இந்த காலத்தில் அரசியல்வாதிகள் எதையெதையோ திறந்துவைக்கிறார்கள்; பாலத்தைத் திறந்துவைப்பதும் அடுக்குமாடி கட்டிடத்தைத் திறந்துவைப்பதும் பெரிய செய்தியாகிறது;
ஆனால் நம்ம மோசேயும் யோசுவாவும் திறந்துவைத்தவற்றை யாராவது பெரிதாகப் பேசுகிறார்களா? எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே மோசே எனும் தலைவன் தன் மக்கள் கடந்து செல்ல (செங்) கடலில் பாதை போட்டார்; அவருடைய சிஷ்யனாகிய யோசுவாவும் அவரைப் போலவே யோர்தான் எனும் நதியைத் திறந்துவைத்தார்.
செங்கடலையும் யோர்தான் நதியையும் திறந்துவைத்து மாபெரும் சாதனைபுரிந்த அந்த தலைவர்கள் ஓட்டு கேட்டு யார் வீட்டுக்கு வராததால் அவர்களை யாருக்கும் தெரியவில்லையோ என்னவோ..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)