Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!
Permalink  
 


அப்படியானால் தாங்கள் பதிக்கும் கட்டுரைகள் இணையத்திலிருந்து பெறப்படாமல் தங்களால் தட்டச்சு செய்யப்பட்டு பதிக்கப்படுகிறதா? ஏனெனில் இணையத்திலிருந்து எடுத்திருந்தால் அதன் தொடுப்பில் சென்று முழுவிவரத்தையும் அறிய வாய்ப்புண்டாகும்; ஆனால் தாங்கள் பதிவிடும் சகோ. வசந்தகுமார் அவர்களின் பல கட்டுரைகளும் தங்கள் உழைப்பினால் வெளிவந்திருக்குமானால் அது நிச்சயமாக ஒரு பெரிய ஊழியமாகும்.

God Bless You..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இது எந்த தொடுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டதல்ல. கீழே அதற்கான விபரத்தைக் குறித்துள்ளேன் பாருங்கள். 

இது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய கர்த்தரின் பராமரிப்பில் களிகூர்ந்திடும் பக்தன் – 23 ஆம் சங்கீகத்திற்கான விளக்கவுரை என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்

சிலவேளைகளில் இது உங்கள் ELS விற்பனைக் கூடங்களில் கிடைக்கக்கூடும். உங்களுக்குத் தேவையானால் கூறுங்கள். நான் Scan செய்தாவது அனுப்ப முயற்சி செய்கிறேன். தற்போது இந்த நூலினை இலங்கையிலும் காணக்கிடைக்கவில்லை


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பு நண்பர் "எனக்கும் தான்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்;உங்கள் சத்திய தாகம் இங்கே நிச்சயம் தீர்க்கப்படும்;சரியானதை விவரமாகச் சொல்ல ஆயத்தம் செய்கிறேன்; தாங்களும் யௌவன ஜனமானதற்கு மிக்க சந்தோஷம்...ஆமா,'யௌவன ஜனம் 'னா என்னன்னு கேக்கமாட்டியளா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

இன்னும் கொஞ்சம் கூட ஆழமாக  விளக்கினால் நல்லது


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கொல்வின் அவர்களின் வருகைக்கும் பங்களிப்புக்கும் நட்பின் காரணத்தோடு கூடிய நன்றிகள்; பயனுள்ள நல்ல தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள்; அதன் தொடுப்பையும் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்;

இன்னும் வெவ்வேறு தலைப்புகளிலும் தங்கள் மேலான பங்களி‍ப்பைத் தர அன்புடன் அழைக்கிறேன்.

God Bless You..,


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!
Permalink  
 


கோல், தடி ஆகிய ஆகிய இரண்டும் இரண்டு விதமான பணிகளுக்காக பலஸ்தீன மேய்ப்பர்கள் வைத்திருக்கும் பொருட்களாகும். அதாவது மந்தையின் ஆடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கோலையும் மந்தையை தாக்க வரும் காட்டு மிருகங்களைத் துரத்துவதற்காகத் தடியையும் அவர்கள் வைத்திருப்பது வழமை. இவையிரண்டும் மேய்ப்பர்களிடம் இருப்பதனால் இருள் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும் மந்தைகளுக்கு தைரியமும் துணிவும் கிடைக்கின்றன.


மேய்ப்பனின் கோல் ஐந்து அல்லது ஆறு அடிகள் நீளமானதாகவும் மேற்புறத்தில் சற்று வளைந்தும் காணப்படும். மந்தைகளைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கும் (F.H. Wight, Manners and customs of Bible Lands, pp149-150 ) மலைகளில் ஏறுவதற்கும், செடிகளையும் புதர்களையும் அடித்து மந்தைகள் செல்வதற்கான பாதைகளை உருவாக்குவதற்கு இக்கோல் உபயோகிக்கப்பட்டது. (J.M. Freeman, Manners and customs of the Bible PP136-137) மேய்ப்பனின் தடி நீளம் குறைந்ததாக இருந்தாலும் கோலைவிடத் தடிப்பானதாகவும் கூரிய இரும்புத் துண்டுகள் பொருத்தப்பட்டதாகவும் மேய்ப்பர்களின் பாதுகாப்பு ஆயுதமாக இருந்தது. (G.M. Mackle Bible Manners and customs P 31) அக்கால மேய்ப்பர்கள் கோலைத் தங்கள் கைகளில் வைத்திருப்பார்கள். தடியைத் தங்கள் ஆடையின் இடுப்பில் சுற்றியிருக்கும் நாடாவில் தொங்கவிட்டுப்வைப்பார்கள். (J.H. Walton V.H. Matthews & M.W. Chavalas, The IVP Bible Backrground Commentary OT P 524)

மேய்ப்பனின் கோலும் தடியும் மந்தைகளுக்கு பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் கொடுக்கும் பொருட்களாகும். தன்னைப் பராமரிக்கும் தேவனைப் பற்றி சங்கீதக்காரன் நன்கு அறிந்திருந்தமையால் கோலும் தடியும் அவனுக்குத் தேவன் அளிக்கும் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் நினைவூட்டும் அடையாள சின்னங்களாக இருந்தன. உண்மையில் மேய்ப்பனுடைய கோலும் தடியும் அவனது அதிகாரத்தையும் வல்லமையையும் குறிக்கும் அடையாளச் சின்னங்களாகும். தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் நாம் அறிந்திருந்தால் எத்தகைய மரணப் பள்ளத்தாக்கிலும் துணிவுடனும் தைரியத்துடனும் நம்மால் செல்லக் கூடியதாக இருக்கும்.

(இது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய கர்த்தரின் பராமரிப்பில் களிகூர்ந்திடும் பக்தன் – 23 ஆம் சங்கீகத்திற்கான விளக்கவுரை என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)


-- Edited by colvin on Tuesday 7th of September 2010 07:45:46 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!
Permalink  
 


Jesus_My_Love:
// அன்பு chillsam எங்கள் போதகரும் இதே விளக்கம் தான் கொடுத்தார் பல வருடங்களுக்கு முன்பு இதற்கு வேறு அர்த்தம் இருந்தால் விளக்கவும் ப்ளீஸ்... //


நண்பரே, வேறு அர்த்தமோ வெவ்வேறு அர்த்தமோ அல்ல, ஒரே அர்த்தம் தான்; வேதத்தின் எந்தவொரு வசனமும் என்ன சொல்லுகிறது என்பதை நிதானமாக தியானித்தாலே இந்த வரம் சாத்தியமாகும்; மற்றபடி யாரோ சிலர் போதித்ததையும் எழுதியதையும் கவனித்து அதன் பாதிப்பில் களத்துக்குச் சென்றால் நிச்சயமாகவே குழப்பம் வரும்;

இதுவரை எந்த ஒரு பார்வையாளரும் -அதாவது கிறித்தவ வட்டாரத்தில் சத்தியத்துக்கு மாறாக பேசுவோரை எழுந்து நின்று கண்டித்ததுமில்லை; தொடர்ந்து அந்த மாற்று கருத்துக்கு விளக்கம் கேட்டு சம்பந்தபட்டவரிடம் போராடியதுமில்லை; காரணம் என்ன? உறவு பாதிக்குமே என்ற பாதுகாப்புணர்வே; அதையும் மீறி மோதுவோர் வெளியேறுவார் அல்லது வெளியேற்றப்படுவார்;

என்ன ஒரு ஆச்சரியமென்றால் வெளியேறிச் சென்றவரும் அதையே போதிப்பார்; காரணம் முந்தியவரின் மீதான மயக்கம் அவ்வளவு எளிதில் போகாது; ( இதனை எழுதும்போது எனக்கு தாய் நண்டு தனது குட்டிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வருகிறது..!) இதற்குள் கூட்டம் கூடிவிடும்; புதிய தலைவரின் உணர்வுகள் அழுத்தப்பட்டு தான் உருவாக்கப்படவோ மாற்றப்படவோ வாய்ப்பில்லாமலே பிரபலமாகிவிடுவார்;

அப்படி பெருகியதே நம்மைச் சுற்றியுள்ள சபைகள்; இந்த நவீன யுகத்திலாவது நாம் இதனைச் சரிசெய்யவேண்டும்; கொஞ்சம் தாமதித்தால் மாற்று மார்க்கத்தவர் வந்து நமக்கு போதிப்பார்; நாம் தலைகுனிந்து நின்று அழவேண்டியதாகும், ஆமாம் ஏசாயா.28:11 ஐ நினைத்து..." பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்." இந்த வசனத்தைப் பற்றிய வெளிப்பாடா ? அது தனி போதனை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!
Permalink  
 


வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...!

புரட்சிகரமாக எதையாவது பேசுகிறோமென்ற போர்வையில் வசனத்தை மென்றவர்களைக் குறித்த ஒரு அனுபவம்...
அண்மையில் கீழ்க்காணும் முகவரியிலிருந்து ஒலிபரப்பான ஆமென் எஃப் எம் எனும் வானொலியில் ஒரு சகோதரியும் ஒரு சகோதரரும் உரையாடலில் (நல்லதொரு குடும்பம் நிகழ்ச்சியில்) என்னுடைய சபைக்கு வா என்னுடைய சபைக்கு வா என்று போட்டிபோட்டுக் கொண்டு சபையிலிருக்கும் குழப்பங்களையும் கவனிக்காமல் வெறும் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று பேசி கடலில் மீன்பிடிப்பதை விட்டு விட்டு தொட்டியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று (அங்)கலாய்த்தார்கள்;

சரி போகட்டும் என கேட்டுக்கொண்டே வந்தால் திடிரென அந்த சகோதரி 23ம் சங்கீதத்தின் "கோலும் தடியும் " என்பதற்கு விளக்கம் கொடுக்க அதிர்ச்சியடைந்தேன்;உடன் உரையாடிய சகோதரரும் ஏதோ இளித்துவிட்டு நம்ம நிகழ்ச்சியைக் கேட்டு நிறைய போதகர் பிரசங்கம் தயாரிக்கிறாகள் என்று பெருமையடித்துக் கொண்டார்;
http://www.bibleuncle.co.cc/
%D0%94%D0%BE%D0%B1%D1%80%D1%8B%D0%B9%20%D0%BF%D0%B0%D1%81%D1%82%D1%8B%D1%80%D1%8C.jpg

கோலும் தடியும் என்பதற்கு அந்த பெண் கொடுத்த விளக்கமாவது,
கோல் என்பது ஆடு தூரம் போனால் கழுத்தில் மாட்டி இழுப்பதற்காம்;
தடி என்பது அடங்காவிட்டால் அடிக்கவாம்;
இது எப்படியிருக்கிறது?

உண்மையான விளக்கத்தையறிந்தவர் யார் வேண்டுமானாலும் பதிக்கலாம்;
இது நண்பர்களுக்கானதொரு வாய்ப்பு; மற்றபடி நான் பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard