Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம் - sam


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: அறிமுகம் - sam
Permalink  
 


அருமையானதொரு அறிமுகத்தினைத் தந்த Sam ஐயா அவர்களைப் பாராட்டுகிறேன்;இங்கு வரும் நண்பர்கள் பெரும்பாலும் இளம் வயதுள்ளோர் என்ற எண்ணத்தில் நான் எதையாவது எழுதப்போக மூத்த சகோதரர்களுக்குரிய கனத்தை செய்யாத குற்றத்த்தில் சிக்காதிருக்கவாவது இதுபோன்ற அறிமுகம் நிச்சயம் தேவைப்படுகிறது;ஐயா,தாங்கள் ஓய்வுபெற்ற பிறகும் " நேரமில்லை " என்று சொல்லுவது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது;ஆனாலும் தங்களது கருகலான கேள்விகளை போன் மூலமோ இமெயில் மூலமோ தெரியப்படுத்தினால் அதற்கு இசைவான கட்டுரைகளை தயாரித்தளிக்க எமக்கு உதவியாக இருக்கும்;அதுவும் கூட சிறப்பான பங்களிப்புதான்;Thanking you.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

sam


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
Permalink  
 

Bro.chillsam எழுதியது
//அன்பு நண்பரே(sam), தாங்கள் இதுவரை போட்டுள்ள நான்கு பின்னூட்டங்களில் ஒன்றின் மூலமும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளாததை நினைவுபடுத்துகிறேன்; இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் நம்முடைய விசுவாசத்தையும் நம்முடைய பின்னணியையும் குறித்து சற்று தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்;//

என் அறிமுகத்தைப் பெரிதாகக் கருதாததால் அறிமுகம் செய்யவில்லை. அறிமுகம் கூடாது என்ற எண்ணமும் இல்லை.

எனது பெயர் விசுவாசம். அரசாங்க வேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். பிறந்தது முதல் சி.எஸ்.ஐ-ல் இருக்கிறேன். ஆனால் சி.எஸ்.ஐ-யின் பல கொள்கைகள் எனக்கு குழப்பமாக உள்ளன. அவற்றை முழுமனதுடன் ஏற்க இயலவில்லை. சி.எஸ்.ஐ மட்டுமின்றி எல்லா சபைகளின் கொள்கைகளும் முழுக்க முழுக்க வேதத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை.

வேதத்தை ஆராயவேண்டும், உண்மையை அறியவேண்டும், தவறான போதனைகளும் அவற்றைச் செய்வோரும் களையப்படவேண்டும் எனும் ஆவல் அதிகமாக உள்ளது. பால் தினகரன், ஆலன் பால் ஆகியோரின் வேதத்துக்குப் புறம்பான செயல்களின் மேல சகோ.சில்சாமுக்கு உண்டான ஆதங்கம் என்னைக் கவர்ந்தது. எனவே இத்தளத்தில் இணைந்துள்ளேன்.

அதிக நேரமில்லாததால் அதிக பதிவுகளைத் தர முடியாத நிலையில் உள்ளேன்.

என்னைக் குறித்த இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard