இரண்டாவது இடைபட்ட கடமை - ஒருவருக்கொருவர் புத்திசொலலுதல்:
ஆண்டவரால் மீட்கபட்ட ஒவ்வொருவரும் தொடர்ந்து இப்பாவ உலகில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அத்தோடு நாம் அனேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜய்த்தில் பிரவேசிக்கவேண்டிய நிலையில் இருப்பதால் ஒருவருக்கொருவர் புத்திசொல்லி திடப்படுத்தி தேவனின் வார்த்தைகளில் நிலைநிர்ப்பது மிக அவசியமாகிறது.
அப்போஸ்தலர் 14:22சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்
இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகிய ஒவ்வொருவரையும் பின் தொடர்ந்து, சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவனை கவிழ்த்து போட சிங்கம்போல திறந்தவாயோடு எவனை விழுங்கலாம் என்று சத்துரு திக்கெட்டும் அலைவதால், அடுத்தவர்களுக்கு புத்திசொல்வதில் மட்டும் குறியாக இருக்காமல் சகசகோதரர்கள் சொல்லும் வார்த்தையையும் ஆண்டவரின் துணையுடன் அலசி ஆராய்து ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சோதித்தறிவது அவசியம்.
என்ற வார்த்தைகளின்படி ஒருவருக்கொருவர் புத்திசொல்லும் காரியத்தைத்தான் நாம் இந்த தளத்தின் மூலம் செய்துவருகிறோம். இதன்மூலம் அநேகர் பயன்பெற இதற்காக ஜெபித்துகொள்ளுங்கள்.
வனாந்திரத்தில் ஆடுகள் கூட்டமாக போகும்போது சிறிது தூரம் தள்ளி ஓநாயும் அதன் பின்னேயே கால்கடுக்க போய்கொண்டே இருக்கும். எங்காவது வழிதப்பி மேய்ப்பனின் கையை விட்டு ஒரு ஆடு வருமாகின், அதை பிடிப்பதற்காகவே அது காத்திருக்கும். அதுபோல், ஒவ்வொரு தேவ பிள்ளைகளைகளுக்கும் இரண்டுதேவதூதர்கள் தொடர்ந்து பாதுகாவலாக வந்தாலும், அவர்களுக்கு சற்றுபின்னால் சாத்தானும் தனது தூதர்களை அனுப்பி அவர்களை கண்காணிக்க தவறுவதில்லை ஆண்டவரின் கரத்துக்குள் வந்த ஒருவரை சாத்தானால் அவ்வளவு சீக்கிரம் பிடுங்கமுடியாது
யோவான் 10:28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வது மில்லை.
என்றாலும், அவர்களுக்கு முன் இடரலை வைத்து தண்டனையை பெற்றுதந்து சோர்வை ஏற்ப்படுத்துவதில் அவனுக்கு ஒரு அலாதி பிரியம். எனவே நாம் ஒருவருக்கொருவர் புத்திசொல்லி விழித்திருப்பது மிக மிக அவசியமாகிறது.
ஒருவருக்கொருவர் விரோதமாக பேசாமல் ஒருவருக்கொருவர் ஊக்கமாக ஜெபம்பண்ணவேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. எனவே நமக்கு எவரவர் மேல் விரோதம் கோபம் வருகிறதோ அவரவருக்கேல்லாம் இரண்டு வார்த்தையாவது ஜெபம்செய்ய பழகவேண்டும்.
நமது முகத்தில் உள்ள கரியை அடுத்தவரின் உதவியோ அல்லது ஒரு கண்ணாடியின் உதவியோ இல்லாமல் நம்மால் பார்க்க முடியாது. அதுபோல் நமது பிழைகளை நம்மால் சீக்கிரம் உணர முடியாது. இந்நிலையில் "உன் முகத்தில் கரி இருக்கிறது" என்று ஒருவர் சொல்வாராகில் அவர்மேல் கோபபட்டு அதை அசட்டை செய்யாமல் உண்மையில் அப்படி நமது முகத்தில் கரி இருக்கிறதா என்பதை ஆராய்து அதை அகற்றுவதே சிறந்தது.
எனவே அன்பானவர்களே ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி தேற்றுங்கள்:
ஏசாயா 35:3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்
இந்த தேற்றுதல் என்பது எலியாவைபோல மிகப்பெரிய பரிசுத்தவான்களுக்குகூட ஒருசில வேளைகளில் அவசியமாகிறது!
இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக் கொள்ளாதவர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது.
மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
ஆண்டவரின் அன்பை உண்மையாக ருசித்தவர்கள் யாருமே இயேசுவைப்பற்றி பிறருக்கு சொல்லாமல் இருக்கமுடியாது. ஒரு இந்துவோ அல்லது ஒரு இஸ்லாமியரோ ஏன் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரோ கூட ஆண்டவரின் அன்பைப்பற்றி அடுத்தவருக்கு சொல்ல முன்வருவதில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனின் அன்பை அறியவேண்டிய விதத்தில் அறியவில்லை அவர் ஆண்டவரின் அன்பை முழுமையாக ருசிக்கவில்லை. ஆண்டவரின் அன்பின் அகல/ நீள/ஆழத்தை அறிந்தவரால் நிச்சயம் அவரைப்பற்றி பிறருக்கு சொல்லாமல் இருக்கவே முடியாது. நம்மால் அப்படி சொல்லமுடியவில்லை என்ற ஒரு நிலை இருக்குமாயின் நமது மனம்திரும்புதலை மற்றும் விசுவாசத்தை சற்று திரும்பி பார்ப்பது நல்லது.
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
என்று அப்போஸ்தலர்களும் உரைப்பதால். இயேசுவேயன்றி ஒருவருக்கும் இரட்சிப்பு என்பது முடியாத காரியம். இயேசுவை எற்று இரட்சிக்கபடாத்வனின் முடிவு ஆக்கினை தீர்ப்பு என்று வேதம் சொல்வதால்.
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று
ஒவ்வொரு மனிதனையும் ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்புவித்து நித்யஜீவனுக்கு தகுதிபடுத்த சுவிசேஷம் பிரசங்கித்தல் மிகமிக அவசியமாகிறது. இயேசுவை அறியாத ஜனங்களின் இரசிப்புக்காக ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்தலும் இதில் அடங்குகிறது.
அடுத்ததாக பரமதகப்பனை விட்டு பிரிந்து பாவபட்ட ஜென்மமாக வழிதப்பி வாழும் ஒருவரை
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
என்று கூவி அழைக்கும் ஆண்டவரின் காரத்துக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டால் மறுமை வாழ்வில் மட்டுமல்ல இவ்வுலக வாழ்விலும் அவனுடைய அனைத்து காரியங்களையும் ஆண்டவரே போருப்பெற்று இளைப்பாறுதல் தருவார்.
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
என்ற வார்த்தைகளின்படி, தேவனை தேடி அவருடைய கரத்துக்குள் வந்துவிட்டால் இந்த உலகில் நாம் வாழ்வதர்க்கு தேவையான அனைத்துமே கூட நமக்கு நிச்சயம் கொடுக்கப்படும். எனவே ஒரு மனிதனை ஆண்டவரின் கரத்துக்குள் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு விசுவாசியின் முதல் முக்கிய கடமையாக உள்ளது
இதையே பவுல்
I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது