அன்பரே, திருச்சபையின் ஆரம்ப காலத்திலும் சிலர் இப்படிப் போதித்தார்கள். இவர்களில் ஆரியஸ் ஆயர் முக்கியமானவர். இது ஆரியுஸ் தப்பறை என்றழைக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறப்பார் என்று பல நூற்றாண்டுகளாக தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டு அந்த இறைவாக்கின்படியே பிறந்தார் (எபி 1:1-2). 'பிதாவாகிய கடவுள் ஒளியாயிருக்கிறார்' (1யோவா 1:5). இயேசு 'நானே ஒளி' என்றார் (யோவா 8:12). கடவுள் வாழ்வும், வழியுமாயிருக்கிறவர். இயேசு 'நானே வாழ்வு, நானே வழி' என்கிறார் (யோவா 14:6). 'நானும் தந்தையாம் கடவுளும் ஒன்றே' என்கிறார் இயேசு (யோவா 10:30). 'என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்' என்கிறார் இயேசு (யோவா 14:9). கடவுளோடு கடவுளாக இருந்து அனைத்தையும் படைத்த வார்த்தை அவரே (யோவா 1:1-18). மனிதனாக பிறக்கவிருக்கும் அவருடைய பெயர்களுள் ஒன்று முடிவில்லா தந்தை (எசா 9:6) என்று உரைக்கப்பட்டது. நானே இருக்கின்றவராக இருக்கின்ற தெய்வம் என தந்தையாம் கடவுள் மோசேயிடம் தன்னை வெளிப்படுத்தியதை போன்று இயேசுவும் தம்மை அதே வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார் (விப 3:14, யோவா 8:21). ஆண்டவரும் ஒருவர்தான். அவரே இயேசு கிறிஸ்து என்கிறார் பவுல் (1கொரி 8:6). அவரோ தெய்வீக ஞானத்திலே கடவுளாக தந்தைக்கு இணையாக இருந்தார், இருக்கிறார் (பிலிப் 2:6,7). அவரே கண்ணுக்குப் புலப்படாத கடவுளது சாயல் (கொலோ 1:15). கடவுளின் பெயருக்கு செலுத்தப்படுகிற அதே மகிமை இயேசுவின் பெயருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதே தந்தையின் கட்டளை (பிலிப் 2:10,11).
எனவே, இயேசு வெறும் மனிதனே, கடவுள் அல்ல என்று போதிப்பது மிகவும் அபத்தமான தவறான போதனை. அன்பரே, யெகோவா காட்சிகள் என்று கூறிக்கொண்டு வருபவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே சிறந்தது.
http://mightycollection.com/Seeyon_Kural/0905/tn_QA.php