Tag:VNK.Dino@கொள்வினுக்கான வேதப்பதிவுகளின் விளக்கம்
கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளவை அதிர்ச்சிரகம்...இதில் கிஞ்சித்தும் உண்மையில்லை என்பது வெளிப்படையாகும்.
// அடுத்து சில்சாம் என்ன என்ன திருட்டு வேலைகளை செய்கிறார் என்று அவரின் நெருங்கிய நண்பன் மூலமாகவே அவரின் முழுவிவரமும் அறிந்துகொண்டேன்.//
இது தினோ என்பவரின் கூற்றாகும்;அவர் இதில் எழுதியிருப்பதுபோல இவ்ர்களுடன் நமக்கு பங்காளி சண்டையோ கொடுக்கல் வாங்கல் விவகாரமோ எதுவுமில்லை;இவர்கள் இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமல்ல என்றும் அவர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்று சொல்லுவதும் மாத்திரமே அவர்களுடனான நமது அனைத்து பிணக்குகளுக்கும் காரணமாகும்.
இதனைப் பொறுக்கமுடியாமல் எதிர்தாக்குதல் நடத்துகிறேன் பேர்வழி என்று உண்மைக்கு மாறான தகவல்களை இங்கே பரப்புவது சிறுபிள்ளைத்தனமான கீழ்த்தரமான வேலையாகும்;இவரோ அல்லது இவரது கூட்டாளிகளான வேதபுரட்டர்கள் யாருமே என்னைக் குறித்து ஒன்றும் அறியாதவர்கள்.
நான் புனைப்பெயரில் எழுதும் ஒரு சாதாரண வழிப்போக்கன்;
எனக்கு சபை கிடையாது;
நான் பாஸ்டரும் கிடையாது;
இதுவ்ரை என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் செய்ததில்லை;அப்படியானால் எனது சொந்த பெயரில் இங்கே எவ்வளவோ செய்திருக்கலாம்;அதையெல்லாம் செய்ய பலர் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே இந்த அருடபணியில் தன்னார்வத்துடனும் தியாகத்துடனும் ஈடுபட்டிருக்கிறேன்;இதற்காக நான் யாரிடமும் ஒரு காசும் உபகாரமாகப்பெற்றதில்லை,பெறப்போவதுமில்லை.
எனக்கு நண்பன் என்று யாருமில்லை;அப்படியே இருந்தாலும் என்னைக் குறித்து அவதூறாகச் சொல்லுபவன் நண்பனுமல்ல;எனவே தினா எனும் உண்மைவாதி - நேர்மையாளர் என்னைக் குறித்த மர்மமான முழு காரியத்தையும் சொல்லும்படி அவரை பணிவுடன் வேண்டுகிறேன்;அது எப்பேற்பட்ட மோசமான காரியமாக இருந்தாலும் பரவாயில்லை; இரண்டாவது முறையாக அவர் இதுபோல எழுதுவதால் அவர் நிச்சயமாக இதைக்குறித்த விளக்கத்தைக் கொடுத்தே ஆகவேண்டும்;அதனை ஆதாரத்துடன் கொடுத்தால் மட்டுமே நான் ஏற்கவோ மறுக்கவோ வாய்ப்புண்டாகும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகிறேன்; "ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் எதற்கு" என்பார்கள்;அதுபோல என்னைக் குறித்த இரகசியம் என்பது எதுவுமில்லை என்பதே என்னைக் குறித்த அதிபயங்கரமான இரகசியமாகும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
என்னை குற்றம் கண்டுபிடிப்பவன் என்று குற்றஞ்சாட்டும் சிலர் இங்கே தளத்திலும் நான் வாழும் பகுதியிலும் இருக்கிறார்கள்;ஒருவேளை நான் அதுபோன்ற நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறேனோவென்று என்னை நானும் ஆராய்ந்துபார்க்கிறேன்.
அதற்கேற்றாற்போல் அவர்கள் சொல்லும்போது,"இவன் எல்லோரையும் குற்றஞ்சாட்டுகிறான், இவன் சாதித்தது என்ன, இதுவரை ஒரு ஆத்துமாவையாகிலும் ஆதாயப்படுத்தியிருப்பானா, ஆனால் இவனால் குற்றஞ்சாட்டப்படுவோர் எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள், ஏஞ்சல் டிவி சாது ஐயாவின் தீர்க்கதரிசனத்தால் தொடப்பட்ட ஒரு இளம்பெண் தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட்டாள், இதுபோன்ற எவ்வளவோ பேருக்கு அவர் ஊழியம் செய்கிறார்,அவ்வளவு ஏன் ஒரு டிவியை நடத்துவதென்றால் சாதாரணமான காரியமா? " என்கிறார்கள்;
நானும் யோசித்தேன், ஆம் நியாயந்தான், ஆனாலும் குட்டிப் போடும் எல்லா மிருகங்களும் விசேஷமானதா, எல்லா மிருகங்களும் சுத்தமானதா, பன்றி கூட குட்டி போடுகிறது, அதனால் என்ன பலன், நாய் குட்டி போடுகிறது அதினால் யாருக்கு என்ன லாபம், அதுபோலவே குட்டி போடுவது பெரிய காரியம் அல்ல, எப்படிப்பட்ட குட்டி போடுகிறாய் என்பதே காரியம்...
