அன்பின் பிரமாணம் அதனால் எந்த தவறு செய்தாலும் பாவம் செய்தாலும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் வரும் பாதுகாப்பு நமக்கு உண்டு, என்று போதித்து யார் செய்யும் தவறையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள். அல்லது நான் சொல்வதுபோல "தேவனின் வார்த்தையை கடைபிடித்து செய்வதை சரியாக செய் இல்லையேல் உனக்கு தண்டனை உண்டு" என்று சொல்லுங்கள். இரண்டும் இல்லாமல் ஒருபுறம் தவறாக நடக்கும் ஊழியர்களை குறைகூறிக்கொண்டு இன்னொருபுறம் தேவனுக்கு விரோதமான பாவன் தண்டனையை தரும் என்று சொல்வோரை சபித்து கொண்டிருந்தால் உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே புரிய வில்லை.
என்னுடைய முக்கிய நோக்கமும் ஊழியர்கள் மட்டுமல்ல விசுவாசிகளும் எல்லோரும் தேவனுக்கேற்றபடி திருந்தவேண்டும் என்பதுதான். ஆனால் எனது அணுகுமுறைதான் வேறு! அதுதான் "வேதம் சொல்லும் வார்த்தைகளை கைகொள்ளுங்கள் என்பது, அவ்வாறு கைகொள்ளதவனுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பது" அது வேதத்துக்கு எவ்விதத்திலும் புறம்பானது அல்ல எவ்விதத்திலும் உண்மைக்கு புறம்பானதும் அல்ல.
இன்று தேவ ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துணித்து தேவனின் வார்த்தைகளுக்கு விரோதமாக நடக்கிறார்கள் என்பதை தாங்களே குறிப்பிட்டு ள்ளீர்கள் அதற்க்கு காரணம் என்ன? "இயேசுவின் பிரமாணம் அன்பின்பிரமாணம்" என்ற வார்த்தைதான். அதை நானும்ஏற்கிறேன் ஆனால் அந்தஅன்பை முறையாக பயன்படுத்த தெரியாமல் காலில் போட்டு மிதிப்பவர்களுக்கு தண்டனை உண்டா இல்லையா?
ஒருவன் இய்சுவின் வார்த்தையை கைகொண்டு நடப்பதில் அக்கறை காட்டினால் சபையில் உள்ள எல்லா பாவமும் தானாக பறந்துவிடும். செய்யவேண்டிய எல்லா காரியங்களையும்தான் வேதம் மிகசரியாக போதிக்கிறதே. அது தேவை யில்லை இது தேவையில்லை என்று விலக்கபோய தானே இவ்வித பாவங்கள் துணிந்து சபைக்குள்ளேயே தலைதூக்குகிறது? அவ்வாறு உருவாகும் பாவத்தை வசனத்தின் அடிப்படையில் கடிந்து சுட்டிகாட்டி முளையிலேயே கிள்ளிஎரியாமல் அதை அட்ஜஸ்ட் செய்து அனுமதித்துவிட்டு பின்னர் "அவர் அப்படி செய்கிறார் இவர் இப்படி செய்கிறார்" என்று குறை கூறுவதில் என்ன பயன்?
Stephen 15h, 46m ago
சகோதரர் சில்சாம் அவர்களின் பிடிவாதம் தனக்கு தெரிந்த ஏதோ ஒன்றை தவிர மற்ற அணைத்து காரியங்களில் குற்றம் கண்டுபிடிபதாகவே தோன்றுகிறது.
அவர் ஒருவேளை தன்னுடைய தலத்தில் சொல்லுகிறபடி தேவனுக்காக வைராக்கியம் கொண்டிருந்து இப்படி செய்தாலும் கூட சகோதரர் சுந்தர்அவர்களை இப்படி மிகவும் தரக்குறைவாக எப்படி பேச முடிகிறதோ தெரியவில்லை.
இப்படி பட்ட வார்த்தைகளை உபயோகபடுதுவதுதான் அவர் மற்றவர்களை நேசிபதோ....! தேவன் எல்லாரையும் நேசிக்கிறார் அவர் ஒருவரையும் வெறுபதில்லை அப்படிருக்க தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு எப்படிதான் இப்படி சபிகிராரோ தெரியவில்லை.
