Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவரின் வருகைக்காக ஜெபம் எங்கே?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஆண்டவரின் வருகைக்காக ஜெபம் எங்கே?
Permalink  
 


ஒரு வீட்டை கட்டும் பணி அல்லது தோட்டம் அமைத்தல் அல்லது திருமணம் செய்ய நிச்சயித்தல் ஆகிய தொடர்பில் பல உவமைகளை ஆண்டவர் சொல்லிச் சென்றார்;

அதன் படி எஜமானின் தாமதத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆணவத்துடன் நடந்துக் கொள்ளும் வேலைக்காரனுடைய நிலைமை எஜமான் வந்த பிறகே விளங்கும்;

"அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்..."(லூக்கா.12:45)

ஆனால்,அவர் வரும்போது அல்லது வரப்போகிறாரே என்ற பதைப்புடன் காரியமாற்றும் ஊழியனே அவருக்குப் பிரியமானவன் என்றும் கூறுகிறார்; அவன் அங்கீகாரத்தையும் கனத்தையும் பெறுவான் என்பதை இந்த பகுதியில் வாசிக்கிறோம்;

"எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக்  காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்."(லூக்கா.12:37)

இது எஜமான்- ஊழியன் என்ற தொடர்பில் சொல்லப்பட்டதானால் மணவாளன்- மணவாட்டி என்ற ஒப்பீட்டில் நண்பர் சொல்லும் ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு வந்துசேரும்;

பவுல் சொல்லும்போது,
"ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்."(பிலிப்பியர்.1:23,24)

"கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."(நாகூம்.1:7)

"எட்டி எட்டி அண்ணாந்து பார்த்து கண்பூத்துப் போனதே" என்று ஒரு பக்தன் பாடிச் சென்றான்;ஆனால் அதே "சாலேமின் ராஜா" பாடலை சற்றும் உணர்வில்லாமல் பாடும் சபையாரும் உண்டு; அவர்களுக்குள்ளும் சுவிசேஷ பாரத்துடன் பணியாட்களை "போ அல்லது அனுப்பு" எனும் கட்டளையின்படி துரத்க் கொண்டிருப்போருமுண்டு;

கிறிஸ்துவின் சபையானது ஒரு பெரிய அரசாங்க அலுவலகத்தைப் போல இருக்கிறது; அங்கே சிலர் பணியைத் துவங்கியிருப்பார்கள்;சிலர் பணியை முடித்துக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள்;சிலரோ எந்த வேலையும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்;அவரவருக்கேற்ற கூலியை தகுதிக்கேற்பப் பெறுவர்;

அப்பத்தைப் பிட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர், சீடர்கள்;இன்னும் ஒரு ஐயாயிரம் பேர் அங்கேயிருந்திருந்தாலும் பசியாறியிருக்கலாமல்லவா?

எலிசாவின் காலத்து விதவைக்கு இன்னும் கொஞ்சம் பாத்திரம் கிடைத்திருந்தாலும் அவையும் கூட எண்ணெயினால் நிரப்பப்பட்டிருக்குமல்லவா?

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்."(2.தீமோத்தேயு.4:7)

திடீரென நான் தளத்தில் இதுபோல எழுதாத காலம் வரும்; நண்பர்களெல்லாம் என்னைத் தேடுவர்; எனக்கு நேர்ந்தது என்ன என்பது நான் யாரென்றே அறியாத காரணத்தினால் யாருக்கும் தெரியவராமலே போகலாம்;ஆனாலும் கூட என்னைப் பொருத்தவரையிலும் மேற்கண்ட பவுலின் சாட்சியை பின்வைத்துச் செல்ல விரும்புகிறேன்;

என்னைப் பொருத்தவரை எனது உணர்வுகளை அடக்கி அமரப் பண்ண இரண்டு எதிர்ப்பார்ப்புகளை வைத்துள்ளேன்;ஒன்று,நான் மரித்தால் அவரிடம் செல்வேன்;உயிருடனிருந்தால் அவருடன் செல்வேன்; அதுவரை ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டே இருப்பேன்;எனது பணியை நிறைவாக நிறைவு செய்து நல்ல மரபுகளை உருவாக்கவேண்டும்;

கர்த்தர் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கில்லை;
காரணம்,நான் செய்யவேண்டிய பணி இன்னும் நிறைவாகவில்லை;

கர்த்தர் வந்துவிடுவாரோ என்ற பயமும் எனக்கில்லை;
ஏனெனில் அவர் என்னுடனே இருக்கிறார்;

இநத உலகத்துக்கு தான் அவர் வரவேண்டும்;
எனக்குள் எப்போதோ வந்துவிட்டார்..!

