Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னிக்க பட முடியாத பாவம்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
RE: மன்னிக்க பட முடியாத பாவம்
Permalink  
 


அன்பு அண்ணா,

பரிசுத்த ஆவி என்பது ஒரு நபரா ?

அல்லது அவதாரமா ?

அல்லது அசரீரி யா ?

ப்ளீஸ் விளக்குங்களேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

suncauvery wrote:
Brother Chillsam. may GOD guide you in all your Mission about False Prophets.

Brother pls Tell me how to post in Tamil.

Brother Is Making Jokes about TONGUES & not Accepting Tongues are Blasphemy against Holy Spirit ? Pls Explain..


அருமை நண்பர் சங்காவேரி (என்றழைக்கலாமா அல்லது கர்ணா?) அவர்களின் முதல் பதிவுக்காக முதல் வாழ்த்துக்கள்; இது உங்கள் உணர்வுகளின் வடிகால் மட்டுமல்ல, உணர்வுகளின் சங்கமமான தளம்;இதன் மூலம் உங்கள் வாழ்வு யௌவனமாக மாறட்டும் என வாழ்த்துகிறேன்.

அடியேனுடைய பணிகளைப் பாராட்டிய உமது நல்லெண்ணத்துக்காக நன்றி; தாங்கள் தமிழில் எழுத இணையதளத்தில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன;நான் பொதுவாகப் பயன்படுத்தும் பலகையானது பின்வரும் தொடுப்புக்குச் சென்றால் கிடைக்கும்;இது Unicode அமைப்பில் செயல்படும்; மேலும் அழகி போன்ற இலவச‌ தமிழ் மென்பொருளும் கிடைக்கிறது;கூகுள் தளமும் தமிழ் பலகையை வழங்குகிறது;முயற்சியுங்கள்.

இறுதியாக தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இல்லை என்பதே;அதாவது பரிசுத்தாவிக்கெதிரான பாவம் எது என்பதைக் குறித்து ஆண்டவர் சொன்ன காரியத்தின் சூழமைவின்படி (Context) பரிசுத்தாவிக்கெதிரான தூஷணம் என்பது அயல்மொழி பேசுவோரை கேலி செய்வதோ அல்லது அயல்மொழி பேசுவதைக் குறித்து விமர்சிப்பதோ அல்லது எதிர்ப்பதோ அல்ல;ஆனாலும் ஒரு வசனம் நேரடியான எச்சரிக்கையை நமக்குக் கொடுக்கிறது;அதன் கீழ் பல தேவையற்ற காரியங்களை நாம் அன்றாடம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்;அவையாவன‌.,
  • "மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
  • அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்."(எபேசியர்.5:3,4)
இதைக் குறித்து ஆராய்ந்து தீர்ப்பு அதிகாரம் எனக்கில்லை.
  • "நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்."(1.கொரிந்தியர்.11:31)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

Brother Chillsam. may GOD guide you in all your Mission about False Prophets.
Brother pls Tell me how to post in Tamil.
Brother Is Making Jokes about TONGUES & not Accepting Tongues are Blasphemy against Holy Spirit ?
Pls Explain..

__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சற்று பதட்டமில்லாமல் நிதானமாகச் செல்லுவோமா?
முதலாவது இறைவன் தளத்தில் தாங்கள் எழுப்பியிருந்த கேள்வி;அதனை நீங்கள் நமது தளத்தில் போடாவிட்டாலும் நான் எடுத்துப் போட்டிருக்கிறேன்...

ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (மத்தேயு.12:30,31)
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.(1. யோவான்.1:7)

(வேத வசனங்களைக் குறிப்பிடும் பாரம்பரிய முறையை (மத்தேயு.12:30,31) &(1. யோவான்.1:7)சற்று கவனிக்கவும்.)

இயேசு கிறிஸ்துவின்  இரத்தம்   சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்கின்றதுஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அல்லது தூசித்தால் இந்தபூமியில் மாத்திரமல்ல மறுமையிலும் மன்னிக்கபடுவதில்லை என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உறுதியாய் சொல்லி  இருக்கின்றார்.
பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் வார்த்தை   என்றால் என்ன ? எல்லாவற்றையும் மன்னிக்கின்ற தேவன் ஏன் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் வார்த்தை  இவைகளை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க மாட்டேன் என்கின்றார்
அப்படிப்பட்ட தூசனம்  என்ன அப்படிப்பட்ட வார்த்தை என்ன?

தெரிந்த நண்பர்கள் எழுதினால் எனக்கும் மற்றவர்களுக்கு நான் சொல்வதற்கும் பிரோஜினமாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன்;ஏனென்றால் இந்த விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்  என்பது என் கருத்து அநேகர் தங்களுக்கு தெரியாமல் தூசிக்கின்றார்கள்.