புட்டபர்த்தியிலும் மேல்மருத்துவத்தூரிலும் கூட இதேவிதமான அற்புத செயல்களும் அதிசயங்களும் நடைபெறுகிறது;அவர்களுடைய நிர்வாகம் இதைவிட உண்மையானதாகும் நேர்மையானதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது; அரசாங்கம் மற்றும் சமுதாயத்தின் ஆதரவும் அபரிமிதமாக இருக்கிறது; அதற்காக அவர்களும் புனிதர்களாகிவிடமுடியுமா? இத்தனைக்கும் அவர்களெல்லாம் மாற்று மதநம்பிக்கையாளரையோ இன்னொரு பீடத்தையோ குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் எதுவும் சொல்லுகிறதில்லை..!
ஆனால் இங்கோ... என்னவென்று சொல்ல...ஏன்,நானே இருக்கிறேனே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ சில்சாம் மற்றும் சகோ. கோவைபெரியன்ஸ் சொல்லக்கூடிய ஒரே ஆலோனை சமாதானமாகப் போங்கள் என்பதாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால் உங்கள் குடும்பங்கள்தான் இதனால் பாதிக்கப்படும். எனவே ஒருவரை ஒருவர் திட்டுவதையும் தூஷிப்பதையும் விட்டு விடுங்கள்.
சட்டநடவடிக்கை எடுப்பதனால் இருவரும் குற்றவாளிகள்தான். கொலைமிரட்டல் விடுவதும் குற்றசெயலே.இராணுவத்தை பழித்துக் கூறுவதும் குற்றசெயல்கள்தாம்.
எனவே இவற்றை கவனத்தில் கொண்டு செயற்படவும்.
தேவையற்ற வீண் சச்சரவுகள் எமக்குள் வேண்டாம் சகோதரர்களே!
சகோதரரே. நீங்கள் உடனடியாக உங்களுக்கு அண்மையில் இருக்கும் மனித உரிமைகள் அமைப்புடன் கலந்தாலோசனை செய்யுங்கள். உங்கள் செல்போனில் அவர் மிரட்டியதாக நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள தகவல்களையும் நீங்கள் அவரைக் குறித்து பதிந்த விடயத்தையும் மனித உரிமை அமைப்பிடம் ஒப்படையுங்கள். அவர்களின் சட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். மாற்றுமுயற்சிகளில் தற்போதைக்கு ஈடுபட வேண்டாம். அது பின்விளைவுகளை உங்களுக்கு கொண்டுவரும்.
உங்கள் தனிப்பட்ட விடயங்களை இணையத்தில் இன்னொருவர் பதிப்பது சைபர் சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதனையும் மனித உரிமைகள் அமைப்பிடம் தெரிவித்து அவர்களின் சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அதன்படி செயற்படுங்கள். அத்துடன் Activeboard இற்கும் இதுபற்றிய விபரங்களை எழுத்துமூலம் தெரிவித்து உரிய வழியில் அவரின் தளத்தை முடக்கும்படி கோருங்கள். / எச்சரிக்கை கொடுக்க சொல்லுங்கள். சட்டப்படி அனுமதியில்லாமல் உங்கள் தொலைபேசி இலக்கத்தை பகிரங்கமாக கொடுத்ததே குற்றமாகும்.
ஒரு தனி மனிதனுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
என்னுடைய இயற்பெயர் சில்சாம் அல்ல;நான் புனைப் பெயரில் எழுதுவதே என்னுடைய கருத்துக்களை சுதந்தரமாக வெளியிடுவதற்காகவே;ஆனாலும் இன்றைய நவீன யுகத்தில் யாரும் அந்தரங்கமாக ஒளிந்துகொண்டு இரகசியமாக எதையும் செய்யமுடியாது என்பதையும் அறிந்திருக்கிறேன்.
நம்முடைய வாழ்க்கை பயணத்தில் பலரை சந்திக்கிறோம்;அவர்களில் யார் எப்போது நண்பர்களாகத் தொடருவார்கள் என்பதையோ யார் விரோதிகளாகவும் துரோகிகளாகவும் மாறுவார்கள் என்பதையோ அறியமுடியாததே மனுக்குலத்தின் துக்கமாக இருக்கிறது;அதுபோலவே எனக்கும் சம்பவித்திருக்கிறது;இந்த விஷயத்தில் இஸ்லாமியருக்கு எதிராக மறைவிடத்திலிருந்து போராடிவரும் உமர் எனும் சகோதரர் மேற்கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளாதது எனக்கு பெலவீனமாகிவிட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக என் வீட்டில் வந்து என்னை சந்தித்த ஒரு நபர் தற்போது சத்தியத்தினிமித்தம் எனக்கு விரோதியாகி இருக்கிறார்; முறையான கல்வியறிவு பெறாத நான் இணையதள உலகின் எந்த சூட்சமங்களும் நுணுக்கங்களும் அறியாததால் ஆரம்பத்தில் பலரிடமும் வித்தியாசமில்லாமல் பழகியிருக்கிறேன்;ஆனாலும் யாரிடமும் எதற்காகவும் யாசகம் கேட்டதில்லை;பணம் சம்பாதிப்பதற்காக எனது ஊழியத்தைப் பயன்படுத்தியதும் இல்லை;ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பொதுகாரியத்துக்காக உதவி வேண்டி எனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்;அந்த மின்னஞ்சல் மூலம் ஒரு பைசா கூட உதவி கிடைக்கவில்லை என்பதே உண்மை.