பரலோகம் போகும் அவசரம் எனக்கில்லை;
ஏனெனில் அநேகர் இன்னும் நரகத்தையே நம்பவில்லையே..!

இந்த உலகின் துன்பங்கள் ஓய்ந்து அமைதி வரவேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை;ஏனெனில் இன்னும் யாருக்கும் சமாதானத்தின் மேன்மையே தெரிய வரவில்லை..!

தாகமே தண்ணீரை சுரக்கச் செய்யும்;
பசியே உழைக்கச் சொல்லும்;
ஏக்கமே உறவை அழைக்கும்;
தவிப்பு உயிரை நிலைக்க வைக்கும்;

தேடிவந்த மேய்ப்பரைத் தள்ளிவிட்ட சந்ததியாருக்கு அவரது மேன்மை தெரிய வந்து அல்லது அறிவிக்கப்பட்டு அனைவரும் இணைந்து "இயேசுவே வாரும்" என்றழைத்தால் ஓடோடி வருவார்;

என்னுடைய பணியானது அவரை அழைப்பதல்ல,
அவரை அழைக்கச் செய்வது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

chillsam wrote:

 

இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிற‌கும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..?
கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?

நம்மை கூர்தீட்டிக்கொள்ளவும் சுயபரிசோதனைக்கும் கூட எல்லை வைத்து (2020) செயல்படுவது நல்லதே;இது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் நன்மையே பயக்கும்..!

 





சகோ: சில்சாமின் கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது . இன்னும் யாருக்கோ/ யாருக்காகவோ எதிர்ப்பார்ப்புடன் நாட்கள் நகன்றுகொண்டிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

ஆகினும் ஆண்டவரின் வருகைக்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் வந்தால், இங்கு நாம் ஜெபிக்கும் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடுமே!

வெளி:
20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.


அவர் "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார் எனவே அவரை "சீக்கிரம் வாரும் ஆண்டவரே" என்று அழைப்பதும் நமது வேண்டுதலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


"உம்முடைய ராஜ்யம் வருவதாக!"
எனும் வேண்டுதலுக்கு இணையானதும் அதன் நிறைவேறுதலையும் போன்றதே கீழ்க்கண்ட வசனம்;
"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."(லூக்கா.11:20)

பேதுருவின் வேண்டுகோளும் ஆயத்தமாக்குதலும் ( "தேவனுடைய நாள் சீக்கிரம் வரும்படி ஆவலோடு காத்திருங்கள்" ) வித்தியாசமானது;அது மையப் பொருளுக்குத் தொடர்புள்ள வாக்கியமல்ல;

கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர் ஆவியின்படி தேவனுடைய ராஜ்யத்திலும் சமுதாயப் பார்வையிலோ சாதாரணமான குடிமக்களாகவும் இருக்கிறோம்;

ஏனெனில் ஆண்டவரே சொல்லுகிறார்,"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது."(லூக்கா.17:20)

தேவனுடைய ராஜ்யத்தின் செயலபாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்ட தேவமக்கள் அதனை விரிவுபடுத்தும் கட்டளையினையும் பெற்றுள்ளோம்; அதன்படி திட்டமிட்டு செயலாற்றுகிறோம்; இது எதுவரைக்கும் இருக்கும்?
அதையும் ஆண்டவரே சொல்லியிருக்கிறார்,

"பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது."(யோவான்.9:4)

கோபுரம் கட்டுவதைக் குறித்த உவமையிலும் கூட திட்டமிட்ட செயல்பாட்டை வலியுறுத்துகிறார்;

இன்னும் எளிமையாகப் புரியவேண்டுமானால்,"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்;அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிற‌கும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்;
யாருக்காகவோ..?
கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?

நம்மை கூர்தீட்டிக்கொள்ளவும் சுயபரிசோதனைக்கும் கூட எல்லை வைத்து (2020) செயல்படுவது நல்லதே;இது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் நன்மையே பயக்கும்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard