ஏனோ பெரியவர் நம்மை இப்படி வைத்திருக்கிறார் ' என்று ஒரு காரியத்துக்காக எனது மனைவியிடம் சலித்துக் கொண்டேன்;அப்போது தோன்றிய ஒரு கருத்து;
"பெரியவர்" என்பது பொதுவானதொரு சொல்; ஆனால் அதில் யாரைக் குறித்து நான் சொல்கிறேன்? ஆண்டவரைக் குறித்து;
அப்படியானால் நம்ம ஊரில் இருக்கும் ஒரு பெரியவரையும் இப்படியே குறிப்பிடுகிறேன்;இரண்டும் ஒன்றா? அல்ல;
ஏனெனில் இங்கே சொல்லைவிட உணர்வே பிரதான பங்கு வகிக்கிறது; நம்முடைய ஆண்டவரும் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே அவையெல்லாம் அறிந்தவரானதால் பிரச்சினையில்லை..!
"என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." (சங்கீதம்.139:4 )
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமையானதொரு கருத்தை பின்னூட்டமிட்ட நண்பர் சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல;இன்னும் வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன;உங்களுக்குத் தெரிந்த அல்லது தோன்றும் ஒரு கருத்தானது உங்களுடன் முடங்கி முடிந்துபோக விடவேண்டாம்;
அதாவது குறிப்பான விவரங்களையும் மொழிபெயர்ப்பின்போது சந்திக்கக்கூடிய நடைமுறை சிக்கல்களையும் அதனை மேற்கொள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கடைபிடித்த வழிமுறைகளையும் உதாரணங்களுடன் பதித்தால் நமது தமிழ் வேதாகமத்தின் மீதான காதல் பெருகுமல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வாஸ்த்தவமான கருத்தை பதிவிட்டுள்ளீர்கள் மிக்க நன்றி.
என்னை பொறுத்தவரை வேதாகமத்தை எபிரேயத்தில் எழுத கிருபை தந்த ஆவியானவர் அதே கிருபையை தமிழில் மொழி பெயர்க்கும்போது தரமாட்டார் என்று எண்ணுவது தேவனின் மகத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது ஆகும்
எரேமியா 23:23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எல்லோருக்கும் அவரே தேவன்! எனவே அவரின் வழி நடத்துதல் நிச்சயம் மொழிபெயர்ப்பில் இருந்திருக்கும் என்றே கருதுகிறேன்.
தேவனை பற்றிய தவறுதலான புரிதலில் இருப்பவர்களுக்கு மொழிபெயர்ப்பை குறை சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது. இவ்வாறு குறை கூறிக் கொண்டே போனால் எபிரேயத்தில் மட்டும் என்ன, தேவனா எழுதி கொடுத்தார்? அதுவும் ஒரு மனிதனால் சொல்லி எழுதபட்டதுதான், அதில் மட்டும் பிழை இல்லை என்று எவ்வாறு சொல்லமுடியும் என்ற கருத்து உருவாகும்
எனவே தேவன் தன்னை தேடுபவர்களுக்கு சரியான ஒரு செய்தியையே கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கையிலும் ஒருவேளை மொழிபெயர்ப்பில் உண்மைபொருள் வரவில்லை என்றாலும் தேவனிடம்
நெருங்கிய தொடர்பு இருக்குமாயின் உண்மையை அவர் மூலம் உணர்ந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் வேதத்தை ஆராய்வதே நல்லது.
இந்த திரியானது "காயீனின் அடையாளம்" கட்டுரைக்கான பின்னூட்டங்களின் பாதிப்பில் துவங்குகிறது; இன்றைய நவீன யுகத்தில் தன்னை வேதப்பண்டிதராகக் காட்டிக்கொள்ள எண்ணும் ஊழியர்கள் முதலில் குற்றஞ்சாட்டுவது மொழிபெயர்ப்பாளர்களையே;
"கட்டின வீட்டுக்கு குத்தம் சொல்வதா" என்பர்,சொல்வழக்கில்; அதுபோன்றதே சிலர் தமிழ் வேதாகமத்தைக் குறைசொல்வதும்; இந்த விஷயத்தில் இஸ்லாமியருக்கும் நமக்கு பெரிதாக என்ன வித்தியாசமிருந்துவிடமுடியும்..?
ஒரு காரியத்தைச் செய்வதற்கும் சரியாகச் செய்வதற்கும் வித்தியாசமுண்டு; எந்த ஒரு காரியத்தையும் குறைசொல்லுவது எளிது;ஆனால் ஆரம்பிப்பது கடினம்;
இதிலுள்ள ஆபத்து என்னவென்றால் வேதத்தின் எந்த பகுதியையுமே சந்தேகத்துடனே படிக்கும் ஆபத்தில் விட்டுவிடும்;ஏற்கனவே வேதத்தை வாசிக்கும் பழக்கும் அருகி வரும் நிலையில் நமது தமிழ் வேதாகமத்தைக் குறைகூறும் முயற்சிகளைத் தவிர்த்து நாகரீகமான முறையில் அதனை விளக்க முயற்சிக்கவேண்டும்;
எனவே பொத்தாம்பொதுவில் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று குற்றஞ்சாட்டாமல் தியாகமான அர்ப்பணத்துடன் - கிடைத்தற்கரிய பொக்கிஷமான வேதப்புத்தகத்தைத் தமிழில் தந்தோருக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதுடனே எந்த ஆராய்ச்சியையும் தொடரவேண்டும்; அன்றைக்கு இருந்த குறைந்த வசதி வாய்ப்புகளில் நிறைந்த பணியினை ஆற்றியுள்ள வேத வல்லுனர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும்;
இன்னும் சொல்லப்போனால் பெந்தெகொஸ்தே,ஆவி அது இது என வேகமாகப் பேசுவோர் ஆண்டவருக்காகவும் தமிழுக்காகவும் வேதாகமத்துக்காகவும் எதையும் செய்தது போலத் தெரியவில்லை;இதில் உழைத்தோரும் உழைப்போரும் ஆவியில்லாத -செத்த சபையார் என்று சொல்லப்படும் ஸ்தாபனங்களைச் சார்ந்தோரே; இது ஆத்தும ஆதாயப்பணிகளுக்கும் பொருந்தும்;
இது என்னுடைய தாழ்மையான கருத்து..!
மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்து பிழைகளை நான் உணர்ந்தாலும் அதனைக் கடந்து சத்தியத்தையறியும் அல்லது விளக்கும் பணியில் நான் மேற்கொள்ளும் வழிமுறை வித்தியாசமானது; அதாவது எபிரேய மொழியில் இதன் பொருள் இப்படி வரும் என்றோ அல்லது எபிரேய மொழியானது மொழிபெயர்க்க மிகவும் சிக்கலானது என்றோ சொல்வேனே தவிர நமது மொழிபெயர்ப்பாளர்களை நான் குறைசொல்வதில்லை; இதில் என்ன பெரிய வித்தியாசம்..?
நான் எனது வாசகரை அல்லது விசுவாசியின் கவனத்தை எபிரேய மொழியை நோக்கி திருப்புகிறேன்;அதனை கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறேன்; 'இதுவே போதும்' என்போரைக் குறித்து பிரச்சினையில்லை; ஆனால் நான் எனது தமிழ் வேதாகமத்தை சந்தேகத்துக்குரியதாக்கிவிட்டால் சத்தியத்தைப் போதிப்பது சிரமமாகிவிடும்;
இன்னும் எண்ணற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் போல தமிழுக்கும் வந்தால் பிரச்சினை தீருமா, தெரியவில்லை; ஆனாலும் நாம் தற்போதய பயன்பாட்டில் உள்ள மொழிபெயர்ப்பை அவ்வளவு எளிதில் விட்டு விடமுடியும் என்றும் தோன்றவில்லை;
இதைக் குறித்த விரிவான ஆராய்ச்சி செய்து அல்லது செய்துள்ள தள நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)