நண்பர்கள் என்று நான் நம்பி அனுப்பிய அந்த மின்னஞ்சலில் இருந்து பெற்ற எனது இயற்பெயரையும் எனது வங்கி எண் விவரத்தையும் வைத்துக்கொண்டு தற்போது என்னை மலிவான முறையில் பணிய வைக்க ஒரு முன்னாள் நண்பர் முயற்சிக்கிறார்;தேச துரோகி(?)யான என்னுடைய புகைப்படத்தையும் இணையத்தில் போட்டு அவமானப்படுத்தப்போகிறாராம்; இது எந்தவகையில் நாகரீகமோ தெரியவில்லை;அதைக் குறித்து கவலைப்பட்டு கலங்கும் மனநிலையிலும் நான் இல்லை;ஆனால் சில காரியங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்;அது என்னுடைய உயிருக்கும் உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டி செய்யும் விண்ணப்பமாகவே இருக்கட்டும்;எனக்கு இதனால் எந்த நேரமும் எதுவேண்டுமானாலும் நேரலாம்;ஏனெனில் பல தளங்களில் பலரையும் பகைத்துக்கொண்டிருக்கிறேன்;இன்றைக்கு கோவையைச் சேர்ந்த இவர் இல்லாவிட்டால் நாளைக்கு வேறொரு எதிரி புறப்பட்டு எனக்கு தீமை செய்யமுடியும்;ஏற்கனவே என்னுடைய மொபைல் எண்ணை இங்கே கொடுத்துள்ளேன்;அதன்மூலமே என்னை முன்னாள் இராணுவ வீரரான "xxxxx" என்பவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்; தற்போது தேசதுரோகக் குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்;தற்போது நிர்பந்தமான நிலையிலிருக்கும் நான் எனது பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்த தெளிவில்லாமல் மனஅழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறேன்;என்னை, நேரில் வந்து வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விட்டாரே அதற்காக பயப்படுவதா அல்லது தேசதுரோகி என்ற குற்றச்சாட்டில் கோர்ட்டுக்கு இழுப்பேன் என்று மிரட்டுகிறாரே அதற்காக பயப்படுவதா என்று புரியவில்லை;பாதுகாப்பு கோரி காவல் நிலையத்துக்குச் செல்வதா அல்லது முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்குச் செல்வதா என்று தெரியவில்லை;இதற்கெல்லாம் செலவாகக் கூடிய சில ஆயிரம் ரூபாய் பணம் கூட என்னிடத்தில் இல்லை.
இதோ என்னுடைய முழுவிவரமும் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டு நான் அவமானப்படுத்தப்படும் சூழ்நிலையில் நான் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான், நான் யாருக்காக இங்கே போராடினேனோ அவரே என்னை விடுவிக்கட்டும்;நான் யாருக்காக இழிசொற்களையும் அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிறேனோ அவரே எனக்காக வழக்காடட்டும்; இன்னும் என்னுடைய முழு வாழ்க்கை சரித்திரமும் கூட விரைவில் பதிக்கப்படலாம்;ஏனெனில் எனது வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து எழுதிய புத்தகத்தையும் எதிரியை சந்தித்தபோது கொடுத்த ஞாபகமிருக்கிறது; இத்தனை கீழ்த்தரமாக செயல்படுவார்கள் என்பதை அறிந்திருந்தால் நான் இன்னும் எச்சரிக்கையாகப் பழகியிருப்பேன்;
என்னுடைய இந்த மோசமான அனுபவம் பொது தளங்களில் தங்கள் கருத்துக்களை சுதந்தரமாக வெளியிடும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு எச்சரிப்பாகும்;தற்போதைய சூழ்நிலையில் எனக்கு இரண்டே வாய்ப்பு மட்டுமே உண்டு;அதுவும் ஒரே வாய்ப்பாகவும் எதிரியின் உக்கிரத்தினால் மாறக்கூடும்;அதாவது சில்சாம் எனும் பெயரில் இனியும் நான் செயல்பட முடியாது;நான் சாகவேண்டும் அல்லது நான் எழுதுவதை நிறுத்தவேண்டும்; அதுவே எதிரியின் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது;குறைந்தபட்சம் அவரைக் குறித்து எழுதுவதை நிறுத்தவேண்டும்;இதே நிலை அவருக்கும் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை;முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமல்லவா?
இவரை சொல்லும் ஒரு வார்த்தை முழு சமுதாயத்தையும் ஏன் முழு இந்தியாவையுமே குறிக்கும் என்பது எத்தனை பெரிய அறியாமை அல்லவா? உதாரணமாக கறுப்பு பணத்துக்கும் வட்டி பணத்துக்கும் காவல் நிற்கிறாய் என்று ஒருவரை சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் அவர் பணம் சம்பந்தமான காரியங்களில் யாரையோ புண்படுத்தி பேசியிருக்கிறார் என்பது தானே அதன் பொருள்? வங்கியில் இருக்கும் மொத்தப் பணமும் கறுப்புப் பணம் என்று யாராவது சொல்லுவார்களா? அது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருமே மோசடியாளர்கள் என்று சொல்லுவதைப் போலவே அது ஆகும்.
எனக்கு வங்கி அமைப்பின் மீதோ காப்பீட்டு திட்டங்களின் மீதோ நம்பிக்கையில்லை;ஏனெனில் எனக்கு அவ்வளவு வருமானம் இல்லை; என்னுடைய அன்றாட செலவுகளுக்குத் தேவையானதை காக்கை, குருவிகளைப் போல தேடி சேர்த்து அதைக் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் போஷித்து அத்துடன் திருப்தியடைகிறேன்;எனவே எனக்கு வங்கியில் கணக்கு இருந்தாலும் நான் வங்கிக்கு செல்வதில்லை; ஒரு வருடத்தில் அதிகபட்சம் பத்து முறை வங்கி பக்கம் சென்றால் அதுவே அதிகம்;ஆனாலும் வங்கியில் கணக்கு வைப்பதைக் குற்றமாக நான் கருதவில்லை;அது என்னுடைய வாழ்க்கை முறையைப் பொருத்த விஷயமே;நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது எனது நண்பனைத் தொடர்ந்து நானும் வங்கி கணக்கைப் பெற்றேன்;அதுவே இன்னும் தொடருகிறது;நண்பர்கள் விரும்பினால் என்னுடைய கடந்த ஐந்து வருட வங்கி ஸ்டேட்மெண்ட்டை வாங்கி பதிக்கிறேன்;அதன்மூலமே எனக்கு வங்கியின் மீது இருக்கும் ஈடுபாட்டை நண்பர்கள் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் வங்கியில் பணிபுரிவதையும் இராணுவத்தில் சேவை புரிந்ததை மாத்திரமே தனது உயர்வான தகுதியாகக் கருதிக்கொண்டு மற்றவர்களைக் கீழ்த்தரமாக ஒருவர் தூஷித்து எதிர்தரப்பினரின் உணர்வுகளையும் தன்மானத்தையும் தூண்டும் வண்ணம் பேசினால் என்ன செய்யலாம்? என்னை கோர்ட்டுக்கு இழுத்தாலும் சரி என்னுடைய புகைப்படத்தைப் போட்டு அவமானப்படுத்தினாலும் சரி அதினால் விளையக்கூடிய முழு தீமைகளுக்கு "xxxxxx" அவர்களே பொறுப்பேற்றுக்கொள்ளுவார்;எனக்கு சமுதாயத்தில் எந்த எதிரிகளும் கிடையாது;ஆனால் இணையத்தில் பலரையும் நான் கோபப்படுத்தியிருக்கிறேன்;இதினிமித்தம் என்மீது கொலைவெறி கொண்டு என்னை அவமானப்படுத்தி அடக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் (மேசியாவின்) எதிரிகளிடம் எந்தநிலையிலும் நான் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை;ஏனெனில் அவர்கள் மெய்யாகவே சமாதானத்தை விரும்புகிறவர்களாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் மின்னஞ்சல் மூலம் இதே எச்சரிக்கையை எனக்கு விட்டிருக்கலாம்;அதைச் செய்யாமல் இங்கே அதிரடியாக என்னைக் குறித்த விவரங்களை வெளியிடுவதாக மிரட்டுவதிலேயே என்னை மிரட்டி பணிய வைப்பதற்கு முயற்சிப்பது தெரிகிறது;அவர்கள் விரும்பினால் என்னைக் குறித்த விவரங்களை உடனே நீக்கிவிட்டு இணக்கமான சூழ்நிலை உருவாக உதவிசெய்யட்டும்.
நான் ஒட்டுமொத்த இராணுவ வீரர்களையோ அல்லது வங்கிகளில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவவீரர்களையோ இழிவுபடுத்தி எதையும் எழுதவில்லை என்பதை சுத்தமான மனசாட்சியுடன் மீண்டும் மீண்டும் உறுதிகூறுகிறேன்;இதை ஏற்றுக்கொள்ளாமல் என்னை மேலும் மேலும் துன்புறுத்தினால் அதற்குரிய விளைவுகளை எதிரிகள் விரைவில் சந்திப்பார்கள்;என்னையும் அவர்களையும் உண்டாக்கின கர்த்தரே எனக்காக யுத்தம் செய்வார்;நான் கர்த்தர் சார்பில் விழுகிறேன்.
