|| பாரப்பா சர்வ ஜுரம் எல்லாம் தீர சாட்டுகிறோம் வகையை கேளு. வானென்ற வில்வ வேர் விலாமிச்சம் வேர் வான் நெருஞ்சி மதுரம் சோம்பும் கோவேன்ற விழாவோடு முத்தக்காசும். குலாவு முந்திரிப்பழமும். நேர் பொறியின்னோடே.நெல்லி முள்ளி இலுப்பைப்பூவும். அழகார்ந்த சுக்கு வகை சமணக் கொண்டுதான் நீர் விட்டு கியாழம் தன்னை எட்டில் ஒன்றாய் குறுங்க காட்சி உண்டிட வேதப ஜுரம் மயக்கம் தூக்கம் மோடாத பித்த சுரம் நாவறட்சி அண்டிடாது அய்யர் காலாங்கிநாதர் மீது ஆணை பாடல் பெற்ற குரு அகத்தியமுனி மீது ஆணை திண்டொளியாம். போகர் எந்தன்மீது ஆணை திருந்துவோம் சர்வ ஜீரதோஷம் எல்லாம் வைத்தியரே கை தேர்ந்து பாரீர் ||
மேற்காணும் பாடல் இன்றைய அமர்வின் தூண்டுதலாக இருந்தது. போகர் எனும் சித்தர் பாடியதாக சொல்லப்படும் இந்த பாடலைக் கண்டதும் அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் அவரால் பாடப்பட்டவைகளில் வெளிப்படும் கிறிஸ்தவ இறையியல் உண்மைகளைப் பேச விரும்பினோம். நாம் மேற்கத்திய மரபிலேயே சென்றுவிட்டதால் மறைக்கப்பட்ட இம்மண்ணின் மகத்துவங்களை இக்காலத்தில் அறியும் அரிய வாய்ப்பினை நற்சான்றோர்தம் இடையறாத முயற்சிகளால் பெற்றிருக்கிறோம். இதுபோன்ற அமர்வுகளை நண்பர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள இறைமகனார் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறோம்.
இன்றைய நிகழ்ச்சியில் நம் அருமை சகோதரர் ஜே.இரமேஷ் அவர்கள் (நற்செய்தி திரைப்பட இயக்குனர்) சித்தர்தம் பாடல்களின் பின்னணியையும் விளக்கங்களையும் நமக்கு கற்பிக்க இணைகிறார்கள். நாமும் இணைவோம்.. அநேகரை இந்த அரங்கத்தில் இணைப்போமாக, நன்றி !!!