இத்தனை விரைவான பதிலுக்கும் ஞானத்துக்கும் சிரந்தாழ்ந்த வாழ்த்துக்கள்; இது ஏற்கனவே மற்றொரு தளத்தில் பதிக்கப்பட்டது; அந்த விவரம்...
Posted on 24-12-2008 12:17:28
Rukmani: பட்டாம் பூச்சியா?
rameshps: சில் சாம் தங்களுடைய தமிழ் நடை சூப்ப......ர்...ஆனா விடை எனக்கு தெரியலை
Devan: இரமேஷ் அண்ணா தாங்கள் சொல்வதைப் பார்த்தால், "அழகழகாக இருக்கு, முத்து முத்தா இருக்கு.. ஆனா என்ன எழுதியிருக்குன்னுதான் புரியலை''ன்னு" சொல்ற மாதிரி இருக்கிறது (just for kidding)...
Dear Chillsam, your Tamil flow is very nice indeed (thats what I said-அப்படின்னு இரமேஷ் அண்ணா சொல்கிறீர்களா?)
நானும் பட்டாம் பூச்சியாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் கல்லில் முதல் எழுத்து (is it ''க''?), சுமையின் முதல் எழுத்து (is it ''சு''?) என விடுகதைக்குள் விடுகதையாக இருக்கிறது???
அவள் யாராக இருக்கும்? அருகே சென்று விசாரிப்போம்...
umar:
"கொசு" வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். Quote:
செடியில் அமர்ந்து கொம்பை உடைத்து,தன் காலையும் முறித்துக் கொண்டு,கல்லில் முதல் எழுத்தைத் தொலைத்து,சுமையின் முதலெழுத்தில் சுழன்று,பறந்து சென்றாள்...இவள் போகாத இடமில்லை...! யார் அவள்?"
இது என்னுடைய கற்பனை, இது சரியாக அமையுமா என்று பாருங்கள்.
செடியில் அமர்ந்து கொம்பை உடைத்து -> ''கொ'' இந்த மூன்று எழுத்துக்களில் முதல் எழுத்தை எடுங்கள், நமக்கு கிடைப்பது ெ என்ற ஒரு உறுப்பு
தன் காலையும் முறித்துக் கொண்டு, --> ''கொ'' இதே எழுத்தில் காலை தனியாக எடுங்கள், நமக்கு கிடைப்பது ''ா'' என்ற ஒரு உறுப்பு
கல்லில் முதல் எழுத்தைத் தொலைத்து --> ''கொ'' இதே எழுத்தில் க வை தனியாக எடுங்கள்,
இப்போது நமக்கு கிடைத்தது "கொ" என்ற ஒரு முழு எழுத்தாகும்.
சுமையின் முதலெழுத்தில் சுழன்று --> "சுமையின்" என்ற வார்த்தையின் முதல் எழுத்து "சு" வை சேருங்கள். இப்போது நமக்கு கிடைப்பது "கொசு".
ஆக, "கொசு" தான் இதன் பதில் என்று நான் நினைக்கிறேன்.
எப்படி நம்ம கொசுக்கடி..ஹி...ஹி...
chillsam: அருமை..அருமை..,உமர் அண்ணாவின் ஞானத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..! தொடர்ந்து "விடுகதைக்கும்" உரிமையினை அவருக்கே விடுவோமா..? சரியான விடையளித்தவருக்கே முதல் உரிமை சரிதானே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)