#ஐந்து நிமிட சுகத்திற்காக வாழ்க்கையே தொலைத்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அதே ஐந்து நிமிட சுகத்தை இழந்தும் காலமெல்லாம் உத்தமத்தைக் காப்பவர்களும் உண்டு.
#ஆண்#பெண் என்பது தனித் தனி #உடல். ஒருவருடைய உடல் அவருக்கு சொந்தமல்ல என்கிறது, #பைபிள். உள்ளத்தால் நேசித்து வாழ்ந்தாலும் உடல் என்ற அமைப்பு இல்லாவிட்டால் மனித வாழ்வே இல்லையே ?
எனவே #தம்பதியர் ஒருவர் உடலை ஒருவர் புறக்கணியாது சேர்ந்து வாழவேண்டும். சேர்ந்து வாழ்தல் என்றாலே அது #செக்ஸ் வாழ்க்கை அல்ல. #அருகாமை#அனுசரணை#பரிவு#பராமரிப்பு ஆகியன வியத்தகு உடல் ஆரோக்கியத்தை ஒருவருக்குக் கொடுக்கும்.
சிலர் இந்த சூட்சமத்தை அறியாமல் #மருந்து மாத்திரைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள். இதையெல்லாம் அறிந்தே படைத்த தெய்வம் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார் என்று பைபிள் சொல்லுகிறது.
I கொரிந்தியர்
7 அதிகாரம்
1. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
3. புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
4. மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
5. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
6. இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)