நகரி:திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், வரும் 31ம் தேதி முதல் லட்டுக்கு பதில், பூந்தி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.திருமலை திருப்பதி கோவிலில், லட்டு தயாரிக்கும் சமையல் கூடத்தில், தயாரிக்கப்படும் பூந்திகள், கன்வேயர் பெல்ட் மூலம் கோவிலில் உள்ள லட்டு கவுன்ட்டர்களுக்கு அனுப்பப்படும்.இதை, நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் தேவஸ்தான லட்டு தயாரிக்கும் பணியாளர்கள் செய்து காட்டினர்.
அப்பம், வடை மற்றும் ஜிலேபி தயாரிக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:ஆந்திர முதல்வர் ரோசய்யா, திருமலைக்கு நாளை வருகிறார். அப்போது, லட்டுக்கு பதிலாக பூந்தி வழங்குவது குறித்து பரிசீலனை செய்கிறார். அதன் பின், 31ம் தேதி முதல், பூந்தி தயாரிக்கும் திட்டத்தை மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டி தொடங்கி வைக்கிறார்.இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
இதன் மூலம் ஏழுமலையானை தரிசித்து வரும் பக்தர்களுக்கு, லட்டுக்கு பதிலாக, 175 கிராம் எடைகொண்ட பூந்திபாக்கெட்டுகள் வினியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- Edited by chillsam on Saturday 30th of January 2010 07:29:42 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)