இந்த நபரைப் பற்றிய அனைத்து மோசடிகளும் விரைவில் யூட்யூப் சானலில் காண்க. காசு கொடுத்தால் பாராட்டுவது, இல்லாவிட்டால் தூஷிப்பது உலக மனிதர்களின் வழக்கமாயிருக்கலாம். தேவபிள்ளைகளுக்குத் தகாது. #எச்சரிக்கை
நேற்றைய தினம், காலையில் குறிப்பிட்ட வாட்சாப் குழுவில் இவர் வழக்கம்போல் பகிர்ந்த #BreakingNews குப்பையைக் கண்டு நமக்கு அறிமுகமான போதகர் தமிழ் வேதாகம ஆய்வு நிறுவனம் பக்கத்தின் டேவிஸ் அவர்கள் விடைத்தார்.
அதற்கு எதிர்வினையாற்றிய போலி நிருபர் குணசேகர் ஒரு ஊழியக்காரர் என்றும் பாராமல் அவரை ஏகவசனத்தில் இகழ்ந்து பேசினார். அதைக்கண்டு பொறுக்காத நான் நிதானமாக இருவரையும் அமைதிப்படுத்த முயன்றேன்.
உடனே அவருடைய கோபம் என்மீதும் பாய்ந்தது. மிகவும் தரக்குறைவான சொற்களால் அர்ச்சிக்கத் துவங்கினார். இதுகண்டு வேலூர் பால் மோகன் பாஸ்டர் வந்து அவருக்கு புத்திசொல்லும் வண்ணமாக சில ஆலோசனைகள் சொன்னார்.
அவரை நேரடியாக எதிர்க்காமலும் அவருடைய ஆலோசனையை ஏற்காமல் தன்னுடைய கீழ்த்தரமான சொற்களை நியாயப்படுத்தி ஒரு கதையைச் சொன்னார், அதுதான் என் உள்ளத்தை மிகவும் காயப்படுத்தியது, அது இதுதான்..
|| பொண்டாட்டியும் பொம்பளை தான் அம்மாவும் பொம்பளை தான்.. எது பொண்டாட்டி எது அம்மா என்று தெரியாமல் நடந்து கொள்கிறவனை வசனத்தை சொல்லி திருத்த முடியாது செருப்பால் அடித்து தான் திருத்த வேண்டும்.. காரணம் இது நோவாவின் காலம்
இது கர்த்தருக்கே தெரியும்..||
இப்படியொரு தன்னிலை விளக்கத்தை அந்த போலி நிருபர் கொடுக்கவும் ஆண்களுக்குள்ளான உரையாடலில் ஏன் பெண்களை சம்பந்தப்படுத்துகிறீர்கள் என்று கேட்டுப் பார்த்தும் பயனில்லை, எனவே அழைத்து பேசினேன். உடனே என்மீதும் அலைபேசியில் தாறுமாறாகப் பேசினார்.
இப்படிப்பட்டவர்கள் கண்டதையும் பேசிவிட்டு நம்மீதே பழியைப் போடுவார்கள், எனவே தற்காப்புக்காக உரையாடலை பதிவுசெய்ததுடன் அதை அவரிடமும் சொல்லிவிட்டேன், உடனே அதற்கும் அவர் ஆணவத்துடனே போட்டுக்க.. என்ன வேணா செஞ்சுக்க என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
மீண்டும் வாட்சாப்பில் மற்றொரு குழுவில் வாதம் தொடர்ந்தது. நான் எனது உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் நிதானமாகவே பதிலளித்து வந்தேன். அவர் கட்டுப்படுவதுபோல் தெரியாததால் அவரோடு நான் பேசிய உரையாடலின் பதிவை குழுவில் பகிர்ந்தேன்.
சட்டென அமைதியானவர் எனது படத்தை வைத்து ஒரு அவதூறு படத்தை டிசைன் செய்து வாட்சாப்பில் பரப்பி வருகிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் என்னைத் தொடர்புகொண்ட தேவ ஊழியர்கள் அந்த போலி நிருபரின் மோசடிகளையெல்லாம் என்னிடம் ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் ஒரு எச்சரிக்கும் வீடியோ ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. எனது வாழ்க்கை ஒரு திறந்தபுத்தகமாகும். இதுவரையிலும் எவரையும் மிரட்டி காசுபறித்ததில்லை, ஆதாயத்துக்காக எவரோடும் பழகியதும் இல்லை. ஆயினும் எனக்கு நான் சாட்சி அல்ல, ஆவியானவரே என்னைப் பற்றி சாட்சி கொடுப்பார்.
**ஆனாலும் கிறிஸ்தவத் தலைவர்களின் தனிப்பட்ட பெலவீனங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களிடம் காசுபறித்து பிழைக்கும் ஒரு சமூக விரோதிகளிடமிருந்து சிலரையாகிலும் நாம் காப்பாற்றவே இத்தனையாய் போராடுகிறேன் என்பதை கர்த்தர் அறிவார்.