"And Joshua said to the people , “sanctify yourselves, for tomorrow the Lord will do wonders among you" (Joshua 3:5).
But Jeremiah said, "They shall not deliver you. Please, obey the voice of the Lord which I speak to you. So it shall be well with you and your soul shall live" (Jeremiah 38:20).
ஊழியர்களுக்கெதிராக எதுவும் பேசக்கூடாது என்பது ஒரு ஆதார அம்சமாக இருப்பினும் சத்தியத்துக்கு முரணான காரியங்களை ஒருவர் செய்யும்போது அந்த செயல் கண்டிக்கப்படவேண்டும்;இப்படி கண்டும் காணாமல் விடும் போக்கு அநேகரைத் தடுமாறச் செய்யும்;
ஒரு பக்கம் இறைவனுக்கே இணை வைக்கக்கூடாது என்ற இஸ்லாமிய விவாதத்திலும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்;ஆனால் உள்ளுக்குள்ளேயோ படுபயங்கரமான சத்திய விரோதப் போக்கு காணப்படுகிறது;
இணையற்ற போஸ்ட்மேன்,இணையற்ற வாட்டர்மேன் என்றெல்லாம் சமூகத்தில் சேவைப்பணியில் உண்டா?அப்படியிருந்தாலும் அது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போலவே;
இயேசுவானவரே வெளிப்படையாகக் கூறிவிட்ட ஒரு கருத்துக்கு கௌண்ட்டர் பண்ணுவதுபோல ("யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி எழும்பியதில்லை.."மத்தேயு.11:11) அவரவர் நூற்றாண்டு வாரியாக பிரித்துப்போட்டுக்கொள்ள இது என்ன பொறம்போக்கு களமா என்ன? இது தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்துக் கொண்ட சபையல்லவா? (அப்போஸ்தலர்.20:28)
நீ உன்னைத் தீர்க்கதரிசி என்று தாராளமாகச் சொல்லிக்கொள்;அதற்கே பல இலட்சணங்கள் தேவைப்படும் போது "இணையற்ற தீர்க்கதரிசி" என்று எப்படி சொல்லாம்;இது தேவ தூஷணமாகும்;
'ஹைடெக்' வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு சிலர் தங்களைத் தீர்க்கர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிவதனால் உண்மையான தீர்க்கதரிசிகள் வாயடைத்துப் போயுள்ளனர்;ஏனெனில் அவர்களால் சுயமாக ஒன்றும் செய்யத் தெரியாதவர்கள்; ஆண்டவரோ அமைதியாக இருக்கிறார்;
வருங்காரியங்களையும் தேவ கோபத்தையும் தேவ இரகசியங்களையும் வெளிப்படுத்துவதே தீர்க்கர்களின் பணியாகும்;அதுவும் அவர்தம் சுயவிருப்பப்படி அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலமல்ல;
இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்;பால் தினகரன் யாரோ விதைத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்;தான் பிரயாசப்பட்டு பயிரிடாததை அறுக்கும் கூலிக்காரன் தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளமுடியாது;
இதையெல்லாம் கூறுவது நியாயத்தீர்ப்பாகாது;அதுவரை காத்திருக்கவும் முடியாது;இது போன்ற போக்கு உடனே தடுக்கப்படவேண்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியில் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசியான பால் தினகரன் என்று அவரைக் குறித்து புகழுரையுடன் அவருடைய ஜெபத்தின் மூலம் அற்புதம் பெற்றவரின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்;ரொம்ப சந்தோஷம்..!
ஆனால் எனது வருத்தம் என்னவெனில் "இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி "எனும் அவரைக் குறித்த அறிமுகமே;ஏனெனில் அவரையும் இவ்வாறே குறிப்பிட்டனர்;
அவரது தகப்பனாரையே இவர் மிஞ்சிவிட்டார் என்று அர்த்தமா அல்லது கடந்த நூற்றாண்டுக்கு அவரும் இந்த நூற்றாண்டு இவரும் என்று அர்த்தமா..?
"இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி" என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பட்டப்பெயரா?
"இணையற்ற" வார்த்தையின் பொருளும் அதன் ஆழமும் அறிந்தே அவ்வாறு பயன்படுத்துகின்றனரா?
அன்பு சகோதரர் பால் அவர்களின் பின்னாலுள்ள (நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்..) சிலரின் ஆர்வக் கோளாறு காரணமாக சத்தியத்துக்கு பங்கம் வந்துவிடாதிருக்கவேண்டுமே என்று மனம் பதைக்கிறது..!
-- Edited by chillsam on Friday 26th of March 2010 12:37:16 AM
-- Edited by chillsam on Saturday 27th of March 2010 11:37:35 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)