#கருத்து: இப்ப நீங்க ஒரு டீ கடைக்கு போறீங்க.ன்னு வச்சிக்குவோம் அங்க போய் நீங்க மாஸ்டர் ஒரு டீ ன்னு சொல்றீங்க அவுரு பாலும் ஊத்தாம டிக்காசனும் ஊத்தாம சீனியும் போடாம ஏன் கிளாஸே இல்லாம வெறும் கையநீட்டி இந்தாங்க டீ.ன்னு சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க. THATS GOD . விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரேயர் 11:1 (அன்பு ராஜ் அபி)
#மறுத்து:அனைத்தும் படைத்த #கடவுள் யாரையும் கண்மூடித்தனமாக எதையும் நம்பச் சொல்லவில்லை. பசியுள்ளோர்க்கு முதலில் உணவளித்து பசியாற்றியபிறகு கடவுள் பசியாற்றுகிறவர் என்று நம்பவைத்தார். பார்வையற்றோரின் குறையைத் தீர்த்து கடவுள் தம்மை படைப்பாளர் என்று நம்பவைத்தார். இப்படி அவருடைய செயல்களால் மட்டுமே மக்கள் அவரை நம்பி ஏற்றுக்கொண்டனரே தவிர கண்மூடித்தனமான நம்பிக்கையை #மார்க்கம் போதிக்கவில்லை. ஏனைய மார்க்கங்களின் நிலைமையை அவரவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.