குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் அதிக சந்தோஷம். அண்மையில் நம் கவனத்துக்கு வந்திட்ட குறிப்பிட்ட குறும்படமானது பற்பல அதிர்வுகளைக் காண்போர் உள்ளத்தில் ஏற்படுத்தியது. அதுகுறித்து அப்போதே நாம் அமர்ந்து பேசவும் அந்த குறும்படத்தை நம் சானலில் ஒருமுறை ஒளிபரப்பவும் விரும்பினோம். அதற்குரிய அவகாசம் இப்போது தான் கிடைத்தது.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் குறிப்பிட்ட சின்னத் திரை சித்திரத்தை அதே துறையில் பழுத்த அனுபவம் பெற்ற இயக்குனரான நம் அருமை சகோதரர் ஜே ரமேஷ் அவர்கள் மூலம் திறனாய்வு செய்ய விரும்பினோம். அவர்களும் தயவாய் இசைந்ததால் இன்று நம் சானலில் #தலையாட்டி_பொம்மைகள் குறும்படத்தினை அறிமுகம் செய்து அதன் ஸ்கிரீன் ப்ளே கதையின் கரு மற்றும் அதன் களம் ஆகியவற்றைக் குறித்து பேச இருக்கிறோம். முக்கியமாக இத் திரைப்படத்தை தயாரித்து வழங்கிய குழுவினரை முறைப்படி தொடர்புகொண்டு அவர்களுடைய அனுமதியோடு இதனை செய்கிறோம்.
நண்பர்கள் யாவரும் மீண்டுமொரு முறை அந்த குறும்(பு) படத்தைக் காண்பதுடன் அதில் கையாளப்பட்டுள்ள தொழில்நுட்பத் திறனையும் நடிப்புத் திறனையும் பகிரப்பட்டுள்ள செய்தி ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளையும் குறித்து தத்தமது கருத்துக்களைப் பகிருமாறு வேண்டுகிறோம்.
**பின்குறிப்பு: நாம் தலையாட்டி பொம்மைகள் அல்ல என்பதை உணர்வோமாக.