இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஆங்கிலேய பிரபுக்களை காந்திஜி சந்திக்க நேர்ந்தது;கோட்டும் சூட்டும் அணிந்த ஆங்கிலேயர்கள் பக்கிரிசாமியைப் போன்ற வேடத்திலிருக்கும் காந்திஜியைப் பார்த்து பரியாசம் செய்து "உங்கள் ஊரில் நாகரீகமான நல்ல கௌரவமான மனிதர்கள் இல்லையா" என்று கேட்டனராம்;
அதற்கு காந்திஜி மென்மையான புன்முறுவலுடன் "இருக்கிறாங்க,ஆனாலும் உங்களை சமாளிக்க நானே போதும் என்று என்னை அனுப்பியிருக்காங்க" என்றதும் ஆணவம் பிடித்த ஆங்கிலேயர் வாயடைத்து தலைகுனிந்தனராம்.
மற்றொரு முறை இதேபோல லண்டன் மாநகரில் சென்று சுதந்தரப் போராட்டத்தை நடத்தினாராம்;அப்போது கோபத்துடன் அங்கு வந்த அதிகாரிகள் "சுதந்தரம் வேண்டுமானால் உங்கள் மண்ணில் நின்று கேளுங்கள்" என்று விரட்ட காந்திஜி அமைதியாக தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து தரையில் கொட்டிவிட்டு அதன் மீது நின்றவாறு, "இந்த எங்கள் தேசத்தின் மண்,இதன் மீது நின்று கேட்கிறோம்,எங்களுக்கு சுதந்தரம் கொடுங்கள்" என்று முழங்கினாராம். >>>I LOVE INDIA>>>
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)