தவறான கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பபடுகிறது என்று மிக ஆவேசபடுகிறாரே.....இவருடைய கருத்துகள் எத்தனை பேருக்கு இடறலாய் இருக்கும் என்பதை சற்று அறியாமல் இருக்கிறாரே...இதற்க்கு என்ன சொல்வது....!
போலியாய் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்து இருபவர்கள் மீது கோபப்படும்போது தாங்கள் ஆவியில் வைராக்கியம் கொண்டு இப்படி சொல்லுகிறிர்கள் என்று நினைத்தால் இப்படி சாபத்தையும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதுதான் தங்கள் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் வழியா ...!
இப்படி சபித்துவிட்டு தாங்கள் எப்படி எல்லாரையும் நேசிக்க சொல்வீர்கள் கிறிஸ்துவின் அன்பை எப்படி வெளிபடுதுவீர்கள் அன்பை குறித்து எப்படி பேச முடியும் ..உங்கள் மனசாட்சி இடம் குடுக்குமோ;;;;
இதை எழுதும்போதுகூட சகோதரர் சில்சாம் வருத்த படுவாரே என்று தவிர்க்க முடியாமல் எழுதுகிறேன். ஆனால் இப்படி சபிக்கும் அளவிற்கு சுந்தர் என்ன காரியத்தை சொன்னார். அவருடைய வார்த்தைகள் இதுவரைக்கும் இதை படித்த ஒருவர்க்கும் இடறல் உண்டாகவில்லை என்பதே. எனக்கு தெரிந்தவரை....!
ஆனால் இப்படி சாபம் இடுவது எவ்விதத்திலும் தவறு தாங்கள் விதைகிரதைதான் அறுவடை செய்வீர்கள் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் நினைவு படுத்துகிறேன். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் இப்படி சபிக்கும் போது வருந்தவில்லையா.....?
நீங்கள் உண்மையாகவே தேவனை நேசித்தால் நம்முடைய தேவனை போல யாரையும் சபிகாதிர்கள் அதற்கு மாறாக நேசியுங்கள் இல்லையென்றால் நம்முடைய வார்த்தையின்படியே நாம் நியாம் தீர்கபடுவோம்.
என் நாமத்தின் நிமித்தம் அநேகரால் பகைக்கபடுவீர்கள் என்று சொல்ல பட்ட அநேகரில் சில்சாம் அவர்களும் ஒருவரோ என்றே நினைக்க தோன்றுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சில்சாம் எழுதுகிறார்: //இயேசு தொழத்தக்க நபரல்ல என்பதில் பெரியன்ஸ் குழுவையும்!!//
கோவைபெரெயன்ஸிலிருந்து தன் பதிவுகளை நீக்கி விட்டு இன்னோரு தலத்தில் குறை கூறுவதில் என்ன பயன்!! நாங்கள் ஒரு போதும் இயேசு தொழத்தக்க நபரல்ல என்று சொன்னதில்லை!! எவ்வுளவாக வேதத்தில் பிரியமாகவும், தேவனின் வார்த்தையை கனப்படுத்தும் நாங்கள் இந்த வசனத்தின் படி சொல்லாமல் இதற்கு விரோதமாக எழுதுவோமா!! ஆனால், கிறிஸ்து பிதாவிற்கு அடுத்தப்படி என்பதை மறுக்க மாட்டோம்!! பிதாவை மகிமைப்படுத்தும்படி நாங்கள் கிறிஸ்துவை கர்த்தர் என்று அறிக்கை செய்கிறோம்!! பிதாவினிடத்தில் பெற்று கொள்கிரோம், கிறிஸ்துவின் மூலமாக!! தருபவர் பிதா, பெற்று தருபவர் கிறிஸ்து என்பதை அறியாமல் இருக்கிறீர்களோ!!
பிலி 2:10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிதாவிற்கு உண்டான மகிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதில் எந்த தவறும் இல்லை, கிறிஸ்துவே அதை தான் சொல்லியிருக்கிறார்!! ஆனால் பிதாவும் கிறிஸ்துவும் ஒன்று என்போருக்கு இது புரிய வாய்ப்பில்லை தான்!! ஏனென்றால் பிதாவாகிய தேவன் வேறு, குமாரனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து வேறு என்கிறதான அறிவு இல்லாதவர்களுக்கு இது புரியாது!! (1 கொரி 8:6,7)!! இந்த அறிவு இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களே கிடையாது, தமிழ் பண்டிதகர்களாக இருந்து எழுத்து பிழையை வேண்டுமென்றால் சுட்டி கான்பித்துக்கொண்டிருக்கலாம்!! சில்சாமின் எச்சரிப்பு: // நான் இறுதியாக எச்சரிக்கிறேன்,இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட தேவ ஜனத்தின் சுயாதீனத்தை உளவு பார்த்து அவர்களை சாத்தானுடன் ஒப்பிட்டு இனியும் தூஷித்தால் இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..! //
அடிக்கடி இப்படி பிறரை எச்சரிப்பதும், சபிப்பதும் தான் தங்களின் ஊழியமோ!! என்னமோ உங்களுக்கு சாவே இல்லாதது போல் பிறரை இப்படி சபித்து திரிகிறீர்களே, இது தான் கிறிஸ்துவின் போதனையில் இருப்பதாக தாங்கல் கான்பித்து கொண்டு இருக்கிறீர்களோ!! அப்படி என்றால் ஊழியக்காரன் வியாதியே இல்லாமல் தான் மரிக்கிறார்கலோ, இல்லை அவர்கள் மரிக்க காரணமாக இருந்த வியாதிகள், தங்களை போன்ற கிறிஸ்தவர்கள் விட்ட சாபத்தின் காரணமாக தானா!! வாய் இருப்பதற்காக எதையும் பேசி திரிய கூடாது, ஊழியர்கள் அனைவரும் உத்தமமானவர்கள் என்கிற மமதையிலும் இருக்க வேண்டாம்!! உங்கள் எச்சரிப்புகள் நீங்களே சுமந்துக்கொள்ளுங்கள்!! மற்றவர்களை பார்த்துக்கொள்ள தேவன் இருக்கிறார்!!
நண்பரே, நீங்களெல்லாம் யாரென்று எனக்குத் தெரியாது;ஆனால் சத்தியத்துக்கு விரோதிகள் என்பது நிச்சயமாகத் தெரியும்;தங்கள் முரண்பாடுகளை பொறுமையாக வாசித்து வித்தியாசப்படுத்தி அறியும் அவகாசம் வாசகர்களுக்கு இல்லாததால் நீங்கள் எழுதுவதெல்லாம் சரியென்ற தோரணை ஏற்படும்;அதற்குக் காரணம் நீங்கள் அதிகமாக வேத வசனங்களைக் குறிப்பிடுவது தான்;ஆனால் முழுவேதபகுதியையும் கவனிக்காமல் "பிக்" பண்ணி எடுத்து போடுவதால் சற்று மயக்கம் ஏற்படலாம்;ஆனால் முழு சூழமை (Context) வையும் கவனித்தால் நீங்கள் மண்ணை கவ்வுவது நிச்சயம்;நான் யாரையும் சபிக்கவில்லை;உங்கள் போக்கின் முடிவு என்னவாக அமையும் என்பதையே கூறியிருக்கிறேன்;அதற்கொரு அடையாளத்தையும் முன்வைக்கிறேன்,நேர்மையுடன் அதைக் குறித்த சாட்சியை நீங்கள் தருவீர்கள்;இந்த பயங்கரம் உங்கள்மீது வராது,ஆனால் நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் உறவுகளின் மீது வரும்;இதனை நிகழ்த்தப்போவது நீங்கள் மிகவும் நேசிக்கும் சாத்தானே;கிறித்துவின் சிலுவை மரணத்தைக் கொச்சைப்படுத்தி அவரது தியாகத்தையும் தெய்வத்தன்மையையும் மறுதலித்தோர் அடைந்த அதோ கதியையே நீங்களும் அடைவீர்கள்.
நீங்கள் இயேசுவானவரை சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்காக பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற நிலையிலேயே வைத்திருக்கிறீர்கள்;மேலும் அவர் பிதாவின் சமூகத்திலிருந்து பணிபுரிந்த மிகாவேல் போன்ற தூதன் என்கிறீர்கள்;மனிதனுக்குள் ஆவி ஆத்துமா சரீரம் என்பது இல்லை என்கிறீர்கள்;சுவிசேஷம் தேவையில்லை என்கீறீர்கள்;நரகம் இல்லை என்கிறீர்கள்;உயிர்த்தெழுதல் இல்லை என்கிறீர்கள்...இப்படி நீங்கள் முரண்பட்டு நிற்கும் காரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்;
பின்குறிப்பு:
உங்கள் தளத்திலிருந்து வெளியேறிவிட்டால் எங்குமே உங்களைக் குறித்து பேசக்கூடாது குழந்தைத்தனமான கூற்றாகும்;தங்களது அணுகுமுறையானது நேச உணர்வுடன் கூடிய நட்பாக இருந்திருந்தால் பரவாயில்லை,அது ரௌடித்தனமாக இருந்தது;உங்களுடன் போராடிய காலத்திலேயே எனது எழுத்து பாணியே மாறியது;நான் உங்கள் நிலைக்குத் தாழ்ந்து சரிக்கு, சரி நின்று எழுதியதால் எனது சமாதானம் கெட்டது;மேலும் "உன்னை யார் இங்கே வருந்தி அழைத்தது " என்பதாக தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் பாதிக்கும் வண்ணமாக எழுதியதால் வெளியேறினேன்;
சில பல காரணங்களால் என்னை நான் முடக்கிக் கொண்டிருந்தேன்; இதன் காரணமாக என்னை ஒழித்துவிட்டதைப் போல எண்ணிய ஒரு பேலியாளின் மகன் எழும்பி கண்டபடி எழுதிக்கொண்டிருக்கிறார்;
"பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். " (நீதிமொழிகள்.6:12,13)
இந்த வேத வசனங்கள் மட்டுமல்ல, தொடர்ந்து வரும் வசனங்களும் அவருக்கே பொருந்தும்; இங்கே எல்லோரும் வசன ஆதாரத்தைக் கேட்கிறார்களே என்பதால் இந்த வசனத்தைப் போட்டிருக்கிறேன்;
மற்றபடி நம்முடைய அறியாமைக்குக் காரணம் வசனம் அல்ல,நாம் போதிக்கப்பட்ட விதமே; அதனை சரிசெய்ய அனுபவங்களிலிருந்து எழுதினாலே போதும் என்பது எனது கருத்து; தேவைப்பட்டால் மட்டுமே வசனத்தை நான் பயன்படுத்துவேன்; ஆனாலும் எனது ஒவ்வொரு வரியும் வசனத்தையொட்டியே இருக்கிறது; அதில் வசனம் இழையோடிக் கொண்டிருக்கிறது; மேலும் வசனம் தேவைப்படுவோர் நான் எழுதுபவை சம்பந்தமான வசனத்தைத் தேடி எடுத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டுவதும் அவசியம்; எனது எழுத்துக்கள் வசனத்தினடிப்படையில் இல்லாதிருந்தால் அதனை ஏற்கவேண்டாம்; அல்லது எந்த வசனத்தின் அடிப்படையில் நான் எழுதுவது தவறு என்று எண்ணுகின்றாரோ அதனைக் குறிப்பிட்டால் அது பரிசீலிக்கப்படும்.
நான் ஏற்கனவே அடையாளம் காட்டிய மூவரில் சுந்தர் என்பவருக்கு தற்போது "ரொம்ப" முற்றிவிட்டது போலும்; நிலையில்லாத இந்த மனிதர் பச்சோந்தியைப் போல அவ்வப்போது வெவ்வேறு நிறங்களில் தான் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்.
இவருக்கென்று சொந்தமாக சிந்திக்கத் தெரியாது; எனவே அடிக்கடி பல்டியடிப்பார்; இவர் அதிகம் யாருடன் வழக்காடினாரோ அவர்கள் இவரைக் கொள்ளைக் கொண்டுவிட்டது தற்போது நிரூபணமாகியுள்ளது; அவர்களுடைய பாதிப்பு இவருடைய எழுத்துக்களில் வெளிப்படத் துவங்கியுள்ளது.
அதாவது எந்த ஒரு கருத்தையும் முதலில் எதிர்ப்பது போல வாதிட்டு கொஞ்ச காலத்தில் அதன் அடிப்படையிலேயே புதிய கட்டுரையை வடிப்பது இவருடைய ஞானம் வறண்டு- வடிந்து சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார் என்பதை பறைசாற்றுகிறது; இன்னும் காப்பி பேஸ்ட் அடிக்காதது ஒன்றே இவரிடமுள்ள குறையாகும்;அதையும் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நாம் சொல்லும் கருத்தையே கிரகித்துக்கொண்டு அதிலிருந்து கொஞ்சம் வசனங்களைப் போட்டு டெவலப் செய்து தானே கண்டுபிடித்ததுபோல எழுதி காலத்தை ஓட்டும் இவருடைய சுயரூபம் விரைவில் வெளிப்படும்.
இவரை எதிர்த்து வீணாக பெரிய ஆளாக்க வேண்டாமே என்று அமர்ந்திருந்தேன்; பைத்தியங்களிடம் யாரும் நின்று அதைக் குறித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கமல்லவே.
ஆனால் இதன் பாதிப்பும் வஞ்சகமும் எல்லைமீறி போய்க் கொண்டிருக்கிறது; அதாவது கிறித்தவ போதனைகளின் அகராதி என்று தன்னை நினைத்துக்கொண்டு கண்டபடி தலைப்புகளை உருவாக்கி அதன் கீழ் பிதற்றல்களையும் உளறல்களையும் எழுத்துக்களில் வண்டல்களை வடிகட்டிக்கொண்டிரூக்கிறார்.
இவரை சாத்தான் என்று கூறினால் இயேசுவையே கூறினார்களே என்பார்; பைத்தியம் என்று கூறினால் பவுலுடன் தன்னை இணைத்துக்கொள்வார்; எனவே என்ன சொல்லி திருத்துவதென்றும் தெரியவில்லை; என்ன சொல்லி திட்டுவதென்றும் தெரியவில்லை.
ஆனால் இவருடைய வசன விரோத கருத்துக்களை எதிர்க்காமல் விட்டால் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது;
இயேசு தொழத்தக்க நபரல்ல என்பதில் பெரியன்ஸ் குழுவையும்பத்து கற்பனைகள் ஒழிக்கப்படவில்லை என்பதில் அன்பு57 அவர்களையும் ஒத்துப்போகிறார்; காரணம் இவருடைய நோக்கம் கிறித்துவின் சபை கட்டப்படுவதல்ல, தன் பேர், புகழடையவேண்டும்,எல்லோரும் இவரைப் பாராட்டவேண்டும்,அவ்வளவே.
இவர் என்ன தான் வசனங்களைக் கொட்டி உயிரை விட்டு எழுதினாலும் நான் ஏற்கமாட்டேன்; இந்த சூழ்ச்சிக்காரன் அப்பாவிகளை ஈர்த்து தன் வசப்படுத்த வேடமிடும் ஓநாய் என்பது இப்போது தெரியாது; தேன் தித்திப்பாக இருக்கும் என்பதால் அதை குஷ்டரோகியின் கையிலிருந்து நக்கமுடியுமா? இவர் சொல்லும் வசனங்களும் அப்படிப்பட்டதே; பிசாசும் ஆண்டவரிடம் வசனத்தை வைத்து போராடினான் தானே?
ஏன் சூழ்ச்சிக்காரன் என்று சொல்கிறேன் என்றால் தான் அறியாமையினாலோ அல்லது அறிந்துகொள்ள விரும்பாமலோ நம்பிக்கொண்டிருக்கும் ஆதாரப் போதனைக் குறித்து அதிகம் பேசுகிறதில்லை; என்னைப் போன்றோரின் எதிர்ப்பு இல்லாவிட்டால் புகுந்து விளையாடியிருப்பார்.
பொதுவாக சபையார் அனைவரும் அறிந்திருக்கும் காரியங்களைக் குறித்தே பேசி எழுதிக்கொண்டு அவர்களில் ஒருவர் போல வலம் வருகிறார்; அனைத்து துருபதேசக்காரர்களின் தந்திரமும் இதுவே; முதலில் சர்ச்சைக்குரிய காரியங்களைப் பேசாமல் இதமாகப் பழகி நட்பை உருவாக்கி இறுதியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தங்களை சரக்கு பொட்டலத்தை அவிழ்ப்பர்.
நான் இவர்களுடன் தொடர்ந்து போராடி வருவதால் ரொம்ப நாள் கழித்து சொல்வதற்காக இவர்கள் பொத்தி வைத்திருக்கிற ஒரு இரகசியத்தை முதலிலேயே போட்டு உடைத்துவிடுகிறேன்;எனவே என்மீது இவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டுவருகிறது.
நான் இறுதியாக எச்சரிக்கிறேன்,இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட தேவ ஜனத்தின் சுயாதீனத்தை உளவு பார்த்து அவர்களை சாத்தானுடன் ஒப்பிட்டு இனியும் தூஷித்தால் இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)