உலகமே தகித்து தவிக்கும் #கொரோனா பெருந் தொற்று காலத்தில் எல்லாரும் இந்நாட்டு மன்னர்போல் எல்லாரும் மருத்துவர் ஆகிவிட்ட அவலநிலை ஒருபுறம் கண்ணுக்கு தெரிந்து தீர்வென்பது புலப்படாத சூழலில் தேசத்தின் தலைவர்கள் ஒரு கட்டத்தில் ஏதேனும் தீவுக்கு ஓடிப்போய்விடுவார்களோ என்ற அச்சமும் எங்கும் படர ஆன்மீகவாதிகள் பிழைப்பும் பலமாகவே நடக்கிறது. ஆளுக்கொரு காரணம் சொல்லி மக்களை அலைக்கழிப்பதைக் கண்டு அந்த கடவுளுக்கே பொறுக்காதென்று நினைக்குமளவுக்கு சுயநலம் எங்கும் தலைவிரித்தாடுகிறது.
இவை ஒருபுறமிருக்க கொரோனா செய்திகளையே போட்டுபோட்டு சலித்துப்போன ஊடகங்கள் ஒரு சிறிய செய்தி கிடைத்தாலும் அதை பூதாகரமாக்கி காசுபண்ண துடிக்கிறது. அந்த வகையில் சிறுமிகள் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகளில் ஏதேனும் பிரபலங்கள் சிக்கிவிட்டால் போதும், அதையே பேசிப் பேசி உறவுகள் கசந்துபோக ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள். அதற்கும் மேல் இருக்கவே இருக்கிறது கொரோனா தடுப்பூசி தொடர்பான பரபரப்பான விவாதங்கள்.
இதன் அடிப்படையில் இன்றைய வெளிப்படையான பேச்சரங்கம் #OPEN_TALK அமையும். இதில் பேசப்பட இருக்கும் முக்கிய பிரச்சினைகள்,

இந்தியாவின் தெற்கு பகுதியில் வேர்கொண்டு தேசமெங்கும் படர்ந்திருக்கும் தமிழ் கிறிஸ்தவம் உலக இனங்களிலேயே தனித்தன்மையுள்ளதாகும். இதனுள் எத்தனையோ விதம்விதமான உபதேசங்கள் வந்து கலந்தாலும் அனைத்தையும் கிரகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து சத்தியத்தை நோக்கி பயணிக்கும் திறன் வாய்ந்தவர்களே தமிழ் கிறிஸ்தவ சபையார் என்றால் அது மிகையல்ல.
சபையின் தலையாம் கிறிஸ்து இயேசுவானவர் தம்முடைய மந்தையாம் தேவ சபையானது திசைமாறிச் செல்லும் போதெல்லாம் தம்முடைய தாசர்களை எழுப்பிவிட்டு அவர்களை தூண்டிவிட்டு தூண்டிலில் சிக்கிய மீனாகத் தவிக்கும் ஒரு கூட்டத்தை தம்மிடமாய் திருப்பிக் கொள்ள போதுமானவராய் இருக்கிறார். அத்தகைய பாங்கினை நாம் வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறோம்.
சிலராக தனிப்பட்ட நபராகவும் கூட ஒரு பெருங் கூட்டத்தையும் இராஜ்யங்களையும் எதிர்த்து கலகம் செய்ததும் கர்த்தருடைய இராஜ்யத்தின் மாண்பைக் காக்கவும் தங்கள் அழைப்பை நிறைவேற்றவும் போரிட்டதும் உண்டு. இந்த கடைசிக் காலத்திலும் அதேவிதமான நிர்விசாரமான போக்கு காணப்படுவதும் நம்மில் அநேகர் தேவபக்தியின் வேடத்தை ஏற்றும் அதன் புண்ணியங்களை அவமதிக்கும் பயங்கரத்தைப் பார்க்கிறோம்.
