யோபுவின் பாடுகளைக் குறித்து வேதம் எதைச் சொல்லுகிறதோ அதற்கு மிஞ்சி நீங்கள் எதைச் சொல்லமுடியும் ?
"இதோ யோபுவின் நவீன கால சிநேகிதர்கள்" எனும் எனது வரிகளைக் குறித்து...
யோபுவைக் குறித்து மட்டுமல்ல, ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்தும் மேதாவித்தனமான கருத்துக்களை சில பிரசங்கியார்கள் கூறும்போது நானும் ஆண்டவருடைய ஆவியானவருடன் இணைந்து நகைப்பேன்;
அவர்களுக்கு ஆவியானவரால் சொல்லப்படாத ஒரு செய்தியை ஆவியானவர் பெயரால் சொல்லுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் ?
இஸ்லாத்தில் இதுபோன்ற துணிகரம் உண்டா?
யோபுவின் சிநேகிதர்களைப் போலவே இங்கே ஆராயப்பட்ட காரியங்களை வாசித்ததன் விளைவாகவே அந்த வரிகள் எனக்குள்ளிருந்து வந்தது;
யோபுவின் பொறுமையினை மட்டுமே வேதம் நமக்குப் பாடமாக நினைப்பூட்டுகிறது;(புதிய ஏற்பாடு)
தங்கள் திராணிக்கு மிஞ்சின பாடுகள் உபத்திரங்களின் போது இயேசுவை நினைத்துக் கொள்ளவும் வேதம் சொல்லுகிறது.(எபிரெயர்.12:3) அதற்காக நாம் அவருடன் நம்மை ஒப்பிடக்கூடாது என்று சொல்லமுடியுமா?
அன்புக்குரிய எனது நண்பருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: உங்கள் தலைப்புகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதாக இருக்கட்டும்; அவரை சிறுமைப்படுத்தி- பெருமைப்படுத்த எண்ணாதிருங்கள்;
சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..!
"பக்திவிருத்தி" என்று நான் குறிப்பிட்டதொரு வார்த்தையினை வைத்து அருமையாக தோரணம் கட்டியிருக்கிறார்,நண்பர் அன்பு;
மற்றொரு தளத்தின் காரியங்களை அங்கேயே விவாதிக்கவும் மறுக்கவும் தொடரவும் நிறுத்தவும் வாய்ப்புண்டு;
ஒரு துருபதேச தளத்துக்கு எந்த விதமான பதிலைத் தரவேண்டுமோ அதையே கொடுத்தேன்;மரியாதை தெரியாதவர்களுக்கு மரியாதை தருவது எனக்கு வழக்கமல்ல; அவர்கள் புத்தி ஆரோக்கியமாக இருந்திருந்தால் அதனை தணிக்கை செய்திருக்கமுடியும்;அவர்கள் அதனை தணிக்கை செய்யாமலும் நீக்காமலும் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்;
ஆனாலும் மற்ற தளங்களின் ஆரோக்கியமான செயல்பாடு பாதிக்காமலிருக்க நான் கட்டுப்பாட்டுடனே எழுதி வருகிறேன்;
எனது தளத்தின் பொருள் சம்பந்தமான விவாதங்களுக்கு இங்கே பதில் தருவது "அன்பு" அவர்களைப் போன்ற அனுபவமுள்ளோருக்கு தகுதியானதல்ல;இதிலிருந்தே அவர் ஏதோ ஒரு தனிப்பட்ட கசப்புடன் என்னைத் தவிர்ப்பது புரிகிறது;
பக்திவிருத்திக்கேதுவானதையே சிந்திக்கவேண்டுமென்பது வேதத்தின் பொதுவான ஆலோசனையாகும்;அதை யார் கடைபிடிக்கிறார்?
