Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு?
Permalink  
 



//In the book of Job we can find that

1. God challenged satan and humanity
2. Satan challenged God and humanity
3. Humanity challenged God and satan

The result of this challenge is

1. God is the winner on both sides
2. Satan is the loser on both sides
3. Man is the winner over satan and become loser by God.//

By Santhosh@"http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=33753744"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

சகோதரர்  சில்சாமிர்க்கு  ஆண்டவர்   இயேசுவின் மேல் உள்ள வைராக்கியத்தை பார்த்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்! ஆச்சர்யபடுகிறேன்!

"இறைவன்" தளத்தில் அவர் பதிந்துள்ள அருமையான கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்!

 http://lord.activeboard.com/ 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இதோ யோபுவின் (நவீன கால) சிநேகிதர்கள்..!

அன்பான நண்பரே வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, "பக்திவிருத்திக்கேதுவானதையே" பேசவும் சிந்திக்கவும் வேண்டுமென;

யோபுவின் பாடுகளைக் குறித்து வேதம் எதைச் சொல்லுகிறதோ அதற்கு மிஞ்சி நீங்கள் எதைச் சொல்லமுடியும் ?

"இதோ யோபுவின் நவீன கால சிநேகிதர்கள்" எனும் எனது வரிகளைக் குறித்து...

யோபுவைக் குறித்து மட்டுமல்ல, ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்தும் மேதாவித்தனமான கருத்துக்களை சில பிரசங்கியார்கள் கூறும்போது நானும் ஆண்டவருடைய ஆவியானவருடன் இணைந்து நகைப்பேன்;

அவர்களுக்கு ஆவியானவரால் சொல்லப்படாத ஒரு செய்தியை ஆவியானவர் பெயரால் சொல்லுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் ?

இஸ்லாத்தில் இதுபோன்ற துணிகரம் உண்டா?

யோபுவின் சிநேகிதர்களைப் போலவே இங்கே ஆராயப்பட்ட காரியங்களை வாசித்ததன் விளைவாகவே அந்த வரிகள் எனக்குள்ளிருந்து வந்தது;

யோபுவின் பொறுமையினை மட்டுமே வேதம் நமக்குப் பாடமாக நினைப்பூட்டுகிறது;(புதிய ஏற்பாடு)

தங்கள் திராணிக்கு மிஞ்சின பாடுகள் உபத்திரங்களின் போது இயேசுவை நினைத்துக் கொள்ளவும் வேதம் சொல்லுகிறது.(எபிரெயர்.12:3) அதற்காக நாம் அவருடன் நம்மை ஒப்பிட
க்கூடாது என்று சொல்லமுடியுமா?

அன்புக்குரிய எனது நண்பருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
உங்கள் தலைப்புகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதாக இருக்கட்டும்; அவரை சிறுமைப்படுத்தி- பெருமைப்படுத்த எண்ணாதிருங்கள்;

சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..!


"பக்திவிருத்தி" என்று நான் குறிப்பிட்டதொரு வார்த்தையினை வைத்து அருமையாக தோரணம் கட்டியிருக்கிறார்,நண்பர் அன்பு;

மற்றொரு தளத்தின் காரியங்களை அங்கேயே விவாதிக்கவும் மறுக்கவும் தொடரவும் நிறுத்தவும் வாய்ப்புண்டு;

ஒரு துருபதேச தளத்துக்கு எந்த விதமான பதிலைத் தரவேண்டுமோ அதையே கொடுத்தேன்;மரியாதை தெரியாதவர்களுக்கு மரியாதை தருவது எனக்கு வழக்கமல்ல; அவர்கள் புத்தி ஆரோக்கியமாக இருந்திருந்தால் அதனை தணிக்கை செய்திருக்கமுடியும்;அவர்கள் அதனை தணிக்கை செய்யாமலும் நீக்காமலும் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்;

ஆனாலும் மற்ற தளங்களின் ஆரோக்கியமான செயல்பாடு பாதிக்காமலிருக்க நான் கட்டுப்பாட்டுடனே எழுதி வருகிறேன்;

எனது தளத்தின் பொருள் சம்பந்தமான விவாதங்களுக்கு இங்கே பதில் தருவது "அன்பு" அவர்களைப் போன்ற அனுபவமுள்ளோருக்கு தகுதியானதல்ல;இதிலிருந்தே அவர் ஏதோ ஒரு தனிப்பட்ட கசப்புடன் என்னைத் தவிர்ப்பது புரிகிறது;

பக்திவிருத்திக்கேதுவானதையே சிந்திக்கவேண்டுமென்பது வேதத்தின் பொதுவான ஆலோசனையாகும்;அதை யார் கடைபிடிக்கிறார்?

ஆனால் நான் குறிப்பிட்டது வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தியானிக்கும் போது இந்த விதிமுறையினை நிச்சயமாக கடைபிடித்தாக வேண்டும் என்பதே;

இதுவே நான் சொல்ல வந்தது;மற்றபடி எனது தளத்தில் பக்திவிருத்திக்கேதுவானதை மட்டுமே நான் பதிக்கிறேன் என்று சொல்லவில்லையே;

அதனை விளக்கவே கீழ்க்கண்ட வரிகளை இறுதியாக இணைத்தேன்;

// சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..! //

அதிலும் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வரிகள் நண்பரை ரொம்ப பாதித்துவிட்டது போலும்;

"பன்றி" என்பது மறுதலித்துப் போனவர்களுக்கான வேதத்தின் குறியீடாகும்;

அப்படியானால் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து விவாதித்து குழப்பம் விளைவிப்பவர்களையா "அன்பு" பன்றி என்று குறிப்பிடுகிறார்?

// முத்துக்களைப் போட்டவர்களுக்கெதிராக பன்றிகள் திரும்பி அவர்களைப் பீறிப்போட முயலத்தான் செய்யும். அப்பன்றிகளை இத்தளத்தினுள் மேயவிடாதபடி தடுக்கும் உரிமையையுடைய தளநிர்வாகி, தக்க சமயத்தில் தனது உரிமையைப் பயன்படுத்தி அப்பன்றிகளைத் தடுத்துவிட்டால், யாருக்கும் எந்த பாதிப்பும் நேராது //

இங்கே நண்பர்களுக்குள் கடினமான பொருளில் அவரவர் கருத்தைக் கேட்டால் ஒவ்வொருவரும் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்;ஏதோ இவர்கள் எல்லாவற்றையும் அறிந்து தேர்ந்துவிட்டதைப் போன்ற தோரணையில் எழுதுகிறார்கள்;

திரித்துவத்தை புரிந்துக்கொள்ள உதவும் பொருளையும் இயேசுவானவரே தேவனால் நியமிக்கப்பட்ட தேவன் என்பதை வலியுறுத்தும் கருத்துக்களையும் அவர் ஆதிமுதலே இருக்கிறவராகவே இருந்தார் என்பதையும் பாதாளம்,நரகம்,அழிவு உண்டு என்பதையும் வலியுறுத்தும் கருத்துக்களே வேதத்தின் அடியொற்றிய கருத்துக்கள்;அதற்கு மிஞ்சினவை மிஞ்சின நீதிமான்களால் திணிக்கப்பட்டவை;

தேவன் பயங்கரமானவர் என்று வேதம் அவருடைய மகத்துவங்களைக் கூறும்போது அதனை மறுத்து "இல்லையில்லை அவர் ரொம்ப நல்லவர்,யாரையும் அழிக்கவோ சோதிக்கவோ மாட்டார்,மனிதனுடைய பாவமும் மீறுதலுமே துன்பத்துக்கும் காரணம்" என பொத்தாம்பொதுவில் கூறுவது தேவனைப் பெருமைப்படுத்தி சிறுமைப்படுத்துவதாகும்;

இதுபோல பல உதாரணங்களைக் குறிப்பிடமுடியும்;இறுதியாக நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் இறுதித் தீர்ப்பாக எதையும் நிறுவ முயற்சிக்கவேண்டாம்;ஏனெனில் மனிதனுடைய புரிதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறதே;

எனவே யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்பதன் மூலமல்ல,பக்திவிருத்தியாவது; அவனுடைய பொறுமையை போதிப்பதே இந்த வேதப்பகுதியின் நோக்கம்;

அவர் நியாயப்பிரமாணக் காலத்துக்குள் இருந்தாரோ அதற்கு முன்னர் இருந்தாரோ அதைப் பற்றி நமக்கு என்ன கவலை?
இதுதான் வேண்டாத வேலை;

கிறிஸ்தவக் குடும்பங்களில் வரதட்சிணைக் கொடுமையும் ஜாதிக் கொடுமையும் விவாகரத்தும் தலைவிரித்தாடுகிறது; பள்ளிகளில் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே அதிக பிரச்சினைக்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்; எனவே பக்திவிருத்திக்காக இல்லாவிட்டாலும் தன்னைத் தான் சோதித்தறிய இந்த பொருளைத் தற்கால உடனடி தேவை என்ற எண்ணத்தில் நான் அலச விரும்புகிறேன்; ஏனெனில் இது நான் எனது ஊழியத்தில் (ஊழியம் என்றாலே நகைப்பு வருகிறதோ..?)அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையாகும்;

// இக்காலத்தில் தேவனுடைய வார்த்தைகளின்படி அவருக்கு கீழ்படிந்து  வாழும் ஒரு விசுவாசியயோ அல்லது ஊளியக்கரரையோ பார்ப்பது என்பது மிக அறிதாகிவிடாது. எல்லா  இடங்களிலும் பாவம்    பணஆசை மற்றும்  மாய்மாலம்  பெருத்துவிடது  //

இதை எப்படி புரிந்துக்கொள்ளுவதென்றே தெரியவில்லை;

இக்காலத்தில் தேவனுடைய வார்த்தைகளின்படி அவருக்கு கீழ்ப்படிந்து வாழும் ஒரு விசுவாசியையோ அல்லது ஊழியக்காரரையோ பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது என்கிறாரா, அல்லது அரிதாகி விடாது என்கிறாரா? தெரியவில்லை; போகட்டும்;

// எல்லா  இடங்களிலும் பாவம்,பணஆசை மற்றும்  மாய்மாலம்  பெருத்துவிட்டது //  என்ன செய்ய?

யோபுவின் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்துவிட்டால் இதையெல்லாம் செய்யாமல் திருந்திவிடமுடியுமா? அல்லது யாரையாவது திருத்திவிடமுடியுமா?

ஒரு சிறந்த வாசகனே சிந்தனையாளரும் எழுத்தாளனுமாக பரிணமிக்கிறான்; அதன்படியே நான் செயல்பட முயற்சிக்கிறேன்;

இங்கே "யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம்" என்று மிகத் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் அதற்குக் காரணமாகக் குறிப்பிடுவது, யோபுவின் பாடுகளுடன் தங்களுடைய பிரச்சினைகளை சம்பந்தப்படுத்தி ஊழியர்கள் ஊரை ஏமாற்றி சேர்த்த பணத்தை நோய்களுக்கு அழிக்கிறாகளாம்; அதனைத் தடுக்கவே யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப்போகிறார்களாம்;

இவர்கள் கண்டதையும் எழுதலாம், ஆனால் "இந்த விவாதம் தேவையா" என்று மட்டும் யாரும் எழுதக் கூடாதாம்; இது எப்படி நியாயமாகும்?

தலைப்புக்குப் பொருந்தாத கருத்துக்களைத் தவிர்க்கவேண்டும் என்பது வழக்கமான நடைமுறைதான்; ஆனால் யார் அதை இங்கே கடைபிடிக்கிறார்?

"அன்பு" அன்பில்லாமலும் "வேத மாணவன்" ஆசிரியரைப் போலவும் "இறைநேசன்" குறைமேசனைப் போலவும் என்னையே "டார்கெட்" பண்ணி எச்சரிக்கிறார்கள்;

இந்த விவாதத்தின் தலைப்புக்குப் பொருத்தமாக நான் முன்வைத்த கருத்துக்கள் சற்றும் பொருட்படுத்தப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை;

சொரிந்துக் கொண்டிருப்பவனுக்கு நானும் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்கும்; மருந்து போட்டால் எரிச்சலாகவே இருக்கும்;என்ன செய்ய?

இந்த தலைப்புக்குப் பொருத்தமான எனது  கருத்துக்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்;

யோபுவின் இரணத்தை இன்னும் அதிகப்படுத்தி அவனை குறை பேசிய சிநேகிதர்களை தேவன் கண்டிக்கிறார்;எனவே யோபுவின் தகுதியைக் குறைத்து தேவையில்லாமல் ஆராய்வதை நாம் தவிர்க்க‌வேண்டும்;

தேவனுக்குத் தெரியாமல் எதுவும் சம்பவிக்கிறதில்லை என்ற மாபெரும் உண்மையினை இந்த சரித்திரம் வலியுறுத்துவதால் சாத்தானைக் குறித்தும் ஆராய ஒன்றுமில்லை;

நம்முடைய ஆண்டவரிடம் பரிசேயர்கள் ஒரு குருடனைக் குறித்துக் கேட்டார்கள்; 'இவன் இப்படி பிறந்தது இவனுடைய குற்றமா அல்லது இவன் பெற்றோர் செய்த குற்றமா ' என்று; அதற்கு ஆண்டவர் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும்;

எனவே அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதியதுபோல இந்த சரித்திரம் யோபுவின் பொறுமையைக் குறித்தே வலியுறுத்துகிறது என்பது என்னுடைய கருத்தாகும்;

எனது வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களின் போது இயேசுவானவரின் பாடுகளை நினைத்து ஆறுதல் அடைய எனக்கு உரிமையுண்டானால் யோபு என்னைப் போன்ற சாதாரண மனுஷனாதலால் இன்னும் அதிக உரிமையுண்டு; அவருடைய தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஏற்ப‌ அவர் சோதிக்கப்பட்டார்; எனக்கு சாதாரண துன்பமும்கூட அதிகம் பாதிக்கக்கூடும்; அது என்னுடைய பெல‌வீனம்; அந்த பெலவீனத்திலேதான் தம்முடைய பெலன் தாங்கும் என "அருள் நாதர்" வாக்குபண்ணியிருக்கிறார்;

யோபுவின் பாடுகளுக்கு யார் காரணம் என்று ஆராய்ந்துக் கொண்டிருக்கும் புத்திசாலிகள் இந்த யோபுவின் சரித்திரமே ஒரு கற்பனை காவியம் என்று ஒரு குறிப்பு சொல்லுகிறதே; அதற்கு என்ன சொல்லுவார்கள்?




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard