நண்பரே, நான் தடுமாறவில்லை;இதுபோன்ற கொள்கையுடன் மேற்கத்திய நாடுகளில் ஒரு குழு பரவியிருப்பதையும் அறிந்தே அதனை ஒரு தகவலாகப் பதித்திருக்கிறேன்; இதன் நோக்கம் வேத வசனத்தை வியாக்கியானம் செய்யும் போது கவனமாக இல்லாவிட்டால் பல குழப்பங்கள் வந்துசேரும்.
மற்றொரு தகவல்: பிரபல கிறித்தவ தொலைக்காட்சியான ஏஞ்சல் டிவியில் இப்படியே ஒரு நாள் காலையில் சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் சொன்னது,மூலபாஷையின் அர்த்தப்படி நோவாவின் நிர்வாணம் என்பது அக்காலத்தில் அப்பகுதியில் நிலவிய அருவருப்பான சோதோமின் பாவத்தை காம் எனும் மகன் தன் தந்தைக்கு செய்ததாகவும் அதனாலேயே சபிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்களே இதற்கு சாட்சி;இதுவும் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் போதனையே; இதற்கு என்ன சொல்லுவீர்கள்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// பெண் கிடைத்தது என்ற கேள்விக்கு அவர்கள் ஏவாளை அதாவது அவனது தாயாரையே கைகாட்டுகின்றனர்; இதற்கு ஆதாரமாக ஆதியாகம்.4:1 ல் வரும் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்; பிறகு ஏவாள் மனந்திருந்தி மீண்டும் ஆதாமுடன் இணைந்து சேத் பிறந்தானாம்..! //
இதற்கான பதில் இலகுவானது. வேதத்திலே அழகாக வசனம் இருக்க நீங்கள் ஏன் தடுமாறுனீர்கள் என புரியவில்லை. 3 பேர்களின் பெயரே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆதாம் ஏவாளுக்கு அநேகம் குழந்தைகள் இருந்தார்கள். வேத ஆதார வசனத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.
காயீக்கு மனைவி அவன் சகோதரிதான். இதனை விளக்கப் பெரிய அறிவு ஒன்றும் வேண்டப்படுவதில்லை. ஏனெனில் முதல் பெற்றோர் அநேக குழந்தைகளை பெற்றனர் என்றே வேதாகமத்தின் போதனையாக உள்ளது.
My Reply@http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=1850&Itemid=287 நண்பரே,காயீன் மீது ஆண்டவர் அடையாளம் போட்டார் என்பதே அறியப்படாத நிலையில் காயீனுக்கு ஆண்டவர் ஒரு அடையாளம் கொடுத்தார் என்பதுவும் சர்ச்சைக்குரியதாகவே அமையும்;அதனையும் ஆசிரியர் கட்டுரையில் அணுகுகிறார்;ஆனாலும் நம்முடைய ஆசிரியர் தீர்வாக எதையும் சொல்லிவிடவில்லை;இதுவே எனக்கு ஏமாற்றம். "போட்டார்" எனில் என்ன போட்டார் என்ற குழப்பமும் "கொடுத்தார்" எனில் என்ன கொடுத்தார் என்ற குழப்பமும் தொடரும்;இன்னுமொரு அதிர்ச்சிகரமான தகவலையும் இங்கே பதிவு செய்கிறேன்;
சில வருடமுன்பு இங்கிலாந்து தேசத்தின் லண்டன் நகரில் வாழும் ஒரு இந்திய நண்பர் என்னை சந்தித்தார்; அவர் ஐயங்கார் பிராமண சமுதாயத்திலிருந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டவர்; திருமுழுக்கு (Baptism) சத்தியத்தில் மிகத் தீவிரமானவர்;எந்த ஒரு புதிய நண்பரை சந்தித்தாலும் நற்செய்தியை ஆரம்பிப்பதே திருமுழுக்கு (Baptism) பெறும் அவசியத்திலிருந்தே துவங்குவார்;
ஆனால் அவர் சத்தியத்தை அடைய காரணமாக இருந்த சபைக்கூட்டத்தார் வித்தியாசமான போதனையாளர்கள்;அதாவது வேதத்தில் சொல்லப்படாத மறைபொருளான சத்தியங்களை ஆவியானவரின் துணையோடு எடுத்துப் போதிக்கிறார்களாம்;அதன்படி காயீனுக்கு எங்கிருந்து பெண் கிடைத்தது என்ற கேள்விக்கு அவர்கள் ஏவாளை அதாவது அவனது தாயாரையே கைகாட்டுகின்றனர்; இதற்கு ஆதாரமாக ஆதியாகம்.4:1 ல் வரும் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்; பிறகு ஏவாள் மனந்திருந்தி மீண்டும் ஆதாமுடன் இணைந்து சேத் பிறந்தானாம்..!