சரியா போச்சு...ச்சும்மா எதுகையாக எதையோ எழுதி வைக்க அது ஒரு விவகாரமா..?
சரி விளக்க முயற்சிக்கிறேன்,ஆனால் வம்புக்கு வரக்கூடாது;
// தேவனை துதித்தால் நதி பெருகுமா? புரியவில்லையே சகோதரரே! // துதிப்பதால் உள்ளத்தில் பெருகுவது சந்தோஷ நதி, ஜீவ நதி...etc நதியானது எப்படி கரைபுரண்டு வருகிறதோ அதுபோல ஒரு தேவனுடைய பிள்ளையின் உள்ளத்திலிருந்து நற்கிரியைகள், அன்பு போன்ற நதிகளும் பெருக்கெடுத்து ஓடும். //தேவனை மதித்தால் வருவது நீதியா? அல்லது நிதியா? கொஞ்சம் விளக்குங்கள் //
தேவனை என்று நான் எழுதவில்லை,ஆனால் அதுவும் சரியே;
"வேதத்தை மதி;அது தருமே நிதி" நிதி என்பது பணத்தை மட்டுமே குறிக்காது என்று நினைக்கிறேன்;(உதாரணத்துக்கு: கருணாநிதி,செல்வநிதி...)
நிதி என்பது பணமேயானாலும் வேதம் பணத்துக்கு எதிரியல்லவே; சிலர் பணத்தை நாடி விசுவாசத்தினை விட்டு விலகுவர்;ஆனால் வேதத்தை நாடி அதில் நிற்போர் இவ்வுலகில் அனைத்தும் பெறுவர்;
வேதத்தை மதிக்காமல் பணத்தை நாடி தன்னை இழந்தோர் அநேகர்;வேதத்தை மதித்து பணத்தை மறுத்து தம்மைத் தந்தோர் பலர்.
-- Edited by chillsam on Wednesday 13th of January 2010 02:47:05 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)