பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை
கோலாலம்பூர்: கடந்த ஒரு மாதமாக விரக்தியில் இருந்த மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மலேசியாவின் மலாக்கா மாநிலம் அயர்லெலே பகுதியை சேர்ந்த மாணவி சல்லி லீ கியான் சுன் (17). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். தனது தனிப்பட்ட விஷயங்களை பேஸ்புக் இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவள்.
கடந்த ஒரு மாதமாகவே விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இதுதான் தனக்கு கடைசி சீனப் புத்தாண்டு என்று சக தோழிகளிடம் கூறி வந்திருக்கிறாள். தனது அறை சுவரிலும் கிறுக்கி வைத்தாள். தான் மிகவும் சோகத்தில் இருப்பதாகவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனையில் இருப்பதாகவும் பேஸ்புக்கிலும் தெரிவித்திருக்கிறாள்.
இந்நிலையில், பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதியியல் செய்முறை வகுப்பு நடந்தது. அங்கிருந்து திடீரென வெளியேறிய மாணவி சுன் அழுதுகொண்டே 2வது மாடிக்கு ஓடினாள். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ‘முடிவெடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடு’ என்று பேஸ்புக் (Face Book) மூலம் சிலர் வலியுறுத்தியதாலேயே இந்த முடிவை மாணவி எடுத்தார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=28988&id1=12
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்று காலை எனக்கு ஒரு யோசனை:"தற்கொலை செய்து கொண்டால் என்ன?"
அடடே ரொம்ப பயந்துடாதீங்க,வித்தியாசமா எதாவது செய்து நாம் சாதிக்கவேண்டுமே என்ற மனப்பாரத்தினால் வந்த யோசனைதான் அது! அதாவது நான் 'தற்கொலை செய்து கொள்ளலாமா' என அநேகரைப் போல அநேகந்தரம் யோசித்திருந்தாலும் இன்றைக்கு காலையில் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்கு எதாவது செய்து சமூகப் பணியாற்றினால் என்ன என்ற யோசனைதான் அது!
தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?
யார் யாருக்கெல்லாம் வருகிறது?
எப்போது வருகிறது?
தற்கொலை எண்ணத்தை நிறைவேற்றியவர் பெற்றது,வெற்றியா, தோல்வியா? அல்லது தற்கொலை எண்ணத்தை மேற்கொண்டவர் அடைந்தது வெற்றியா, தோல்வியா?
தற்கொலை செய்து கொள்ளப்போய் உயிர் பிழைத்தவரின் தற்போதய மனநிலை என்ன?
அவர் உயிர் பிழைத்ததைக் குறித்து சந்தோஷப்பட்டால் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்காக எதாவது செய்திருக்கிறாரா?
உங்களுக்கு அருமையானவர்களை நண்பர்களை இதுபோன்று இழந்த அனுபவங்கள் என்ன?
இனி அதுபோன்றதொரு சம்பவம் நடைபெறாமலிருக்க தங்கள் பங்கு என்ன?
இன்றைய பரபரப்பான உலகில் மனிதனின் ஆத்துமாவானது வறண்ட வனாந்தரத்தில் தனித்து சிக்கிக் கொண்ட குருவியினைப் போல அலறிக் கொண்டிருக்கிறது; அதனை அறிவாருமில்லை,விசாரிப்பாருமில்லை; அவ்வளவு அந்த ஜீவன் தன்னைத்தானே கூட நேசிப்பதில்லை;
பிறகு பிறரை எவ்வாறு நேசிக்கும்?
குதிரை கம்பீரமாக ஓடுவது போலத் தோன்றினாலும் அது சாட்டையடிகளுக்கும் கடிவாளத்துக்கும் பயந்தே வலியுடன் ஓடுகிறது என்பர்;
தற்கொலை எண்ணம் யாருக்குத் தானில்லை, 'ஒன்னோட போராடியே என் பிராணன் போறது' எனப் புலம்புவது கூட தற்கொலை எண்ணத்தின் வெளிப்பாடுதான்! 'செத்துப்போனா தேவல' என்போரையும் நம்பமுடியாது;
இப்படி இது போன்றதொரு "மதசார்பற்ற" பிரச்சினைக்கு "மதசார்பற்ற தீர்வு" உண்டா? இது தான் எனது எண்ணம்.தயவுசெய்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் எனும் சாதாரணமான- வழக்கமான- பழகிவிட்ட தீர்வினைச் சொல்லவேண்டாம்; காரணம்,எனக்கு மிகவும் அன்பானதொரு சகோதரி தற்கொலை செய்துகொண்டாள்;அவள் உயிர் பிரியும் வரை "ஸ்தோத்திரபலி" சொல்லிக் கொண்டிருந்தாள்.இதற்காக அதை நியாயப்படுத்தவில்லை;அது சரியா தவறா என்று விவாதிப்பதும் என்னுடைய மைய நோக்கமல்ல.
எப்படி வயதாகி மரணம், விபத்தில் மரணம் அப்படியே தற்கொலை என்பது மரணம் நேரிடும் ஒரு காரணமாகும். தேவன் ஒரு மனிதனின் ஆயுள் நாட்களை தீர்மானித்து வைத்திருக்கிறார். அந்த ஆயுள் நாட்கள் முடிந்தால் மரணம் நிச்சயம் நேரிடும். சிலர் விபத்தில் தப்பிப்பது, தற்கொலையில் தப்பிப்பது என்பது அந்த மனிதனுக்கு தேவன் நியமித்த ஆயுள் நாட்கள் முடியவில்லை என்பதாகும். எந்த ஒரு மனிதனும் எத்துனை முயற்சி எடுத்தாலும் தேவனால் தீர்மானிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் முன்பு மரிப்பதில்லை, அதற்கு பின்பு வாழ்வதுமில்லை. தற்கொலை செய்து மரிப்பது என்பது தேவனால் தீர்மானிக்கப்பட்ட ஆயுட்காலம் முடியும் முன்பு நாம் மரித்து விட்டோம் என்றில்லை. அவரின் ஆயுட்காலம் முடிந்ததினால் தான் அவர் மரித்தார். மரணம் தான் முக்கியமே தவிர அதன் காரணம் இல்லை.