அழைக்கப்பட்ட அழைப்பில் நில்லாமல் விலகி ஓடுவதும் தான் தோன்றித்தனமாக தனக்கு தோன்றியதையெல்லாம் செய்வதும் அதையெல்லாம் கர்த்தரே தனக்கு சொன்னாரென்று துணிகரமாய் அறிவிப்பதும் அவர்களை எதிர்ப்போரை தங்கள் ஆதரவாளர்களை வைத்து மிரட்டுவதும் ஒடுக்குவதும் பரியாசம் பண்ணுவதும் சகஜமாகிவிட்டது. ஒரே தெய்வத்தை ஆராதிக்கும் ஜனங்கள் இப்படி தங்களை முன்னிட்டு பிரிந்து கிடப்பதைப் பற்றி குறிப்பிட்ட பிரபலங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவரவர் நிலையைக் காத்துக்கொள்வதே நோக்கமாய் இருக்கிறது. இப்படி மீடியாவின் மூலம் செய்வது மாத்திரமே தேவ ஊழியமென்ற மனப்பான்மை எங்கும் பரவி வருகிறது. சபைக்குள் மாத்திரமே சிறு குழுக்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டிய கருகலான சத்தியங்கள் பொதுவெளியில் பகிரப்படுவதாலும் அருவருப்பான பாவங்களை ஊடகத்தில் அறிக்கையிட்டு அழுது வடிவதால் புறவினத்தாருக்கு முன்பாக அவமானமும் நிந்தையும் நேருகிறது.
குறிப்பிட்ட பிரபலம் மற்ற ஊழிய ஸ்தாபனங்களையும் தலைவர்களையும் திருச்சபை கமிட்டியாரையும் ஏக வசனத்தில் விமர்சித்து பேசுவதால் திருச்சபை மக்களுக்குள் பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டு ஒரு பெருங் கூட்ட மக்கள் மீடியா பிரபலங்கள் பேசுவதும் சாதிப்பதுவுமே இறைவாக்குபோல் கருத துவங்கிவிட்டனர். இதனால் திருச்சபையின் கட்டமைப்பு தகர்ந்து அதன் நோக்கங்கள் சிதைந்து கிடக்கிறது. இதனால் உள்ளூர் தலைவர்களும் மனம் பேதலித்தவர்களாய் மீடியா பிரபலங்களைப் போலவே தாங்களும் சபையாரைவிட்டு தங்களை அந்நியப்படுத்திக் கொள்வதும் புகழ்பெற்றவர்களைப் பற்றி காய்மரம் கொண்டு குமுறும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
இதில் பின்னிப் பிணைந்துள்ள மாறுபாடான உபதேசங்கள் மற்றும் பொய்த்துப் போன கள்ள தரிசனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நம்மிடையே யாருமில்லை அல்லது அவர்களுடைய குரல் திரள்கூட்டத்தினர் மத்தியில் எடுபடுகிறதில்லை.
**இத்தனை காரியங்களையும் மனதிற் கொண்டே இக்காலத்தில் நமக்கு கிட்டிய இந்த அமர்வின் மூலம் எங்களால் இயன்றதை செய்ய விழைகிறோம். இந்த எளிய முயற்சிக்கு நண்பர்கள் தங்கள் பேராதரவை அளிக்குமாறு பட்சமாய் வேண்டுகிறோம், நன்றி.
#ஜெபம் / #பிரார்த்தனை என்பது பக்தன் பரமனை தொடர்புகொள்ளுவதற்காகவே அமைக்கப்பட்ட அருமையான ஏற்பாடாகும். அதனை சிலர் #தொழில். போல் செய்வதால் சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களும் குமுறல்களும் உண்டாகிறது. அதைக் குறித்து விவாதிக்கவே இந்த அமர்வை ஒழுங்குசெய்தோம்.
**நண்பர்கள் அனைவரும் இதில் இணையவும் தங்கள் மேலான கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைக்குமாறு வேண்டுகிறோம், நன்றி. 🙏