கிறிஸ்துமஸ் / ஈஸ்டர் போன்ற பண்டிகைகளை கொண்டாடுவது தவறு என்பார்கள்.
ஆவியானவரை பற்றி அதிகம் பேசமாட்டார்கள்.
இயேசு தான் பிதா அவர் பூமிக்கு வந்து மனுஷனானார் என்று சொல்வார்கள்.
திரித்துவத்தை இவர்கள் ஏற்பது இல்லை.
தற்கால சபை முழுவதும் சாத்தானின் உபதேசத்தில் நடக்கிறது என்று சொல்வார்கள்.
வேதத்தை அதிகமாக வியாக்கீனம் பண்ணும் இவர்கள் பேச்சில் ஒரு ஆவிக்குரிய நிலை தெரியாது
இவர்கள் ஜெபிபதில் ஒரு உயிர் இருக்காது.
இறைவன் தளத்தின் சுந்தர் துருபதேசத்துக்கு எதிராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக நாம் எந்த துருபதேசத்துக்கெதிராகப் போராடி வருகிறோமோ அதையெல்லாம் குறைகூறிய இவர் தற்போது நேசன் என்ற பெயரில் புரட்சிகரமான கருத்துக்களை எழுதி வருகிறார்; இதைப் படித்ததிலிருந்து ஜுரம் வருவது போலிருக்கிறது.
இதில் யாரையும் குறிப்பிட்டு எழுதாமல் ச்சும்மா மிக்ஸர் கணக்காக கலந்தடிக்கிறார், ஏதோ அவருக்குத் தெரிந்தது,பாவம் போகட்டும் என்று விட்டுவிடலாமென்று பார்த்தால் அவை இங்குமங்குமாக பொறுக்கியெடுத்து ஒழுங்கில்லாமல் எழுதியிருப்பதால் அதற்குரிய விளக்கம் கொடுக்கவேண்டியது நம்முடைய கடமையாகிறது.
முதலாவது இவர் துருபதேசத்துக்கான அறிகுறியாக சொல்லுவது என்ன...
///ஓய்வுநாள் சனிக்கிழமைதான் என்று சொல்வார்கள் ///
அப்படியானால் நீங்கள் இவ்வாறு சொன்னதேயில்லையா ஸார், கொஞ்சமாவது மனசாட்சியுடன் தான் எழுதுகிறீர்களா..? நீங்கள் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் குறித்து எழுதும்போது ஓய்வுநாள் அவசியம் என்று அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்வதை தவிர்ப்பதாக எழுதியதில்லையா..? நீங்கள் எழுதியதை நீங்களே மறுத்து நல்ல பிள்ளைபோல வேஷம் போடலாமா.? அன்றைக்கு இந்த கருத்தை எழுதியதற்காக நான் கண்டித்தபோது என்னை வெறுத்தீர்கள் இன்றைக்கு அதே கருத்து சரியாகத் தோன்றுகிறதா,இன்றைக்கு தான் அது தவறான உபதேசம் என்று புரிகிறதா..?
வாசகரின் கவனத்துக்கு ஓய்வுநாள் ஒருபோதும் மாறவில்லை மாற்றப்படவுமில்லை;சுந்தர் போன்ற கள்ளர்கள் ஓய்வுநாள் சத்தியத்தையும் ஞாயிறன்று சபைகூடிவருதலையும் சேர்த்து குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஓய்வுநாள் எனும் மாம்ச கட்டளை மாற்றப்படவில்லை அது அப்படியே இருக்கிறது;அது யூதருக்குக் கொடுக்கப்பட்டது; இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோருக்கோ ஓய்வு அல்லது இளைப்பாறுதல் இனி வரும் காரியமாக இருக்கிறது என்பதே ஆரோக்கிய உபதேசமாகும்.
//இயேசு தான் பிதா அவர் பூமிக்கு வந்து மனுஷனானார் என்று சொல்வார்கள்.//
இயேசு தான் பிதாவாக வந்தார் என்பது ஏழாம் நாள் காரரின் உபதேசம் அல்ல, வேத மாணாக்கரின் உபதேசமும் அல்ல, யெகோவா சாட்சிகளின் உபதேசமும் அல்ல... அப்படியானால் மேற்கண்ட கருத்தின் மூலம் யாரை தாக்குகிறீர்கள், யாருக்கு கைகுலுக்குகிறீர்கள் என்று புரிகிறதா..?
இயேசுவின் தெய்வத்தன்மையைக் குறித்து எவன் கேள்வி எழுப்பினாலும் அவன் பிசாசு...பொய்யனும் பொய்க்கு பிதாவுமானவனுடைய ஆவியில் இருப்பவன்.
//திரித்துவத்தை இவர்கள் ஏற்பது இல்லை. //
நீர் ஏற்றுக்கொண்டீரா...? சர்வ வல்லவரை கூறுபோட்டு அவர் மூன்று மாத்திரமல்ல, முப்பதேழுக்கும் மேற்பட்ட தன்மையுடையவர் என்று நீர் எழுதவில்லையா..? ஜாக்கிரதை நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள், இதன் பலன் உங்கள் மடியில் வந்துசேரும். இறையியல் கொள்கைகளை ஆராய்ந்து வியாக்கியானங்களை அறிவிக்கும் வயதும் அனுபவமும் ஆயுசும் உங்களுக்கு போதாது. இதன் பலன் ஒவ்வொன்றும் உங்கள் தலையின்மேல் அக்கினியாகக் குவிக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கிறேன்.
///தற்கால சபை முழுவதும் சாத்தானின் உபதேசத்தில் நடக்கிறது என்று சொல்வார்கள். //
பாம்பை அடிக்கணும் ஆனா பாம்பு சாகக்கூடாது என்பது போல இருக்கிறது இந்த கருத்து.முந்திய கருத்தில் வேதமாணாக்கரை தாக்கியத்ற்கு பிராயசித்தம்போல இதோ அவர்களுக்குப் பிடித்த ஒரு பாயிண்டை எழுதியாகிவிட்டது..! ஏன்யா, தீங்குசெய்யும் சாத்தானின் ஆவிகளை இறைவன் புழு, பூச்சி, கொசு ஆகிய துன்புறுத்தும் ஜீவன்களாக மாற்றிவிட்டார் என்றும் இன்னும் சபைகளிலும் சாலையோரங்களிலும் மனித ரூபத்தில் சாத்தானைப் பார்த்ததாக நீங்கள் எழுதியதில்லையா..? நீங்களா சாத்தானைப் பற்றிய கொள்கையை அறிவிப்பது, இதன் பலனை சாத்தானே உங்களுக்குக் கொடுக்கும்படியாக உங்களை அவனிடமே ஒப்படைக்கிறேன்.
//வேதத்தை அதிகமாக வியாக்கீனம் பண்ணும் இவர்கள் பேச்சில் ஒரு ஆவிக்குரிய நிலை தெரியாது//
இந்த அறிகுறியானது உங்களுக்கே பொருத்தமாக இருக்கும்; ஏனெனில் இதுவரை நீங்கள் பலமுறை பல்டியடித்திருக்கிறீர்கள்; அதுவே உங்கள் ஆவிக்குரிய நிலையை படம் பிடித்துகாட்டுகிறது; அடிக்கடி தன் நிலையை மாற்றிக்கொண்டு நிலையில்லாமல் திரியும் நீங்களே மேற்கண்ட கள்ளப்போதகன் என்று நான் சொல்லலாமா..? கேட்டால் எந்த கருத்தையும் ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ளும் தாழ்மையுள்ளவன் என்று ஒரு வேஷம்; ஆனால் ஒரு காரியத்தை சொல்லும்போதோ இதை ஆவியானவர் சொன்னார் என்று ஒரு பொய். அப்படி ஆவியானவரே சொன்னதை பொய்யாக்கி யாரோ சொன்னதைக் கேட்டு மனதை மாற்றிக்கொள்ளுபவனை என்னவென்று சொல்ல..?
சுந்தர் தேவையில்லாமல் எதற்கு உன்னை பெரிய ஆளாக்க வேண்டுமென்றே உன்னைக் குறித்து எழுதுவதில்லையே தவிர நீ எழுதுவதெல்லாம் சரி என்பதால் அல்ல; நீ பைபிளின் முதல் அதிகாரம் வேறு, இரண்டாம் அதிகாரம் வேறு என்று சொல்லி படைப்பில் இருவேறு நிலைகள் என்று எழுதியதற்கே உன்னை கவனித்திருக்க வேண்டும். இனியும் நீ எல்லை மீறிச்சென்று இதுபோல எதையாவது உளறினால் உனக்கு என்ன நேரும் என்பதை நான் சொல்லுவேன், நீ ஓவென்று அழுது ஒப்பாரி வைப்பாய்...ஜாக்கிரதை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Feb 9, 2010இயேசுவும் பிதாவும் ஒருவரா? நண்பர் சுந்தர் அவர்களுடைய விளக்கம் மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இருக்கிறது; இதைவிட எளிதாகவும் வைராக்கியத்துடனும் யாரும் இயேசுவை தொழத்தக்க தேவனாக நிறுத்த முடியாது;
ஆம்,பிரச்சினை அது தானே? இயேசு பாவங்களை மன்னிக்கிறார், இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தருவதோடு சுகவாழ்வையும் தருகிறார் எனில் அவர் நிச்சயமாக ஒரு சாதாரண தூதனாகவோ மனிதனாகவோ இருந்து இவற்றைச் செய்யமுடியாது;
படைப்பிலோ மூன்றே பிரதான தன்மைகளே உண்டு; தேவன்,தூதர்கள்,மனிதன்; இதில் இயேசுவை யாரென்று சொல்வோம்?
இயேசுவே தேவன், அவரே யூதருக்கு யாவே தேவனாக வெளிப்பட்டார்;
இதுவே வேத சத்தியம்; ஏனெனில் வேதம் உரைக்கப்பட்டதிலிருந்து அதை வாசித்தவர்களே மாறுபடுகிறார்களே தவிர வேதம் மாறவே இல்லை; அதைக் குறித்து கடுமையாக விமர்சித்த யாராலும் ஆதிவேதத்தை மாற்றவும் முடியவில்லை;
கோழியிலிருந்து முட்டை வந்ததா,முட்டையிலிருந்து கோழி வந்ததா, என்பார்களே அதைப் போல இது எவராலும் வார்த்தையினால் எளிதில் விளக்கமுடியாத தேவ ரகசியம்; ஆனாலும் ஒரு அதிசயம் என்னவென்றால் இதனை ஆவியில் உணர்ந்துக்கொள்வது மிக எளிதாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் இந்த வெளிப்பாடுகளை எழுதுவதற்கு ஒரு அடிப்படை காரணம் உண்டு. நான் எழுதும் காரியம் தனித்தனியாக இருந்தாலும் அதை எல்லாமே ஒருங்கிணைக்கும் ஒரு பரமசெய்தியுண்டு அதைப்பற்றி முழுமையான விளக்கம் கொடுக்கும்முன் சகோ. சில்சாம் "குயோய் முறையோ" என்று புலம்புவதால் இந்ததிரி இனி வளராது!
யோவான் 3:12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, எத்தனை வசன ஆதாரம் தந்தாலும் நம்பமாட்டீர்கள் தராவிட்டாலும் நம்பமாட்டீர்கள். மாறாக பைபிளுக்கு வெளியேயா அல்லது உள்ளேயே என்று கேள்விகளை மட்டும் கேட்பீர்கள். ஏனெனில் உங்கள் கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு மேலேவர உங்களால் முடியாது. அத்தோடு உங்கள் இருதயம் அடைபட்டு போய்விட்டது.
யோவான் 16:12இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
என்று சொன்ன இயேசு அந்த தாங்கமாட்டாத காரியங்களை தனது சீடர்களுக்கு சொல்லவில்லை. ஆம்! பரம காரியங்கள் என்பது தாங்கமுடியாத காரியங்களே அதை நினைத்தாலே நடுங்குகிறேன் அதை அறிந்த நான் தாங்கமுடியாமல் தவிப்பதால் அதை பிறருக்கு சொல்லிவிடலாம் என்று எண்ணுகிறேன் ஆகினும் இங்கு அதை ஏற்றுக்கும் பக்குவம் வெளிப்பாடு யாருக்கும் இல்லை.
நான் இனி இதுபோல் குழப்பம் தரும் செய்திகளை எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன், ஆகினும் ஆண்டவர், வெளிப்படுத்தப்படாத ரகசியம் எதுவும் இல்லை
ஆபகூக் 2:2 நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
என்று எனக்கு திட்டமாக கட்டளை இடுவதால், அதை தனியாக ஒரு இடத்தில் எழுதி "ப்ளாக்கரில்" பதிவிட்டுவிடலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தபலியின் மேன்மையும் சாத்தானின் சாவு மணியும் அங்குதான் இருக்கிறது.. பிதாவின் சித்தமாகிய அக்காரியங்கள் நிறைவேறாவிட்டால் "ஐயோ" அதை நினைக்கவே எனது உடல் நடுங்குகிறது.
அனைத்தும் பிதாவின் சித்தப்படி சரியாக நடக்கவேண்டும். அதற்காகவே இயேசு மத்தேயு 6:10உம்முடையசித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. என்று பிதாவை நோக்கி ஜெபிக்க சொல்லியிருக்கிறார். எல்லோரும் அந்த ஜெபத்தை ஒருநாளில் ஒரு முறையாவது ஏறெடுங்கள்
நன்றி!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எச்சரிக்கை: என் பிதா வேறு..உங்கள் பிதா வேறு.. என் தேவன் வேறு.. உங்கள் தேவன் வேறு..!
// இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு வசன ஆதாரம் கொடுக்கப்படும்; ஏற்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்...சரியான வெளிப்பாடு இல்லாதவர்களுக்கு இதை புரிவது கடினம் //
இப்படியாகத் துவங்கி பிதாவாகிய தேவனுக்குள் பிரிவினை உருவாக்கி பேசமுடிந்த பிதாவாகவும் பேசமுடியாத பிதாவாகவும் புதிய கொள்கை நிறுவப்படுகிறது;
அதாவது சோதிகளின் பிதா என்பவர் இயேசுவிடம் மட்டுமே பேசுவாராம்; பிதாவாகிய தேவன் என்பவரோ தனி ராஜ்யமுடையவராக விளங்குவதுடன் அந்த ராஜ்யத்தை இயேசுவின் வழியாக நமக்குத் தருவாராம்;அதுவுமில்லாமல் இயேசுவும் தனியாக ஒரு ராஜ்யத்தை நமக்காக உருவாக்கிக்கொண்டு இருப்பது தனிகதை..!
// யோவான் 20:17 நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
இதில் என் பிதா என்று இயேசு குறிப்பிட்டது பிதாவாகிய தேவனை இதில் என் தேவன் என்று இயேசு குறிப்பிட்டது சோதிகளின் பிதாவை
உங்கள் பிதா என்று இயேசு குறிப்பிட்டது சோதிகளின் பிதாவை உங்கள் தேவன் என்று இயேசு குறிப்பிட்டது பிதாவாகிய தேவனை //
ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாதென்று இதுபோன்று புதிய கொள்கைகளை நிறுவுவதால் யாருக்கென்ன இலாபம்..?
சர்வ வல்லவரான ஆபிரகாமின் தேவனை இப்படி பிரித்து கூறுபோட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணும் துணிகரத்தைத் தரும் தமிழ் வேதாகமத்துக்காக வருந்துகிறேன்;
'தோரா 'எனும் எபிரேய வேதாகமாகவோ, இலத்தின் மொழியில் சிறைப்பட்டிருந்த கத்தோலிக்க வேதமாகவோ இருந்தவரையிலும் இதுபோன்ற புரட்டுகளை யாரும் செய்திடும் துணிவு இருந்ததில்லை;
இந்த இக்கட்டான நிலையில் 'குரானை' நினைத்து பெருமைப்படவேண்டியதாகிறது;இருப்பதிலேயே குழப்பமான - தெளிவில்லாத - முன்னுக்குப் பின் முரணான அந்த புத்தகம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாகவும் -மிக எளிமையாகவும் உலகமனைத்தையும் தம்மிடம் சேர்த்துக்கொள்ளவும் தரப்பட்ட பரிசுத்த வேதாகமம் இத்தனை சர்ச்சைக்குரியதாகவும் இருப்பதைக் கண்டு அச்சமாக இருக்கிறது;
'யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்' என்பதைப் போல அவனவன் கண்டதையும் பிதற்றிவிட்டு இது ஆவி குட்துச்சி என்று கதைவிட்டு "சீல்" அடிப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது..!
ஐயா (ஆ...)சாமிங்களே,வேண்டாம் நிறுத்திடுங்கோ...பரிசுத்த வேதாகமத்துக்கு மேலாகவும் இன்னும் வெளிப்பாடுகள் தொடருகிறது;ஆண்டவரைப் புரிந்துக்கொள்ள பைபிள் மட்டுமே போதாதென்று நீங்கள் நினைத்தால் இராமாயணம்,மகாபாரதம் என்று ஓடுங்கள்;பைபிளைப் பிரித்துப்போட்டு மேய வேண்டாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)