இன்று காலையில் கலைஞர் டிவியில்,"கற்றதை கற்பிப்பித்தல்" எனும் மனிதவள ஆலோசனை நிகழ்ச்சியில் கவர்ந்தவை...
நிர்வாகத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான இடைவெளி மற்றும் பதட்டத்தை அறிந்து குறைப்பது சம்பந்தமான ஆலோசனையினை நிபுணர் வழங்குகிறார்; அதுசம்பந்தமான மேற்கோளில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்; அந்த வரிகளை அறிந்தோர் தயவுசெய்து பதிக்கவும்; நான் அதன் கருத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.
இளைஞரின் இளமை மை நிரப்பப்பட்ட பேனாவைப் போன்றது; முதியவரின் முதுமை மை இல்லாத பேனாவைப் போன்றது; இளமை பேனா எழுத ஆயத்தமாக உள்ளது;ஆனால் எழுத ஆளில்லை; முதுமை பேனா எழுத ஆயத்தமாக உள்ளது;ஆனால் எழுத மை இல்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)