Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: CSI சபை உருவானது எப்படி? அதன் சட்டங்கள் என்ன?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
CSI சபை உருவானது எப்படி? அதன் சட்டங்கள் என்ன?
Permalink  
 


இது அண்மையில் ஜாமக்காரனில் வெளியான கட்டுரையாகும்;இதில் வாசிக்கும் விவரங்களை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து கொள்வதுடன் சபையின் மீது அக்கறை கொண்டு சீர்படுத்தவேண்டுமே தவிர சபையை விட்டு விலகக் கூடாது.

http://www.jamakaran.com/tam/2010/august/csi_sabai.htm

CSI சபை உருவானது எப்படி? அதன் சட்டங்கள் என்ன?

இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் ஆட்சி தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தது. மிஷனரிகளால் தாங்கப்பட்டும், ஊக்குவிக்கப்பட்டும் வருகின்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சீர்திருத்த கிறிஸ்தவ (Protestant) சபைகளின் எதிர்காலமும் இச்சூழ்நிலையால் கேள்விக்குறியாக மாறிவிட்டிருந்தது. சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசும், அதைத் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருந்த மகாத்மாகாந்தியும் ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சி காரணமாக வெள்ளையர்களின் மதமாக கிறிஸ்தவத்தை கருதி அவர்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் வெறுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அச்சமுற்ற, லண்டன் மிஷனரி சங்கத்தார், சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் இச்சபைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக லண்டன் மிஷன் சங்க நிர்வாகி திரு.லியோநார்டு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமையை ஆய்ந்த அவர் அறிக்கை ஒன்றை தலைமைச் சங்கத்திற்கு அளித்தார்.

"கிறிஸ்தவ மிஷன்களுக்கும், திருச்சபைக்கும் நேராக சுதந்திர இந்திய அரசின் அணுகுமுறைகள் எதுவாக இருக்கும் என்பதுபற்றிய விவரம் தெளிவற்ற நிலையிலும், யூகங்கள் ஏற்படுத்துவதுமாகவே அமைந்துள்ளது. பொதுவாக கிறிஸ்தவ திருச்சபைகள் தடைகளையும், துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கியே உள்ளது" என்று விளக்கி லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

தென்னிந்தியாவில் சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தன. இச்சபைகளில் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்களது நிலை அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்று மிஷனரிகள் கண்டுக்கொண்டனர். எனவே அவைகளிடத்தில் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, அதை ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக நிலைபெறச்செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையாயிற்று.

எனவே தென்னிந்தியாவில் அன்று சுதந்திரமாக தனித்து நின்று செயல்பட்டுக்கொண்டிருந்த SPG, LMS, CMS, மெதடிஸ்ட், லூத்தரன், Seventh Day Adventist போன்ற சபைகளை ஒருங்கிணைத்து விடவேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய மிஷனரிகள் மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் தளர்ந்துவருவதை முன்கூட்டியே உணர்ந்துக்கொண்ட மிஷனரிகளின் சபைகளின் ஐக்கியத்தைக்குறித்து முன்கூட்டியே முடிவெடுத்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தனர். இதன் முதல்நிலையாக 1908ம் ஆண்டு தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த (LMS) லண்டன் மிஷன் சபைகள், மதுரை அமேரிக்கன் மிஷன் மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமேரிக்கன் மிஷன் போன்றவைகள் ஒன்றுசேர்ந்து South India United Church - (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பு மற்ற சபைகளுடன் தொடர்புக்கொண்டு அவைகளையும் S.I.U.C.யில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. அதன் பயனாக 1920ல் Anglican சபைகள் இத்துடனே இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். இவர்களைத் தொடர்ந்து 1925ல் Methodist சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947ல் தென்னிந்திய திருச்சபை (Church of South India - CSI) என்ற மாபெரும் அமைப்பு உருவாயிற்று. இந்த அமைப்பு 1947 - செப்டம்பர் 27ம் நாள் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

"The Church of South India is the church constituted by the Union in 1947 of the Madras, Madurai, Malabar, Jaffna (Ceylon), Kannada, Telgu and Travancore Church Councils of the South India United Church, the South India province of the Methodist Church, comprising the Madras, Trichinoploy, Hyderabad of the Mysore Districts and the Diocese of Madras, Dornakal, Tinnelvely and Travancore-Cochin in the Church of India, Burma and Ceylon, to which in 1950 was added the North Tamil Church Council of the (S.I.U.C) South India United Church. (Chapter 1- Section 2 page 1 to the Constitution of CSI - 1952).

