anbu57-ன் கேள்வி: // டிஜிஎஸ் அவர்கள் வஞ்சகத்தினால் சுவிசேஷம் அறிவித்தாரா? அல்லது உண்மையினால் சுவிஷேம் அறிவித்தாரா? //
chillsam-ன் பதில்: //டிஜிஎஸ் சுவிசேஷம் அறிவித்தார், உண்மையாக சுவிசேஷம் அறிவித்தார்,//
டிஜிஎஸ் உண்மையினால் சுவிசேஷம் அறிவித்தாரெனில், வஞ்சகத்தினாலும் விரோதத்தினாலும் சுவிசேஷம் அறிவித்தது யார்? அது சம்பந்தமான வசனங்களை (பிலிப்பியர் 1:16-18) chillsam மேற்கோள் காட்டியது யாருக்காக? அவ்வசனங்களை சம்பந்தமில்லாமல் இங்கு மேற்கோள் காட்டவேண்டிய அவசியமென்ன?
chillsam wrote: //நீர் என்னத்தான் சொன்னாலும் பரலோகத்தில் அவருடைய பலன் மிகுதியாகவே இருக்கும்;//
என்னதான் என எழுதுவதற்குப் பதில், என்னத்தான் என எழுதினால், அதன் அர்த்தம், என் அத்தான் என ஆகிவிடும் என்பதை அடிக்கடி பிறரது எழுத்துப்பிழை பற்றி விமர்சிக்கும் சில்சாம் அறிவாராக.
யாருக்குப் பரலோகத்தில் பலன் மிகுதியாக இருக்கும்? வேதவசனம் கூறுவதென்ன?
லூக்கா 6:22 22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
மனுஷகுமாரன் நிமித்தமாக டிஜிஎஸை ஜனங்கள் பகைத்தார்களா, புறம்பாக்கினார்களா, அல்லது அவரது நாமத்தை தள்ளிவிட்டார்களா?
ஒருசிலரைத்தவிர அநேக ஜனங்கள் அவரைப் புகழ்ந்து துதிபாடி வருவதுதானே உண்மை? நாடாளும் தலைவன் முதல் எளிய குடிமகன் வரை அவரை அநேகர் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
அவரது நாமத்தை சென்னைப் பட்டணத்தின் ஒரு சாலைக்குச் சூட்டியுள்ளதிலிருந்தே, இவ்வுலகின் பெரும்பான்மையான ஜனங்களால் அவரது நாமம் தள்ளப்படவில்லை என்பதை சிறுகுழந்தை கூட அறியும். பாவம், சில்சாம் தான் அறியமாட்டார்.
ஆம், நிச்சயமாக. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை, போனவருடைய நிலைமையைவிட என்னுடைய நிலைமை பரிதாபமானதுதான்! ஏனெனில், அவரைப் போன்று (ஊரார் பணத்தில்) சொகுசு வாழ்வை நான் வாழவில்லை. (கூறுகெட்ட) அநேக ஜனங்களால் நான் புகழப்படவில்லை, அவரது நாமத்தைப் போல் எனது நாமம் ஒரு சாலையின் பெயராக நிச்சயமாக சூடப்படபோவதில்லை. (ஊரார் பணத்தில் சேர்த்த) கோடிக்கணக்கான சொத்துக்கள் (காருண்யா பெயரிலும், ஜெபக்கோபுரம் பெயரிலும்) எனக்கு இல்லை. இப்படி அநேகம் சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது தவறை சுட்டிக்காட்டிய அன்பு அவர்களுக்கு நன்றி;ஆனாலும் அது எழுத்துப் பிழையல்ல என்பதை அறிவீராக;அது இலக்கணப் பிழையாகும்;
மெய்யாகவே எனக்கு இலக்கண விதிப்படியாக (எதுவும்) ஒற்றெழுத்தை சேர்க்கவேண்டிய இடம் மற்றும் இடைவெளி விடவேண்டிய இடம் தெரியாது;பொதுவான ஞானத்திலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆனாலும் கூட என் அத்தான் என்பதை என்னத்தான் என்று யாரும் எழுதியதில்லை என்று நினைக்கிறேன்;
