எங்கள் ஏரியாவில் கடைதிறந்திருக்கும் #மீடியா_மிருகங்கள் கிளையின் அக்கிரமங்களும் சூழ்ச்சிகளும். முதலாவது கூடுகையின் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் பிரதான நபரின் மோசடி முயற்சி. அதாவது அவர் அங்கே வரப் போவதில்லை, ஆனால் அவரே வரப் போவதைப் போல் ஒரு தோரணை.
அடுத்து எந்தவொரு உள்ளூர் சபைப் போதகர்களுக்கும் அழைப்பு இல்லை, அவர்களுடைய ஒத்துழைப்பும் இல்லை. இவர்களுடைய இப்படிப்பட்ட முயற்சிகளின் நோக்கம் சபைகளில் ஐக்கியமாயிருக்கும் சூதுவாது அறியாத மக்களை தங்கள் ஸ்தாபனத்தின் முகவர் ஆக்குவது. அதன்மூலம் #திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் நாலுமாவடி புனிதத் தலத்துக்கு வண்டிகள் மற்றும் ரயிலில் ஆள்பிடித்துச் செல்லுவது.
இதன்மூலம் திருச்சபை விசுவாசிகள் சோம்பேறிகளாகி உள்ளூர் ஊழிய தரிசனங்களை இழந்து இப்படிப்பட்ட ஊடக ஊழியர்களின் விசிறிகளாக மாறி விசுவாசத்தை இழக்கப் போகிறார்கள். முக்கியமாக திரித்துவக் கொள்கையை மறுத்து பிதாவாகிய தேவனே இயேசு எனும் குமாரனாகவும் வந்தாரென்ற பொய்ப் போதகத்தினால் #சிஎஸ்ஐ உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட சபைகளின் விசுவாசிகளையும் இழுத்துக் கொள்வது.
அதாவது அவர்களிடமெல்லாம் இப்படி வெளிப்படையாக #பிதா#குமாரன்#பரிசுத்தாவி என்று பேசி சர்ச்சை கிளப்புவதில்லை, மாறாக #இயேசு.. இயேசு என்றே உச்சரித்து மக்களை ஒருவித மயக்கத்தினுள் ஆழ்த்துவது. இதனால் மக்கள் பிதாவாகிய தேவனைப் பற்றிய அறிவே இல்லாமல் இயேசுவையே #தகப்பனே#அப்பா#ஏசப்பா என்று அழைத்து பழக்குவிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் #ஞானஸ்நானம் பெறாமல் #குழந்தை_ஞானஸ்நானம் மட்டுமே பெற்றவர்களை இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவைக்கிறார்கள். #மோசிலா ஏற்கனவே ஒவ்வொருவருடைய கைபேசியிலும் புகுந்து ஒவ்வொருவர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண்டிருப்பதால் அவரைப் பற்றி பேசுவது என்பது இயேசுவையே அவமதிப்பதைப் போல் ஜனங்கள் நினைக்கிறார்கள், நம்மை முறைக்கிறார்கள்.
இன்று மாலையில் குறிப்பிட்ட கூடுகையின் விவரம் விசாரிக்க கொடுக்கப்பட்டிருந்த #அலைபேசி எண்ணை அழைத்தபோது பேசிய #சகோதரி ஏதோ சண்டைக்கு வருவதைப் போல் என்னிடம் அத்தனை வேகமாகப் பேசினார், என்னைப் பற்றி குறுக்கு விசாரணையெல்லாம் செய்தார். #திருச்சபை அமைப்புக்கு விரோதமான இப்படிப்பட்ட சத்திய விரோத முகவர்களையும் தரகர்களையும் நாம் முற்றிலும் புறக்கணித்து #தனித்தாள் ஊழியங்களில் கவனம் செலுத்துவோமாக.
**எல்லா ஊரிலும் உப்பு மிளகாயும் புளியும் பூண்டும் கிடைக்கிறது, நீ அங்கிருந்து கட்டிக்கொண்டு வந்து இங்கே விற்கவேண்டாம், நாங்கள் இங்கிருந்து வண்டிகட்டிக்கொண்டு வந்து அங்கிருந்து வாங்கி வரவும் அவசியமில்லை.. கிளம்பு.