ஆனால் நான் குறிப்பிட்டது வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தியானிக்கும் போது இந்த விதிமுறையினை நிச்சயமாக கடைபிடித்தாக வேண்டும் என்பதே;
இதுவே நான் சொல்ல வந்தது;மற்றபடி எனது தளத்தில் பக்திவிருத்திக்கேதுவானதை மட்டுமே நான் பதிக்கிறேன் என்று சொல்லவில்லையே;
அதனை விளக்கவே கீழ்க்கண்ட வரிகளை இறுதியாக இணைத்தேன்;
// சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..! //
அதிலும் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வரிகள் நண்பரை ரொம்ப பாதித்துவிட்டது போலும்;
"பன்றி" என்பது மறுதலித்துப் போனவர்களுக்கான வேதத்தின் குறியீடாகும்;
அப்படியானால் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து விவாதித்து குழப்பம் விளைவிப்பவர்களையா "அன்பு" பன்றி என்று குறிப்பிடுகிறார்?
இங்கே நண்பர்களுக்குள் கடினமான பொருளில் அவரவர் கருத்தைக் கேட்டால் ஒவ்வொருவரும் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்;ஏதோ இவர்கள் எல்லாவற்றையும் அறிந்து தேர்ந்துவிட்டதைப் போன்ற தோரணையில் எழுதுகிறார்கள்;
திரித்துவத்தை புரிந்துக்கொள்ள உதவும் பொருளையும் இயேசுவானவரே தேவனால் நியமிக்கப்பட்ட தேவன் என்பதை வலியுறுத்தும் கருத்துக்களையும் அவர் ஆதிமுதலே இருக்கிறவராகவே இருந்தார் என்பதையும் பாதாளம்,நரகம்,அழிவு உண்டு என்பதையும் வலியுறுத்தும் கருத்துக்களே வேதத்தின் அடியொற்றிய கருத்துக்கள்;அதற்கு மிஞ்சினவை மிஞ்சின நீதிமான்களால் திணிக்கப்பட்டவை;
தேவன் பயங்கரமானவர் என்று வேதம் அவருடைய மகத்துவங்களைக் கூறும்போது அதனை மறுத்து "இல்லையில்லை அவர் ரொம்ப நல்லவர்,யாரையும் அழிக்கவோ சோதிக்கவோ மாட்டார்,மனிதனுடைய பாவமும் மீறுதலுமே துன்பத்துக்கும் காரணம்" என பொத்தாம்பொதுவில் கூறுவது தேவனைப் பெருமைப்படுத்தி சிறுமைப்படுத்துவதாகும்;
இதுபோல பல உதாரணங்களைக் குறிப்பிடமுடியும்;இறுதியாக நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் இறுதித் தீர்ப்பாக எதையும் நிறுவ முயற்சிக்கவேண்டாம்;ஏனெனில் மனிதனுடைய புரிதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறதே;
எனவே யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்பதன் மூலமல்ல,பக்திவிருத்தியாவது; அவனுடைய பொறுமையை போதிப்பதே இந்த வேதப்பகுதியின் நோக்கம்;
அவர் நியாயப்பிரமாணக் காலத்துக்குள் இருந்தாரோ அதற்கு முன்னர் இருந்தாரோ அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? இதுதான் வேண்டாத வேலை;
கிறிஸ்தவக் குடும்பங்களில் வரதட்சிணைக் கொடுமையும் ஜாதிக் கொடுமையும் விவாகரத்தும் தலைவிரித்தாடுகிறது; பள்ளிகளில் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே அதிக பிரச்சினைக்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்; எனவே பக்திவிருத்திக்காக இல்லாவிட்டாலும் தன்னைத் தான் சோதித்தறிய இந்த பொருளைத் தற்கால உடனடி தேவை என்ற எண்ணத்தில் நான் அலச விரும்புகிறேன்; ஏனெனில் இது நான் எனது ஊழியத்தில் (ஊழியம் என்றாலே நகைப்பு வருகிறதோ..?)அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையாகும்;
இக்காலத்தில் தேவனுடைய வார்த்தைகளின்படி அவருக்கு கீழ்ப்படிந்து வாழும் ஒரு விசுவாசியையோ அல்லது ஊழியக்காரரையோ பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது என்கிறாரா, அல்லது அரிதாகி விடாது என்கிறாரா? தெரியவில்லை; போகட்டும்;
// எல்லா இடங்களிலும் பாவம்,பணஆசை மற்றும் மாய்மாலம் பெருத்துவிட்டது // என்ன செய்ய?
யோபுவின் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்துவிட்டால் இதையெல்லாம் செய்யாமல் திருந்திவிடமுடியுமா? அல்லது யாரையாவது திருத்திவிடமுடியுமா?
ஒரு சிறந்த வாசகனே சிந்தனையாளரும் எழுத்தாளனுமாக பரிணமிக்கிறான்; அதன்படியே நான் செயல்பட முயற்சிக்கிறேன்;
இங்கே "யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம்" என்று மிகத் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் அதற்குக் காரணமாகக் குறிப்பிடுவது, யோபுவின் பாடுகளுடன் தங்களுடைய பிரச்சினைகளை சம்பந்தப்படுத்தி ஊழியர்கள் ஊரை ஏமாற்றி சேர்த்த பணத்தை நோய்களுக்கு அழிக்கிறாகளாம்; அதனைத் தடுக்கவே யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப்போகிறார்களாம்;
இவர்கள் கண்டதையும் எழுதலாம், ஆனால் "இந்த விவாதம் தேவையா" என்று மட்டும் யாரும் எழுதக் கூடாதாம்; இது எப்படி நியாயமாகும்?
தலைப்புக்குப் பொருந்தாத கருத்துக்களைத் தவிர்க்கவேண்டும் என்பது வழக்கமான நடைமுறைதான்; ஆனால் யார் அதை இங்கே கடைபிடிக்கிறார்?
இந்த தலைப்புக்குப் பொருத்தமான எனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்;
யோபுவின் இரணத்தை இன்னும் அதிகப்படுத்தி அவனை குறை பேசிய சிநேகிதர்களை தேவன் கண்டிக்கிறார்;எனவே யோபுவின் தகுதியைக் குறைத்து தேவையில்லாமல் ஆராய்வதை நாம் தவிர்க்கவேண்டும்;
தேவனுக்குத் தெரியாமல் எதுவும் சம்பவிக்கிறதில்லை என்ற மாபெரும் உண்மையினை இந்த சரித்திரம் வலியுறுத்துவதால் சாத்தானைக் குறித்தும் ஆராய ஒன்றுமில்லை;
நம்முடைய ஆண்டவரிடம் பரிசேயர்கள் ஒரு குருடனைக் குறித்துக் கேட்டார்கள்; 'இவன் இப்படி பிறந்தது இவனுடைய குற்றமா அல்லது இவன் பெற்றோர் செய்த குற்றமா ' என்று; அதற்கு ஆண்டவர் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும்;
எனவே அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதியதுபோல இந்த சரித்திரம் யோபுவின் பொறுமையைக் குறித்தே வலியுறுத்துகிறது என்பது என்னுடைய கருத்தாகும்;
எனது வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களின் போது இயேசுவானவரின் பாடுகளை நினைத்து ஆறுதல் அடைய எனக்கு உரிமையுண்டானால் யோபு என்னைப் போன்ற சாதாரண மனுஷனாதலால் இன்னும் அதிக உரிமையுண்டு; அவருடைய தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஏற்ப அவர் சோதிக்கப்பட்டார்; எனக்கு சாதாரண துன்பமும்கூட அதிகம் பாதிக்கக்கூடும்; அது என்னுடைய பெலவீனம்; அந்த பெலவீனத்திலேதான் தம்முடைய பெலன் தாங்கும் என "அருள் நாதர்" வாக்குபண்ணியிருக்கிறார்;
யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்று ஆராய்ந்துக் கொண்டிருக்கும் புத்திசாலிகள் இந்த யோபுவின் சரித்திரமே ஒரு கற்பனை காவியம் என்று ஒரு குறிப்பு சொல்லுகிறதே; அதற்கு என்ன சொல்லுவார்கள்?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)