சி்ல தம்பதியருக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறப்பதால் சோர்ந்துபோய் ஐந்து பெண் குழந்தைகள் வரை பெற்றபிறகு ஆறாவதாக ஆண் குழந்தை பிறந்ததும் காரியத்தை முடித்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் / கிராமத்தில் ஒரே தாய்க்கு ஏழு பெண் குழந்தைகள் உண்டு. அத்தனைக்கும் அந்த தாய் வயல்வெளியில் கூலிவேலை செய்து காப்பாற்றி கரையேற்றினார்கள்.
இதுபற்றி டாக்டர் ஷாலினி ஒருமுறை பகிர்ந்திருந்த ஆலோசனையின்போது இயற்கை ஏன் இப்படி சிலருக்கு ஆண்குழந்தைகளே பிறப்பதும் பெண் குழந்தைகளே பிறப்பதும் அமைகிறது என்பதைக் குறித்து சொன்னது இன்று காலையில் என் நினைவுக்கு வந்தது. அவர்கள் நாத்திகக் கொள்கை உடையவர் என்பதால் இயற்கை பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் பேசியிருந்தார்கள்.
அதன்படி இதனை அந்தந்த வட்டார சூழல் தேவைக்கேற்ப இயற்கை தீர்மானிக்கிறது என்கிறார்கள். அதாவது போர்க் காலங்களில் அதிக அளவில் ஆண்கள் மரித்துப் போனால் பெண்கள் விதவைகளின் எண்ணிக்கை பெருகிவிடுமாம், அதை சமன்செய்ய இயற்கை அதிக ஆண் பிள்ளைகள் பிறக்கச் செய்யுமாம். அதேபோல் பெண் பிள்ளைகள் குறைவாயுள்ள பகுதிகள் அதிகமாய் பெண் குழந்தைகள் பிறக்கிறார்களாம்.
அப்படியானால் சேலம் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகமாய் பெண் சிசு கொலை நடந்ததும் அங்கெல்லாம் அதிக பெண் குழந்தைகள் பிறக்கக் காரணமாயிருக்குமோ ? தற்போதும் ஒப்பீட்டளவில் பெண்களே அதிகமாயிருக்க ஆண்களின் எண்ணிக்கை வெகுவாய் குறைந்து வருகிறது என்கிறார்கள். மேலும் மண மறுப்பும் பிள்ளைப் பேற்றைத் தவிர்ப்பதும் இல்லறத்தை சுமையாய் நினைக்கும்போக்கும் பெருகிவருகிறது. இவையெல்லாம் பிசாசின் தந்திரமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் விசுவாசிகளாகிய நாம் ஆண் பெண் பேதமின்றி பிள்ளைகளைப் பெற்று நேசித்து வளர்க்கவும் அவர்களை சமூகத்துக்குப் பொறுப்பான அங்கங்களாய் உருவாக்குவதும் நமது கடமையாகும். ஊழியங்களிலும் ஆண் பெண் பாகுபாடின்றி எதிர் பாலினத்தவரை நடத்துவது என்பது #lgbtq எனும் வக்கிரமான பாலியல் எண்ணங்கள் கொண்ட சமுதாயம் பெருகாமல் தடுத்திட உதவும். ஆணோடு ஆண் பெண்ணோடு பெண் களங்கமின்றி பழகும் சுபாவத்தை நாம் பயிற்றுவிக்கவேண்டும்.
மேலும் எதிர்பாலினத்தவரையும் உடன்பிறப்பாய் எண்ணும் மனப்போக்கு வளரவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை நாம் வென்றெடுக்க இயலும். அதே நேரத்தில் வக்கிர எண்ணங் கொண்டோரை ஒரேயடியாக ஒதுக்கிவிடாமலும் தகுந்த ஆலோசனை கொடுத்து அனுசரணையாக நடத்துவதும் அவசியமாகும்.