எனக்குத் தெரிந்து எந்த கிறிஸ்தவ விசுவாசியும் இதுபோன்ற காரியங்களை செய்வதில்லை. அலுவலக ஓய்வின் போது செய்கிறார்கள். ஓய்வு நேரத்தின் போதோ அல்லது வேலை எதுவும் இல்லாத சிறு இடைவேளை போது இவ்வாறு பதிவிடுவது தவறான செயல் அல்ல. அதுவும் மேலதிகாரிகளின் முன் வேலை செய்கிறோ்ம்.அவர்களும் எம்மை அவதானித்தபடியே இருக்கிறார்கள்.எனவே அவர்களின் சம்மத்துடன் செய்வதில் எவ்வித தவறும் இல்லை.
இணையத்தினை பாவித்தாலோ அன்றி பாவிக்காது விட்டோலோ அலுவலகத்திற்கு எத்தகைய இழப்புக்களும் ஏற்படுவதில்லை. 24 மணித் தியாலங்களும் Server -கள் இயங்கியபடி உள்ளன. Broadband இணைப்புக்களே அலுவங்களில் பொதுவாக பாவிக்கப்படுகின்றது. எனவே அவற்றை பாவிப்பதால் இழப்பு என்று கூறுவது நகைப்பிற்கிடமானது மற்றும் இணையம் தொடர்பான வேலையிலிருப்பதால் எனக்கு இதில் எதுவித சிரமங்களும் ஏற்படுவதில்லை. சனி, ஞாயிறு தொடர்பான தினங்கள் உங்கள் கருத்து அபத்தமானது. சனி ஞாயிறு வகுப்பு, ஊழியம் என்றால் பதிவிட வாய்ப்பு கிடைப்பது குறையும்.
ஆனால் சிலர் இருக்கிறார்கள் ஊழியம், ஊழியம் என்று திரிந்து கொண்டு எந்த வேலையும் செய்யமாட்டார்கள். வாய் கிழிய மற்றவர்களுக்கு சாபம் மட்டும் தவறாமல் கொடுப்பார்கள். அப் பவுலும் வேலை செய்து கொண்டே தான் ஊழியம் செய்தார். இதை என்னவோ இன்றைய கலியுக கண்ணர்கள் மறந்து விடுகிறார்கள்.
வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி..! "கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்."
இந்த புதிய வருடத்தில் வேற்று இனத்தார் மத்தியில் வாழும் கர்த்தருடைய பிள்ளைகள் எந்தவொரு சிறுகாரியத்திலும் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்;பொதுவாகவே லஞ்சம் வாங்குபவனைக் காட்டிலும் லஞ்சம் வாங்குவதை வெறுக்கும் நேர்மையாளர்களே எதிரிகளால் சிக்க வைக்கப்படுகின்றனர் என்பது நாம் அறிந்ததே; அதுபோலவே நாம் எல்லா காரியத்திலும் நேர்மையானவர்களாக இருப்பதே நம்மை தனிமைப்படுத்தி பலரும் முகாந்தரமில்லாத பகையுணர்ச்சியுடன் பார்க்கக் காரணமாகிவிடும்.
இந்நிலையில் நாம் புறவினத்தார் மத்தியில் வாழும் நாம் தான் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செயல்பட்டு நமது சாட்சியையும் கிறித்தவ விசுவாசத்தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்;கிராமத்தில் சொல்வழக்காகச் சொல்லுவதுபோல, "சேலையானது முள்ளின் மீது விழுந்தாலும் முள்ளானது சேலையின் மீது விழுந்தாலும் நட்டம் சேலைக்கு தான் " அதுபோலவே நம்முடைய விசுவாசத்துக்கு பங்கம் வராத வண்ணம் கவனமாக இருந்தால் அதனால் பலரும் கிறித்துவின்பால் ஈர்க்கப்படுவர்;அதற்கு மாறாக கிறித்தவர்களாகிய நாம் சிறுசிறுகாரியங்களில் இழிவான ஆதாயத்துக்காக எதைச் செய்தாலும் கர்த்தருடைய நாமமே தூஷிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.
இந்த நேரத்தில் என் நினைவில் வந்து செல்லும் இரு வசனங்களை வாசகர் தம் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;
"புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." ( 1.பேதுரு. 2:12)
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." (1.பேதுரு.5:8)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பரே, மேற்கண்ட வரிகளை கவனிக்கவில்லையோ..? எனது பொதுவான சிந்தனையினைப் பகிர்ந்துக் கொண்டேன்;தாங்கள் வலிய வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை;
நீங்கள் யாரை கருத்தில் கொண்டு இதை எழுதினீர்கள் என்பது ஆண்டவருக்கு நிச்சயம் தெரியும். ஆனால் என்னை கருத்தில் கொண்டு எழுதியிருந்தால் அதற்க்கு விளக்கம் கொடுக்கவேண்டியது என் கடமை அல்லவா அதனால் தான் தன்னிலை விளக்கம் கொடுத்தேன்.
// எனது பாசத்துக்குரிய நண்பர்கள் இது சம்பந்தமான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்; மேற்கண்ட காரியங்களில் சம்பந்தப்படாத நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும் //
நண்பரே, மேற்கண்ட வரிகளை கவனிக்கவில்லையோ..? எனது பொதுவான சிந்தனையினைப் பகிர்ந்துக் கொண்டேன்;தாங்கள் வலிய வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை; உங்கள் எல்லோருக்கும் கீழே இருக்கும் செருப்பாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்;ஆம்,சமயத்தில் அது கடிப்பதாலேயே அப்படி குறிப்பிட்டேன்...சரியா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
chillsam wrotes:- ///அங்கே தான் இரகசியம் இருக்கிறது;அவர்கள் இங்கே செய்யும் அனைத்து விவாதங்களுக்கும் மற்ற சொந்த வேலைகளுக்கும் தங்கள் அலுவலக நேரத்தையே பயன்படுத்துகின்றனர்;///
உங்களின் இந்த கணிப்பு மிக்க சரியானது அனால் தொடர்ந்து வரும் குறைபாடுகள் என்னிடம் இல்லை. என்னோடு இருப்பவர் தேவ ஆவியானவர். இந்த காரியத்தை குறித்து எத்தனையோ மாதங்களுக்கு முன் ஆண்டவர் என்னிடம் பேசிவிட்டார். நானும் தக்க இடத்தில் அனுமதி வாங்கி அதிக சம்பளத்தை கூட தியாகம் செய்து அலுவலக நேரத்திலேயே பதிவிடும் அனுமதி வாங்கியிருக்கிறேன்.
ஆவியானவர் நம்முள் இருந்தால் மனிதன் சொல்லிதான் நாம் திருந்த வேண்டியது அவசியம் இல்லை. "உங்களுக்குள் ஆவியானவர் வாசம் செய்கிறாரா' என்ற தலைப்பில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நான் எழுதிய கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்று கருதுகிறேன்.
அந்த கட்டுரையை நான் தவறவிட்டுவிட்டேன் விரைவில் திரும்ப எழுதி பத்விடுகிறேன்.
எனக்கு அருமையான சில கிறித்தவ நண்பர்களின் தளத்தைப் பார்க்கும் போது வார நாட்களின் போது மாத்திரம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது; ஆனால் சனி,ஞாயிறு போன்ற தினங்களில் தூங்கி வழிகிறது;
இதற்கு என்ன அர்த்தம், அவர்கள் கடவுளுடைய கட்டளையினை மிகச் சரியாகக் கடைபிடிக்க வேண்டி ஓய்ந்திருக்கிறார்களோ?
அங்கே தான் இரகசியம் இருக்கிறது;அவர்கள் இங்கே செய்யும் அனைத்து விவாதங்களுக்கும் மற்ற சொந்த வேலைகளுக்கும் தங்கள் அலுவலக நேரத்தையே பயன்படுத்துகின்றனர்;
ஏன் கிறித்தவர்களைக் குறிப்பாகச் சொல்லுகிறேன்? நம்முடைய பாரம்பரியம் அப்படிப்பட்டது;எனக்குத் தெரிந்த நல்ல-எளிமையான ஐயாமார் மிகவும் தாழ்மையானவர்கள்;ரொம்ப பிரபலமானவர்களல்ல;ஆனால் அவர்கள் தங்கள் கிறித்தவ வாழ்வில் இதுபோன்ற காரியங்களில் கூட நேர்மையினைக் கடைபிடித்தனர்;
அலுவலகத்திலிருந்து ஒரு பேப்பரையோ குண்டூசியையோ கூட சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தாத மாண்பைக் கடைபிடித்தனர்;இந்த செயல் அவர்களுடன் பணிபுரிந்த மற்ற சமுதாயத்தினர் மத்தியில் புகழப்பட்டது; நம்முடைய ஆண்டவர் மீதும் மதிப்பு இருந்தது;
ஆனால் இன்று சத்தியம்,சத்தியம் என்று வாய் கிழிய பேசும் நண்பர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இதுபோன்ற சாட்சியைக் காத்துக் கொள்ளுகிறார்களா?
அலுவலக நேரத்தில் சொந்த வேலை என்பது அலுவலகத்துக்குச் சொந்தமான இணையதள வசதியையும் கணிணியையும் மேலதிகாரிகளின் தகுந்த சட்டபூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்துவதையும் சேர்ந்ததே; ஏனெனில் இதிலும் சிலர் நான் உணவு இடைவேளையின் போதும் அலுவலக நேரத்துக்குப் பிறகும் மாத்திரமே பயன்படுத்துகிறேன் என்று சொல்லக்கூடும்..!
உங்கள் சொந்த தொழில் நிறுவனமாக இருந்தாலும் அதிலும் கூட இந்த ஒழுங்கு தேவைப்படலாம்; ஏனெனில் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு எதையாவது (மார்க்கம் சம்பந்தமாக,ஆண்டவருக்காக...) செய்துக் கொண்டிருக்க, உங்களிடம் சம்பளம் வாங்கும் வேலையாள் வேறு வேலை செய்ய, உங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படலாம்..!
எனது பாசத்துக்குரிய நண்பர்கள் இது சம்பந்தமான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்; மேற்கண்ட காரியங்களில் சம்பந்தப்படாத நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)