ஆனால் இந்த ஐக்கியத்தில் ஆர்காட் லூத்தரன் சர்ச் (TELC), தமிழ்நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு சர்ச், இரட்சணிய சேனை (Salvation Army) சபைகள், பெந்தேகோஸ்தே சபைகள் போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை.

CSI ஐக்கியத்தில் (LMS) லண்டன் மிஷன் சபைகள் இணைந்ததன்மூலம், அவைகள் கைக் கொண்டிருந்த தன்னாட்சி உரிமைகளையும், Congregational கோட்பாடுகளையும் நிரந்தரமாக இழந்துவிட்டு பேராயர் (Bishop) ஆட்சிமுறையையும், குருக்களின் (Rev) மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. தொடக்க கட்டங்களிலிருந்து அன்றே இதை எதிர்த்தவர்களும் இருந்தனர். (Bishop) பேராயர் ஆட்சிமுறையை முதல்முதலாக எதிர்த்தவர்கள் லூத்தரன் சபையினர் ஆவர். எனவே அவர்கள் இந்த இணைப்பில் சேராமல் வெளியேறிவிட்டனர். தவிரவும் Congregational கோட்பாடுகளில் உறுதியாக நின்ற A.C.லெப்பீவர், H.V.மார்ட்டின் போன்ற மிஷனரிகளும் காலப்போக்கில் சமரசம் (Compromise) செய்து கொண்டு பேராயர் (Bishop) முறையை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் கன்னியாகுமரி பேராயத்திலும் CSI அமைப்புக்கு எதிராக சிலர் குரல் கொடுத்தனர். Formation of Church of South India is the step towards Catholisation of Churches என்று வக்கீல் H.ஜெயபால் அவர்கள் அன்றே எதிர்ப்பு குரல் எழுப்பினார். இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் பொருட்டு இப்பேராயர் ஆட்சிமுறையை Constitutional Episcopacy - அதாவது சட்டத்திற்குட்பட்ட பேராயர் ஆட்சிமுறை என்று வர்ணித்து அன்றைய எதிர்ப்புகளைச் சமாளித்தனர். ஆனால் நடைமுறையிலோ இன்று பேராயர்கள் தன்னிகரற்ற சர்வாதிகாரிகளாக செயல்படுகின்றனர் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

CSI ஐக்கியம் உருவானதைத் தொடர்ந்து 1952ல் ஒரு சட்டபுத்தகத்தை (The Constitution of the Church of South India) உருவாக்கிக்கொண்டனர். இந்த விதி முறைகளை 2003ல் விரிவாக்கி போதிய திருத்தங்களைச் செய்து பேராயர் ஆட்சியை "Historic Episcopy" என திருத்தி அமைத்துக்கொண்டனர். இதில் பேராயர்தான் சர்வவல்லமையுள்ளவர் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அவர்களை தட்டிக் கேட்கவோ, தவறுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கோ, CSI சினாடுக்கே பரிபூரண அதிகாரமோ உரிமையோ இல்லாதநிலை உருவாக்கப்பட்டது. எனவே பேராயர்கள் (Bishopமார்கள்) ஒரு காண்டா மிருகத்தைப்போன்று செயல்படத் தொடங்கினர். பிஷப்மார்கள் சாது போன்றத் தோற்றமளித்தாலும், அவர்களில் சிலரது இயற்கையான குணம் பீதியைத் தருவதாக உள்ளது. இதை சபை அங்கத்தினர்களால் அடக்குவதற்கோ அல்லது பிஷப்மார்களின் சர்வாதிகார குணத்துக்கு கடிவாளமிடுவதற்கோ இயலாமல் அவர்களைக்கண்டு சபைமக்கள் அச்சப்படுகின்ற நிலை உருவாயிற்று. இதைப்போன்று பேராயர்களையும் (Bishops), பிரதமப்பேராயரையும் (Moderator) எவராலும் தட்டிக்கேட்கவோ அல்லது அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு தண்டனை வழங்கவோ முடியாத நிலை உருவாயிற்று.

இதனால்தான் பெந்தேகோஸ்தே சபை உபதேசத்தைக்கொண்ட பாஸ்டர் KP.யோகன்னானுக்கு பேராயர் பட்டம் வழங்கிய CSI மாடரேட்டர் Most Rev.சாமுவேல், தென்கேரளா பேராயர் Rt.Rev.கிளாஸ்டன் மற்றும் குமரி பேராயர் Rt.Rev.தேவகடாட்சம் போன்றோர்களின் மீது சட்ட மீறுதலுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் CSI சினாடு தடுமாறியது. தவிரவும் இந்த பெரிய சாட்சியில்லாத தவறுக்காக அந்தந்த அத்தியாட்சாதீனங்களும் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. இதனால் இவர்கள் இரட்டை கொம்புடைய சக்திக் கொண்டவர்களாக மாறிப்போயினர்.

இந்த சட்டதிட்டங்களை எல்லாம் முழுமையாக CSI-யின் உறுப்பினர்களான அத்தியட்சாதீனங்கள்(தற்பொழுது 22 அத்தியட்சாதீனங்கள் உண்டு) ஏற்றுக்கொள்ளாமல், அவைகளுக்கென்று தனித்தனி Constitution-ஐ உருவாக்கிக்கொண்டு பேராயர்களின் தங்கள் இஷ்டம்போல் ஆட்சி நடத்துகிறார்கள். இருப்பினும் இந்த CSI சினாடு Constitutionனோ அல்லது பேராய Constitutionனோ அரசு பதிவு பெறாத ஒரு கோட்பாட்டுப் புத்தகமாக இதுவரை செயல்படுத்தி வருவது விந்தையே. இத்தகைய சட்டக்கோட்பாடுகளால், CSI நிர்வாகம் ஒரு பெடரல் (ஒரு பொதுநோக்குடன் ஒருங்கிணைந்த அல்லது சுதந்திர கூட்டு ஐக்கியம்) நிர்வாகமானதால் அதன் வழிகாட்டுமுறையில் மட்டும் ஒன்று போல வெளிப்பார்வைக்கு தோற்றமளிக்கிறது. "The Governing Principle of the Church is that it believes that by this Union the Church in South India will become a more effective instrument for God's work......" (Chapter 11- Article 2) இதுதான் CSIயின் முக்கிய நோக்கமே தவிர அதில் இணைந்திருக்கின்ற CSI கிறிஸ்தவர்களின் சமூக, சமுதாய, பொருளாதார அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிகள் அதன் கோட்பாட்டில் கொண்டு வரப்படவில்லை. அதனால்தான் பிரதம பேராயரும் (Moderator), (Bishop) பேராயர்களும், (Rev, Pastor)ஆயர்களும் 24 மணி நேரமும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் மதச்சடங்குகளை மட்டுமாகச் செய்துவருகின்றனர். தவிரவும் பேராயங்களில் பத்து இலாகாக்களை உருவாக்கி அதன் தலைவர்களாக பத்து போதகர்களை நோக்கமற்ற நிலையில் நியமித்து பத்து குளிரூட்டப்பட்ட அறைகளில் (AC Rooms) முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். சபையோரின், குறிப்பாக படித்துவிட்டு உரிய வேலைகள் கிடைக்காமல் உழலுகின்ற இளைஞர்களை, தங்களது வாழ்வாதாரத்துக்கு உகந்தவாறு Human Resource Development திட்டங்களை இவர்கள் செயல்படுத்துவதில்லை. போதகப் பெருமக்கள்மட்டும்தான் தகுதியானவர்கள் என்பதைப்போல் காண்பித்து CSI கிறிஸ்தவ சமுதாயத்தையே ஊனமுற்றதாக்கிவிட்டனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.

CSIயில் இணைந்த பல்வேறு திருச்சபைகளின் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களைப் பரிபாலனம் செய்தவற்கு CSI Synod அமைப்புச் சட்டதிட்டங்களில் வழிவகை செய்யப்படவில்லை. அவைகளை நிர்வகிப்பதற்கு இவர்களாகவே வேறொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தியன் கம்பனி சட்டம் 1913 (Act VII - of 1913)ன் அடிப்படையில் 26.09.1947ல் Churches of South India Trust Association என்ற நிறுவனத்தை வரிசை எண் 46-ஆகவும் பதிவு எண் CIN - U 93090 TN 1947 NPL000346 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது CSI சினாடு அமைப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு ஒருநாள் முன்பாகவே இந்த CSI-TAயை இந்தியன் கம்பனி சட்டத்தின்கீழ் 26.09.1947ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த CSI-TAயை ஏழு தனி நபர்களால் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு தனிகம்பனி என்ற அந்தஸ்துதான் இதற்கு உண்டு. இப்படியொரு Trust-ஐ பதிவு செய்வதற்கு ஊர் பொதுச்சபையினர் (General Body of the CSI) இந்த ஏழு நபர்களுக்கும் அதிகாரம் வழங்கவில்லை என்பது சட்டமீறலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இருப்பினும் இதன் முக்கிய நோக்கமாவது.

Article (3). (a). "To act and allow its name to be used as trustees or agent whether alone or jointly with any person of persons for the Church of South India, and accordingly to cqure by all lawful means immovable and movable property and to apply both Capital and Income there of and the proceeds of the sale or mortgage there of for or towards all or any of the objects herein after specified, with in the territories of India".

(b). ".......... and in particular to assist pecuniarily or otherwise all or any of the societies, clubs, trusts, organization, schools, colleges, ashrams, hostels, boarding houses hospitals, dispensaries, Industries, homes, refugees and other charities now existing or here after to exist in connection with the said Church with in the said area whether the same are confined to the said area are not.

(c). To acquire sites for buildings and to build alter or enlarge such buildings and to maintain and endow Churches, Chapels, burial grounds, schools, Colleges, ashrams, hostels, boarding houses, hospitals, dispensaries Church and mission halls, prayer houses, residences for ministers, doctors, School masters and school mistresses and other workers, refugees, homes, industrial establishment and other buildings to be used in connection with the work of the said church with in the said area.............." இவ்வாறு 17 நோக்கங்களை இந்த Trust Association கொண்டுள்ளது. இருப்பினும் இது ஒரு Charitable Trust ஆக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனி போன்று இதுவும் CSIயும் ஓர் வியாபார நோக்குடைய கம்பெனியாக தோற்றத்திலும் செயலிலும் காணப்படுகிறது. The Hindu Religious Charitable Endowment போன்று இதையும் "The CSI Religious And Charitable Endowment and trust" என்று பதிவு செய்திருந்தால் CSIயின் நோக்கம் தர்ம காரியங்களாகவும் இருந்திருக்கும். அதனால்தான் இதன் ஷரத்துக்களில் Charitable Activitiesக்கு முக்கியத்துவம் காணப்படாமல், மற்ற காரியங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த CSI அமைப்பின் கீழ் வருகின்ற ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் அனைத்தும் இந்த CSI Trust - Associationக்கு பாத்தியதைப்பட்டதாகும். ஆகையால் இவைகள் அனைத்தும் பணமதிப்பில் இதன் Assets ஆகிறது. எனவே இதற்கான கணக்கு விவரங்களை இந்த CSI - TA பேணிக்காத்து அதன்மூலம் கிடைக்கின்ற வருவாயை CSI சபை உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்பதும் இதன் நோக்கம் ஆகும்.

ஆனால் நடைமுறையில் இந்த Trust Association அவ்வாறு செயல்படவில்லை. இதன் சுவாதீனத்தில் உள்ள அனைத்து ஸ்தாவர ஜங்கம சொத்துக்களின் விவரங்களை Register of Assets புத்தகத்தில் அதாவது Capital Investment என்பதாக கணக்கு வைத்திருக்கவேண்டியது இந்த CSI-TAயின் தார்மீக கடமைகளில் ஒன்றாகும். இது மிக முக்கியமானதும்கூட. ஆனால் இந்த Association அவ்வாறு செய்யவில்லை. ஆகையால் அதன் தணிக்கை அறிக்கையில், தணிக்கையாளர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

"We have not verified the title deeds in respect of these properties. No value have been assigned to the immovable properties of the trust. We are informed that the rental income from properties let and sale proceeds, if any of the immovable properties are received directly by the units and Sub-units are accounted by them or by the beneficiaries directly”.

(See annexure to the audit report of even date for the year 2000-2001 compiled by M/s.Gopal and Moorthy-Chartered accountant dated 16th October 2001).

