எம்ஜிஆர் மட்டுமே அவ்வாறு குடி புகை உள்ளிட்ட தீய பழக்கங்கள் இன்றி நடித்ததாக சொல்லப்படும். அவரும் ஒரு படத்தில் குடிப்பதைப் போல் ஒரு சீன்வைத்து அதைக் கண்டித்து ஒரு பாட்டும் பாடிவைத்தார். ஆனால் நடிகர் விஜய் ஏதோ செய்ய எழும்போது இப்படியெல்லாம் மட்டந்தட்டுவது சரியல்ல. படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவருடைய கருத்து உள்ளபடியே வரவேற்கத்தக்கது. அரசியலும் ஒரு கௌரவமான தொழிலாகவும் அது நேர்மையாகவும் செய்யப்படுவதை நாம் உறுதிசெய்யவேண்டும். விஜய் ஒரு நடிகராக தன் பாத்திரத்துக்குத் தேவையான காட்சிகளில் நடித்தது அவருடைய சொந்த விருப்பத்தினால் அல்ல. அப்படிப் பார்த்தால் அதுபோன்ற சினிமாக்களை வெற்றிபெறவைத்த இந்த சமூகமே முதல் குற்றவாளி எனலாம்.
-- Edited by Yauwana Janam on Friday 28th of June 2024 11:03:00 PM