கோவை வெறியன் என்று நான் அன்போடு அழைக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதய வங்கி ஊழியருமான "xxxxxx"அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:உங்கள் பொற்கரங்களால் என்னுடைய வங்கி எண்ணையும் கொடுத்துவிட்டால் வங்கி சம்பந்தப்பட்ட பணியிலிருப்போர் என்னுடைய கணக்கிலுள்ள வரவு செலவு விவரங்களை அறியவும் என்மீது அனுதாபப்பட்டு என் கணக்கில் ஏதேனும் பணம் போடவும் வாய்ப்பாக இருக்குமே,செய்வீர்களா?
கடந்த இரண்டு வருடங்களாக இணையதளத்தில் வேறு யாரையும் விட அதிகமாக கிறித்துவின் சரீரமாகிய சபைக்காக உழைத்திருக்கும் அடியேன் அதற்கான கூலியை இதுவரை பெறவில்லை;அந்த கூலியை உங்கள் மூலம் நான் பெறவேண்டும் என்பது ஆண்டவருடைய தீர்மானம் போலும்;அது என் பேரை ஏதோ ஒருவகையில் பிரபலப்படுத்தப்போகிறது;செய்வதை சீக்கிரம் செய்யுங்கள்,ஐயா..!
இறுதியாக ஒரு அறிவிப்பு:
அடியேன் எனது இணையதளப் பணியில் குறைந்த பட்சம் 48 மணிநேரம் ஈடுபடாதிருந்தாலே அபூர்வம்;இதனை கடந்த இரண்டு வருடமாக என்னை கவனித்துவரும் நண்பர்கள் நன்கு அறிவார்கள்; ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் நான் அமைதியாக இருந்தாலோ அல்லது எனது இணையப் பக்கங்களை மூடிவிட்டு அமர்ந்திருந்தாலோ நான் ஓடிவிட்டதாகக் கூறி இன்னும் இழிவுபடுத்துவார்கள்;அது நான் யாருக்காகப் போராடினேனோ அவருக்கே அவமானமாக முடியும்;எனவே முன்பைவிட அதிகமாக இங்கே பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் திடீரென என்னைக் காணாவிட்டால் நண்பர்கள் குழம்பிப்போகவேண்டாம்;அது நிச்சயமாக கோவை பெரியன்ஸ் என்ற பெயரில் இயேசுவை தெய்வமாகத் தொழுவோரை தூஷித்து எழுதும் XXXXXX அவர்களது குழுவினரின் கைங்கர்யமாகவே இருக்கும்; ஏனெனில் என்னை அடக்குவதற்காகவே ஒரு விசேஷித்த திட்டத்துடன் அவர்கள் குழு அமைத்திருப்பதாகத் தெரிகிறது;அதற்கான அனைத்து செலவுகளையும் சமாளிக்கும் வல்லமையும் செல்வாக்கும் அவர்களுக்கு இருக்கிறது என்று அஞ்சுகிறேன்.
எனவே நான் 48 மணிநேரத்துக்கு மேல் எந்த பதிவையோ விமர்சனத்தையோ போடாமல் காணாமற்போனால் நண்பர்கள் தயவுசெய்து என்னைக் குறித்து குழம்பாமல் கோவை வெறியன் அவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கவும் அல்லது அவர் கொடுத்துள்ள எனது மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரிக்கவும்;நான் எனது மொபைல் எண்ணை மாற்றப்போவதில்லை;அதனை அணைத்துவைக்கும் வழக்கமுமில்லை.நான் உயிரோடு இருக்குமளவும் இங்கே பணியாற்ற தீர்மானித்திருக்கிறேன்;எனது சுதந்தரம் பாதிக்கப்பட்டு சிறைபட்டாலும் வெளியே வந்து தொடர்ந்து தெருவில் நின்று போராடுவேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பான நண்பர் அசோக் அவர்களின் அன்புக்கு கர்த்தருடைய வருகை பரியந்தமும் உண்மையாக இருக்க கர்த்தர் தாமே கிருபை பாராட்டுவாராக;நாம் நட்புகொள்ள காரணமாக இருந்த திருச்சிக்காரனை மறந்துவிட்டீர்களே..?!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பரே, தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் விசாரிப்புக்கும் அறிவுரைக்கும் எனது நன்றிகள்;இந்த யௌவன ஜனம் தளமானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது;இதனை நீங்கள் உறுப்பினர் விவரத்திலிருந்தே அறியலாம்.
தாங்கள் அறிந்தவண்ணமாக நான் யாரையும் மனம்நோக பேசுவதையோ எழுதுவதையோ விரும்பாதவன்;எனது உணர்வுகள் எதையும் மறைக்காமல் இங்கே உள்ளது உள்ளபடியே எழுதிவருகிறேன்;அதன்மூலமே எனது இயல்பையும் குணாதிசயத்தையும் எவரும் நிதானிக்க இயலும்;எனக்கும் குடும்பம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் நான் யாருடைய குடும்பத்தையும் தரக்குறைவாக எழுதுவதால் புகழ்பெற இயலாது என்பது அறிந்ததே;மாறாக அதுபோன்ற செயல் எனக்கு இழுக்காகவே அமையும்;எனவே (மேசியாவின்) எதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்தை தயவுசெய்து நம்பவேண்டாம்;எனது விளக்கங்களுக்கு சற்று மனம் பொருந்தவும்;நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அட ஆயிரம் பதிவுகளைக் கடந்து விட்டீர்களா? வாழ்த்துக்கள் நண்பரே! காலமட போனதே தெரியவில்லை. நீங்கள் தளம் ஆரம்பித்து 2 வருடங்கள் இருக்குமா?
உங்கள் எழுத்துக்களையும் மீள்பரிசீலனை செய்வது மிக நன்று; உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். மற்றவர்கள் மனம்நோக எழுத வேண்டாமே! கருத்துக்களை மட்டும் விமர்சியுங்கள். அவர்களைப் பற்றியோ அவர்களின் குடும்பங்களைப் பற்றிய விமர்சனங்கள் தேவையற்றவை. இதனால் பலவித சிக்கல்கள் எழுகி்ன்றன.
இது எனது கருத்து மட்டுமன்று. புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்; God Bless You.
நகரத்தின் கடைவீதிக்குச் சென்றால் ரெடிமேட் துணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைவாசலில் ஒரு ஆள் நின்றுகொண்டு போவார் வருவோரையெல்லாம், "வாங்கம்மா வாங்க... வாங்க ஸார், வாங்க" என்று வருந்தி அழைப்பார்;அவருக்கு இதுபோல அழைப்பது மட்டுமல்ல, மேலும் இரு முக்கிய பணிகளைச் செய்யவேண்டிய பொறுப்பும் உண்டு;அது என்னவென்றால் வியாபாரம் எதுவும் செய்யாமல் ச்சும்மா வேடிக்கை பார்க்கவரும் சில விஷமிகள் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை களவாடிச் சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்;மேலும் உள்ளே சென்றுள்ள வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருட்களுக்குரிய பணத்தை செலுத்திவிட்டு செல்லுகிறாரா என்று கண்காணிக்கவேண்டும்;இதில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டாலோ குழப்பம் நிகழ்ந்தாலோ முதலாளிக்கு அவர் பதில் சொல்லவேண்டியதாகும்;மேலும் கலகம் செய்யும் நோக்கத்துடன் எந்த போக்கிலியாவது வந்தால் அவனை அடித்துவிரட்டவும் ஆயத்தமாக இருக்கவேண்டும்;சமயத்தில் கடைவாசலில் வாடிக்கையாளர் நிறுத்தி செல்லும் வாகனத்தையும் வைத்துப்போகும் பொருட்களையும் கண்காணிக்கவேண்டும்;இத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்து செய்யும் அந்த நபருக்கு பெரிதாக எந்த சம்பளமும் தரப்படுவதில்லை;ஆனால் எல்லோருக்கும் இசைந்து போகவேண்டும்; வேலைப்பளுவும் அதிகமாகும்.
இப்படிப்பட்ட பணியையே நான் கிறித்துவின் சரீரமாகிய சபைக்காகச் செய்துவருகிறேன்;நான் போதகனோ பாஸ்டரோ தலைவனோ கிடையாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன்;கிறித்து சபையின் வாசலிலிருந்து அநேகரை வரவேற்று உள்ளேஅனுப்பவும் உள்ளேயிருந்து யாரும் வெளியேறினால் விசாரிக்கவும் பணிக்கப்பட்டிருக்கிறேன்; எனக்கென்று எந்த சபையுமில்லை;ஊரெல்லாம் என்னுடைய சபைகளே; எனக்கென்று சொந்தங்களில்லை;சபையாரெல்லாம் என் சொந்தங்களே;நான் எதையோ அறிந்தவன் போல யாருக்கும் எதுவும் போதித்ததில்லை;எந்த மாறுபாடான கொள்கைகளையும் அறிவித்ததுமில்லை;ஆனாலும் சர்ச்சைக்குரிய காரியங்களைச் செய்து கிறித்துவின் சபைக்கு இடறலாக இருக்கும் கயவர்கள் வந்து மோதும் தடைக்கல்லாக இருக்கிறேன்; கிறித்து சபையின் பிள்ளைகளுக்கோ சுமைதாங்கி கல்லாக இருக்கிறேன்; இதனால் எனக்கு பாதிப்புகள் அதிகம் போலத் தெரிந்தாலும் சுமக்கும் எனக்கு லேசாகவே இருக்கிறது;ஏனெனில் அதற்காகவே அழைக்கப்பட்டேன்;நான் போதிக்கப்பட்டு போதிக்கும் போதகன்; ஆலோசனை பெற்று ஆலோசனை தரும் ஆலோசகன்; போஷிக்கப்பட்டு போஷிக்கும் மேய்ப்பன்; தேற்றப்பட்டு தேற்றும் ஆவியைப் பெற்றவன்; சுத்த சுவிசேஷத்தை அறிவிக்கும் வரைக்கும் உயிருடனிக்கவிரும்பும் சாதாரண வழிப்போக்கன்.
இதில் குற்றங்காணும் எவனும் குற்றவாளியாவான்;ஏனெனில் வேதம் சொல்லுகிறது,"...நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்." (சங்கீதம்.34:21)கிறித்து எனது நீதியாக இருப்பதால் என் வழக்கையும் என் காரியத்தையும் அவர் மீது சாட்டியிருக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எளிமையாகத் துவங்கிய இந்த இறைப்பணியில் 1000 பதிவுகளைக் கடக்கச் செய்த இரட்சகரைத் துதிக்கிறேன்;ஒரு சில வரிகளில் எழுதியவை மிகமிகக் குறைவு;ஒவ்வொரு கட்டுரையையும் பின்னூட்டத்தையும் எழுத பலமணிநேரங்கள் செலவானது;பக்க எண்ணிக்கையில் அவை பல்லாயிரம் பக்கமுள்ளவைகளாக இருக்கும்;அவ்வளவையும் என் கைப்பட தட்டச்சு செய்திருக்கிறேன்;காப்பி பேஸ்ட் செய்தவை மிகமிகக் குறைவு; இத்தனைக்கும் பெலனையும் ஞானத்தையும் கொடுத்த சர்வ வல்ல தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்;எனது எழுத்துக்களின் நிமித்தம் உண்டான நிந்தனைகளையும் தூஷணங்களையும் தவிர எல்லா மகிமையையும் அவருக்கே செலுத்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பர் கொல்வின் அவர்களுடைய கருத்துக்காக நன்றி;தாங்கள் குறிப்பிட்ட "நான், அறிந்தவரை" ஆகிய இரு சொற்களே அனைத்துக்கும் போதுமானது;மற்றபடி என்னைக் குறித்தும் என்னுடைய நோக்கங்களைக் குறித்தும் ஏற்கனவே பக்கம் பக்கமாக எழுதிவிட்டதால் இதற்கு மேலும் எனது சுயபுராணத்தைப் பாடி அனுதாபம் தேட நான் விரும்பவில்லை.
அதே நேரம் கடந்த ஒரு வருடத்தில் திரு.சுந்தர் அவர்கள் பதிவிட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேலான பதிவுகளைப் படித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதும் இயலாத காரியமாகும்;அதது அப்படியப்படியே போகட்டும்.
ஆனால் நான் ஒன்று நிச்சயமாகச் சொல்வேன்,நான் சுந்தரைக் குறித்து மட்டுமல்ல, அனைவரையுமே நேர்மையுடன் பெயரைக் குறிப்பிட்டே எழுதுகிறேன்;ஆனால் சுந்தர் போன்றவர்கள் மிகவும் தந்திரமாக வேறு வகையில் தாக்கி எழுதுகிறார்கள்;அது சம்பந்தப்பட்டவருக்கே புரியும்;அந்த எழுத்துக்களுக்கு வெளிச்சம் போட நான் விரும்பவில்லை.
இந்த கலாச்சாரத்தை நான் தான் ஆரம்பித்து வைத்தேன் என்பீர்களாகில் அதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சிதானே தவிர வருத்தமில்லை;அத்தனை பெரிய புகழுக்கு அடியேன் தகுதியானவன் அல்ல என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களிடம் நான் வைக்கக்கூடிய ஒரு சின்ன வேண்டுகோள்... என்னுடைய ஆரம்பக்கால பின்னூட்டங்களை அவர்களுடைய தளத்திலேயே சென்று என்னுடைய பெயரைத் தொடர்ந்து வரக்கூடிய உறுப்பினர் பதிவுகள் (member posts) தொகுப்பிலிருந்து வாசித்துப் பாருங்கள், அப்போதாவது உண்மை நிலவரம் உங்களுக்குத் தெரியவரும்; நான் அவர்களை எவ்வளவாய் நேசித்து, நட்பு பாராட்டினேன் என்பதையும் எதிர்கருத்தைப் பொறுக்கமுடியாமல் அவர்கள் நடந்துகொண்ட முறைகளையும் பார்த்தபிறகு என்னைக் குறித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
மேலும் இங்கே நீங்கள் பகிர்ந்துகொண்ட கருத்தும் கூட இன்று காலையில் நான் பதிவிட்ட வரிகளுக்கு சம்பந்தமில்லாததாக இருப்பதையும் கவனிக்கவும்;நான் போதகர் என்று அழைக்கப்பட விரும்புவதாக ஒரு தவறான தகவலை தளநண்பர்கள் முன்பு வைத்திருக்கிறார்கள்;அதனை நான் மறுத்து நான் எனது கருத்தைக் கூறியிருக்கிறேன்;உங்கள் கருத்து அதனுடன் சம்பந்தப்படாமல் என் நடத்தை மற்றும் குணாதிசயம் சம்பந்தமான விமர்சனமாக அமைந்துள்ளது;தன்னை மற்றொருவர் விமர்சிக்க எந்தவொரு மனுஷனும் அனுமதிக்கமாட்டான்;அது அவனுடைய சுயமரியாதையைத் தூண்டுவதாக இருக்கும்;ஆனாலும் என்னைக் குறித்த தனி விமர்சனங்களுக்கு நான் எப்படி ரியாக்ட் செய்கிறேன் என்றும் சத்தியத்துக்கு விரோதமான தவறான உபதேசங்களை யாராவது எழுதினால் எப்படி ரியாக்ட் செய்கிறேன் என்றும் சற்று யோசித்துப்பாருங்கள்; எப்போதுமே என்னை எவ்வளவு தான் இழிவாக பழித்து எழுதினாலும் நான் கோபப்பட்டதில்லை;ஆனால் சத்தியத்துக்கு எதிராக எழுதினால் மட்டுமே நான் ஆவேசப்பட்டிருக்கிறேன் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்;நீங்கள் அதுபோன்ற உபதேசங்களை எழுதத் துவங்கினால் உங்களுக்கும் அதே நிலை வரலாம்..! இறுதியாக உங்களுக்கு ஒரு கேள்வி, உங்களிடம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கமான மென்மையான பாணியில் பதில் சொல்லலாமே,பதில் சொல்லப்படாத கேள்விகள் தவறான போதனைகளுக்கு உரமாகிவிடும் என்ற பதட்டம் உங்களுக்கு இல்லையா? நீங்கள் யாரையும் தாக்கவில்லை, ஆனால் உங்களைத் தாக்கி எழுதும் வரிகள் உண்மையான பிரச்சினை யாரிடம் என்பதை உங்களுக்கு அறிவிக்கவில்லையா? இன்னும் தமிழ்க் கிறித்தவ தளத்தையே ஒட்டுமொத்தமாக அவர்கள் தூஷிக்கவும் நானா காரணம்?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bro.சில்சாம், நான் அறிந்தவரை சகோ. சுந்தர் அவர்கள் உங்களை தாக்குவதில்லை. நீங்கள்தான் அவரை பலமுறை தாக்கி எழுதியுள்ளீ்ர்கள். சகோ கோவை பெரியன்ஸ், சகோ.அன்பு தாக்கி உங்களை தாக்கி எழுதுவது உண்மை. இது எதனால் விளைந்தது என சிந்தித்தீர்களா? உங்கள் வார்த்தைப் பிரயோகங்களை சற்று ஏறக்குறைய அவர்களும் பாவிக்கிறார்கள்.
ஆயினும் இத்தகைய இவர்களின் செயல்கள் சரி என சொல்ல வரவில்லை. முதலில் நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அதுவரை அவர்களிடம் இப்படி செய்வது தவறல்லவா? என யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது. உங்களை நோக்கியே விரலை நீட்டுவார்கள். அவர்களிடம் இதுபற்றி கேள்வி கேட்டால் நாம் தான் அவமானப்பட நேரிடும்.
நண்பர்களையும் சரி,(மேசியாவின்) எதிரிகளையும் சரி நான் பலமுறை வேண்டி விரும்பி கேட்ட ஒரு காரியம், என்னைப் போதகர் என்று அழைக்கவேண்டாம் என்பதே;இங்கே யாருக்கும் நான் போதகராக இருக்கவிரும்பவில்லை; என்னைக் குறித்த அறிமுகத்தில் நான் என்னைக் குறித்து ஒரு சாதாரண வழிப்போக்கன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்;எதிர்த்துக் கேள்வி கேட்போரும் சர்ச்சைகளைக் கிளப்புவோரும் ஒரு போதிக்கப்படவே முடியாது என்பதுடன் அவர்களைக் குறித்து அடங்காதவர்கள் என்று வேதம் சொல்லுகிறது.இதே கருத்தை எதிரிகள் என்மீது எறியட்டும்,அதனை இன்முகத்துடனே எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். என் தயவில் தங்கள் பிழைப்பு ஓடுவதால் நான் ஒதுங்கிப் போனாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்கும் கீழ்த்தரமான போக்கை கோவை பெரியன்ஸ், அன்பு, சுந்தர் போன்ற (மேசியாவின்) எதிரிகள் கைவிட்டு சத்தியத்தை அறியும் அறிவைப் பெற முயற்சிப்பது அவர்களுடைய எதிர்காலத்துக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் நல்லது. அப்படியிராதிருந்தாலும் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்,எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்;இதுபோல குறுக்கு சால் ஓட்டவேண்டாம்.அது இருதரப்புக்குமே நல்லதல்ல.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கடந்த மாத இறுதியில் எனது கணிணி பழுதுபட்டது;அதனைச் சரிசெய்து நிமிருவதற்குள் இணையத் தொடர்பில் பழுது ஏற்பட்டது;அது சரியாகி சற்று சுதாரிப்பதற்குள் கடந்த இரண்டு நாட்களாக கணிணி வைரஸ் தாக்குதல்...!
ஒரு மனுஷனுக்கு தான் எத்தனை சோதனை...இன்னும் சில சொந்த சோகங்களையும் எழுதலாம்;ஆனால் அனுதாபம் பெற விருப்பமில்லாததால் நிமிர்ந்து நிற்கிறேன்..!
இதோ இரட்சகரின் தூதுவனாக நாகர்கோவில் பகுதிக்குச் செல்லுகிறேன் (11.11.2010); வரவும் எனது பணிகளைத் தொடரவும் சுமார் ஐந்து நாட்களாகும் (16.11.2010);வாசக நண்பர்கள் சற்று பொறுத்துக் கொள்ளவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)