நான் பாஸ்டரும் அல்ல,போதகனுமல்ல;நான் முழுமனதுடன் நம்பி ஏற்றுக்கொண்டதை மற்றவருக்குச் சொல்லும் சாதாரண வழிப்போக்கன்;
அதை மறுப்பவரும் என்னைப் போன்றே முழு சுதந்தரமான சிந்தனையும் ஆதாரங்களும் உடையவராக இருக்கலாம்;
ஒரு மனிதன் மூலம் கேள்விப்பட்டதை நான் நம்புவது போலவே அவரும் நம்புகிறார்;
நான் நம்புவதற்கு ஆதாரமாக எல்லாம் வல்ல இறைவனுடைய வேதமாக நான் கருதும் பொக்கிஷம் என்னிடத்திலிருக்கிறது;
அது பொய்யானது என்றால் பெரிய பெரிய படிப்பாளிகளெல்லாம் இரவும் பகலுமாக ஏன் அதை வைத்துக்கொண்டு ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்;
இவர்களே அதாவது பைபிளை நம்பாதவர்களே நான் பைபிளை நம்புவதற்கும் ஆதாரமாக இருக்கிறது;
எனக்கு தைரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு காரியத்தை நம்புவதைவிட்டுவிட்டு வனாந்தரத்தில் தனியனாக நின்று அதனை "இல்லை" என்று சொல்லும் தைரியம் எனக்கில்லை;
வேறு என்ன மாற்று இங்கே மனுக்குலத்தின் எதிர்காலமாக "இருக்கிறது..?"
// இவர்களது விசுவாச அறிக்கையில் இருக்கும் உண்மைகளும் அபத்தங்களும் இவர்களுக்கே தெரியாது. "அவர் பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்" என்பதற்குப்பதிலாக அவர் பரிசுத்த ஆவியானவரால் என்று கொச்சைப்படுத்தியுள்ளனர். வேற்று மார்க்கத்தார் என்ன எண்ணுவார்கள்? பரிசுத்த ஆவியை ஒரு ஆள் என்றுவேறு சொல்கின்றனர்.
'மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்' என்பதற்கு தெளிவான விளக்கம் கேளுங்கள். பேந்தப் பேந்த முழிப்பார்கள். ஏனென்றால் நான் முன்பே சொன்னதுபோல் மரணம் என்றால் என்னவென்றே தெரியாது, பாதாளம் என்றால் சரியான விளக்கம் கொடுக்கமாட்டார்கள்.
இவர்கள் அறிக்கையில் தெளிவாக பிதா வேறு குமாரன் வேறு என்று இருந்தாலும் அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாழைப்பழக் காமெடி செய்வார்கள்.
'உயிருள்ளோருரையும், மரித்தோரையும் நியாயம்தீர்க்க வருவார்' என்று விசுவாசிக்கும் இவர்கள் அதற்கும் விளக்கம் சொல்ல மாட்டார்கள். மரித்தோரை எப்படி நியாயம் தீர்ப்பார்? பாவத்தின் சம்பளம்(நியாயத்தீர்ப்பு)தானே மரணம்?
சரீர உயிர்த்தெழுதலை விசுவாசிக்கும் இவர்கள் அது வானத்துக்குரிய சரீரமா? அல்லது இதே சரீரமா? இவை யார் யாருக்கு என்றும் விளக்க மாட்டார்கள்.
இந்தப் பெருங்குழப்பக் கூட்டத்தைத்தான் 'மகாபாபிலோன்' (குழப்ப போலி சபை) என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
ஜாக்கிரதையாக இருப்போம். // இது நம்முடைய பொதுவான விசுவாச அறிக்கைக்கு எதிரிகளின் விமர்சனமாகும்; இதைக் குறித்த கருத்தை வாசகர்கள் தெரிவிக்கலாம் அல்லது வழக்கம் போல நானே அதையும் எழுதவேண்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)