இது குட்டி பாஸ்டர் இம்மானுவேல் வாட்சாப் குழுவில் வைத்திருக்கும் வேண்டுகோள் ஆகும். அவனுடைய தகப்பனார் மர்மமான முறையில் மரித்தது நினைவிருக்கலாம். இது நடைமுறையில் சாத்தியமா, ஒரே வாரத்தில் 17 லட்சம் எப்படி புரட்டமுடியுமோ தெரியவில்லை. சரி, இன்னும் எத்தனை காலம் நீங்கள் நகரத்துக்குள்ளாகவே சுற்றிவருவீர்கள் ? சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை எதிரிலுள்ள டிபி சத்திரம் பகுதியில் நகரத்தில் மையத்தில் அவர்கள் நிலம் வாங்கப் போகிறார்கள் போல. கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட எல்லைகளிலிருந்து புறப்பட்டு வெளியே செல்லுங்கள், நிரந்தரமான இருப்பிடங்களை உங்களுக்காக ஏற்படுத்த முயலாமல் இருப்பது விசுவாசத்தில் பிழைக்கும் ஊழியர்களுக்கு நன்மை பயக்கும். கர்த்தர் இயல்பாய் வாய்க்கப்பண்ணாத இடங்களை வாங்குவது ஊழியத்தில் #கீழ்ப்படியாமை ஆகும். இப்படி கடன் சுமையில் சிக்கி தவித்து தள்ளாடும் ஊழியர்கள் அநேகர் உண்டு. வேறுசிலர் அழைப்பை மறந்து கிருபையை இழந்து நடைபிணங்களாய் செல்வ செழிப்பில் சுகஜீவிகளாய் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய முடிவு அழிவேயாகும்.