=>அடுத்து அதற்கு பதிலாக நான் தங்களுக்கு அனுப்பியிருந்த தனிமடல்...

அன்பான சகோதரருக்கு,கீழ்க்காணும் தொடுப்பில்
http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=39557585 தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விக்குரிய பதிலை நான் ஏற்கனவே எனது தளத்தில் அணுகியிருக்கிறேன்; பார்த்துவிட்டு தங்கள் கருத்தைப் பதிவுசெய்யவும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38770805


இதனைத் தொடர்ந்து தாங்கள் இங்கே முன்வைத்துள்ள விவரமான கேள்வியும் தங்கள் கருத்தும்...

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே, நான் கேட்பது என்னவென்றால்,
எந்த விதமான தூஷணம்  ?
எந்த விதமான வார்த்தை என்பதை தான் ?

அதாவது பரிசுத்த ஆவி அதெல்லாம் சும்மா.,ஆவியும் இல்லை ஒன்றும் இல்லை, இப்படி
ப்பட்ட வார்த்தைகள் தான் தூஷணமா அல்லது வேறு வார்த்தைகளா?

இந்த விளக்கத்தை நான் ஏன் கேட்கின்றேன் என்றால் இன்று அநேகர் இப்படி தான் தூஷிக்கின்றார்கள், இல்லை என்றால் இப்படி இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்; அதாவது, பரிசுத்த ஆவியை ஒருவர் அறிந்து அவரை பற்றி தெரிந்து பிறகு தூஷிப்பவர்கள் மன்னிப்படமாட்டார்கள் என்று நான் எண்ணுகின்றேன்...

பொதுவான எனது கருத்தை மீண்டும் ஒருமுறையாக முன்வைக்கிறேன்; இந்த வசனம் அமைந்துள்ள சூழமைவின்படி ஆண்டவர் செய்த அற்புத செயல்களைக் குறைகூறி அவர் பிசாசின் உதவியோடு இவைகளையெல்லாம் செய்வதாக பரிசேயர் அபாண்டமாக தூஷிக்கின்றனர்;அதனை மறுத்து எச்சரிக்கவே இந்த வார்த்தையைக் கூறுகிறார்;காரணம் தேவ ஆவியினால் செயல்படும் அவரை பரிசேயர் பிசாசின் உதவியுடன் அற்புதம் செய்வதாகக் கூறினர்;அங்கே தானே தனக்குத் தானே பிரிந்திருக்கும் எந்த ராஜ்யமும் வீடும் நிலைவரப்படாது என்ற பிரபல வாக்கியத்தையும் ஆண்டவர் கூறி பிசாசின் கிரியையைகளை அழிக்க தான் வந்திருப்பதைக் கூறுகிறார்;தொடர்ந்தும் மரம் அதன் கனியினால் அறியப்படும் என்றும் "பஞ்ச்" வைக்கிறார்.

இனி...
இயேசுவின் இரத்தத்தினால் மன்னிக்கப்பட முடியாத பாவமே இல்லாத நிலையில் இது மட்டும் எப்படி மன்னிக்கப்படாது எனும் கேள்வி;

இயேசுவின் இரத்தத்தினால் மன்னிக்கப்பட முடியாத பாவம் உண்டு;அப்படியா..? அது எப்படி..? மன்னிப்பு யாருக்கு..? உங்களுக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தவருக்கு நீங்கள் எப்போது மன்னிப்பீர்கள்? தான் செய்துவிட்ட குற்றத்துக்காக ஒருவன் மனம் வருந்தி தங்களிடம் மன்னிப்பு கோரும்போது தானே? தாங்கள் சந்தித்து மனம்விட்டு பேசி ஒப்புரவான பிறகுதானே தங்களது மன்னிப்பின் ஆவிக்குரிய பலன்களை மற்றவர் அறிய இயலும்?

அப்படியே இயேசுகிறித்துவின் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்பது பொதுவான அறிவிப்பாக இருந்தாலும் எல்லோரும் மன்னிக்கப்படவில்லை;எனவே இன்னும் பாவமும் மரணமும் தொடருகிறது;ஒருவன் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி ஆண்டவருடைய அன்பை உணர்ந்து தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்வரை அந்த மன்னிப்பின் வாசல் திறக்கிறதில்லை.

பரிசேயரைக் குறித்து சிந்தித்தால் அவர்கள் தேவனுடைய செயல்களை நேரடியாகக் கண்டும் மூர்க்கத்தனமாக எரிச்சலுடன் தேவனைப் பகைத்து தூஷிக்கிறார்கள்; மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுகிறித்துவை கண்ணாரக் கண்டும் காதாரக் கேட்டும் அவரை அறிந்துணர்ந்து ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர்;எல்லாவற்றுக்கும் மேலாக அவரை பிசாசின் ஆவியினால் பணிசெய்கிறவராகக் கூறி அவரைச் சுற்றியிருந்த ஜனங்களிடம் கலகம் உண்டாக்கினர்.

எனவே இந்த கடுமையான அறிவிப்பை ஆண்டவர் செய்ய நேரிட்டது;ஆனாலும் அதே பரிசேயருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சவுலாகிய பவுலை ஆண்டவர் தேர்ந்தெடுத்தது ஆண்டவர் யாரையும் புறக்கணிக்கிறவரல்ல என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஏனெனில் தற்காலத்திலும் பைபிளைக் கிழித்து சபைக்குச் செல்லும் தன் உறவுகளைக் கொடுமைப்படுத்துவோர் குறிப்பிட்ட கட்டத்தில் மனந்திருந்தி ஆண்டவரை சரணடைந்து ஊழியம் செய்வதைக் காண்கிறோம்.

காரணம்,மன்னிப்பு எனும் மாமருந்து வேலை செய்ய விசுவாசம் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது;எனவே விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என ஆண்டவர் கூறினார்;அதன் பிறகே இயேசுவின் இரத்தத்தினால் உண்டான பலன்கள் ஒருவனை சென்று சேரும் என்றறிவோமாக. மேலும் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் என்பதை மனதில் இறுத்துவோமாக;எனவே தான் பத்து கற்பனைகளைப் போதிக்கிறவர்களிடம் ஐக்கியம் வேண்டாம் என்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

நீங்கள் சொல்வது சரி தான் நண்பரே   நான் கேட்பது என்னவென்றால் 
 
எந்த விதமான தூஷணம்  ?
எந்த விதமான வார்த்தை என்பதை தான் ?
 
அதாவது பரிசுத்த ஆவி அதெல்லாம் சும்மா
 
ஆவியும் இல்லை ஒன்றும் இல்லை இப்படி பட்ட வார்த்தைகள் தான் தூஷணமா அல்லது வேறு வார்த்தைகளா
 
 
இந்த விளக்கத்தை நான் ஏன் கேட்கின்றேன் என்றால் இன்று அநேகர் இப்படி தான் தூஷிக்கின்றார்கள்,
 
இல்லை என்றால் இப்படி இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன் அதாவது பரிசுத்த ஆவியை ஒருவர் அறிந்து அவரை பற்றி தெரிந்து பிறகு தூஷிப்பவர்கள் மன்னிப்படயமாட்டார்கள் என்று நான் எண்ணுகின்றேன்....................
 


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 26th of November 2010 03:16:34 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Love you Brother, Thank you so much for  the wonderful response with a wonderful link.
May GOD bless you, your family & ministry.
Ashok



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மன்னிக்கப்பட முடியாத பாவம்..?
Permalink  
 


அன்பு நண்பருடைய கேள்விக்குரிய சுருக்கமான பதிலானது, "பரிசுத்த ஆவிக்கு எதிரான பாவம் மன்னிக்கப்படாது", என்பதே;

ஏனெனில் ஒரு மனிதன் தேவ அன்பைப் பெற ஏதுவானதே அவருடைய ஆவி தான்; அதன் மூலமே  இயேசுகிறித்துவை தேவகுமாரனாகவும் பாவப் பரிகார பலியாகவும் ஏற்றுக்கொள்கிறோம்;

எனவே பாவமன்னிப்புக்கும் மறுமை வாழ்வுக்கும் ஆதாரமாக இருக்கும் பரிசுத்தாவியை ஒருவன் அவமதித்து தூஷிக்கும்போது மன்னிப்பையடையும் வாசல் அடைபடுகிறது;

மேலும் தான் அறியாததை தூஷிக்கும் துணிகரத்தையும் மனிதன் நிறைவேற்றுவதால் உறவு ஏற்பட வாய்ப்பில்லை.

இதைக் குறித்த இன்னும் விளக்கமான போதனையை  கீழ்க்கண்ட தொடுப்பின் மூலம் ஆங்கிலத்தில் பெறலாம்.

http://www.christiananswers.net/q-eden/unpardonablesin.html


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
மன்னிக்க பட முடியாத பாவம்
Permalink  
 


சகோதரரே,
    பரிசுத்தஆவிக்கேதிரான பாவம், மன்னிக்க பட முடியாத பாவம் என சொல்லப்படுகிறதே. தாங்கள் யாரவது இது குறித்து விளக்கம் தர முடியுமா? இயேசுவின் இரத்தத்தினாலும் மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று ஒன்று உண்டா?
நன்றி,
அசோக்


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard