Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..?
Permalink  
 


Selvaraj said...

ebi said...

//Why do you have Mary in the place of worship for the Lord? what's the need to pray or sing songs in her name? Does the Bible say so? she was an instrument for the God. She was his mother on earth. The Lord we worship is not blood n flesh//

Well, first of all we honor Mary as we do because God does. It was the Father who chose Mary to cooperate with Him in being the channel through which His Son would become man. She held God in her womb and nursed God at her breasts.

Selvaraj said...

chillsam said...
//ஐரோப்பிய பகுதியைச் சேர்ந்த ஓவியர் அவரது கற்பனையில் வரைந்த ஒரு ஒவியத்தை ஆசியர் எப்படி தன் உள்ளத்தில் பதிக்கமுடியும்;இதனாலே வெளிநாட்டு சாமி என்கிறார்கள்//

இயேசு சிலுவையை சுமந்து போகும் போது அவரது ரத்த வேர்வையை வெரோனிக்கா தன் கைகுட்டையால் துடைக்க, அதில் இயேசுவின் முகச்சாயல் பதிந்த்துள்ளது. இது இப்போதும் வத்திகானிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது திருவிவிலியத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் திருவிவிலியம் தொடர்புடைய நிறைய நூல்கள் அதன் பின் சேகரிக்கப்பட்டு அவை வத்திக்கான் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆக இயேசு கிறிஸ்த்துவின் ஓவியம் ஒன்றும் கற்பனையல்ல!



நண்பரே, இயேசுவானவர் மரியின் மைந்தனாகவும் பிதாவின் குமாரனாகவும் இருவித பாத்திரத்தை ஏற்கமுடியாது;மாறாக அன்னை மரியே- கவனிக்க கன்னிமரியல்ல,தன்னை ஆண்டவருக்கு அடிமை என்றாள்; அவளும் ஒரு பாவத்தன்மையுள்ள பெற்றோருக்கு பிறந்தவள் தான்;

எந்த ஒரு தாயும் பிள்ளைக்கு அடிமையாதல் கூடாத காரியமாகும்;மரியாளை மையப்படுத்தி எழுதிப் பாடப்படும் எந்த ஒரு பாடலும் துதியும் தேவ தூஷணமாகும்;அனைத்துக்கு குழப்பத்துக்கும் காரணம் மரியாள் இயேசுவைப் போலவே பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் பொய்யே ஆகும்;மற்றபடி மரித்தவர்களை வணங்குவதும் பூஜிப்பதும் ஆதிவாசி பழக்கமான "பேகனிஸ‌ம்" வகையைச் சேர்ந்ததாகும்;

இரத்தம் தோய்ந்த துணியில் இயேசுவின் உருவம் பதிந்திருந்ததாகச் சொல்லப்படுவது செவிவழி செய்தியாகும்; அப்படியிருந்தால் அதனை தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்;

இன்னும் கனவில் தோன்றிய உருவங்களுக்கு வடிவம் கொடுப்பதும் சிறந்த பக்தி முயற்சியல்ல; இதையே அனைத்து "பேகனிக்" வழிபாட்டாளரும் செய்வதுடன் இந்த பொய்யின் அடிப்படையிலேயே பொது இடங்களை ஆக்கிரமித்து (இந்தியாவில்...) கோவில் கட்டி கொள்ளையடிக்கின்றனர்;

இதைக் குறித்து இன்னும் விவரமாக என்னால் எழுதமுடியும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமையான விளக்கக் குறிப்புகளுடனும் வசனங்களும் தளத்தில் தங்கள் கருத்தினைப் பதிவுசெய்த எபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Anonymous

Date:
Permalink  
 

"(விடுதலைப் பயணம் 25:18-20) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய். ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறு புறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்த்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளை செய்துவை, அக்கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும் , இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையை பார்த்தவாறும் விளங்கட்டும்.


(1 குறிப்பேடு 28:18-19) தூப பீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கை பேழையை மூடும் பொற்கெருபுகளை கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார், தாவீது,"இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்த்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.

(எசேக்கியேல் 41:17-18) வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும், வெளியேயும் கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்த்திருந்தது. ஒவ்வரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன."

reply:
இவ்வளவு  சொன்ன தேவன் தன்  உருவசிலை இப்படி இருக்கும் என்றும் அதனை இப்படி அமைக்க வேண்டும் என்று  சொல்லவில்லையே. இவ்வளவு சொன்னவர் அதை ஏன் சொல்லவில்லை. அவர் சொல்லாத ஒன்றை செய்து ஏன் நியாயப்படுத்த வேண்டும்? 

நாம் வேதத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர நமக்கு ஏற்றபடி வேதத்தையோ அதன் கருத்துக்களையோ மாற்றக்கூடாது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒரு கத்தோலிக்க வலைப்பூவில் நான் அளித்த பின்னூட்டமும் அதன் தொடர் விவாதமும் இங்கே ஒரு கட்டுரையாகிறது;வாசகர் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்;

http://www.tamilcatholican.com/2010/07/blog-post_17.html


// உருவமாக இருந்து உயிர் பிரிந்தால் அந்த உயிருக்கு ஏது பெயர்? உருவத்திற்கு வைக்கின்ற பெயரை ஆவியான பிறகும் அழைக்கின்றார்கள் என்றால்.... மறைமுகமாக உருவத்தை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்றுதானே அர்த்தம். ஜீசஸ் என்றோ.... ஆண்டவரே என்றோ... அவர்கள் அழைக்கும் போது அவர்களின் மனதில் ஏதோ ஒரு உருவம் மனக்கண்ணில் தோன்றாமல் போகுமா? எந்த மதத்தவராக இருந்தாலும் ஜேசுவின் உருவத்தை அறிந்த்திராதவர் உலகில் யாருமில்லை என்று சொல்லலாம்.... ஆவியாக இருக்கின்ற ஜேசுவே...என்று ஜெபித்தால் கூட அவர்கள் மனதில் ஒரு உருவமாக நிலைத்து நின்று மனக்கண்ணில் தெரியும் உருவம் ஜேசுவின் உருவமாகத்தான் இருக்கும்..... தங்களை தாங்களே ஏமாற்றுவதை விட..... ஜீசசை உருவமாக வணங்குவது சிறந்தது என நான் நினைக்கின்றன்.  //

// நாம் உருவ வழிபாட்டிலிருந்து மெய்த் தேவனைத் தொழும் முறைக்கு வந்துள்ளோம்; எமது பாரம்பரிய நம்பிக்கையின் படி நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்;பிறகு ஏன் எங்களை மதம் மாறச் சொல்லுகிறீர்கள்? //

//நண்பரே, நான் இங்கு யாரையும் மதம்மாற சொல்லவில்லை. பொதுவாக எங்கள் முன் வைக்கப்படும் கேள்விக்கான பதிலை திருவிவிலிய வசனத்தினை மேற்கோள் காட்டியே சொல்லியுள்ளேன். அது உங்களின் கருத்துப்படி கூறு போடுதலாக இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்//

நண்பரே நான் என்ன செய்யமுடியும் என்பது பொறுப்பான பதிலா என்பது எனக்குத் தெரியவில்லை; தங்கள் கட்டுரையில் நீங்கள் பெரியதாக பதித்திருக்கும் தேவ மனிதனான மோசே இதுபோன்று தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததாகத் தெரியவில்லை;

நீங்கள் மதம் மாறச் சொல்லவில்லை என்பது சரியே;ஆனாலும் உருவ வழிபாடு சரியெனில் அது மேரியாக இருந்தால் என்ன,மாரியாக இருந்தால் என்ன‌..? முருகனாக இருந்தால் என்ன இயேசுவாக இருந்தால் என்ன‌..?

ஐரோப்பிய பகுதியைச் சேர்ந்த ஓவியர் அவரது கற்பனையில் வரைந்த ஒரு ஒவியத்தை ஆசியர் எப்படி தன் உள்ளத்தில் பதிக்கமுடியும்;இதனாலே வெளிநாட்டு சாமி என்கிறார்கள்;

நாம் இந்திய பாரம்பரியத்தில் இயேசுவை வரைந்தால் அந்த இயேசு முருகனைப் போல இருக்கமாட்டாரா..?

நம்முடைய இந்திய மேரியின் உருவம் புடவை கட்டி நிறைய நகைகளைப் பூட்டி மொத்தத்தில் மாரியம்மாவைப் போலிருக்கும்;

தடையென்ன‌...யோசியுங்கள்...

DSCF6860.JPG
உங்களிடம் உருவ வழிபாடு சம்பந்தமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவும் நீதியுடனும் சொல்லக்கூடிய நல்ல பதில்கள் உண்டு;அது உங்களது ரோம கட்டுப்பாட்டு கொள்கையின் அடிப்படையிலிருந்தால் நல்லது;உங்களுக்கு கௌன்ஸில் உண்டு;அங்கே பல காரியங்களை அனுசரித்து அவ்வப்போது மார்க்கரீதியான பல முடிவுகள் எடுக்கப்படுகிறது; அதில் சில கொள்கைகள் சீட்டுப் போட்டும் எடுக்கப்படுகிறது;

இதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றிலும் எதிரான வேதப் புத்தகத்தை உங்கள் தாறுமாறுகளுக்கெல்லாம் துணைக்கு அழைத்தால் எப்படி சரியாகும்?


உதாரணத்துக்கு
இன்னும் சுதந்தர தேசத்தை அடையாத இஸ்ரவேல் மக்கள் இன்னும் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளிலும் பழக்கவழக்கங்களிலும் ஊறிப் போய் மெய்த் தேவனைக் குறித்த நன்னம்பிக்கையினையடையாமலும் தூய்மையான வாழ்க்கையினை மேற்கோள்ளாமலும் இறைவனைக் கோபப்படுத்தும்போது அவரால் வாதிக்கப்படுகின்றனர்;

அதற்குத் தீர்வாக இறைவன் தாமும் ஒரு சொரூபத்தை நிறுவச் செய்கிறார்;அது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே;ஆனால் அந்த காலக் கட்டம் முடிந்து இறைவன் மனு உரு எடுத்து வந்த பிறகு இந்த உருவ வழிபாடு மூற்றிலும் ஒழிக்கப்பட்டது;

வேதத்தில் மீண்டும் மீண்டும் இறைவனின் வார்த்தையும் அவரது தூய ஆவியும் வலியுறுத்தப்படுகிறதே தவிர அவருடைய உருவமாக எதையும் புனிதர்கள் அணியவோ வழிபடவோ இல்லை;இது ஒரு வேதத்தின்படியான நேரடியான கருத்தாகும்;

அதன்பிறகு அரசியல் ரீதியான பல்வேறு காரணங்களால் மார்க்கம் சிதைந்துபோய் பல்வேறுபட்ட மாற்று மார்க்கத்தவரின் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது;

கிறித்தவத்துக்கு சிறிதும் சம்பந்தமில்லாத கத்தோலிக்கம் எனும் மார்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு அதுவே அரசாங்கத்தின் - தேசத்தின் அதிகாரப்பூர்வமான மதமானது; ஒரு இறைமார்க்கம் மதமாக
த் திரிந்தது;கத்தோலிக்கத்தை ஏற்காதவர் கொலை செய்யப்பட்டனர்;இதுவே உங்கள் சபையின் கடந்த 1700 வருட வரலாறு;

நீங்கள்,
அதாவது கத்தோலிக்கத்தைத் தோற்றுவித்த ரோம சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள், சரியாக மார்க்கத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால்  இஸ்லாம் என்ற மார்க்கமே தோன்றியிருக்காது; முகமதுவை வளர்த்துவிட்டதே கத்தோலிக்கக் கொள்கைகளும் முறைகேடுகளுமே;

ஒருவேளை சபைக் கட்டுப்பாட்டினால் கடந்த நூற்றாண்டு வரையிலும் உங்களைப் போன்றோர் பரிசுத்த வேதாகமம் என்று வழங்கப்படும் திருவிவிலியத்தை வாசிக்காமலிருந்திருக்கலாம்;ஆனால் இன்றோ அதில் எதுவுமே மறைபொருளல்ல;எல்லாம் வெளிப்படையாகிவிட்டது; இறைவனின் வருகையும் சமீபமாகிவிட்டது;

இந்நிலையில் இன்னும் உங்களைப் போன்றோர் உருவ வழிபாட்டையும் மாதா வணக்கத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் உங்கள் ஆன்மாவின் ஈடேற்றத்துக்கான அனைத்து முயற்சிகளும் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறேன்;

அனைத்துக்கும் தொகுப்பான கட்டளையான உபாகமம் எனும் புத்தகத்தின் 4-ம் அதிகாரத்தில் பின்வருமாறு இறைவன் எச்சரிக்கிறார்;

Image1-14.jpg

10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.

11 நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.

13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

14 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,

17 பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,

18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,

19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

20 இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.

21 கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.

22 அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.

23 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிகையாயிருங்கள்.

24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

25 நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,

26 நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

27 கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.

28 அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள்.

29 அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.

DSC05041.jpg

இத்தனைத் தெளிவாக வேதம் சொன்னபிறகும் துணிகரமாக உருவ வழிபாட்டை நியாயப்படுத்தி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் அது இறைக் கொள்கைகளுக்கு எதிரான யுத்தமாக இருக்கும்;

இங்கே ஆதியிலே ரூபத்தின் மூலம் பேசாத காரணத்தினாலும் வார்த்தையின்மூலமும் அதிசெயல்கள் மூலமும் வெளிப்பட்ட காரணத்தினாலும் உருவ வழிபாட்டினைத் தடைசெய்த இறைவன் அதை மீறினால் சந்திக்கக்கூடிய விளைவுகளையும் குறிப்பிடுகிறார்;

அதை மீறியவர்கள் சந்தித்த அனுபவங்களையே நீங்களும் நியாயப்படுத்தி அதனடிப்படையில் உருவ வழிபாடு தவறல்ல என்கிறீர்கள்;
அது இயேசுவுடன் நின்றாலும் சமாளித்துவிடுவோம்;அந்த கருத்தை எளிதில் மாற்றிவிடலாம்;ஆனால் நீங்கள் மாதாவுக்கும் உருவம் கற்பித்து அதனைத் துணிகரமாக வழிபட ஜனங்களைத் தூண்டுவதுதான் வேதத்துக்கு எதிரானது; வேதத்தில் எந்த பெண் தெய்வமோ ஏன் ஆண் தெய்வமோ கூட போதிக்கப்படவில்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard