இசைக்கருவிகள் உணர்ச்சியைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணம் அவற்றின் இரைச்சல் தான்; இசைக்கருவிகளின் ஒலியளவு 40சதவீதமும் பாடகர் அல்லது நடத்துபவரின் ஒலியளவு சுமார் 60 சதவீதமாவது இருக்கவேண்டும்; பொதுவாகவே கிறித்தவ ஆராதனைகளில் இரைச்சல் அதிகமாக இருப்பதால் அது மாற்று மார்க்கத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
// சபையின் மேய்ப்பன் ஒருவேளை உலகப்பிரகாரமான வேலை செய்யாமல் கர்த்தருடைய ஊழியத்தை மட்டும் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்தால் அவரை அந்த சபையே தாங்கவேண்டும். //
சபையின் மேய்ப்பன் என்பவர் உலக வேலையிலும் இருக்கலாமா என்பதையும் ஆராயவேண்டும்; சபையின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்ய ஊழியரின் உறவுகளைத் தவிர்த்து சபையின் மூப்பர்களை நியமித்தல் வேண்டும்;
இதற்கொரு நல்ல உதாரணம்,சிஎஸ் ஐ சபைகள்;ஆனால் அது ஆவியில்லாத சபை என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது;ஆனால் ஆவியுள்ள சபைகளில் பணஆசை தலைவிரித்தாடுகிறது;
கர்த்தரைப் பாடுவதாகவும் கர்த்தர் தந்ததாகவும் கூறப்பட்டு தயாரிக்கப்படும் சிடிக்கள் பெரும்பாலும் சினிமாக்காரர்கள் புறக்கணித்த ட்யூன்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது; இதன் பாதிப்பை அந்த இசைத் தொகுப்பில் காணலாம்.
// ஆராதனை வேளையே ஆனந்த பரவச வேளையாகிப் போய் விடுகின்றது // தேவ ஜனம் மகிழ்ந்திருப்பதைப் பார்த்து பிசாசு தான் இதுபோல துடிப்பான்; ஆராதனை வேளை பரவச வேளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை; அந்த நேரமே கடன்பிரச்சினைகளும் உடல் உபாதைகளும் மனப்பிணக்குகளும் பறந்து போகிற நேரம்; சபைக்குள் நாலு சுவற்றுக்குள் தேவ ஜனம் இசைமீட்டி ஆராதித்து மகிழ்ந்திருப்பது எந்த வகையிலும் சத்தியத்துக்கு விரோதமானதல்ல;அதற்காக ஆல்வின் தாமஸ், ஜெர்ஸன் எடின்பரோ போன்றோரின் போக்குகளை நான் ஆதரிப்பதாக தயவுசெய்து எடுத்துக் கொள்ளவேண்டாம்; ஹாய்.. ஹே.. ஹோ.. ஊலல்லா போன்ற கூச்சல்கள் தவிர்க்கவேண்டியதே.
ஆராதனையை நடத்துவோர் அர்ப்பணம், பாவமன்னிப்பு, மேற்கொள்ளும் ஜீவியம் சம்பந்தமாக பல ஆலோசனைகளை ஆராதனை வேளையிலே பகிர்ந்து கொள்கின்றனர்; பிரசங்க வேளையில் தூங்கி வழியும் ஜனமானது துதி நேரத்தின் உச்சகட்டத்தில் வெளிப்படும் தேவ சத்தத்துக்காக ஆவலுடன் காத்திருந்து பெற்று மகிழ்கிறது;
சபையானது மேய்ப்பு பணியைப் போன்றது; அதில் ஆடுகளைப் பராமரிப்பதைப் போல மிகவும் மென்மையாகவே நடந்து கொண்டாக வேண்டும்; ஆனாலும் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே உண்மை; சென்னையில் போதகர் மோகன் அவர்கள் அதற்கொரு சரியான உதாரணம்; எந்த ஒரு மேய்ப்பனும் தன் கரத்திலிருக்கும் கோலைக் கொண்டு ஆடுகளை அடித்து விரட்ட மாட்டான்; அடித்து விரட்டுபவன் மேய்ப்பனல்ல;
விசுவாசக் குடும்பத்தாரின் தாறுமாறுகள் நிச்சயம் போதகரின் கவனத்துக்கு வரும்; ஆனாலும் அதனை மேடையில் குறிப்பிட்டு தாக்குவது எந்த வகையிலும் நாகரீகமான அணுகுமுறையல்ல; பெற்ற பிள்ளையே தவறான வழியில் சென்றாலும் அதனைக் கண்டிக்கும் முறையில் சற்று ஞானத்துடனே நடந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது; விசுவாசத்தில் பெலவீனமான குடும்பத்தின் மீது தனி கவனம் செலுத்தியே அவர்களை மீட்கவேண்டும்.புரட்சி, எழுப்புதல் என்ற பெயரில் இதுபோல பலட்சயப்படுத்தும் எழுத்துக்களால் சலிப்பும் சோர்வுமே ஏற்படுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது தமிழ் கிறித்தவ தளத்தில் நான் இட்டுள்ள பின்னூட்டமாகும்;இதில் தொடர்ந்து கிறித்தவத்தை பலட்சியப்படுத்தும் தெற்கத்தி புத்திரரின் கூச்சல்களுக்காக வருந்தியிருக்கிறேன்.
மேற்கண்ட தொடுப்பில் நல்லதொரு முதிர்ந்த அனுபவமுள்ள சபை மூப்பர் கொடுத்த செய்தியை மேம்படுத்தி எழுதியுள்ளேன்; இதை யாரும் வாசித்ததாகவோ சிலாகித்ததாகவோ தெரியவில்லை;
இதுவே கிறித்தவத்தின் நிதர்சனம்; அதாவது இதுபோன்ற எளிய முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளருகிறது; யார் அந்த வேருக்கு வெந்நீர் விட்டாலும் அது கிரகித்துக்கொண்டு ஓங்கி வளருகிறது; நம்பிக்கையூட்டும் வார்த்தைகளே இன்றைய தேவை.
ஒவ்வொரு தலைமுறை மாற்றத்திலும் சில காரியங்கள் கிறித்துவின் சபையை பாதித்து வருகிறது; ஆனால் அது தன்னைத் தான் சரிசெய்து கொண்டு சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பரபரப்பு கிளப்பும் மீடியா தாசர்களை கவனிக்காமல் ஆங்காங்கு கூடி ஜெபிக்கும் சிறுகுழுக்களை கவனித்தால் எளிமையின் வலிமை தெரியும், பொய்மையின் வலியும் மறையும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)