ஒரு வீட்டை கட்டும் பணி அல்லது தோட்டம் அமைத்தல் அல்லது திருமணம் செய்ய நிச்சயித்தல் ஆகிய தொடர்பில் பல உவமைகளை ஆண்டவர் சொல்லிச் சென்றார்;
அதன் படி எஜமானின் தாமதத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆணவத்துடன் நடந்துக் கொள்ளும் வேலைக்காரனுடைய நிலைமை எஜமான் வந்த பிறகே விளங்கும்; "அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்..."(லூக்கா.12:45)
ஆனால்,அவர் வரும்போது அல்லது வரப்போகிறாரே என்ற பதைப்புடன் காரியமாற்றும் ஊழியனே அவருக்குப் பிரியமானவன் என்றும் கூறுகிறார்; அவன் அங்கீகாரத்தையும் கனத்தையும் பெறுவான் என்பதை இந்த பகுதியில் வாசிக்கிறோம்;
"எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்."(லூக்கா.12:37)
இது எஜமான்- ஊழியன் என்ற தொடர்பில் சொல்லப்பட்டதானால் மணவாளன்- மணவாட்டி என்ற ஒப்பீட்டில் நண்பர் சொல்லும் ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு வந்துசேரும்;
பவுல் சொல்லும்போது, "ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்."(பிலிப்பியர்.1:23,24)
"கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."(நாகூம்.1:7)
"எட்டி எட்டி அண்ணாந்து பார்த்து கண்பூத்துப் போனதே" என்று ஒரு பக்தன் பாடிச் சென்றான்;ஆனால் அதே "சாலேமின் ராஜா" பாடலை சற்றும் உணர்வில்லாமல் பாடும் சபையாரும் உண்டு; அவர்களுக்குள்ளும் சுவிசேஷ பாரத்துடன் பணியாட்களை "போ அல்லது அனுப்பு" எனும் கட்டளையின்படி துரத்க் கொண்டிருப்போருமுண்டு;
கிறிஸ்துவின் சபையானது ஒரு பெரிய அரசாங்க அலுவலகத்தைப் போல இருக்கிறது; அங்கே சிலர் பணியைத் துவங்கியிருப்பார்கள்;சிலர் பணியை முடித்துக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள்;சிலரோ எந்த வேலையும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்;அவரவருக்கேற்ற கூலியை தகுதிக்கேற்பப் பெறுவர்;
அப்பத்தைப் பிட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர், சீடர்கள்;இன்னும் ஒரு ஐயாயிரம் பேர் அங்கேயிருந்திருந்தாலும் பசியாறியிருக்கலாமல்லவா?
எலிசாவின் காலத்து விதவைக்கு இன்னும் கொஞ்சம் பாத்திரம் கிடைத்திருந்தாலும் அவையும் கூட எண்ணெயினால் நிரப்பப்பட்டிருக்குமல்லவா?
திடீரென நான் தளத்தில் இதுபோல எழுதாத காலம் வரும்; நண்பர்களெல்லாம் என்னைத் தேடுவர்; எனக்கு நேர்ந்தது என்ன என்பது நான் யாரென்றே அறியாத காரணத்தினால் யாருக்கும் தெரியவராமலே போகலாம்;ஆனாலும் கூட என்னைப் பொருத்தவரையிலும் மேற்கண்ட பவுலின் சாட்சியை பின்வைத்துச் செல்ல விரும்புகிறேன்;
என்னைப் பொருத்தவரை எனது உணர்வுகளை அடக்கி அமரப் பண்ண இரண்டு எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளேன்;ஒன்று,நான் மரித்தால் அவரிடம் செல்வேன்;உயிருடனிருந்தால் அவருடன் செல்வேன்; அதுவரை ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டே இருப்பேன்;எனது பணியை நிறைவாக நிறைவு செய்து நல்ல மரபுகளை உருவாக்கவேண்டும்;
கர்த்தர் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கில்லை; காரணம்,நான் செய்யவேண்டிய பணி இன்னும் நிறைவாகவில்லை;
கர்த்தர் வந்துவிடுவாரோ என்ற பயமும் எனக்கில்லை; ஏனெனில் அவர் என்னுடனே இருக்கிறார்;
இநத உலகத்துக்கு தான் அவர் வரவேண்டும்; எனக்குள் எப்போதோ வந்துவிட்டார்..!
பரலோகம் போகும் அவசரம் எனக்கில்லை; ஏனெனில் அநேகர் இன்னும் நரகத்தையே நம்பவில்லையே..!
இந்த உலகின் துன்பங்கள் ஓய்ந்து அமைதி வரவேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை;ஏனெனில் இன்னும் யாருக்கும் சமாதானத்தின் மேன்மையே தெரிய வரவில்லை..!
தேடிவந்த மேய்ப்பரைத் தள்ளிவிட்ட சந்ததியாருக்கு அவரது மேன்மை தெரிய வந்து அல்லது அறிவிக்கப்பட்டு அனைவரும் இணைந்து "இயேசுவே வாரும்" என்றழைத்தால் ஓடோடி வருவார்;
என்னுடைய பணியானது அவரை அழைப்பதல்ல, அவரை அழைக்கச் செய்வது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?
நம்மை கூர்தீட்டிக்கொள்ளவும் சுயபரிசோதனைக்கும் கூட எல்லை வைத்து (2020) செயல்படுவது நல்லதே;இது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் நன்மையே பயக்கும்..!
சகோ: சில்சாமின் கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது . இன்னும் யாருக்கோ/ யாருக்காகவோ எதிர்ப்பார்ப்புடன் நாட்கள் நகன்றுகொண்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
ஆகினும் ஆண்டவரின் வருகைக்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் வந்தால், இங்கு நாம் ஜெபிக்கும் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடுமே!
வெளி: 20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
அவர் "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார் எனவே அவரை "சீக்கிரம் வாரும் ஆண்டவரே" என்று அழைப்பதும் நமது வேண்டுதலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!
ஏனெனில் ஆண்டவரே சொல்லுகிறார்,"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது."(லூக்கா.17:20)
தேவனுடைய ராஜ்யத்தின் செயலபாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்ட தேவமக்கள் அதனை விரிவுபடுத்தும் கட்டளையினையும் பெற்றுள்ளோம்; அதன்படி திட்டமிட்டு செயலாற்றுகிறோம்; இது எதுவரைக்கும் இருக்கும்? அதையும் ஆண்டவரே சொல்லியிருக்கிறார்,
"பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது."(யோவான்.9:4)
கோபுரம் கட்டுவதைக் குறித்த உவமையிலும் கூட திட்டமிட்ட செயல்பாட்டை வலியுறுத்துகிறார்;
இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?
நம்மை கூர்தீட்டிக்கொள்ளவும் சுயபரிசோதனைக்கும் கூட எல்லை வைத்து (2020) செயல்படுவது நல்லதே;இது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் நன்மையே பயக்கும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)