எனவே CSI - TA நிர்வாகம் அதற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் விவரத்தை ஆய்வுக்குத்தராமல் மறைக்கப்பட்டுள்ளதின் நோக்கம் எதுவாக இருக்கும்? அரசாங்கத்தையும், கிறிஸ்தவ மக்களையும் ஏமாற்றும் ஒரு முயற்சியாகத்தான் இது இருக்கமுடியும். 2001ம் ஆண்டு தணிக்கைக் கணக்கின் அடிப்படையில் CSI - TAயின் முதலிருப்பு (Capital) ரூ.49.48 கோடி மட்டுமே. 2006 தணிக்கையின்படி அதன் முதலிருப்பு ரூ.59.79 கோடியாக தரப்பட்டுள்ளது. இது CSIயின் உண்மை நிலையை விளக்குவதாக இல்லை. உதாரணமாக கன்னியாகுமரி CSI பேராயத்தில்மட்டும் அதன் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களின் மதிப்பு, இன்றைய சந்தை நிலவரப்படி ரூ.5000 கோடிக்கு மேல் இருக்கும். இதைவிட கூடுதல் சொத்துக்கள் திருநெல்வேலி CSI அத்தியட்சாதீனத்துக்கு உண்டு. சென்னை CSI அத்தியட்சாதீனத்துக்கோ இவைகளைவிட பல நூறு மடங்கு சொத்துக்கள் உண்டு. CSI சினாடில் 22 அத்தியட்சாதீனங்கள் உண்டு. இவைகளின் கூட்டுச் சொத்து மதிப்பை துல்லியமாகக் கூறிட இயலாது என்றாலும், மொத்த மதிப்பு ஒரு மில்லியன் கோடிக்கு (One Million Crores) குறையாமல் இருக்கும். இவ்வளவு Assets-ஐ கொண்ட CSI - TAயின் Capital வெறும் 59.79 கோடி என்று ஆடிட்டுக்கு காண்பிக்கிறார்கள் என்றால் யார் இதை நம்புவார்கள்! இந்த முழுசொத்து மதிப்பை CSI - TA ஏன் கணக்கில் கொண்டுவராமல் மறைத்துள்ளது? இந்த Trust Associationக்கு இவ்வளவு சொத்து உண்டு என்பதை அரசு அறிய நேர்ந்தால், இதை நிர்வகித்து பரிபாலனம் செய்வதற்கு என்று HR and CE போன்ற ஒரு Endowment நிர்வாகத்தை அரசு நிச்சயம் நிறுவிவிடும் என்ற பயத்தால்தான் இதன் சொத்து மதிப்பை தணிக்கைக்கு உட்படுத்தாமல் ஆரம்பத்திலிருந்தே மறைத்துவருகின்றனர். அவ்வாறு ஒரு Charitable Endowment-ஐ வைத்துவிட்டால் பிரதம பேராயரும், பேராயர்களும், ஆயர்களும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற மற்றவர்களின் ஆடம்பர வாழ்வுக்கும் பணத்தை தங்கள் இஷ்டம்போல் செலவு செய்வதற்கும் தடங்கல் உருவாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இதை அவர்கள் மறைக்கின்றனர். இது இன்று நேற்று முதற்கொண்டு மறைக்கப்பட்டது அல்ல. CSI - TA யும், CSI - சினாடும் உருவாக்கப்பட்ட நாள் தொட்டு அதாவது 1947ம் வருடம் தொட்டு இன்றுவரை இந்த இருட்டடிப்பு CSIயில் நடந்து வருகிறது. இது தமிழக அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் தெரியாமல் இருப்பதற்கு நியாயமில்லை. வேண்டுமென்றுதான் அரசும், அதிகாரிகளும் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று தோன்றுகிறது. இதை சரிகட்டுவதற்கென்று ஒரு செல்வாக்குமிக்க பேராயர் ஒருவர் தி.மு.க அரசின் செல்லப்பிள்ளையாக செயல்புரிந்து வருகிறார். நாங்கள் சிறுபான்மையினர், பரம ஏழைகள், எங்களுக்கு வசதிகள் இல்லை. எனவே எங்களை விட்டுவிடுங்கள் என்று இவர் சொல்கிறார் போல் தோன்றுகிறது.

இதன் தொடர்பால் பிரதமப் பேராயரும் வேறு சில பேராயர்களும் பல தில்லுமுல்லுகளை துணிந்து செய்துவருகின்றனர் என்பதை கடந்தகால பண ஊழில்கள் CSIயில் ஏற்பட்டதை அறியும்போது உறுதியாகிறது. சான்றுக்கு கூறுவதானால் அண்மையில் சுனாமி நிவாரண நிதியாக கிடைத்த ரூ.17.63 கோடிகளைச் சரியாக குறிப்பிட்ட சுனாமி நிவாரணப் பணிக்களுக்கு மட்டுமாகச் செலவு செய்யாமல் வேறு காரியங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிரவும் 7.50 கோடி ரூபாய் டையோசிஸ் பணத்தை எடுத்து மோசடி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டு பல முக்கிய புள்ளிகளை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த ஊழலில் கன்னியாகுமரி அத்தியட்சாதீனப் பேராயர் மாமறைத்திரு ஜீ.தேவகடாட்சம், கிருஷணா - கோதாவரி அத்தியட்சாதீனப் பேராயர் மாமறைத்திரு ஜி.தெய்வாசீர்வாதம், மத்திய கேரளா பேராயர் மாமறைத்திரு.தாமஸ் சாமுவேல், சென்னை பேராயர் மாமறைத்திரு வி.தேவ சகாயம், மதுரை-ராமநாதபுரம் பேராயர் மாமறைத்திரு எ.கிறிஸ்டோபர் ஆசீர், வடகேரள பேராயர் மாமறைத்திரு கே.பி.குருவில்லா, தென் கேரளா பேராயர் மாமறைத்திரு J.W.கிளாஸ்டன், தூத்துக்குடி-நாசரேத் பேராயர் மாமறைத்திரு ஜெபச்சந்திரன், திருச்சி-தஞ்சாவூர் முன்னாள் பேராயர் மாமறைத்திரு D.J.ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி முன்னாள் பேராயர் மாமறைத்திரு ஜெயபால் டேவிட், மற்றும் வேலுர் கிறிஸ்தவ ஆலோசனை மன்ற இயக்குனர் திரு.B.J.பிரசாந்தம் போன்றோருக்கு பங்கு உண்டு என்று அறியப்படுகிறது. இவர்களில் பல பிஷப்மார் தன்னை இதிலிருந்து விடுவித்துக்கொள்ள பெரிய அரசியல்வாதிகளை இப்போது கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர் என்று தகவல் வந்துக்கொண்டிருக்கிறது. இம்முறை இவர்களையெல்லாம் சட்டக்கூண்டில் ஏற்றாமல் விடுவதில்லை என காவல்துறையினர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வெட்கப்படவேண்டியது அனைத்து CSI கிறிஸ்தவர்களேயாவர்கள்.

CSI-TAயின் யூனிட்டுகள் மற்றும் அதன் கீழ்வருகின்ற யூனிட்டுகளும் CSIயின் சொத்துக்களிலிருந்து கிடைக்கின்ற வாடகை மற்றும் விற்று கிடைக்கும் வரவுகளை அவர்களே கணக்கில் வைத்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையென்றாலும் ஸ்தாவர ஜங்கம சொத்துகளின் சந்தை விலையை அவைகளின் தணிக்கைக் கணக்குகளில் Capital-ஆக வருவதில்லை, கருதுவதுமில்லை. கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற Sub-Unit நிறுவனங்கள் CSI-TA-வுக்கு வாடகை பணமாக தந்து வருவதைப் பார்த்தால், இவைகளின் உரிமையாளர் அதாவது பட்டாதார் CSI-TA மட்டும்தான் என்பது உறுதியாகின்றது. ஆகையால் பணவரவை மறைப்பதால் CSI-TAயானது அரசை ஏமாற்றி வருவது புலனாகிறது. CSI-TA-யில் காணப்படுகின்ற ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் அனைத்தும் CSI-TA சம்பாதித்தது அல்ல, மக்கள் அல்லது நன்கொடையாளர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்டவைகள் ஆகும்.

எனவே இவைகள் அனைத்தும் CSI கிறிஸ்தவ மக்களுக்குமட்டும் பொதுவானதும், உரிமைப்பட்டதும் ஆகும். ஆகையால் இவைகளை விற்று காசாக்குவதற்கு இந்த CSI-TA அமைப்பிற்கு மக்கள் அதிகாரம் எதுவும் வழங்கவில்லை.

எனவே CSI-TAவால் விற்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் நீதிமன்றங்கள் வாயிலாக மீட்கவேண்டியது CSI கிறிஸ்தவர்களின் தலையாய கடமையாகும்.

ஆனால் இன்றைய CSI கிறிஸ்தவர்கள் அதற்கு முன்வரமாட்டார்கள் என்பது திண்ணம். ஏனெனில் அவர்களை CSI அமைப்பின் மும்மூர்த்திகளான Moderator, Deputy Moderator மற்றும் General Secretary ஆகியோர் சொத்து மீட்புக்கு முயற்சி செய்பவர்களை அல்ல, இது விஷயமாக கோர்ட்டுக்கு போவோர்களை Ex-Communicate (சபை நீக்கம்) செய்துவிடுவர் என்ற பயம் இவர்களை ஆட்கொண்டு உள்ளதால் பலர் இதிலிருந்து பின் வாங்கிச்சென்றுவிடுகின்றனர். அதனால்தான் சொல்கிறோம். இனி CSI சொத்துக்களை காப்பாற்றுவதற்கு (Tame) அரசாங்கம் ஒன்றால்தான் இயலும். அது எவ்வாறு முடியும் என்று அரசு சிந்திக்கலாம்.

இந்து சமயத்தாருக்குச் செய்ததுபோன்று, இஸ்லாமிய சமயத்தாருக்குச் செய்தது போன்று, CSI கிறிஸ்தவ சமயத்துக்கும் ஒரு Endowment அமைத்து இதன் நிர்வாகத்தையும், சொத்துக்களையும் வழிமுறைப்படுத்தவேண்டியது இன்றைய முக்கிய தேவையாகின்றது. ஏனெனில் இந்த நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மக்கள் பணத்தை சரிவர கணக்கு வைக்காமல் கபளிகரம் செய்வதும், CSIயின் ஸ்தாவர சொத்துக்களை தேவையில்லாமல் விற்று விரயம் செய்வதும் அன்றாட நிகழ்ச்சியாக்கிவிட்டது.

குறிப்பாக வெளிநாட்டிலிருந்து CSIக்கு கிடைக்கின்ற உதவித் தொகையைக்கூட இவர்கள் கையாடல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது உலகமறிந்த விஷயமாகிவிட்டதை அறிவோம்.

"The movable and immovable properties of the CSI-TA and Synod of CSI are the properties of CSI Christians only. They are peoples property and it is the legitimate duty of a popular Government to safe guard the Christian peoples properties from the Valturious Presbyterians and dangerous episcopally ofdained ministers".

CSI TA நிர்வாகத்தை "Christian Religious and Charitable endowment"ன் கீழ்கொண்டு வரவேண்டியது அரசின் கடமையாகும். இந்த நிர்வாகத்தை சீர் செய்திட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறவர்கள். அரசுக்கு சட்டப் பூர்வமான, விரிவான விண்ணப்பம் தயார் செய்து மக்களிடத்தில் கையொப்பம் பெற்று அளித்தல் வேண்டும். இதற்கென கையொப்ப இயக்கம் ஒன்று தொடங்குவது நல்லது.

தமிழக தலைமைச் செயலகத்திற்கு உங்கள் கூக்குரல் எட்டவேண்டும். அப்பொழுதுதான் அதை என்னவென்று நம் தமிழக முதல்வர்.கலைஞர் அவர்கள் நிச்சயம் கேட்பார். அவரால்தான் இந்த வானளாவிய அதிகாரத்தை பெற்ற சபை தலைவர்களுக்கு கடிவாளம் இடமுடியும். CSI சொத்துக்களை அதன் வேலியே பயிர் மேயாமல் காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.

கிறிஸ்தவர்களுக்கு மற்ற மதங்களைப்போன்று ஒரு அரசாங்க Charitable Endowment வைத்தால் மட்டுமே கிறிஸ்தவ சமுதாயத்தை இன்றைய அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்றிட முடியும் என்பது இப்போது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிறது.

நன்றி - சமுதாய சிந்தனை


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard