////இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள்.////

ஊழியரை குறைகூறும் பதிவும் அதற்க்கு பதிலும்! புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்."(கொலோசெயர்.1:27)
மேற்கண்ட வேதவாக்கியத்தின்படி மிக எளிமையாகவே நான் அறிந்திருக்கிறேன்,மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் அல்ல,ஒரு அங்குலத்துக்கு அப்பால் இருந்தாலும் சாத்தான் என்னை நெருங்கமுடியாது;ஏனெனில் தேவ மகிமையானது இன்று எனக்குள் இருக்கிறது;
எனவே இதுபோன்ற வேண்டாத அபரிமிதமான அதீத வர்ணனைகளை தேவ ஊழியர்கள் தவிர்க்கவேண்டும்;சாத்தானைக் குறித்து அதிக பயமும் எச்சரிக்கையுணர்வும் இருப்பதாலேயே ஆண்டவர் பெரிய மனது பண்ணி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மிருகங்களை அடைத்து வைத்துப் பார்ப்பதைப் போல சாத்தானையும் எங்கோ தூரத்தில் தடுத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுகிறோம்;
வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுடன் நமக்கு இடைவிடாத போராட்டம் உண்டு என்று வேதம் சொல்லுமிடத்து தேவ மகிமை எங்கே செல்லும்..?
கனவுகள்,பரலோகக் காட்சிகள் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவைகளாக இருப்பினும் வேதத்துக்கு எதிரானதல்ல;அப்படியானால் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் என்பதே பொய்யாகிவிடுமே..?
மனிதர்களோடு சர்வ வல்லவர் இடைபடும் போது மனிதனுடைய புரிதலுக்காகவும் தமது வல்லமையை விளங்கப்பண்ணவும் அவர் தமக்கேற்ற விதத்திலும் தனித்தன்மையிலும் செயல்படுவார்;அது மனிதனுக்கு பிரமிக்கத்தக்கதாகவும் இருக்கும்;
மென்மையான இருதயமுள்ளவர்களுக்கு இயற்கைக்கு மாறுபட்ட காட்சிகள் தோன்றுவதுண்டு;அது தெய்வீகமானதாக இருந்ததானால் வெளிப்படுத்தப்படும் செய்தியில் தெரிந்துவிடும்;எனவே இந்த அனுபவங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)