தேடிக் கண்டுபிடித்து ஒரு பிழையைக் கூறும் நீர் தமிழ் மொழியை அறிந்திராத வேற்று கலாச்சாரத்திலிருந்து வந்து தமிழைக் கற்று இலக்கணம் அமைத்து அவர்களுக்கு சம்பந்தமில்லாத எபிரேய மொழி வேதத்தைத் தமிழில் தந்தோரின் சிரமங்களை உணர்ந்தீரா? அப்படி உணர்ந்திருந்தால் நம்முடைய தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு குறைபாட்டையும் அர்த்தம் மாறுபடும் வார்த்தை குறைபாட்டையும் குறிப்பிடும்போது தாக்குதலாக அல்லாமல், இதமாகத் தாழ்மையுடன் -அறிவுணர்த்தும் நோக்கத்துடன் குறிப்பிடுவீர்;அப்போது என்னைப் போன்ற கல்லாதவன் பயிற்றுவிக்கப்படுவான்;
ஆனால் இங்கே நடப்பது என்ன,இங்கே வந்து எதைக் கற்றுக்கொள்ளமுடியும் என்று உமது மனசாட்சிக்கும் உமது சுத்த மனசாட்சியுடன் ஆராதிக்கும் தேவனுக்குமே தெரியும்;ஒரு ஊழியரைக் குற்றஞ்சாட்டுவதிலும் கூட இதே வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்;
இந்து மார்க்கத்திலும் இதேபோன்ற மோசடியாளர்கள் உண்டு;இஸ்லாமிலும் உண்டு;கொள்கை பிறழ்ந்த அரசியல்வாதிகளூம் உண்டு;தரங்கெட்ட சினிமாக்காரர்களும் உண்டு;மோசடியாக பணம் சேகரிக்க அப்பாவி ஜனங்களை வஞ்சிக்கும் வியாபாரிகளூம் உண்டு;இவர்களையெல்லாம் பொதுஜனம் எப்படி அணுகுகிறது;சட்டம் எப்படி அணுகுகிறது,சம்பந்தப்பட்ட சமுதாயம் அணுகுகிறது என்பதை கவனிப்போம்;
சட்டத்தின் சந்துபொந்துகளில் அந்த மோசடியாளர்கள் தப்பினாலும் பத்திரிகை மற்றும் பொதுஜனத்தின் பார்வையில் அவர்கள் யாரென்பது நிச்சயம் தெரியும்;அதுபோலவே நம்முடைய ஊழியர்களும் நம்முடைய மக்களால் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டு நடத்தப்படுவர்;மீறினாலும் சட்டமும் நீதியும் இருக்கிறது;வேதசட்டம் மீறப்படும்போது அதனை நியாயந்தீர்க்க நியாயாதிபதி வருகிறார்;நீர் தவறானதைச் சொல்ல செலவழிக்கும் நேரத்தை சரியானதைச் சொல்ல செலவழித்து உமது ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொள்ளலாம்;பிரபலமானவர்கள் மீது கல்லெறிந்து தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள முயல்வது ஒரு வியாதியாகும்;சங்கீதம்.37 அப்படியே உங்களுக்கு சொந்தமானால் என்ன அல்லது 109 அவர்களுக்கு சொந்தமானால் என்ன? அதன் உரிமையாளருக்கு யாருக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியாதா அல்லது அதற்கு அவருக்கு உரிமையில்லையா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சில அறிவுஜீவிகள் நம்முடைய தளத்தை ஒரு பொருட்டாக எண்ணி இங்கே வந்து பதிக்க யோக்கியதை இல்லாததால் நானே அங்கும் பின்னூட்டமிட்டு அதற்கான பதிலைப் பெற்று இங்கேயும் பதிக்கிறேன்;
இது தேவைதானா என்று தெரியவில்லை;ஆனாலும் அங்கே தூவப்படும் விஷ வித்துக்களால் ஒருசில ஆத்துமாக்கள் சலனப்படுமோ என்ற துடிப்பிலேயே அவர்கள் எத்தனை இகழ்ந்தாலும் சுயகௌரவத்தையும் விட்டு போராடி வருகிறேன்;கர்த்தர்தாமே எனது முயற்சிகளை வாய்க்கப்பண்ணுவாராக;
ஒன்று மட்டும் நிச்சயம் அவர்களுக்கு தேவ பயமுமில்லை,சுபாவ அன்புமில்லை;அமலேக்கியனைவிட - சீமேயியைவிட மோசமானவர்கள் என்பதையறிந்து கொண்டேன்;
மத்தேயு 24:37-39 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
chillsam wrote: //Phi 1:18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.//
டிஜிஎஸ் அவர்கள் வஞ்சகத்தினால் சுவிசேஷம் அறிவித்தாரா? அல்லது உண்மையினால் சுவிஷேம் அறிவித்தாரா? bereans இவர்களை போன்ற ஊழியர்கள் கூட்டம் சேர்ப்பதே இதற்காக தான்,
இப்படிபட்ட ஊழியர்களுக்காகவே வசனம் இருந்தும் இவர்கள் எல்லாம் திருந்துவது போல் தெரியவில்லை!! இந்த வசனம் இன்றைய பிரபலமான ஊழியர்களுக்கு பொருந்துதா இல்லையா என்பதை மாத்திரம் சொல்லட்டும்!! soulsolution வெகுஜனத்தை கிறிஸ்துவின்பால் ஈர்க்கவில்லை இவர்கள் பால்தான் ஈர்த்தார்கள், ஈர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் ஊழியம் செய்தே மிஞ்சியது 120பேர்தான். இவர்கள் லட்சோப லட்சம் மக்களை ஈர்ப்பது சுயலாபத்திற்காகத்தான். தினகரன் ஒரு கிழ(ஓ)நாய் அதனிடமிருந்து கற்றுக்கொண்ட தெரு(ஓ)நாய் பால்தினகரன், குட்டிகளாய் சில சொறிநாய்கள் கூட்டம்.... பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி சிடி வியாபாரம், ஜெபிக்க ஒரு தொகை, கோபுரம்கட்ட ஒரு தொகை, டிவி வியாபாரத்துக்கு ஒரு பார்ட்னர். இதில் துணைக்கு இவர்களின் மனைவிமார்கள் வேறு. வெக்கங்கெட்ட ஜென்மங்கள்.....
முன்பு ஜில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற் விஜய் டிவி நிகழ்ச்சியில் இவாஞ்சலின் தினகரனுக்குப் பிடித்த இடம் என்ன என்ற கேள்விக்கு அந்தம்மா சொன்ன பதில் என்ன தெரியுமா? ஜெபகோபுரங்களோ, வேறு ஆன்மீகம் சார்ந்த இடங்களோ இல்லை. "ஸ்பென்சர் பிளாஸா".
My Reply: அன்பு அவர்களுக்கு...
// டிஜிஎஸ் அவர்கள் வஞ்சகத்தினால் சுவிசேஷம் அறிவித்தாரா? அல்லது உண்மையினால் சுவிஷேம் அறிவித்தாரா? //
டிஜிஎஸ் சுவிசேஷம் அறிவித்தார், உங்களைப் போன்றோர் வஞ்சகத்தின் மத்தியிலும்... உண்மையாக சுவிசேஷம் அறிவித்தார், உங்களைப் போன்றோர் பரப்பும் பொய்யான வதந்திகளின் மத்தியிலும்...நீர் என்னத்தான் சொன்னாலும் பரலோகத்தில் அவருடைய பலன் மிகுதியாகவே இருக்கும்; போனவருடைய நிலைமையைவிட உம்முடைய நிலைமையே பரிதாபமானது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
anbu57 //ஊழியம் என்ற பெயரில் பால் தினகரன் செய்கிற வியாபாரங்களுக்கு வித்திட்டவர் மட்டுமல்ல, அவற்றை தனது ஊழிய புகழ் மூலம் வளர்த்துவிட்டவரும் டிஜிஎஸ்-தான்.
காருண்யா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லையாம்! ஏராளமான வருமானத்தை கொட்டித்தருகிற காருண்யா எனும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தை டிஜிஎஸ் என்ன தனது வங்கிப்பணி வருமானத்திலா உருவாக்கினார்? தேவஆசீர்வாதத்தை தருகிற சாவி என்று சொல்லி தங்கநிற சாவியை பெரும் பணமுதலாளிகளிடம் கூவிக்கூவி விற்று கிடைத்த பணத்தாலும், காருண்யாவுக்காக சிண்டிகேட் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனைப் பற்றி தன் மீது பைத்தியக்காரத்தனமான பாசமும் அன்பும் வைத்துள்ள விசுவாசிகளிடமும் உலக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக காணிக்கையை அள்ளித்தர தயாராயிருக்கும் விசுவாசிகளிடமும் சொல்லி அழுது காணிக்கை என்ற பெயரில் வாங்கிய பணத்தாலும் அல்லவா காருண்யாவை உருவாக்கினார்.
வங்கி அதிகாரியான டிஜிஎஸ், தனது வங்கிப்பணி வருமானத்தில்தான் காருண்யா எனும் கோடிக்கணக்கான சொத்தை உருவாக்கினார் என்பதை டிஜிஎஸ்-க்கு பைத்தியக்காரத்தனமாக வக்கலாத்து வாங்குபவர்கள் சொல்லமுடியுமா?
ஏழை மாணவர்களுக்கென காருண்யா கல்லூரியை ஸ்தாபிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்த டிஜிஎஸ், பிற தனியார் கல்லூரிகளுக்கு நிகராக தனது கல்லூரியிலும் நன்கொடை வாங்குவது உலகறிந்த விஷயம்.
இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு காணிக்கை அனுப்பினால் வருமானவரி விலக்கு கிடையாது, காருண்யாவுக்கு பணம் அனுப்பினால்தான் வருமானவைரி விலக்கு கிடைக்கும் என்று சொல்லி, ஊழியத்திற்கு சம்பந்தமில்லாத காருண்யாவுக்கு காணிக்கையை திசைதிருப்பியவர் டிஜிஎஸ்-தான் என்பது சிந்திக்க சக்தியற்றவர்களுக்கு புரியாதிருக்கலாம், ஆனால் எல்லோருக்குமல்ல.
ஊழியம் ஊழியம் என்று சொல்லி, பணம் வாங்கி பலகோடி மதிப்பு பெறும் சொத்துக்களை ஜெபக்கோபுரம் என்ற பெயரில் டிஜிஸ் உருவாக்கியுள்ளதை, சிந்தனா சக்தியற்றவர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் எல்லோருமல்ல.
புறத்தோற்றமே முக்கிய மூலதனமாக இருக்கும் சினிமா உலகிலுள்ளவரும் உலகப்பிரகாரமானவருமான திரு.ரஜினிகாந்த், தனது நரைமுடித் தோற்றத்தைப் பொருட்மடுத்தாமல் இருக்கையில், புறத்தோற்றம் தேவையில்லாததான தேவஊழியப் பணியைச் செய்த டிஜிஎஸ், தனது நரைமுடியை மறைத்து மாயம் பண்ணியதை கண்மூடித்தனமானவர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் எல்லோருமல்ல.
திரு.அன்பு அவர்களுக்கு தங்கள் அணுகுமுறை எனக்கு ஏற்புடையதல்ல; நீங்கள் நடிகர் ரஜினியைக் குறித்து குறிப்பிட்டதால் சாதாரணமானதொரு கானா பாட்டுக்காரனைக் குறித்து கூறுகிறேன்;"வால மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற ஒரே பாடலின் மூலம் அடைந்த புகழ் அந்த மனிதரை உச்சத்துக்குக் கொண்டுச் சென்றது;
அதுபோலவே சுவிசேஷம் சிலருக்குப் பிழைப்பாக மாறி அதன் காரணமாக அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதைக் காட்டிலும் அவர்களால் அறிவிக்கப்பட்ட கிறித்துவின் கிருபையினால் அநேகர் மீட்கப்பட்டது சத்தியம்;அந்த சத்தியத்தில் இருப்பதாக உங்களால் சுட்டப்படும் கலப்படம் அடுத்த கட்டத்தில் உங்களைப் போன்றவரால் சரிசெய்யப்படும் என்பதே எனது நம்பிக்கை;வெகுஜனத்தை கிறித்துவின் பால் ஈர்ப்பதில் அவர்கள் அடைந்த வெற்றியை யாரும் குறைகூறமுடியாது;அல்லது போலியான அவர்களுக்கு நிகராக செயல்படாத குற்றவாளி நீங்கள்தான்;பேதுருவின் ஒரே பிரசங்கத்தில் 3000பேர் மீட்கப்பட்டனர்;அதை நீங்களாவது சாதித்தீர்களா?
படித்ததில் பிடித்தது என்ற பகுதியில் எனது சொந்த விருப்பத்தின் பேரில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நற்கிரியை செய்தோரைப் தேவனுக்கு மகிமையாகப் புகழவேண்டும் (http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37909382) என்ற ஒரே எண்ணத்தில் பதிக்கப்பட்ட ஒரு கட்டுரையையும் வேதாகம மாணவக் கூட்டத்தின் தளத்தில் விமர்சித்துள்ளனர்;அதற்கு நான் கொடுத்த பின்னூட்டமாவது...
// 'உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்று உலக பிரகரமான மனிதர்கள் அழகாக எழுதி வைத்திருக்கிறாரே! இந்த ஆறிவு கூட "ஆவி"யை பெற்ற "தேவ மனித"ர்களுக்கு இல்லை என்றால் அவர்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறார்கள் என்பது கேள்வி குறி!! // அன்பான தளத் தலைவருக்கு, தாங்கள் குறிப்பிடுவது சகோதரன் டிஜிஎஸ் அவர்களையெனில் அனைவரும் அறிந்தவண்ணமாக அவர் தனது சொந்த திறமையினால் வங்கிப்பணியில் முன்னேறி ஒரு சிறப்பான பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்;
மேலும் அவரது வருமானம் அவரது குடும்பத்துக்கு போதுமானது என்றெண்ணுகிறேன்; இதற்கு உதாரணமாக அவருக்கு இணையான பதவியில் இருந்தோர் இருப்போருடைய தற்போதய வாழ்க்கை நிலையை ஆராய்ந்து பார்க்கலாமே;
மேலும் அவர் தனது பணித் தளத்திலும் புகழ்பெற்று விளங்கினார்;அதாவது நற்சாட்சியுடன் பணிசெய்தார்;
ஆனால் அவரது மகன் ஊழியம் என்ற பெயரில் செய்பவை முழுவதும் வியாபார நுணுக்கங்களுடன் என்பதில் மாற்று கருத்து இல்லை;காருண்யா கல்லூரி பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை;ஜேப்பியார் போன்ற கல்வித் தந்தையருடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லையென்றெண்ணுகிறேன். "மனிதன் மனிதன் எவந்தான் மனிதன்" என்ற பாடலைக் கேட்டு தெளிவடைய வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)