// மிகவும் பரிசுத்தமான தர்மனுக்கே // அவங்களே கொடுக்காத அடைமொழிகளையும் பட்டப்பெயர்களையும் நாம் ஏன் கொடுக்கவேண்டும்,மனைவியை வைத்து சூதாடுபவன் பரிசுத்தவானா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உண்மை என்பது எல்லா மதங்களிலும் உள்ள கருத்துக்களின் தொகுப்புதான். ஆகினும் நமக்கு கிறிஸ்த்தவம் என்பது இறையடி சேர மிக சுலபமான மார்க்கம் ஒன்றை சொல்கிறது என்றே நான் கருதுகிறேன். அதாவது ஒரு சலுகை மார்க்கம் என்று கூட சொல்லலாம்.
இந்து புராணங்கள் அடிப்படையில் பார்த்தால் ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை போய் பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது என்று கூறப்படுகிறது. மிகவும் பரிசுத்தமான தர்மனுக்கே அந்த கதியென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.
வள்ளலாரைபோல் உலக ஆசை பற்றுக்களை வெறுத்து தனது தேகத்தை ஒடுக்கி பல்வேறு படிநிலைகளை கடந்து இறைஜோதியோடு உங்களால் கலக்க முடியுமானால் அவ்வழியில் செல்லுங்கள். ஆனால் நாம் வாழும் காலத்தில் நமக்கு அது சாத்தியமா? புத்தர் முதல் எல்லா தூதர்களும் இறைவநிடத்திலிருந்தே வந்திருக்கலாம் ஆனால்அவர்கள் சொல்லும் வழி நடப்பது சாத்தியமா என்பதை சற்று யோசித்து பாருங்கள்
உலக இன்ப துன்பங்களில் மூழ்கி வெளிவரமுடியாமல் தவித்து புலம்பும் ஒருவருக்கு திரும்பவும் நீ அதை செய் இதை செய் என்று சொல்லாமல் "என்னை விசுவாசி" உனக்கு நித்தய ஜீவன் உண்டு என்று ஜீவனை அடையும் வழியை சுலபமாக்கி தந்தவர் இயேசு ஒருவரே. உங்களை பெரிய மலையை கடக்க சொல்லவில்லை கங்கை காவேரியில் போய் முழுகு என்று சொல்லவில்லை. இருந்த இடத்திலிருந்தே இறைவனை அறியலாம்
எல்லா மதங்களையும் ஆராய்வதில் தவறில்லை என்றாலும் அம்மார்க்கங்கள் காட்டும் வழியில் கஷ்டப்பட்டு நடந்து இறைவனை அடயமுடியுமா என்பது கேள்விக்குறியே. இந்துக்களை எடுத்துகொண்டால் தங்கள் மார்க்கத்தின்மீது முழு நம்பிக்கை மற்றும் நித்யவழ்வு பற்றி அறிந்தவர்களும் பேசுபவர்களும் மிக சொற்பமே. உலக இன்பத்தை அனுபவிப்பதிலும், சினிமா மற்றும் கதைகள் பாடல்கள் போன்ற நிரந்தரம் இல்லாத பல்வேறு மாயைகளில் மூழ்கி கிடைப்பவர்தான் அதிகம். அதிலும் அறிவியல் படித்த பல அதிமேதாவிகள் கடவுள் இல்லை என்று சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள்.
இப்படி அந்த மார்க்கத்தில் உள்ளவர்களே எல்லாம் பொய், புராணங்கள் எதுவும் உண்மை இல்லை கடவுள் எல்லாம் கற்பனை என்று கூறும்போது அதைவிட்டு வெளியில் வந்து உயிரோட்டமுடன் இருக்கும் இன்னொரு மார்கத்தில் அங்கம் வகிப்பது தவறில்லை!
நானும் ஒரு இந்து மார்க்கத்தை சேர்ந்தவன்தான். ஒரு முஸ்லிம் பெண் கொடுத்த வசிய மருந்தால் பாதிக்கப்பட்டு சாகும் தருவாய்வரை சென்றேன் எனதே இந்து சாமியும் எனது குலதெய்வம் கூட காப்பாற்ற வரவில்லை இந்த பைபிள் என்னும் வேதத்தை கையில் எடுத்ததால் இன்று தப்பித்து இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் தளத்தில் உள்ள கருத்துக்கள் அருமையாக இருக்கின்றன! ஆனால் முடிவாக என்ன சொல்லவருகிறீர்கள் என்று ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இறைவனை அறிந்திருந்தால் எப்படி அறிந்தீர்கள் அவரை அறிய என்ன வழி
என்று கூறுங்கள். பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி உண்மையை அறியாமல் பொதுவான கருத்துக்களை மட்டும் கூறுவதில் என்ன பயன்?
மதங்கள் மனிதனால் உண்டானவை! இறைவன் ஒருவர்தான்! அவர் இப்போது எந்த மார்க்கத்தில் இருக்கிறார் என்பதுதான் கேள்வி. எல்லா மதத்தையும் ஆராயுங்கள் ஆராய்வதோடு ஆண்டவரே எனக்கு உண்மை என்னவென்பதை தெரியப்படுத்துங்கள் என்று இடைவிடாமல் மற்றாடுங்கள் ஒருநாள் உண்மையை நிச்சயம் அறிவீர்கள்!
நான் அனைத்து மார்க்கங்களையும் கவனித்து வருகிறேன்; எனது நண்பர்கள் பல்வேறு மார்க்கக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்; நான் சுயதொழில் செய்வதால் பலருடன் தொடர்பு கொள்ளவும் விரிவாகப் பேசவும் வாய்ப்பு கிடைக்கிறது; இந்த தளத்தில் அச்சமில்லாமல் எனது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ளவும் எனது ஐயங்களுக்கு பதிலைப் பெறவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.