சகோதரி கோல்டா அவர்களே நீங்கள் காதல் திருமணத்தை ஆதரிப்பவர் என்று எண்ணுகிறேன்; அதன்படி விவாகரத்து செய்வோரில் பெரும்பாலானோர் யார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்... காதல் திருமணம் செய்தவரா, ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணம் செய்தவரா..?
(பின்குறிப்பு: "காதல் திருமணம் ஒழுங்கீனமானது" என்று நான் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்..!)
அது தெரியவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள்தான் அதிகம் விவாகரத்திற்கு மனுப் போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.நம் சமூகத்தில் அதிக திருமணங்கள் ஒழுங்குபடுத்த திருமணங்களாக இருப்பதால், அதிக விவாகரத்துகள் அப்படிப்பட்ட திருமணங்களில் தானே காணப்பட வேண்டும்.
சகோதரி கோல்டா அவர்களே நீங்கள் காதல் திருமணத்தை ஆதரிப்பவர் என்று எண்ணுகிறேன்; அதன்படி விவாகரத்து செய்வோரில் பெரும்பாலானோர் யார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்... காதல் திருமணம் செய்தவரா, ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணம் செய்தவரா..?
(பின்குறிப்பு: "காதல் திருமணம் ஒழுங்கீனமானது" என்று நான் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//அது அப்படியானல், திருமணம் செய்து வாழ்வது கஷ்டம்தான் என்று நம் அண்ணன்மார் சொல்கிறார்கள். அதாவது அவங்களுக்கு பிடிக்கும் வரை மனைவியோடு இருப்பார்கள். பிடிக்காமல் போனால் உடனே தள்ளி விட்டு விடுவார்கள். அந்த சுதந்திரம் இல்லாமல் ஒரே மனைவியோடு வாழ்வது எப்படி என்று மலைக்கிறார்கள்.//
எந்த அண்ணன்மாரை சொல்கிறீர்கள்? யார் மலைக்கிறார்கள். சில அக்காமாரும் அப்படி ஆகிவருவதை மாறி வரும் கலாச்சார மாற்றம் கோடிட்டு காட்டுவதை கவனித்திருக்கிறீர்களா? தினசரி செய்திகளில் எத்தனையோ முறையற்ற உறவுகளுக்கு பெண்களும் தானே காரணம் என புலப்படுகிறது. குறிப்பிட்டு குற்றம் சாட்டாமல் பொதுப்படையாக பார்ப்போமே.
கொடுமைக்கார கணவன் அமைவது துரதிருஷ்டமே, அப்படி வாழவேமுடியாத சூழல் ஏற்படும் போது பிரிந்து விலகுவது நல்லதுதான், அட்லீஸ்ட் குழந்தைகளுக்காகவாவது அதை செய்யலாம். சில வேளைகளில் பிரிந்திருப்பது துன்புறுத்தும் கணவனது மன மாற்றத்துக்கு வழிவகுக்கும். சட்டபூர்வமாக அல்லாவிட்டாலும் முதற்படியாக பிரிந்திருந்து மனமாற்றத்துக்கு வாய்ப்பளிக்கலாம், அதையும் தாண்டி எல்லைமீறும்போது வேறு வழியில்லை.
எத்தனையோ குடும்பங்களில் கணவனை சந்தேகம் எனும் நோய் பீடித்து வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தும் மனைவிமாரும் இருக்கிறார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். நிதானம் இழந்து பேசும் வார்த்தைகளால் பாதிக்கப்படுவது கடைசியில் என்னமோ பிள்ளைகள் தான்.
கட்டுரையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள எல்லா கருத்துக்களையும் கண்டிப்பாக வாசிக்கவும். இரண்டு மட்டும் இங்கே.
தனி மனித சுதந்திரம் அதிகம் உள்ள அமெரிக்காவிலே பல பெண்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்றால் உலகின் மற்ற இடங்களில் எப்படி என்று கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.
--
This is really touched me. I thought all Christain were male supremists. When I was beaten by my husband I was told that it was the will of God to say there and take it. I did. He then started in on the baby and almost killed our child. Motherhood took over.
I figured God was an idiot who really hated women. I renounced being Christain and left the church.
I worked against the church and have hated Christains for not believing that all life matters. If you can stand around and scream anti- abortion slogans, if you are so freaked out that there might not be enough people on the planet then every single one of you should be equally concerned about the quality of life and the horrors of domestic abuse too. Fair is fair. I never thought God was intelligent enough to understand anything like what the article talks about. A friend sent it to me and it has challenged me to talk to God about things that I have hurt me and destoryed me.
--
I want to thank you for the articles and series on marital abuse. It has helped me so much through the last several months.
I think it can be very difficult to realize and admit that you’re in an abusive marriage. Sometimes pastors and other Christians can make the situation even worse when they won’t validate that abuse is taking place, and don’t refer the couple to a counselor who specializes in abuse. Most pastors are not qualified to counsel couples in abusive marriages – it is not the same as marital conflict.
I attended two different support groups and the counselors were so concerned for my well-being that they wanted me to go into a shelter. Yet, the pastors that my husband and I met with took his side. They would not help me at all – no separation, no professional counseling, no support groups. Just stay with him, you’re both 50% at fault, forget everything from the past and wipe the slate clean, ignore his comments (he’s just blowing off steam).
I was just devastated by these men – I thought they would protect me. I had been a member of our Christian community for 10+ years and they didn’t even know my unsaved husband. He claimed he was born again, however, his actions toward me never changed, except that he then used Scripture against me.
But the pastors we met with did not believe in verbal and emotional abuse, and they would not support my decision to seek a divorce. I was told “God hates divorce” more times than I can count. I hate it too! It wasn’t what I had planned when I said “I do.” Proverbs 6:16-19 lists a lot of other things God hates too (which an abuser is usually doing).
Instead of putting the burden on me to stay married, I just wonder how things would have turned out if they would have held him accountable? Sent him to group therapy for angry, abusive men? Insisted on separation until there was evidence of change? Insisted he get a job and help support his family? Insisted that he attend group therapy to give up his pornography addiction?…….
My prayer is that my daughter never ends up in a marriage like I had. Thankfully, my faith in God has never wavered. My divorce is final, and I’m looking forward healing, the future, and what God has planned for me.
கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதாரப் போதனைகளை கவனித்தால் அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் போதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்;அவை கடினமானதைப் போலக் காணப்பட்டாலும் மிகவும் எளிமையானது;
அவற்றில் சில காரியங்களை ஆராயப் போகிறோம்; அதில் ஒன்று,கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா?
இதைக் குறித்த எனது கருத்தைச் சொல்லும் முன்பு வாசக நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்கவேண்டுகிறேன்;
"கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா?" என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே ஒரு விவாதத்தை ஆரம்பித்து அதனைத் தொடராமல் இருந்தோம்; இந்நிலையில் சகோதரி கோல்டா அவர்களும் அதே தலைப்பில் ஒரு விவாதத்தைப் பதித்திருக்கிறார்கள்; எனவே இரண்டு திரியையும் இணைத்திருக்கிறேன்; வாசக நண்பர்களை இதனைக் கருத்தில் கொண்டு தத்தமது கருத்துக்களைப் பதிக்குமாறு வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எனவே, விவாகரத்து செய்து மறுமணம் புரிந்தவர்கள் மூப்பனாய் (பாஸ்டராய்) இருக்க முடியாது என்று எழுதுகிறார். அந்த வசனத்திற்கு அர்த்தம் அதுவல்ல. அக்காலத்தில் பலதார மணங்கள் (பல மனைவிகள்) பழக்கத்தில் இருந்ததால், பவுல் சொல்கிறார், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் ஊழியப் பொறுப்புக்கு வரக் கூடாது என்று. அதாவது நல்ல சாட்சியுள்ள வாழ்க்கை(ஒரே மனைவி) உள்ளவர்கள்தான் வர வேண்டும் என்றும் சொல்கிறார்.சிலர் இந்த வசனத்தை வைத்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஊழியம் செய்ய முடியும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் பவுல் ஊழியக்காரராய் இருந்திருக்க முடியுமா? பவுல் திருமணம் செய்யாமலேதான் அப்போஸ்தலனாக இருந்தார். அதற்கும் இவர் வழக்கம் போல் வசனத்தை வளைத்தும், மற்றும் பவுலுக்கு திருமணம் ஆகி, அப்புறம் மனைவி இல்லாமல் ஆனவர் என்றும் சொல்கிறார்.
தள்ளிவிடுதலை (Divorce) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மல் 2:16
எனவே விவாகரத்து கூடவே கூடாது என்று சொல்கிறார். எதையும் சொல்லப்பட்ட context இல் பார்க்க வேண்டும்.இரக்கமும் , நீதியும் நம் செயல்களில் காணப்பட வேண்டும்.
இது ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை. ஏனென்றால், சின்ன சின்ன விஷயத்திற்கும் மனைவி மேல் கோபமடைந்து, தலாக் சொல்லி தள்ளுதல் சீட்டை கொடுத்து அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட “அநியாயமான , அன்பற்ற, சுயநலமான” தள்ளி விடுதலைத்தான் ஆண்டவர் வெறுப்பதாகச் சொல்கிறார். அந்த context இல் தான் மத் 19:9 இலும் விபச்சார பாவத்தைத் தவிர வேறு எதற்கும் மனைவியை தள்ளி விடக் கூடாது என்று சொல்கிறார். அது அப்படியானல், திருமணம் செய்து வாழ்வது கஷ்டம்தான் என்று நம் அண்ணன்மார் சொல்கிறார்கள். அதாவது அவங்களுக்கு பிடிக்கும் வரை மனைவியோடு இருப்பார்கள். பிடிக்காமல் போனால் உடனே தள்ளி விட்டு விடுவார்கள். அந்த சுதந்திரம் இல்லாமல் ஒரே மனைவியோடு வாழ்வது எப்படி என்று மலைக்கிறார்கள். யூத கலாசாரத்தில் பெண்கள் தள்ளுதல் சீட்டு கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. மற்றபடி அடிமைகளைக் கூட 7ம் வருடத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆண்டவர், கொடுமைப்படுத்தும் கணவனோடு சேர்ந்து இருக்கும்படி சொல்வாரோ?? அப்படி கட்டாயப்படுத்துவதையும் நான் வெறுக்கிறேன் என்றுதான் சொல்வார்.
மற்றபடி, கொடுமைக்கார துன்புறுத்தும் கணவனோடு கூட இருப்பதா வேண்டாமா என்று அந்த பெண் தான் முடிவு செய்ய வேண்டும். வெளியே வர விருப்பப்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். எந்நாளும் சண்டை நடக்கும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாய் தான் வளருவார்கள். அதற்கு விவாகரத்து செய்வது, அல்லது குறைந்த பட்சம் பிரிந்திருப்பது மேலானது.
எனவே, பழைய ஏற்பாட்டில் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டிலும் ஆண்டவர் அனுமதிக்கிறார். தள்ளுதல் சீட்டு பெற்ற பெண் பழைய ஏற்பாட்டின்படி(உபா 24:1,2) மறுமணம் செய்யலாம். எனவே, முறையாக, சட்டப்படி, விவாகரத்து பெற்றவர்கள், மறுமணம் செய்து கொள்ளலாம்.
இக்கட்டுரையில் பல இடங்களில் ”வாழாவெட்டி” என்ற வார்த்தையை பயன் படுத்தியிருக்கிறார். இந்த மாதிரியான வார்த்தைகளையெல்லாம் முதலில் தமிழ் அகராதியிலிருந்து எடுத்துப் போட வேண்டும். ”வாழாவெட்டி” என்று சொல்வதற்கு என்ன செத்தா போய் விட்டார்கள்?
ஆண்டவர் உடன் இருப்பவர்கள் வாழ்பவர்கள். ஆண்டவர் உடன் இல்லாதவர்கள் தான் வாழாவெட்டிகள்.
திருமண பந்தத்துக்கு தடையாகவும் பிரிவுக்குக் காரணமாகவும் பெரும்பாலானோர் வெட்கத்தை விட்டுச் சொல்லும் காரியம் என்னவென்றால் தாம்பத்ய உறவு சம்பந்தமான காரணங்களே;
இது சம்பந்தமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்கிறார்களே;அப்படியானால் தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்பது பொய்யானதா அல்லது இது கர்த்தரால் வந்த காரியம் என இல்வாழ்க்கையில் இணைந்தது போலியானதா?
திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களையே சரி செய்யவேண்டுமே தவிர திருமண பந்தத்தை முறிப்பது எந்த வகையிலும் சரியல்ல;
நான்,"கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா?" என்ற கேள்வியை எழுப்பக் காரணமே கிறிஸ்தவத்தில் இதுகுறித்த நேரடியான போதனை சொல்லப்பட்டிருப்பதினால்தான்;
மாற்று மார்க்கத்தவர்கள் இயல்பாகவே 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மாண்பைக் கடைபிடிக்கும் போது (அது தனி விவாதம்... இங்கே விவாகரத்து சம்பந்தமானவற்றை மட்டுமே விவாதித்தல் நலம்.) ஓயாமல் பைபிளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களோ அதற்கு முரணாக அதுவும் இயேசுவானவரின் போதனைக்கு முரணாக ஏன் கோர்ட்டுக்குச் செல்லவேண்டும் என்பதே ஆராயப்பட காரியமாகும்.
-- Edited by chillsam on Wednesday 20th of January 2010 01:55:11 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நல்லது வாசகர்களின் கருத்தை கேட்க விருப்பமாய் இருக்கிறீர்கள்.
அவற்றை எல்லாம் பார்த்து விட்டு உங்களின் கருத்தையும் வெளிப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.
உங்கள் எல்லோரின் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன். என்னுடைய கருத்து என்ன வென்றால் நீங்கள் கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா? என்று கேட்டதற்கு பதிலாக,
விவாகரத்து செய்யலாமா? என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
இந்த விடயத்தில் இயேசு கிறிஸ்துவின் கருத்தே என் கருத்து. விபச்சாரக் காரணத்துக்காக அல்லாமல் வேறு எந்த காரணத்துக்காகவும் மனைவியை தள்ளி வைப்பது சரியல்ல என்பதே என் கருத்து. இந்தக் கருத்தை உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்குமாக சொல்கிறேன்.
பெரும்பான்மையான இந்தியர்கள், தான் மணம் முடித்த பெண்ணை கடைசி வரைக் கை விடாமல், சாகும் வரை அதே பெண்ணுடன் வாழும் முறையைப் பாராட்டுகிறேன். அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.
விவாக ரத்து குழந்தைகளுக்கு , குடும்பத்துக்கு, வீட்டுக்கு, சமுதாயத்துக்கு, நாட்டுக்கு, கேடு என்பதே என் கருத்து.
கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆதாரப் போதனைகளை கவனித்தால் அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் போதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்;அவை கடினமானதைப் போலக் காணப்பட்டாலும் மிகவும் எளிமையானது;
அவற்றில் சில காரியங்களை ஆராயப் போகிறோம்; அதில் ஒன்று,கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா?
இதைக் குறித்த எனது கருத்தைச் சொல்லும் முன்பு வாசக நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்கவேண்டுகிறேன்;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)